Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aalkaatti Paravaikal
Aalkaatti Paravaikal
Aalkaatti Paravaikal
Ebook109 pages1 hour

Aalkaatti Paravaikal

By Usha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466190
Aalkaatti Paravaikal

Read more from Usha

Related to Aalkaatti Paravaikal

Related ebooks

Reviews for Aalkaatti Paravaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aalkaatti Paravaikal - Usha

    23

    1

    "என்னம்மா அகிலா, இன்னிக்கு ரொம்ப சீக்கிரமா எழுந்துட்டே?" என்ற அப்பாவின் குரலுக்கு அவள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள்.

    வசுவோட பர்த்டேப்பா இன்னிக்கு. மெரிடியன்ல பஃப்பே கொடுக்கிறா. என்ன டிரஸ் போட்டுக்கிட்டு போகலாம்னு யோசிச்சுகிட்டே இருந்ததுல காலை சீக்கிரமா முழிப்பு வந்துடுச்சுப்பா...

    ஓ! அப்படியா? அவளுக்கு என்னோட பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிடும்மா. ஒரு புத்தகம் தரேன். அவகிட்ட கொடுத்துடு என் பிறந்தநாள் பரிசா

    ஓ! ஷ்யூர்ப்பா. இன்னிக்கு எனக்காக எதுவும் சமைக்க வேண்டாம்பா.

    சரிம்மா. அது சரி, நீ சொல்றது பெரிய ஹோட்டல் இல்லேம்மா? என்றார் அப்பா வியப்புடன்.

    ஆமாம்பா நட்சத்திர ஓட்டல்!

    பஃப்பே ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் இல்லையா?

    ஆமா, எழுநூறு ரூபா ஒருத்தருக்கு... என்றாள் அவள் தன் டிஸைனர் பாட்டியாலாவை எடுத்தபடி.

    அப்படியா? வசு அவ்வளவு பெரிய பணக்காரி ஆகிட்டாளா? என்றார் வியப்பு மாறாமல்.

    பின்ன என்னப்பா? அம்பதாயிரம் சம்பளம். மிகப்பெரிய சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வேலை. என்னைப் போலவே வேற எந்த பிக்கல் பிடுங்கலும் கெடையாது. அவளுக்கும் உங்களை மாதிரியை அன்பைக் கொட்டற அம்மா. வேற என்னப்பா செய்வா பணத்தை வெச்சுகிட்டு? கொண்டாடி தீக்கறா... அகிலா சிரித்தபோது அந்த பற்களின் வசீகரத்துடன் போட்டி போட இயலாமல் புத்தம் புது உடை தடுமாறியது.

    பெரியவருக்கு இன்னும்கூட ஜீரணிக்க முடியவில்லை. ஒருவருக்கு, ஒருவேளை, உணவுக்கு, எழுநூறு ரூபாய். குறைந்தது முப்பது பேரை அழைத்திருந்தால் கூட இருபதாயிரத்திற்கும் மேலே.

    இதென்ன ஆடம்பரம்? பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அழகு தான். தனக்காக, பிரத்தியேகமாக, மிக சிறப்பானதாக ஒரே ஒரு நாள் என்பது ரம்மியம்தான். ஏதேதோ எண்ணங்களையும் நினைவுகளையும் கலைடாஸ்கோப் போல சுழலவிட்டு தனக்குத்தானே ரசித்து, மகிழ்ந்து ஏதோ ஒரு மயக்கத்தில் ஆழ்ந்து மிதக்கிற ஒரு சுகமான நாள்தான்.

    ஆனால், இவ்வளவு டாம்பீகமாகவா அதை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும்? அகிலா சொல்வதைப் போல அவ்வளவு பணத்தை என்னதான் செய்வாள்? இருபத்து இரண்டு வயதுக்குள் சிவில் இன்ஜினீயரிங் முடித்து விட்டார்கள். தேசத்தின் மிகப்பெரிய கட்டட கம்பெனி வீடு தேடி வந்து மிகப்பெரிய வேலையை கையில் திணித்து விட்டுப் போகிறது. அந்த காலத்து வீட்டின் தலைமகனைப் போல பெரும் பொறுப்புகள் எதுவும் இல்லாத பட்டாம்பூச்சி வாழ்க்கை. கொண்டாடி தீர்ப்பதை தவிர வேறு என்னதான் செய்வார்கள்?

    உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லவே மறந்துட்டேன்ப்பா என்று அழகிய ராஜகுமாரியைப் போல தகதகவென்று வந்து நின்ற மகளைப் பார்த்தார் அப்பா.

    சொல்லும்மா...

    அடுத்த மாசத்துல நான் யு.எஸ். ட்ரிப் போக வேண்டியிருக்கும்பா.

    யு.எஸ்ஸா? என்னம்மா திடீர்னு சொல்ற?

