Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Erimalai Pookkal
Erimalai Pookkal
Erimalai Pookkal
Ebook109 pages1 hour

Erimalai Pookkal

By Usha

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466251
Erimalai Pookkal

Read more from Usha

Related to Erimalai Pookkal

Related ebooks

Related categories

Reviews for Erimalai Pookkal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Erimalai Pookkal - Usha

    18

    1

    கடற்காற்று கட்டித் தழுவிக் கொண்டிருந்த அந்தப் பெண்கள் கல்லூரியின் நான்காவது மாடி.

    உற்சாகமும் இளமைத் துள்ளலுமாக கலகலத்துக் கொண்டிருக்கும் அந்த எம்.எஸ்.சி. மாத்ஸ் அறை முதன் முறையாக அமைதியை அனுபவித்துக் கொண்டிருந்தது.

    டியர் கேர்ள்ஸ்... என்று மெல்லிய குரலில் ஆரம்பித்து வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் மரணம் மற்றும் பிரிவு... வி ஹாவ் டிபார்ட் நவ்... இந்த ரெண்டு வருஷங்களை நான் ரொம்பவே ரசிச்சேன்... வீணாவோட சென்ஸ் சாஃப் ஹ்யுமர், நந்தினியோட மலையாளம் கலந்த தமிழ், ஷீலா போடற ஜீன்ஸ், பாத்திமா பாடற கர்னாடிக் இசை, பர்வீன் எழுதற தமிழ்க் கவிதை... அண்ட் எஸ்பெஷலி சபர்மதியோட ப்ரில்லியன்ஸ் அண்ட் ப்யூட்டி... ஐ லைக் திஸ் பாட்ச் வெரிமச்... எப்பவும் நினைவில் இருக்குற அருமையான மாணவிகள்... குடும்பம், சமையல்... குழந்தைன்னு பெண்கள் சமாச்சாரம் உங்கமேல திணிக்கப்பட்டாலும், ஒண்ணே ஒண்ணு சொல்றேன்... உங்களை பாதிச்ச விஷயம், உங்க மகளை பாதிக்க விடாதீங்க... உங்களுக்கு கெடைக்காம பறிக்கப்பட்ட சந்தோஷம், உங்க மகளுக்கு கெடைக்கட்டும்... அட்லீஸ்ட், த நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஷீட் பி பெனிஃபிட்டட்... ஆல் த பெஸ்ட்... என்று கரோலினா மிஸ் தழுதழுத்த குரலில் சொல்லி விட்டுச் சென்றபோது அங்கே மூச்சு விட்டால் கூட கேட்கும்படியான மவுனம் நிலவியது.

    கவிதாதான் எழுந்தாள்.

    மிஸ் சொன்னது ரொம்ப க்ரெக்ட்... இன்னும் பத்தே நாள்ல எனக்குக் கல்யாணம். திணிக்கப்பட்ட கல்யாணம்... மாப்பிள்ளை அபுதாபி... சமைச்சுப் போட்டு, பிள்ளை பெத்து, ஷாப்பிங் போய், சினிமா பாத்து... எ கிரிமினல் வேஸ்ட் ஆஃப்... எவ்ரிதிங்...

    சாருமதி அவள் தோளை தட்டிக் கொடுத்தாள்.

    ஏய், கம் ஆன் கவிதா!... ஒரு நாளைக்கு மூணு லெட்டர் எழுதறார் உன் உட்பி! வாரா வாரம் எஸ்டிடில் அரை மணி நேரம் பேசறார். எப்ப கல்யாணம்னு துடிச்சிட்டிருக்கார்... நீ கிரிமினல் வேஸ்ட்டுன்னு சொல்றே பார் இதுதான் கிரிமினல் பொய்...

    விழுந்து விழுந்து படிச்சு தொண்ணூறு பர்சென்ட் வாங்கினதெல்லாம் வேஸ்ட் இல்லையா அப்ப?

    ஷீலா, எழுந்து வந்து நின்றாள்.

    க்வாலிபிகேஷன் இம்ப்ரூவ் பண்ணிக்கறது வேஸ்ட்டே கெடையாது... ஒளவையார் சொன்ன மாதிரி கல்வி எப்பவும் கை கொடுக்குமே தவிர, கை விடாது... சாய்லக்ஷ்மி மெள்ள கடல் பக்கம் பார்த்தபடி முணுமுணுத்தாள்.

    நீ என்ன செய்யப் போறே நாளைல இருந்து...?

    எம்.பி.ஏ. சேரப் போறேன்... அதுக்கு முன்னால குக்கரி க்ளாஸ்...

    ரெண்டுத்துக்கும் சம்பந்தமே இல்லையே...

    அட்மிஷன் கெடைச்சா எம்.பி.ஏ. இல்லேன்னா கேட்டரிங் கோர்ஸ்...

    அவ சொல்றது புரியலையா உனக்கு?... வீட்ல மாப்பிள்ளை எல்லாம் பாத்தாச்சு சமைக்க தெரிய வேண்டாமா பொண்ணுக்கு? அம்மா போட்ட ஆர்டர்... ராய்த்தா, கச்சோடின்னு கத்துகிட்டாதானே பம்பாய் ஏஜிஎம் அட்ராக்ட் ஆவான்...?

