Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andhi Nerathu Udhayangal
Andhi Nerathu Udhayangal
Andhi Nerathu Udhayangal
Ebook205 pages1 hour

Andhi Nerathu Udhayangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டு மாதத்தில் திருமணம் நடக்கவிருக்கும் ஹரி-மாயா. திடீரென்று விபத்தில் சிக்கிக்கொண்ட ஹரிக்கு ஏற்பட்ட விபரீதம் என்ன? அனைவரையும் அன்புடனும், புன்னகை மாறாமல் நடத்தும் சாந்தியின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை என்ன? உறவைத் தேடிக் கொண்டு நாயாக அலைய தேவையில்லை. அது மனதால் ஏற்படும் சங்கமமே என காண வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580125408321
Andhi Nerathu Udhayangal

Read more from Vaasanthi

Related to Andhi Nerathu Udhayangal

Related ebooks

Reviews for Andhi Nerathu Udhayangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andhi Nerathu Udhayangal - Vaasanthi

    http://www.pustaka.co.in

    அந்தி நேரத்து உதயங்கள்

    Andhi Nerathu Udhayangal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ட்ராஃபிக் ஸிக்னலைப் பார்த்து ஹரிக்கு எரிச்சல் ஏற்பட்டது. இன்னும் பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்கு நகர முடியாது. வலது பக்கத்தில் ரோடில் நின்றிருந்த வாகனங்கள் எண்ண முடியாத சங்கிலிகளாகத் தெரிந்தன. ஸிக்னல் மாறினவுடன் விழித்துக்கொண்டு சங்கிலிகள் நகர்ந்தன.

    தினமும் காலையில் 9-20-க்கு இங்கு வந்து மாட்டிக்கொண்டால் தொலைந்தோம். இன்றைக்குக் காலையில் கண் விழிக்கும்போதே நேரமாகிவிட்டது. நேற்று இரவு இரண்டு மணிவரை மனு பண்டாரியின் ‘தி பிக் ஃபீஸ்ட்' டைப் படித்ததன் விளைவு. ஒரு பத்து நிமிஷங்கள் என்பது எத்தனை பெரிய பரிணாமத்தைக் கொண்டது காலை வேளையில்? இல்லாவிட்டால் இந்த நேரத்துக்குத் தினமும்போல் ஆஃபீஸ் லிஃப்டில் நின்றிருப்போம். 9-25க்கு மாயாவின் ஃபோனுக்காகத் தயாராகியிருப்போம்.

    அவன் பொறுமை இல்லாமல் அந்த நகரும் வாகனங்களை பார்த்தான். முடிவில்லாத தொடர்கள், உடலின் ஒவ்வொரு அணுவும் பொறுமை இல்லாமல் தவித்தது. பெட்ரோல் விலை ஏற, ஏற இந்த வாகனங்களின் எண்ணிக்கையும் எப்படி இப்படி அதிகரிக்கிறது!

    ஒரு வழியாக ஸிக்னல் மாறி அவன் தன் மோட்டார் சைக்கிகளைக் கிளப்பித் தன் ஆபீஸ் இருக்கும் அந்தப் பத்து மாடிக் கட்டடத்தின் முன் நிற்கையில் மணி 9-35.

    அவன் அவசரமாகப் படிகளைக் கடந்து கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி, வாயை மூட யத்தனித்துக் கொண்டிருந்த லிஃப்டிடை அகற்றிப் புகுந்துகொண்டான். லிஃப்டின் நெருக்கடிக்குப் பின்னால் இருந்த கண்ணாடியைப் பார்த்துக் கேசத்தை சரி செய்தபடி எல்லாரையும் பார்த்துப் பொதுவாகப் புன்னகைத்தான். தினமும் பார்க்கிற முகங்கள். அந்தக் கட்டடத்தில் குடியிருக்கும் பல்வேறு அலுவலகங்களில் வேலை பார்க்கும் முகங்கள். அவன் வேறு யாரையோ பார்த்துச் சிரிக்கிறான் என்று ஒவ்வொரு முகமும் முகத்தைத் திருப்பிக்கொண்டது.

