Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athu Oru Nilaaakkaalam
Athu Oru Nilaaakkaalam
Athu Oru Nilaaakkaalam
Ebook87 pages50 minutes

Athu Oru Nilaaakkaalam

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466213
Athu Oru Nilaaakkaalam

Read more from Usha

Related to Athu Oru Nilaaakkaalam

Related ebooks

Reviews for Athu Oru Nilaaakkaalam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athu Oru Nilaaakkaalam - Usha

    16

    1

    பரதன் தீர்மானித்து விட்டான். என்ன ஆனாலும் சரி இன்று கேட்டுவிடுவது! நேருக்கு நேராக, கண்களைப் பார்த்து நின்று கேட்டுவிடுவது!

    முடிவெடுத்தபிறகு மனதிற்குள் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு ஏற்பட்டது. உடம்பில் தானாக ஏறிக்கொண்ட சுறுசுறுப்பை உணர்ந்தபோது வியந்தான். ரத்த ஓட்டத்தில் ஏதோ போதை மாத்திரை கலந்த மாதிரி ஒரு சொகுசான துள்ளல் தெரிந்ததையும் ஆச்சரியத்துடன் உணர்ந்து கொண்டான்.

    வேகமாக குளித்து முடித்துவிட்டு கண்ணாடி முன் நின்றான்.

    மிகவும் விருப்பமான கறுப்பு வெள்ளை கலவையில் பாண்ட்டையும் ஷர்ட்டையும் அணிந்துகொண்டு சீப்பை எடுத்தான். பொறுமையாக வகிடு பிரித்து, தலையை படியப் படிய வாரி முடித்தான். தேங்காய்ப்பூ துவாலை எடுத்து முகத்தை அழுத்தமாக துடைத்து, மீசையை செல்லமாக சீப்பில் வருடி, இமைகளில் இருந்த லேசான தூசியை அகற்றிவிட்டு நிமிர்ந்து நின்றான். கம்பீரமாக புன்னகைத்தான். பதிலுக்கு கண்ணாடி பிரதிபலித்த முகம் வசீகரமாக இருந்தது.

    ‘அழகானவன்தானடா பரதா நீ! என்ன, ஒரு பயங்கரமான விபத்து உன் இடது காலை கூழாக்கிவிட்டது! பூட்ஸ் உதவியில்லாமல் நடமாட முடியாதபடி போய்விட்டது! அவ்வளவுதானே! பிறவி ஊனம் இல்லையே! தவிர, எல்லாவற்றையும் ஈடுகட்டும் விதமாக உன் முகம்! அந்த கவர்ச்சியான காந்தக் கண்கள்! அதிலும் அந்த விரல்கள்! தூரிகை பிடித்த மாத்திரத்தில் புகுந்து விளையாடி, கண்ணில்பட்ட காட்சியை எல்லாம் வெள்ளைத்தாளில் கொண்டு வந்துவிடுகிற உன் திறமை யாருக்கு வரும்? தயங்கவே வேண்டாம் பரதா! ஒழுக்கம், உழைப்பு, உண்மை என்று உத்தமனாக வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு வாழ்க்கைப்பட ஒவ்வொருத்தியும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். தீர்மானம் எடுத்த கையோடு, நேரடியாக அவளிடம் கேட்டுவிடு!’ பரதன் உற்சாகமாக தலையசைத்தான். இரண்டு பிரெட் ஸ்லைஸ் எடுத்து பாலில் ஒற்றினான். சாப்பிட்டான்.

    வீட்டைப் பூட்டிக்கொண்டு படி இறங்கி நடந்தபோது! வீட்டுக்கார தாத்தாவின் குரல் கேட்டது.

    தம்பி! பரதா!...

    அட! ஒக்காந்திருக்கீங்களா இங்க? கவனிக்கலே தாத்தா... சொல்லுங்க என்ன விஷயம்? என்று பக்கத்தில் போனான்.

    நிமிர்ந்து பார்த்தார் அவர்.

