Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சொல்லத்தான்... நினைக்கிறேன்..!
சொல்லத்தான்... நினைக்கிறேன்..!
சொல்லத்தான்... நினைக்கிறேன்..!
Ebook118 pages40 minutes

சொல்லத்தான்... நினைக்கிறேன்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உத்ரா என்ஜீனியரிங் ஃபைனல் இயர் படிப்பவள். வசீகரன் தூரத்து உறவு. அதுவும்கூட காதலிக்க ஆரம்பித்த பிறகே தெரியும். அதனால் காதலுக்கு எந்த வில்லங்கமும் வராது என்ற தைரியத்தில் இரண்டு வருடமாய்... ஊர் சுற்றாமல், டீஸன்ட்டாய் காதலித்து வந்தனர்.
 வசீகரன் அவளைக் கலாய்ப்பதற்காக ஜாலியாய்ப் பேசுவானேயொழிய... அக்மார்க் தங்கமான பையன்.
 அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு அடுத்து இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். இளம் வயதுதான். அதில் ஒருத்தியின் வயிறு மேடிட்டிருந்தது. அதைப் பற்றி சுவராஸ்யமாய்ப் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.
 "இப்ப ஆறு மாசம் கம்ப்ளீட் ஆய்டுச்சா ஆர்த்தி?"
 "ம்... இது ஏழாவது ரன்னிங்!"
 "டெய்லி வாக்கிங் போ! குனிஞ்சு நிமிர்ந்து சின்னச் சின்ன வேலைகளைச் செய்! அப்பதான் நார்மல் டெலி வரியாகும்!"
 "ஐயோ... நார்மல் வேணாம்ப்பா. நாங்க டிஸைட் பண்ணியாச்சு சிசேரியன்தான்!"
 "ஏன்டி... டெலிவரி பயமா?"
 "ம்ஹும்... அப்படியில்லே..."
 "பின்னே ஜாதகத்துல ரொம்ப நம்பிக்கையா? உங்க விருப்பப்படி, நல்ல நேரத்துக்கு குழந்தைய டெலிவரி பண்ணணும்னு...?"
 "அதெல்லாமில்லே மீனா!"
 "வேற?""நார்மல் டெலிவரிக்குப் பிறகு, முன்னே மாதிரி சந்தோஷமாக இருக்க முடியாதாம். என் ஹஸ்பண்டோட ஃப்ரண்ட்ஸெல்லாம் சொன்னாங்களாம். அதனாலதான் இந்த முடிவு!"
 "திஸ் இஸ் டூ மச் ஆர்த்தி. இதுக்கு நீ எப்படி ஒத்துக்கிட்டே?"
 "எனக்குக் குழந்தை எவ்வளவு முக்கியமோ, அந்தளவு ஹஸ்பண்டோட சந்தோஷமும் முக்கியம்..."
 "அரக்கத்தனமா தெரியலே உன் புருஷனுக்கு..."
 பேச்சு நீடிக்க...
 இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த உத்ராவின் முகம் கோபத்தில் தணலானது.
 "சை... என்ன வக்ர புத்தி!"
 "நமக்கேன் உத்ரா இதெல்லாம்... விடு... அது அவங்களோட பர்சனல்!"
 "இதெல்லாம் தப்பில்லையா வசீ... சுயநலத்துக்காக இயற்கையை முடக்கி..."
 "விடு... புருஷனுக்காக அவ அதை சந்தோஷமா செய்யறா... நமக்கேன்...!" மெல்லிய குரலில் பேசினான்.
 "இன்னைக்கு நிறைய பேர் இந்தத் தப்பைத்தான் செய்யறாங்க... இதில் நீங்க எந்த ரகம்?"
 "அம்மாடி, நான் படிச்சவன்தான். இந்தக் காலத்துப் பையன்தான்... ஆனா அதெல்லாம் சாப்பிடறதோட, உடுத்தறதோட சரி! அந்த லிமிட்டைத் தாண்டிட்டா வாழ்க்கையிலே நிம்மதி லிமிட்டைத் தாண்டிப் போய்டும். ஜீன்ஸ் போட்ட பொண்ணை ரசிப்பேன். ஆனா, என் வொய்ஃப் ஜீன்ஸ் போட அனுமதிக்க மாட்டேன்.
 மனசளவில் பெரும்பாலான ஆண்கள் பட்டிக்காடுதான் உத்ரா. வலிய எந்த விஷயத்தையும் திணிச்சு சந்தோஷப்படுற ரகம் நானில்லை. எது நடக்குமோ, அதுதான் நடக்கும். என் உத்ரா வலியோட கதறிக் கத்திக் குழந்தையை பெத்துக்கணும். நார்மலான அந்தப் பிரசவத்தை நான் நேர்ல பார்க்கணும். என் குழந்தை இந்த உலகத்தை முத முதல்ல வெளியே வந்து பார்க்கறப்ப... ஹேய்... மை டியர்னு நான் வெல்கம் பண்ணணும்... போதுமா? இந்த டாபிக் வேணாம். வேற எதையாவது பேசுவோமா?" என்று அவளை இயல்பான சூழ்நிலைக்குக் கொண்டு வந்தான்அப்போது... அந்த காபி ஷாப்பில் தன் நண்பனோடு நுழைந்த சிவா, உத்ராவையும் வசீரகனையும் பார்த்து அதிர்ந்தான்.
 கூட்டம் அதிகமிருப்பதாகக் கூறி நண்பனை வெளியில் அழைத்துக் கொண்டு, வேறு ரெஸ்ட்டாரண்டுக்குச் சென்ற பிறகும் உள்ளக் கொதிப்பு அடங்கவில்லை.
 வீட்டில் பெரிய பூகம்பம் வெடிப்பதற்குத் தயாராக இருக்கிறது என்பதை அறியாமல் வாசலில் செருப்பைக் கழற்றி விட்டு நுழைந்தாள் உத்ரா.
 "அம்மா... டீ...!"
 பேக்-ஐ சோபாவில் போட்டு விட்டு தொப்பென்று அமர்ந்தாள்.
 "ஒரு நாளைக்கு எத்தனை டீ சாப்பிடுவே?" வழக்கத்திற்கு மாறாக அம்மாவின் குரலில் மறைந்திருந்த தொனியும் கேள்வியும் முகம் மாற வைத்தது.
 "ரெண்டுதான்... ஏன் கேக்கறே?"
 "அப்ப... எவன் கூடவோ ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறதெல்லாம்?"
 "அ...ம்...மா!" தன்னிச்சையாய் எழுந்து நின்றாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 13, 2023
ISBN9798223588795
சொல்லத்தான்... நினைக்கிறேன்..!

