Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூ பூக்கும் நேரம்…
பூ பூக்கும் நேரம்…
பூ பூக்கும் நேரம்…
Ebook134 pages45 minutes

பூ பூக்கும் நேரம்…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"எங்கே எழுந்துபோகிறே?"
 "எனக்கு ஏகப்பட்டவேலை இருக்கு அப்பா! என்றவன் போனை எடுத்து எண்களை அழுத்தினான்.
 "அலோ... மரியா! நான் விமான நிலையத்துக்குப் போக முடியாது. குணாளனை போகச் சொல்லு! மலேசியக் குழுவை இப்ப சந்திக்க முடியாது. அஞ்சு நாள் கழிச்சு நேரம் கொடு. அஞ்சு நாளைக்கு நான் ஆபீசுக்கு வரமாட்டேன். என் கையெழுத்துத் தேவைப்படற கோப்புகளை வீட்டுக்கு அனுப்பு. ஓக்கே!" ரிசீவரை வைத்தான்.
 "உதயா... என்னாச்சு உனக்கு? ஒரு அஞ்சு நிமிடம் முன்னாடிதான் விமான நிலையம் போகணும். மலேசியக் குழுவை நானே தான் வரவேற்கணும். அவங்களால் ஆதாயம் இருக்குன்னு சொன்னே! இப்ப என்னடான்னா, போன் பண்ணி குணாளனை போகச் சொல்றே! அஞ்சு நாளைக்கு ஆபீஸ் பக்கமே தலைவைச்சுப் படுக்கமாட்டேன்னு சொல்றே! என்ன ஆச்சு உனக்கு?" ஆச்சரியமாகக் கேட்டார்.
 "என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? நம்ம கல்பனா வரப்போகிறா! அதுவும் நாளைக்கே! எவ்வளவு வேலை இருக்கு. ஆபீஸ் எங்கே போயிடப்போகுது?"
 "கல்பனா வர்றதால் உனக்கென்ன?"
 "எனக்கென்னவா? எவ்வளவு ஏற்பாடு செய்யவேண்டியிருக்கு? அவள் என்ன சாதாரண கல்பனாவா? கலெக்டர் அப்பா! நம்ம ஊருக்கே கலெக்டர் அவள்! அவள் தங்கறதுக்கு ஏத்த மாதிரி நல்ல அறையா ஏற்பாடு செய்யவேண்டாமா?"
 "அதுவும் சரிதான். செய்... செய்! என் அறைக்குப் பக்கத்திலே இருக்கிற அறையைக் கல்பனாவுக்கு ஒதுக்கலாம்!"இல்லை... இல்லை... அந்த அறை வேண்டாம் அப்பா! அவள் அறையை ஒட்டி ஒரு வரவேற்பறையும் இருந்தா நல்லது. பார்வையாளர்களைச் சந்திக்க வசதியா இருக்கும். அதுக்கு என்னோட அறைதான் சரியா இருக்கும். நான் உங்க அறைக்குப் பக்கத்து அறையிலே தங்கிக்கிறேன்."
 தனுஷ்கோடி அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி மகனைப் பிரமிப்புடன் பார்த்தார்.
 "உன் அறையைக் கல்பனாவுக்கு தர்றியா? என்னப்பா சொல்றே?"
 "யாருக்குத் தர்றேன்? நம்ம கல்பனாவுக்குதானே?" என்றவன் அங்கிருந்து அகன்றான்.
 மகனைப் பார்க்கப் பார்க்க தனுஷ்கோடிக்கு ஆச்சரியமாக இருந்தது.
 'உதயாவா இது? கல்பனா என்கிற மந்திரச் சொல் அவனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது? உதயா இரக்கக் குணம் உடையவன்தான்! உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றில்லாமல் உதவுபவன்தான்! ஆனால், தனக்கென உள்ள சொந்தப் பொருளை யாருக்கும் தரமாட்டான். புதிதாய் வேண்டுமானால் வாங்கித் தருவானே தவிர, தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிற எதையும் தரமாட்டான். அப்படிப்பட்டவன் தான் புழங்கிக்கொண்டிருக்கிற- தனக்குப் பிடித்த அறையைக் கேட்காமலேயே கல்பனாவுக்கு ஒதுக்கித் தர முன்வருகிறான் என்றால்...?'
 'என் அருமை மகனே! உன் வயதைக் கடந்து வந்தவன்தான் நானும். உன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாதவனா நான்?' தனக்குத்தானே சிரித்துக்கொண்டார் தனுஷ்கோடி.
 "அப்பா... இன்னுமா ரெடியாகலை?" அறைவாசலில் வந்து இடுப்பில் கை வைத்துக்கொண்டு அங்கலாய்த்தான்.
 "அடடா! விமானம் வர்றதுக்கு இன்னும் முழுசா ரெண்டு மணி நேரமிருக்கு. ஏனப்பா அவசரப்படறே? ஒரு மணி நேரம் கழிச்சுப் போகலாம்!"
 "வரவர உங்களுக்கு நேரத்துக்கு வர்ற பழக்கமே இல்லாம போயிடுச்சுப்பா! ஒருவேளை நாம போறதுக்குள்ளே விமானம் வந்திடுச்சின்னா?""விமானம் தாமதமா வந்தாலும் வருமே தவிர, சீக்கிரம் வராது!" மயிர்ப்பசையைத் தலையில் தடவியபடி கூறினார்.
 "சீக்கிரம் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு! நீங்க தயாராக எப்படியும் அரை மணி நேரம் ஆகும் போலிருக்கே? ஒண்ணு பண்றேன் அப்பா! நான் இப்ப கிளம்பிடறேன். நீங்க அப்புறம் வாங்க!"
 "என்னப்பா அவசரம்? பத்து மணி விமானத்துக்கு விடியற்காலை ரெண்டு மணிக்கெல்லாம் எந்திரிச்சிட்டே! இப்ப கால்ல வெந்நீரைக் கொட்டிக்கிட்டவன் மாதிரி தவிக்கிறே!" என்றார் கிண்டலாக.
 "உங்க பேச்சை ரசிக்கிற மனநிலையில் நானில்லை அப்பா! நேரமாகிட்டே இருக்கு! நான் கிளம்பறேன்!" அதற்குமேல் அங்கு நிற்கப் பொறுமையின்றி வெளியேறினான் உதயகுமார்.
 சற்று நேரத்தில் கார் புறப்படும் சத்தம் கேட்டது.
 தனுஷ்கோடி வாய்விட்டுச் சிரித்தார்.
 'பயல் எல்லாத்திலேயும் ரொம்ப வேகமா இருக்கிறானே!'
 விமான நிலையம்.
 உதயகுமார் நிலைகொள்ளாமல் தவித்தான். இன்றைக்கு என்னவோ நேரம் மிக மிக மெதுவாக நகர்வது போல் உணர்ந்தான்.
 பத்தாவது முறையாக வரவேற்பாளரிடம் போய் விசாரித்தான். வரவேற்பாளர் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "மதுரையிலிருந்து விமானம் வர இன்னும் முழுதாய் நாற்பது நிமிடம் இருக்கிறது!"
 "அடக்கடவுளே... இன்னும் நாற்பது நிமிடமா?" வாய் பிளந்தான் உதயகுமார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223614364
பூ பூக்கும் நேரம்…