    ஆமாம்பா. நேத்துதான் மும்பைல இருந்து நியூஸ் கசிஞ்சுது. சென்னைல இப்ப இருக்கிற சித்தார்த் டவர்ஸ் தான் நாப்பது மாடி இருக்கிற பெரிய பில்டிங். எங்களோட புத்தா ஹவுஸிங் ஐம்பது மாடி இருக்கிற குடியிருப்பை கொண்டு வரப்போகுதுப்பா. அமெரிக்க கட்டடங்களை ஒரு தடவை விசிட் செஞ்சு பாத்துட்டு வரணும்னு என்னை மாதிரி கிரவுண்ட் லெவல் இன்ஜினீயர்களுக்கு ஒரு புராஜெக்ட்டாம்பா!

    அம்பது மாடியா? என்னம்மா அகிலா இது? மனுஷங்க வாழ முடியுமா இவ்வளவு உயரத்துல? அப்பா வாய் பிளக்க, அவள் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டாள்.

    எண்பது, நூறு, நூத்தியிருபது மாடியெல்லாம் சர்வ சாதாரணம்பா நியூயார்க்குல. அம்பதுங்கறது ஜுஜுபி! படிச்ச படிப்புக்கும் செயல்படற மூளைக்கும் சவாலா இந்த மாதிரி வானத்தை தொடற கட்டடங்களை எழுப்பணும்மா. சிவில் இன்ஜினீயரிங் என்கிறது எவ்வளவு உன்னதமான படிப்புன்னு எல்லாருக்கும் தெரியணும். சும்மா சும்மா ஐ.டி., எலெக்ட்ரானிக்கல்னு பசங்க ஜல்லியடிக்கறானுங்கப்பா. வேஸ்ட் எவ்ரி ஒன்...

    எனக்குப் புரியலே அகிலா...

    எதுப்பா?

    உலகம் எவ்வளவு பெரியது? ஜனங்க ஏன் ஒரே நகரத்துலயே மூச்சடைக்க வாழணும்? சிட்டி, சிட்டினு ஏன் புறாக்கூண்டுகளுக்குள்ள அடைபட்டு கெடக்கணும்? சிமெண்ட், கம்பி, ஸ்லாப், பில்லர்னு உங்களை மாதிரி ஆட்கள் மண்டையை ஒடைச்சுட்டு ஏன் மாடி மாடியா கட்டணும்? போதாததற்கு, மாடிகளை பிளேன் வெச்சு பிளக்கிறான் டெர்ரரிஸ்ட். இவ்வளவு ரிஸ்க்குல வாழ்க்கை தேவையாம்மா?

    அகிலாவின் முகம் சிவந்தது. சின்னதாக பெருமூச்சு விட்டபின் அவரிடம் வந்தாள்.

    கட்டடக் கலையோட முக்கியத்துவத்தை இன்னும் உங்களை மாதிரி இன்டலச்சுவல்ஸே புரிஞ்சுக்கலேப்பா. தாஜ்மஹால், முத்து மசூதி, ஜும்மா மசூதி, ரெட் போர்ட் - இப்படிப்பட்ட கட்டடங்கள்தான் முகலாயர்களோட சரித்திரத்துக்கு ஆதாரமா இருக்கு. தஞ்சை பெரிய கோவிலும், கல்லணையும்தான் சோழர்களின் ஆட்சிக்கு சாட்சிகள். ஆயிரம்கால் மண்டபம் பாண்டியர்கள் பத்தி சொல்லுது. ஹளபேடு கட்டடங்கள் கிருஷ்ணதேவராஜா, செஞ்சிக்கோட்டை தேசிங்கு ராஜன். ஆக்ரா கோட்டை அக்பர், ஜெய்ப்பூர் அரண்மனை ராஜா ஜெய்சிங்னு அந்தந்த காலத்தையும் ஹீரோக்களையும் பத்தி இன்னிக்கும் அழுத்தமா சொல்லிக்கிட்டு இருக்கு. இப்போ என்னை மாதிரி பொறியாளர்கள் ஒருங்கிணைஞ்சு மல்ட்டி ஸ்டோரேஜ் மல்ட்டிபிலிக்ஸ்னு சாதனை பண்ணிக்கிட்டிருக்கோம். நம்மோட காலம், வாழ்க்கை முறை, ஆட்டிட்யூட், வசதி, கண்டுபிடிப்புகள்னு எவ்வளவோ விஷயங்களை எதிர்கால ஜெனரேஷனுக்கு சொல்லப்போற முக்கியமான கட்டடக் கலைப்பா என்னுடைய கலை.

    மூச்சு விடாமல் பேசிக்கொண்டே போகும் மகளை வியப்புடன் பார்த்தார் அப்பா.

    அகிலா அவருடைய மகள் மட்டும் இல்லை. அவள் ஒரு சிவில் இன்ஜினீயர். கட்டடக் கலையை மிக்க ஆர்வத்துடன் தொழிற்படிப்பாக எடுத்துப் படித்தவள். இன்னும் தீராத தாகத்துடன் அந்த துறையின் படிகளில் ஏறி ஏறி முத்திரை பதிக்கத் தவிப்பவள்.

    அவள் வரையில்

    Enjoying the preview?
    Page 1 of 1