    அவனுக்குச் சிரிப்பு வந்தது. என்ன ப்ரகிருதிகள் இவர்கள்? ஏதோ பாரத்தைச் சுமக்கிறவர்கள் மாதிரி? அதுவும் தங்களுக்கு மட்டும் தான் பாரம் தலைக்கு மேல் இருந்த மாதிரி? மூன்றாவது மாடியில் ‘தம்’மென்று லிஃப்ட் நின்றதும் அவன் வெளியில் வந்து வலது பக்கம் திரும்பித் தன் அலுவலகத்துக்குள் நுழைந்தான். பிடிப்பான கண்ணாடிக் கதவுக்கப்பால் குளிர்ச்சியான பிரதேசம். அதைவிடக் குளிர்ச்சியாக ரிஸப்ஷனிஸ்ட் ரூபா சிங். வெயில் காலம் ஆரம்பித்துவிட்டால் இவளுக்குக் கன குஷி. உடம்பை அனாவசியமாகப் போர்த்திக்கொண்டு நிற்க வேண்டியதில்லை வெகு சிக்கனமான ஆறு அங்குல ரவிக்கை, இந்த அழகிய உடம்பை வைத்துக்கொண்டு அதை ரொம்பவும் மூடுவதும் மடத்தனம்தான் என்கிற நினைப்பில் புன்னகைத்து,

    ஹல்லோ! என்றான். லுக்கிங் கிரேட்!

    தாங்க் யூ!

    சிரிப்பில் செயற்கை நாணம், வரவழைத்துக்கொண்ட மையல். எம்.டி. யஷ்பாலின் ஸெலக்‌ஷன், என்றைக்குச் சோடை போயிற்று?

    "எனக்காக ஏதாவது ஃபோன் கால் வந்ததா?

    மூன்று முறை

    யார்?

    இந்த நேரத்துக்குத் தினமும் வரும் அதே ஃபோன் கால்தான், உங்களை மாதிரியே பொறுமையில்லாத பேர்வழி. அது எப்படி, அப்படி ஒரு ஜோடி சேர்ந்தீர்கள்?

    அவன் புன்னகைத்தான்.

    சொல்கிறேன், உன் ஜோடியிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.

    அவள் மாக்ஸ் ஃபாக்டர் சாய உதடுகளைக் கொஞ்சலுடன் குவித்தாள்.

    எனக்கு ஜோடியே கிடையாது.

    ஐ டோன்ட் பிலீவ் இட்!

    அவன் புன்னகையுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தான்.

    நாற்காலியில் உட்காரும்போது ஃபோன் அடித்தது.

    ஹரி ஹியர்!

    உங்கள் ஜோடி! என்றாள் ரூபா.

    உம்! காத்திருக்கிறேன்!

    என்ன இன்னிக்கு லேட்!

    மாயாவின் குரல் வழுக்கிக்கொண்டு வந்தது.

    கார்த்தாலே ஆபீஸுக்குக் கிளம்பினதே லேட்!

    ஏன்!

    முழிச்சண்டது லேட், ஏன்னு கேட்காதே. உதைப்பேன். நீதான் என் நினைவிலே வந்து வந்து தூக்கத்தைக் கெடுக்கறே!

    கிண்கிணிச் சிரிப்பு சில விநாடிகள் ரம்யமாய் ஒலித்தது.

    அளக்காதே ஹரி! ஏதாவது புத்தகத்தைப் படிச்சின்டிருந்திருப்பியே விடிய விடிய!

    நீ நம்பமாட்டியே நம்பற குணம் பெண்களுக்கு இருந்தா எங்களுக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வராது!

    நா பத்துத் தடவை இதுவரை ஃபோன் பண்ணினேங்கறதை நீ நம்பறியா?

    நீ ஃபோன் பண்ணினேங்கறதை நம்பறேன்.

    ஓ.கே. இது நாலாவது தடவை.

    நா இப்பத்தான் நுழையறேன். தல போற விஷயத்தை முதல்லே சொல்லு!

    இன்னிக்குச் சாயந்திரம் கமானி ஆடிட்டோரியம்லே ஒரு நாடகம் இருக்கு, கேம்பிரிட்ஜ் ட்ரூப் போடற நாடகம். மெக்-பெத்-வறியா?

    ஷேக்ஸ்பியரெல்லாம் உனக்கு இன்னும் ஞாபகமிருக்கா?

    ஞாபகப்படுத்திக்கலாம்.

    வரேன் டிக்கெட்?

    பாஸ் இருக்கு. ரெண்டு!

    அப்ப கண்டிப்பா வரேன்.

    மறுபடியும் கிண்கிணிச் சிரிப்பு, நீ செலவழிக்கமாட்டேன்னு தெரிஞ்சுதான் ஐ.ஸி.ஸி.ஆர்-லே இருக்கிற ஒரு அண்டர் செகரட்டரியை மஸ்காப் போட்டு ரெண்டு பாஸ் வாங்கிண்டேன்!

    ரொம்பப் போடாதே.

    என்ன?

    ஒண்ணுமில்லே, எத்தனை மணிக்கு?