Read more from R.Manimala

Related to பூ பூக்கும் நேரம்…

Related ebooks

Reviews for பூ பூக்கும் நேரம்…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூ பூக்கும் நேரம்… - R.Manimala

    1

    கிழக்கு நோக்கி கம்பீரமாய் நின்றிருந்தது அந்த பிரம்மாண்டமான பங்களா! விடியலை பிரசவித்து சில நிமிடங்களே ஆகியிருந்தன. சூரியனின் பிஞ்சுக் கதிர்கள் பங்களாவின் கிரானைட் சுவர்களுக்கு மேலும் பளபளப்பு ஏற்றிக்கொண்டிருந்தன.

    பங்களாவைச் சுற்றி மதில் சுவர் கட்டி... அதன்மேல் உடைந்த கண்ணாடி சில்லுகளைப் பொருத்தியிருந்தனர்.

    புற்களை மோப்பம் பிடித்தபடி நாலைந்து உயர்ரக நாய்கள் ரோந்து போக... அவற்றை இணைத்திருந்த சங்கிலிகளைக் கொத்தாய்... கெட்டியாய்ப் பிடித்தபடி... அவை இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடிக்கொண்டிருந்தான்... வேலையாள் தேசப்பன்.

    ஏலே... இதுங்களை அங்கிட்டு இழுத்துட்டுப் போலே... கண்களில் பயம் தேங்கியிருக்க... செடிகளுக்கு ரப்பர் குழாய்மூலம் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த முண்டாசு கட்டியிருந்த முத்துசாமி, தேசப்பனிடம் கூற... சிரித்தான் தேசப்பன்.

    இதுங்க குழந்தைங்கமாதிரி. ஏன் அண்ணாச்சி... இதுங்களைப் பார்த்து பயப்படறீங்க?

    நான் குழந்தையா இருந்தப்ப... இந்த மாதிரி குழந்தை ஒண்ணு... தொடை சதையை கவ்விடிச்சி. தொப்புளை சுத்தி ஊசி போட்டாக... பயம் வராம பாசமா வரும்? அங்கிட்டு இழுத்துட்டுப் போவியா? என்றார் முத்துசாமி.