Read more from R.Manimala

Related to சொல்லத்தான்... நினைக்கிறேன்..!

Related ebooks

Related categories

Reviews for சொல்லத்தான்... நினைக்கிறேன்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சொல்லத்தான்... நினைக்கிறேன்..! - R.Manimala

    1

    சுடாத சூரியனின் வெப்பம் அந்த இளம் காலையில் கதகதப்பாய் இருந்தது.

    கத்தரிச் செடியில் புதிதாய் பூக்கள் முளைத்திருப்பதை ஆசையும், பரவசமுமாய்ப் பார்த்த புகழேந்தி, போனஸாய் மீண்டும் ஒரு பிடி, காய வைத்த சாணத்தை அள்ளி மணலில் கலந்தார்

    ஒவ்வொரு முறையும், காற்றுக்கு சலசலத்த மாமரத்திலிருந்து ரிடையரான இலைகள் விழுந்து கொண்டே இருந்தன. அவைகளைப் பொறுக்கி சின்னக் குழிக்குள் போட்டு மூடினார்.

    புதிதாய் நிறைய கிளைகள் விட்டிருந்த முருங்கை மரத்தின் மண்ணைச் சுற்றிலும் கிளறி… இலகுவாக்கினார்.

    வாயில் பிரஷுடன் தோட்டத்திற்கு வந்த உத்ரா அப்பாவையும், பல வண்ணங்களுடன் பிரதிபலித்த தோட்டத்தையும் பார்வையால் படம் எடுத்தாள்.

    முக்கால் கிரவுண்டில் அரை கிரவுண்டு வீடு கட்டி, கால் கிரவுண்டைத் தோட்டத்துக்கு ஒதுக்கி, அதில் கை வித்தையையும் அழகான ரசனையையும் வெளிப்படுத்தியிருந்தார் புகழேந்தி!

    மாமரம், வாழை, கொய்யா, பலா, சப்போட்டா, தென்னை, அருநெல்லி, முருங்கை என நேர்த்தியாய் அததுக்கு இடம் ஒதுக்கி வளர்த்திருந்தார். முருங்கையைத் தவிர எல்லாவற்றிலும் காய் இருந்தது.