    ஆறு மணிக்கு.

    வரேன், சாயந்திரம் ஒரு மீட்டிங் இருக்கு. அஞ்சரைக்கு முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். முடிஞ்சதும் நேரே ஆடிட்டோரியத்துக்கு வந்துடறேன்.

    மறக்கச்ச்மாட்டியே?

    ஓ.சி-யிலே போக வேண்டியதை மறக்கவாவது?

    அது மட்டும் தானா?

    இன்னும் வேறே என்னங்கறதை நேராச் சொல்றேன்!

    சொல்லாட்டா விடமாட்டேன்!

    பஸ்ஸர் ஒலித்தது.

    அவன் புன்னகையுடன்,

    ஓ.கே. மாயா, ஆறு மணிக்கு! என்று ரிஸீவரைக் கீழே வைத்தான்.

    ப்யூன் ஒரு கட்டுக் காகிதங்களை மேஜை மேல் வைத்தான். மேல் குறிப்பு-மோஸ்ட் இம்மீடியட்...

    மோஸ்ட் இம்மீடியட் - எல்லாமே அவசரம் இங்கு... ஏதோ அடுத்த நிமிஷம் சாவு வந்து நிற்கப் போகிற மாதிரி. இதில் வேடிக்கை என்னவென்றால் அவன் இந்த வார்த்தைகளை நம்பி அவசரமாக நகர்த்தும் பைல்கள் எங்கே போய் மாட்டிக்கொள்கின்றன என்று புரிவதில்லை. ஒரு ப்ராஜெக்ட்டும் சரியான நேரத்துக்கு முடிவடைவதில்லை. ப்ராஜெக்ட் உருவாவதற்குள் அது வேறு ரூபத்தில் கனமான சில பாக்கெட்டுகளில் உட்காருவதாகப் பலமான வதந்தி.

    அவன் தோளைக் குலுக்கிக்கொண்டான். ‘நமக்கென்ன வந்தது’ என்று சொல்லியபடி மோஸ்ட் இம்மீடியட்’டைப் பிரித்தான். சில வினாடிகளில் அதில் அமிழ்ந்து போனான்.

    லஞ்ச் வேளைக்குச் சற்று முன்னால் அக்கௌன்டென்ட் மோகன் அகர்வால் எட்டிப் பார்த்தான்.

    க்யா யார்! பிஸி?

    வெரி பிஸி! என்று அவன் சிரித்தான், மோஸ்ட் இம்மீடியட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    அகர்வால் சௌகரியமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

    அரே, சோடோ யார்! இதெல்லாம் எத்தன இம்மீடியட் என்று நமக்குத் தெரியாதா?

    ஹரி பதில் சொல்லாமல் புன்னகையுடன் ஃபைலில் பார்வையை ஓட்டியபடி கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்.

    இம்மீடியட்டாக மேலிருப்பவர்கள் பணம் பண்ணத்தான் நீ போடற கையெழுத்து. மார்ஜின்லே எழுதற உன்னுடைய குறிப்பெல்லாம் தண்டம்

    அகர்வால் குரலைத் தாழ்த்திக்கொண்டான்.

    உன் பாஸ் சேத்தியைப் பற்றி என்னைக் கேளு, சொல்றேன். பத்து வருஷத்துக்கு முன்னால் அவன் வீட்டில் ஃபிரிட்ஜ் கிடையாது. ஃபர்னிச்சர் ஹையருக்கு வாங்கிப் போட்டிருந்தான். இப்பப் பார். ஐந்து வீடுகள், மனைவிக்கு ஒரு கார், அவனுக்கு ஒரு கார். எங்கேயிருந்து வந்தது இத்தனையும்? கவர்ன்மெண்டுக்கு பில்டிங் கட்டறதா பாவ்லா காண்பிச்சுத் தங்கள் வீட்டைக் கட்டிக்கிற பெருச்சாளிங்க எல்லாரும்.

    ஹரி எல்லா ஃபைல்களையும் ஒழுங்காகக் கட்டி வைத்து அழைப்பு மணியை அடித்தான்.

    உள்ளே வந்த ப்யூன் ராம்சிங்கிடம், இதை எடுத்துக்கொண்டு போ என்றான்.

    ராம்சிங் அந்தண்டை சென்றதும், தி பாஸ்டர்ட்ஸ் என்றான் அகர்வால்.

    ஹரி பெரிதாகச் சிரித்தான்.

    உனக்கு என்ன இத்தனை கோபம் மோகன்?