    வாய்விட்டு சிரித்தபடி அவற்றை இழுத்துக்கொண்டு சென்றான் தேசப்பன்.

    முத்து...

    குரல் கேட்டுத் திரும்பிய முத்துசாமியின் உடம்பு தன்னிச்சையுடன் பணிவாகக் குனிந்தது.

    காரணம்- தனுஷ்கோடி. முதலாளி. பல ஆயிரம் குடும்பங்களுக்கு சோறு போடும் பெரும் தொழிலதிபர்: அவ்வளவு காலையிலேயே உதட்டில் புகைக்குழாய் செருகி இருந்தார்.

    ஐயா...! ரப்பர் குழாயைக் கீழே போட்டுவிட்டு இரு கைகளையும் மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டான் முத்துசாமி.

    அதோ... அந்தத் தென்னைமரத்துக்கீற்று பால்கனி ஜன்னலை உராயுது பார். அந்தக் கீற்றை மட்டும் வெட்டி எறிஞ்சிடு!

    சரிங்கய்யா!

    தனுஷ்கோடி, நகரத்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். இல்லாதவர்களுக்கு உதவும் மனம் உடையவர். அவருக்கு ஒரே ஒரு பிள்ளைதான் உதயகுமார்!

    அழகான இளைஞன். அப்பாவைப் போன்றே நல்ல இதயம் கொண்டவன். அப்பாவின் எண்ணற்ற கம்பெனிகளில் சிலவற்றை தன் மேற்பார்வையில் நிர்வகித்து வருபவன்.

    பிரம்மாண்டமான அந்த பங்களாவில் முதல் மாடியில் விசாலமாக அமைந்திருந்தது உதயகுமாரின் படுக்கையறை! ஏ.சி. காற்றில் மருக்கொழுந்து மணமும் கலந்திருக்க... சிறுபிள்ளை போல்... நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தான் உதயகுமார்.

    உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவனாயிருந்தாலும்... கட்டுமஸ்தான உடல் அவனுக்கு. சந்தனநிற தேகத்தில் மார்பு ரோமங்கள் கூட அவனுக்குக் கவர்ச்சியாய்த்தானிருந்தன. களையான முகம். உறக்கத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற உதடுகள். தலைகொள்ளா முடி... முன்நெற்றியிலும் காதல் புரிந்துகொண்டிருந்தன. மேலுதடை மறைத்த அடர்த்தியான மீசை, அவன் சிரிப்புக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தந்தது.

    அவனின் அழகான நெஞ்சுக்குள் அழகிய யுவதி ஒருத்தி... ஆலமரம் போல் கிளை பரப்பி... ஆழமாய்ப் பதிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

    தொலைபேசி சிணுங்கியது.

    உதயகுமாரின் உறக்கம் கலைந்தது.

    கண்களைத் திறக்காமலேயே கையை உயர்த்தி... எட்டும் உயரத்தில் இருந்த தொலைபேசியை எடுத்தான்.

    அலோ...! என்றான் கரகரப்பாக.

    அலோ... காலை வணக்கம் சார்! மரியா பேசறேன்!

    காலை வணக்கம்... என்ன விசயம் சொல்லுங்க?

    காலையிலே எழுப்பிவிடச் சொன்னீங்க சார்! என்றாள் மரியா. அவனுடைய தனிச் செயலாளர்.

    முழுதாய்க் கண்களைத் திறந்த உதயகுமாரின் உறக்கமெல்லாம் பறந்தோடிவிட்டது.

    ஓ... ஆமா... ஆமா! இன்னைக்கு மலேசியக் குழுவை விமான நிலையத்துல வரவேற்கப் போகணுமில்ல? விமானம் எத்தனை மணிக்கு?

    எட்டு முப்பதுக்கு சார்.

    ஓக்கே! என்றபடி ரிசீவரை வைத்துவிட்டு கட்டிலைவிட்டுக் கீழிறங்கினான்.

    கீழ் அறையில் தனுஷ்கோடி அமர்ந்திருந்தார். யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் இவனைப்பார்த்ததும், ஓக்கே... அப்புறம் பேசுவோம்! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். ஏற்பாடுகள் பக்காவாக இருக்கணும்! என்று கூறிவிட்டு வைத்தார்.

    அப்பாவுக்கு வணக்கம்.

    வணக்கம் என் செல்ல மகனே!

    ஏய் காபி! என்று வேலையாளுக்கு உத்தரவைப் பிறப்பித்து விட்டு அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

    நீங்க காபி சாப்பிட்டாச்சா அப்பா?