    பல்பு போட்ட மாதிரி பளிச்சுனு இருக்குதேப்பா உன் முகம்! என்னப்பா விஷயம்? டீச்சருங்களுக்கு சம்பளம் ஏறப்போகுதுன்னாங்களே! அப்படியா? என்றார்.

    இல்லே தாத்தா... பேச்சளவுலதான் இருக்குது... கண்ணாடிய துடைச்சு போட்டிருக்கீங்க போல! அதான் என் முகத்தை சரியா பார்த்திருக்கீங்க... சிரித்தான் அவன்.

    பார்த்தியா! என்னையவே நக்கல் பண்ணிட்ட பாத்தியா! அந்தக் காலத்து ஒடம்புய்யா இது! கண்ணு, காது, பல்லு, நாக்கு எல்லாமே கல்லாட்டம் இருக்குது! பொண்ணு பாக்கப்போறவன் மாதிரி பளிச்சுனு இருக்குறே நீ! ஆமா, சொல்லிட்டேன். தாத்தா ரோஷமாக படபடத்தார்.

    சரி தாத்தா... ஸாரி! வரேன் தாத்தா! ஆனா ஒரு விஷயம்! படா கில்லாடி தாத்தா நீங்க... என்று பாராட்டு பத்திரம் வழங்கிவிட்டு தெருவில் இறங்கினான்.

    அவ்வளவு பளிங்காகவா இருக்கிறது முகம் என்று நினைத்து ஆச்சரியப்பட்டான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று பழமொழி ஏற்படுத்தியவனை பாராட்டிக் கொண்டான். அலை அலையாய்ப் புரண்டு கொண்டிருக்கும் உற்சாகம் கண்களுக்கு மின்சாரத்தை வழங்கியிருக்கிறது வெளிச்சத்தைப் பூசியிருக்கிறது. ஷோபனா! நீதான் பெண்ணே காரணம்! எல்லாவற்றிற்கும் நீதான் காரணம்! என் உணர்வுகளை தீர்மானிக்கிறாய். என் நடை, உடையை ஆக்கிரமிக்கிறாய். என் வார்த்தைகளில் ஊடுருவியிருக்கிறாய். ஏன், என் தூக்கத்திலும் கனவாக நீதான் நடமாடுகிறாய். ஆனால், ஒன்றுதான் தெரியவில்லை எனக்கு! இதே பாதிப்புகளை உன்னிடம் நானும் ஏற்படுத்தியிருக்கிறேனா ஷோபனா? தெரியவில்லையே...

    அதுதான் பாடாய்ப்படுத்துகிறது என்னை. போதும் நான் பட்டது. இன்று கேட்டுவிடப்போகிறேன். பள்ளிக்கூடத்தை அடைந்தபோது சின்னப்பையன் போல இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. பனிப்பிரதேசத்துக்கு வந்து விட்ட மாதிரி சுவாசம்கூட தடுமாறியது.

    குட்மார்னிங் பரதன் சார்... ஷோபனா திடீரென்று எதிரில் வந்தாள். எப்போதும் போல் அழகாக புன்னகைத்தாள்.

    குட்மார்னிங் ஷோபனா! அவன் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனான்.

    அரசமர கிளைகளின் வழியே சூரியன் அவள் முகத்தில் போட்டிருந்த பொன்னிறக் கோலத்தில் பதிந்த விழிகள். ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு ஓவியம் பாத்தேன் பரதன் சார்! ரொம்பவும் அழகாக இருந்தது! குழந்தைக்கு பால் குடுத்துவிட்டு தாய் குழந்தையை பாக்கறா! ரெண்டு முகத்துலயும் அப்படி ஒரு நிறைவு! வெரி க்யூட் சார்! உங்ககிட்ட காட்டணும்னு எடுத்திட்டு வந்தேன்! மனசு வெச்சா இதைவிட அருமையா வரைய முடியும் உங்களால! பாருங்களேன்... என்று நீட்டினாள்.

    அப்படியே

    Enjoying the preview?
    Page 1 of 1