    பின்னே என்ன? மேல் மட்டத்தை நீ ரொம்பக் கூர்ந்து பார்த்தியானா வெறும் சாக்கடை. வேலையைப் பத்திக் கேளு. ஒரு மண்ணும் தெரியாது. எம்.டி-க்கு ஒரு ஸ்டாட்டிஸ்டிக் தெரியாது, ரூபா சிங்குடைய வைட்டல் ஸ்டாட்டிஸ்டிக்கைத் தவிர!

    சீ, நீ ரொம்ப மோசம் அவர்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் உனக்கும் எனக்கும் என்ன வந்தது?

    ஒன்றுமில்லையே! அப்சொல்யூட்லி நத்திங். அதனால்தான் அவர்களது பாங்க்பாலன்ஸ் அதிகரித்துக்கொண்டு போகிறது. நமக்கு ப்ரமோஷன் என்று வரும்போது, அவர்கள் எப்படி நடந்து கொள்கிறர்கள் பார்! சோப்ராவுக்கு இப்பொழுது ப்ரமோஷன் ஆகவேண்டும். அவனுக்குப் பதிலா நரேஷ்குமாரை ப்ரமோட் பண்ணப் போகிறார்களாம்!

    அவன் ஜூனியர் இல்லையோ?

    ஜூனியர்தான். ஆனால் எம்.டி-க்கு உறவு.

    ஓ காட்!

    இருவரும் சிறிது நேரம் மௌனக் கோபத்துடன் அமர்ந்திருந்தார்கள்.

    எப்படி இவர்களால் தைரியமாக இப்படிச் செய்ய முடிகிறது? மனச்சாட்சி என்று ஒண்ணு இருக்காதா?

    மனச்சாட்சி முட்டாள்களுக்குத்தான் இருக்கும்.

    ஹரி எழுந்திருந்தான்.

    ஒரு முட்டாளுக்குப் பசிக்கிறது.

    அகர்வால் சிரித்துக்கொண்டு எழுந்தான்.

    முட்டாள்களுக்கு நல்ல வேளை இன்னும் பஞ்சமேற்படவில்லை. வா, எங்கே போகலாம்?

    ஐ.ஈ.என்.எஸ்-காண்டீனுக்குப் போகலாம்.

    லிஃப்டில் இறங்கிக் கீழேபோகையில் போர்ச்சில் எம்.டி-யின் கார் நின்றிருந்தது. எம்.டி. இந்தண்டை அந்தண்டை பாராமல் நேராகச் சென்று பின் வீட்டில் உட்கார வண்டி கிளம்பிற்று.

    தி பாஸ்டர்ட்! என்றான் அகர்வால்.

    ஹரிக்கு ஆச்சரியமாக இருந்தது அவனுடைய கோபம்.

    ஓ கமான் ஈஸி! எம்.டி-யும் ஒரு அகர்வால்!

    அதனால்தான் எனக்கு அவரைப் பத்தி நன்றாகத் தெரியும்!

    உறவா?

    இப்ப இல்லே!

    எனக்குப் புரியல்லே.

    என்னுடைய அக்காவின் புருஷனாய் இருந்தான் இரண்டு பிள்ளைகள் பிறந்ததும் அக்காவுடைய உறவு அறுத்துப் போயிற்று அவனுக்கு, விவாகரத்து பண்ணிட்டாள்.

    ஹரி மௌனமானான். இந்த விஷயத்தை இதுவரை யாரும் சொன்னதில்லை.

    ஓ, அது நடந்து பன்னிரண்டு வருஷங்கள் ஆகிறது. ஒரு வேடிக்கை என்ன தெரியுமோ? என்னுடைய அக்கா இன்னும் வருஷா வருஷம் புருஷனுக்காக ‘கர்வா சௌத்’ விரதம் இருக்கிறாள்!

    ஐ.ஈ.என்.எல். காண்டீனில் நிறையக் கும்பலிருந்தது கையில் பஜ்ஜியும், ஊத்தப்பமும் தயிர் சாதமுமாக.

    அவர்களிருவரும் பஜ்ஜி பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு ஒதுக்குப்புறமாக நின்றார்கள்.

    காலையில் இருந்த உற்சாகம் இந்த மோகன் அகர்வாலைப் பார்த்த பிறகு சப்பென்று வற்றிவிட்ட மாதிரி ஹரிக்குப் பிரமை ஏற்பட்டது. இந்த மோகனும் ஒரு பாரம் தூக்கி சுமைதாங்கி எங்கே இருக்கிறது என்று அலைபவன்...

    சாயந்திரம் மீட்டிங்குக்குப் போகப்போறியா?

    ஆமாம்.

    "அது ஒரு போர்! அதற்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1