    ம்... ஆச்சு உதய்! இன்னைக்குதானே மலேசியக் குழுவினர் வர்றாங்க?

    ஆமாப்பா! சரியா எட்டரை மணிக்கு நான் விமான நிலையத்துல இருந்தாகணும்!

    ஏன் உதய்? நீ ஏன் ஓடறே? ஜி.எம். என்ன பண்றான்? அவனை அனுப்பவேண்டியதுதானே?

    இல்லை அப்பா! இந்தக் குழுவால் நமக்கு வியாபாரத்துல நிறைய ஆதாயம் இருக்கு. நானே போய் வரவேற்றால்தான். மரியாதையா இருக்கும்!

    வேலையாள் பணிவாய் நீட்டிய காபியை எடுத்து உறிஞ்சியவன், தந்தி எங்கே? என்றான்.

    இதோ கொண்டுவரேங்கய்யா! என்றவன் அடுத்த சில நொடிகளில் ஆங்கில, தமிழ் தினசரிகளைக் கொண்டுவந்து தந்தான்.

    தினத்தந்தியை எடுத்துப் பிரித்தவன், இரண்டாவது பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியைப் பார்த்தான். அவன் முகம் பூவாய் மலர்ந்தது.

    அ... அப்பா... பார்த்தீங்களா? என்றான் பரவசமாய்.

    என்னப்பா? லாட்டரியிலே நூறு கோடி பரிசு விழுந்தவன் மாதிரி மகிழ்ச்சி அடையுறே? என்ன விசயம்?

    எனக்கெதுக்கு அப்பா நூறு கோடி? அதைவிட பெரிய இன்பச் செய்தி அப்பா!

    என்னன்னுதான் சொல்லேன்! என்றார் சிரிப்பை உதட்டுக்கிடையில் மென்றபடி.

    மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கல்பனா இடமாற்றம். நாளை சென்னையில் பதவியேற்கிறார்.

    ஓ... இதுதானா? இதுக்கா அப்படி குதிச்சே? என்றார் சாதாரணமாய்.

    அ... அப்பா! நம்ம கல்பனாப்பா! நாளைக்குக் கல்பனா, சென்னைக்கு வரப்போகிறா! இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலியா? அதிர்ச்சியுடன் அப்பாவைக் கேட்டான்.

    அதற்குமேல் மகனை வேதனைப்படுத்த விரும்பாமல் வாய்விட்டுச் சிரித்தார் தனுஷ்கோடி.

    வியப்பாய்ப் பார்த்தான் உதயகுமார்.

    உனக்குக் கல்பனா வரப்போகிற விசயம் இன்னைக்குதானே தெரியும்? எனக்கு நாலு நாள் முன்னாடியே தெரியும். கல்பனா போன் பண்ணி சொல்லிட்டா!

    ஏன் என்கிட்டே சொல்லலே? என்றான் ஏமாற்றமாய்.

    இப்படியொரு இன்ப அதிர்ச்சி தர்றதுக்குதான்!

    நல்ல இன்ப அதிர்ச்சி! என்றவன் சடாரென அந்த இடத்தைவிட்டு எழுந்தான்.

    2

    "எங்கே எழுந்துபோகிறே?"

    "எனக்கு ஏகப்பட்டவேலை இருக்கு அப்பா! என்றவன் போனை எடுத்து எண்களை அழுத்தினான்.

    அலோ... மரியா! நான் விமான நிலையத்துக்குப் போக முடியாது. குணாளனை போகச் சொல்லு! மலேசியக் குழுவை இப்ப சந்திக்க முடியாது. அஞ்சு நாள் கழிச்சு நேரம் கொடு. அஞ்சு நாளைக்கு நான் ஆபீசுக்கு வரமாட்டேன். என் கையெழுத்துத் தேவைப்படற கோப்புகளை வீட்டுக்கு அனுப்பு. ஓக்கே! ரிசீவரை வைத்தான்.

    உதயா... என்னாச்சு உனக்கு? ஒரு அஞ்சு நிமிடம் முன்னாடிதான் விமான நிலையம் போகணும். மலேசியக் குழுவை நானே தான் வரவேற்கணும். அவங்களால் ஆதாயம் இருக்குன்னு சொன்னே! இப்ப என்னடான்னா, போன் பண்ணி குணாளனை போகச் சொல்றே! அஞ்சு நாளைக்கு ஆபீஸ் பக்கமே தலைவைச்சுப் படுக்கமாட்டேன்னு சொல்றே! என்ன ஆச்சு உனக்கு? ஆச்சரியமாகக் கேட்டார்.

    "என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? நம்ம கல்பனா வரப்போகிறா! அதுவும் நாளைக்கே!

    Enjoying the preview?
    Page 1 of 1