    ஃபாத்திமா... கர்னாடிக் இன்னும் இம்ப்ரூவ் பண்ணிக்கப் போறியா? இன்டர் - காலேஜ் பாட்டுப் போட்டில மோகன ராகத்துல சினிமாப் பாட்டு பாட சொன்னதும், உடனே ‘மலர்கள் நனைந்தன பனியாலேன்னு’ பாடினே... ஆடிட்டோரியம் பூரா கப்சிப்... பாடி முடிச்சதும் வந்த க்ளாப்ஸ் ஜஸ்ட் இன்க்ரெடிபிள் வேற யோசனையே இல்லாம உனக்குத் தானே ஃபர்ஸ்ட் பொஸிஷன் கொடுத்தாங்க... ஜஸ்ட் மறக்கமுடியலே.

    இல்லே ராதிகா... என்றாள் ஃபாத்திமா? மிக மென்மையாக எல்லாப் புகழும் இறைவனுக்கே...

    என்ன சொல்றே?

    குர்ஆன்ல வர்ற பாப்புலர் வாசகம். நானும் அதைத்தான் சொல்லணும்... சொல்றேன்...

    ஏன்?... வொய்? வொய் ஃபாத்திமா?

    எங்கப்பா ஒரு ஹாஜி... அம்மா ரொம்ப ரொம்ப பழமைவாதி... கர்நாடக சங்கீதம் கத்துகிட்டதே அவங்களுக்கு பிடிக்கலே... பால கனகமய, ஆடாது அசங்காது வா கண்ணான்னு நான் பாடும்போது மவுனமா எழுந்து போய்டுவாங்க... ஏதோ ஆசைப்பட்டேன், கத்துகிட்டேன், ப்ரைஸ் வாங்கினேன்! தட்ஸால்! சாப்டர் ஓவர்... கறுப்பு பர்தா போட்டுகிட்டு இன்ஷா அல்லா சொல்லிகிட்டு கதவுக்கு பின்னால் மறைஞ்சு நின்னு... அடுத்த சாப்டர் இனி ஆரம்பம்... ஃபாத்திமா எங்கோ பார்த்தபடி சொன்னாள்.

    ஒரு கணம் அமைதி அந்த இடத்தை போர்த்திக் கொண்டது.

    ஷிட்! ப்ளடி ஷிட்... ஷீலா கோபத்துடன் டேபிளை குத்தினாள்.

    ஆம்பளைப் பசங்க மட்டும் ஐஐடி, பிலானின்னு முடிச்சுட்டு ஸ்டேட்ஸ் ஜெர்மனின்னு போயிடலாம்... என்.ஆர். ஐன்னு பந்தாவா பர்முடாய் போட்டுகிட்டு மினரல் வாட்டர் பாட்டிலோட ‘ஹௌ ஹாட் இஸ் இண்டியா’ன்னு அலட்டிக்கலாம்...! நாம மட்டும் நூறு பவுன் கொட்டி கொடுத்து இவனுகளை கட்டிகிட்டு வாரிசு பெத்துக் கொடுத்து டயர் போட்ட உடம்போட இன்டிவிஜிவாலிட்டியே இல்லாம போயிடணும்... ஆல் ப்ரீப்ளான்ட்! மேன் மேட் லா அண்ட் எவ்ரிதிங்...

    நீ கல்யாணமே செஞ்சுக்க மாட்டியா ஷீலா...?

    இப்போதைக்கு நிச்சயமா இல்லே... அதுக்காக இந்த பசங்களை சும்மா விட்டுட மாட்டேன்... எவனையாவது பிடிச்சு ஒரு பேஸ் ஏற்படுத்திக்குவேன் ஸ்டேட்ஸ்ல்... எம்.எஸ். முடிப்பேன். நிச்சயமா நா ஒருநாள் என்.ஆர்.ஐ. இன் அமெரிக்கா. இந்தியா வந்து தமிழ்நாட்டுப் பையனை கட்டிகிட்டு கூட்டிப் போவேன்.

    வசந்தியும் நீலாவும் கைதட்டினார்கள்.

    நடக்குமோ இல்லையோ, நீ சொன்னது ரொம்ப நல்லா இருந்தது ஷீலா... ஆல் த பெஸ்ட்...

    கடற்காற்று நின்று விட்டது. வெயிலின் தீக்கரங்கள் மணலை வறுத்து அனலை வாரி அடித்தன. கடமைக்காக ஓடிக் கொண்டிருந்த கவர்மென்ட் பஸ்களைத் தவிர அரவமே இல்லாத சாலை. திடீரென்று மெல்லிய விசும்பல்.

    அனைவரும் திடுக்கிட்டுப் போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். யார்? யாரது அழுவது?

    கீதா...! ஏய் கீதாதான் அழறா... சாரு கத்தினாள். எல்லாரும் சூழ்ந்து கொண்டார்கள். கீதாவா அழுகிறாள்? எதற்கும் கலங்காமல் நிமிர்ந்து நிற்கிற கீதாவா? யாரோ ஒரு ஹாக்கி பிளேயரோடு பைக்கில் கற்றுகிற

    Enjoying the preview?
    Page 1 of 1