    ரோஜா, சம்பங்கி, மல்லி, கனகாம்பரம், குரங்குவால், இருவாட்சி என வரிசையாய்ப் பாத்தி கட்டி... எல்லாவற்றிலும் பூக்கள் தலையசைத்துச் சிரித்தன.

    அஞ்சுக்கு அஞ்சடியைக் கீரை வகைகளுக்கு ஒதுக்கி மணத்தக்காளி, சிறுகீரை, அரைக்கீரை என அது ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க... சற்றுத் தள்ளி கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கொத்தவரங்காய் பயிரிட்டிருந்தார். ஒரு ஓரமாய்... கிடைத்த பிடியில் கொடியைப் படர விட்டு ஓடிக் கொண்டிருந்தது பாகற்காய்.

    ஹோஸ் பைப்பில் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அப்பாவின் அருகில், வாயைக் கழுவி விட்டுச் சென்றாள்.

    திரும்பிப் பார்த்த புகழேந்தி, குட்மார்னிங் உத்ரா என்றார்.

    வெரிகுட்மார்னிங்ப்பா! என்ன சொல்றாங்க... உங்க தோட்டத்துல பிள்ளைங்கள்லாம்!

    உன்னை மாதிரியே சந்தோஷமா சிரிச்சுட்டிருக்காங்க!

    கேக்கணும்னு நினைச்சேன். இதென்னப்பா... மெனக்கெட்டு இந்த முருங்கை மரத்தை இங்கே வச்சிருக்கீங்க? வீட்டுக்கு வெளியேதான் ஒரு மரம் இருக்கே? அங்கேயே வச்சிருக்கலாமே!

    வச்சிருக்கலாம். ஆனா சரியா இருக்காது. இந்தக் கிளை... பாலவாக்கத்துல என் நண்பனோட வீட்டு மரத்துலேர்ந்து வெட்டி எடுத்துட்டு வந்தது. ஒரு காயோட நீளம் ஒரு மீட்டர். கொத்துக் கொத்தாய் பாம்பு மாதிரி தொங்கற காய்களைப் பார்க்கணுமே! உங்கம்மாவுக்கு முருங்கைக் காய்னா அவ்ளோ பிடிக்கும். இந்த மரத்தோட காய் பத்தி நான் சொல்லலே. நீயும் சொல்லாதே! இப்பதானே வச்சிருக்கேன்? ரெண்டு வருஷத்திலே காய்க்க ஆரம்பிச்சிடும். அப்ப அதைப் பார்த்து வாயப் பொளக்கணும். சர்ப்ரைஸா இருக்கட்டும் என்ன சிறு குழந்தையைப் போல் கண்களில் பரவசம் மின்ன பேசிய தகப்பனை வியப்பாய்ப் பார்த்தாள்.

    ‘அம்மா மீதுதான் எத்தனை காதல்? ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அதை வெளிப்படுத்தத் துடிக்கிற ஆசை? ஆனால் அம்மா?’

    உத்ரா...

    என்னப்பா...

    நேத்து நூறு கிராம் வெந்தயம் வாங்கி கிச்சன்ல வச்சேன். அம்மாக்கிட்டே கேட்டு எடுத்துட்டு வா! அடுத்த வாரம் வெந்தயக் கீரை கூட்டு வைக்கணுமே... ஓடு... ஓடு... விதைப்பதற்காக மண்ணைக் கிளற ஆரம்பித்தார்.

    சரிப்பா...!

    அப்படியே... டீயும்!

    இன்னும் நீங்க டீ சாப்பிடலையாப்பா?

    பாவம்... சரசு எவ்வளவுன்னுதான் வேலை செய்வா? இப்பப் போட்டிட்டிருப்பா... எடுத்துட்டு வந்துடு!

    கிச்சனுக்குள் அம்மா இல்லை. ஒரு டம்ளரில் டீ இருந்தது... ஆடையோடு!

    சரஸ்வதி வந்தாள்.

    உன் பிள்ளைகளுக்கு எல்லாம் டீ கொடுத்தாச்சா?

    அதென்ன என் பிள்ளை? உன் அண்ணனுங்கன்னு சொல்லு. குடுத்துட்டுத்தான் வர்றேன்.

    இது யாருக்கு?

    உங்கப்பாவுக்கு!

    அதென்ன என் அப்பா? உன் புருஷன்னு சொல்லு!

    காலையிலே ஏன் வாயைக் கிளர்றே? என்ன வேணும் உனக்கு,

    அப்பா வெந்தயம் வச்சிருந்தாராமே!

    இதோ இருக்கு பாரு!

    டீ?

    எடுத்துட்டுப் போ!

    போட்டதும் கொண்டு போய்த் தரக் கூடாதா? ஆறிப் போயிருக்கு... சூடு பண்ணித் தா!

    வேலையிருக்கு... எடுத்துட்டுப் போ... குடிப்பாரு!

    உன்கிட்டே சொல்றேன் பாரு! வழி விடு... ஸ்டவ்விலிருந்து குக்கரை இறக்கி... ஒரு சின்னக் கிண்ணத்தில் டீயை ஊற்றிச் சூடு பண்ணினாள்.

    சரஸ்வதி... மௌனமாய் மிக்ஸியில் சட்னி அரைத்தாள்.

    துப்பட்டாவைத் தலையைச் சுற்றிக் கழுத்தில் படர விட்டிருந்தாள் உத்ரா. பைக் வேகமாய் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கினாலும்... அவன் மேல் மோதாமலிருக்க பில்லியனை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

    உன்னையெல்லாம் பைக்ல ஏத்தறதே வேஸ்ட் உத்ரா! என்றான் வசீகரன். பெயருக்கேற்ற ஹாண்ட்ஸம் பாய்.

    ஏன்?

    கஷ்டப்பட்டு, பள்ளத்திலேயும் ஸ்பீட் பிரேக்கர்லேயும் ஏறி இறங்கினாலும்... கொஞ்சமாவது மேலே சாயறியா? நாளைலேர்ந்து ஷேர் ஆட்டோவிலேயே போகலாம்.

    படவா... அலையாதே... பார்த்து ஓட்டு...!

    அதைத்தானே செஞ்சிட்டிருக்கேன்... என்றான் பாதையோர மக்களைப் பார்த்தபடி.

    உத்ரா சற்று நேரம் அம்மாவையும் அப்பாவையும் எண்ணி வியந்தபடி அமைதியாய் வந்தாள்.

    ஒரு வளைவில்... ஷாப்பிங் காம்ப்ளஸ் வாசலில் நின்றிருந்த இளம் பெண்ணைப் பார்த்து வியந்தாள்.

    ப்பா... எவ்ளோ மேக்கப்?

    யாரைச் சொல்றே?

    ஒரு பொண்ணு வசி. பார்க்க அழகாவே இருக்கா. ஆனா, ஹெவி மேக்கப் போட்டுக்கிட்டு... சகிக்கலே!

    ஓ... அந்தப் பொண்ணா? ரோஸ்ல பிளாக் டாட் போட்டு சல்வார் போட்டிருந்தாளே... ஆஷ் கலர் ஹாண்ட் பேக், கோல்டு கலர் ஹை ஹீல்ஸ் கூடப் போட்டிருந்தா... அவளைத்தானே சொல்றே?

    ஓங்கி நங்கென்று அவன் ஹெல்மெட் தலையில் குட்டினாள்.

    ஜஸ்ட் ஒன் செகண்ட்தான் இருக்கும்... ரன்னிங்ல போறப்ப... அவ்வளவுதான் பார்க்க முடியும்... அந்த ஒரு செகண்ட்லேயே அந்தப் பொண்ணை இந்தளவு டீப்பா பார்த்திருக்கேன்னா... நீ எப்பேர்ப்பட்ட...

    வெய்ட்... வெய்ட்... ஒரே ஒரு செகண்ட்ல பார்த்தாலும்... எவ்வளவு மெமரி பவர் இருந்தா... கரெக்டா சொல்லுவேன்? அதைப் பாராட்டு உத்ரா!

    நான் என்ன கலர் ஸ்டிக்கர் வச்சிருக்கேன் சொல்லு? திரும்ப எத்தனித்தான்.

    பார்க்காம சொல்லு!

    ப்ரவுன்?

    ப்ளாக்!

    ஹி... ஹி...

    வழியாதே! ஸோ... என்னைவிட மத்தவளுங்களைத்தான் நோட்டம் விடறே!

    "சேச்சே... நீ என் பாக்கெட்ல இருக்கிற பர்ஸ் மாதிரி.

    Enjoying the preview?
    Page 1 of 1