Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaai Veedu
Thaai Veedu
Thaai Veedu
Ebook118 pages2 hours

Thaai Veedu

By Usha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466268
Thaai Veedu

Read more from Usha

Related authors

Related to Thaai Veedu

Related ebooks

Related categories

Reviews for Thaai Veedu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaai Veedu - Usha

    20

    1

    கடற்கரை.

    கோடைக்கால சாயங்காலம்.

    குப்பைக் கூளமாகிவிட்ட மெரீனாவின் மேல் ஆசை வைத்து இன்னும் ஜனங்கள் வந்திருந்தார்கள்.

    மோகன் வழக்கமான கட்டு மரத்தின் மேல் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தான். மணி பார்த்தான்.

    ஆறேகால்! இன்னும் அர்ச்சனா வரவில்லை. ஐந்து மணிக்கு ஆபீசை விட்டுக் கிளம்பினால் பத்தே நிமிடங்களில் வந்து விடலாம். கண்ணகி சிலையிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிற அரசாங்க அலுவலகம். போட்டது போட்டபடி கிளம்பிவிடக் கூடிய சவுகரியமான உத்வேகம். ஏன் அவளே கிளம்பவில்லையா?

    கிளம்புவதற்கு முன்பாக அவளைப் பார்த்துக் கண்ஜாடை காட்டிவிட்டுத்தான் வந்தான்.

    அவளுக்கும் மெல்லிய இமையசைவில் பதில் சொல்லத் தெரிந்திருந்தது. அவன் வந்து நாற்பது நிமிடங்களாகி விட்டன.

    காலேஜ் பெண்கள் கூட்டம் குப்பென்ற ரோஜா வாசனையுடனும் கதம்ப சிரிப்பொலியுடனும் கடந்து போயிற்று.

    ஐந்து பெண்கள் இருக்கலாம். நவநாகரீகத்தின் ஆளுமையில் இருந்த பெண்கள். டெனிம் ஜீன்ஸ். மிக லூசான பனியன். அபாரமான ஷூக்கள். எண்ணை வாடையே படாத பறக்கும் கூந்தல். பொட்டே இல்லாத நெற்றி. அழுத்தமான லிப்ஸ்டிக் இதழ்கள்.

    ‘நோயா... ஷாருக் டன் ஹிஸ் பெஸ்ட்...’ என்று ஒருத்தி சொல்வதும் ‘சல்மான் மே பீ த பெஸ்ட் சாய்ஸ்...’ என்று அடுத்தவள் சொல்வதும் காதில் வந்து விழுந்தது.

    மோகன் மெல்ல புன்னகைத்துக் கொண்டான். சினிமாவும் ஹீரோக்களும் நாளின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்க, ஃபாஸ்ட் ஃபுட், ஸ்டோன் வாஷ், கோக், டிப்ஸ் அண்ட் டோஸ் என்று மிக மேலோட்டமாக மிதந்து கல்லூரி வாழ்க்கையை பட்டாம் பூச்சித் தனமாக முடித்து விட்டு வாழ்க்கையில் நிஜமான அடியை எடுத்து வைக்கும்போது எப்படி இவர்கள் எதிர்கொள்ளுவார்கள்?

    குப்பென்று காற்றில் எண்ணைக் கசண்டின் நாற்றம். வயிற்றைப் புரட்டுகிற துர்வாசம்.

    உலகின் மூன்றாவது அழகிய கடற்கரை என்று சொன்னால் எல்.கே.ஜி. குழந்தையாவது நம்புமா?

    சென்னையை சிங்காரித்து அழகுப் பூங்காவாக்குவோம் என்று முழங்குகிற அரசியல்வாதிகள் ஒருத்தர் கூடவா இந்தப் பக்கம் வரமாட்டார்கள்? சென்னைவாசி ஒவ்வொருத்தனும் பார்த்துப் பார்த்து மாய்ந்து போகிறானே, அந்த வருத்தத்தில் பத்தில் ஒரு பங்கு கூடவா யாருக்கும் இல்லை?

    ஸாரி மோகன்... திரும்பினான்.

    அவள்தான்... முகம் கழுவியிருக்க வேண்டும். பளிச்சென்ற கன்னங்கள் மேற்கத்திய சூரியனின் கிரணங்களால் ஜொலித்தன. நிறமற்ற லிப்ஸ்டிக்கால் இதழ்கள் அளவான ஈரப்பசையில் சிறிய புன்னகை முகத்தை வசீகரித்து, கீற்றுப் போல கறுப்புத் திலகம் தன் பங்குக்கு எழிலைக் கொட்டியது. இந்த அழகு... இந்த சிரித்த முகம்.

    மோகன் கோபம் குறைந்தவனாக சிரித்தான். உடனே முகத்தை திருப்பிக் கொண்டான்.

    அப்பப்பா... ரெண்டு மனசுப்பா இந்த ஆம்பிளைங்களுக்கு... என்னைப் பாத்ததுமே எல்லாம் மறந்து போய் லேசானதும் மனசுதான்... ஒடனே ஈகோ வந்து வுக்காந்து திருப்பிக்கோ மூஞ்சியைன்னு சொன்னதும் மனசுதான்... சரியான ட்வின்ஸ்ப்பா...

    அர்ச்சனா சிரித்தாள். வேடிக்கை பாத்தது போதும்... திரும்புங்க...

    நாப்பது நிமிஷமா வெயிட் பண்ணிட்டிருக்கேன்...

    ரொம்ப சுகமா இருந்ததா?

    அப்படின்னா? அர்ச்சனா மெதுவாகப் பாடினாள்.

    காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு... காக்க வைப்பதில் சுகம் உண்டு...

    பாதி கரெக்ட்... ரெண்டாவது பாதி... அவனும் முகத்தை திருப்பாமலேதான் பேசினான்.

    புரியலையே...

    உனக்குத்தான் சுகம்... காக்க வைச்சியே... அந்த சுகம்.

    ஓ... மோகன்... என்றாள் அவள் மென்மையாக.

    என்ன கோவிச்சுக்கறீங்க சின்னப் பையன் மாதிரி?... ம்?... எனக்காக ஒருநாள் காத்திட்டிருக்கக் கூடாதா? இட் இஸ் ஒர்த் வெயிட்டிங் இல்லையா?

    அப்படி நா சொல்லலே. எதுக்குமே ஒரு அர்த்தம் இருக்க வேண்டாமா? வெட்டியா நடிப்பது நிமிஷம் உக்காந்து அலைகளை எண்ணிகிட்டிருக்கிறதுல சுகம் இருக்குன்னு நெனைக்கிறியா?

    சரி... வேணும்னே உங்களைக் காக்க வைப்பேன்னு சொல்றீங்களா?

    ஏன் லேட்னு இதுவரைக்கும் நீ சொல்லலே...

    கெளம்பும்போது செக்ரெட்டரிகிட்ட இருந்து ஃபோன்... நாளைக்கு திடீர்னு பிரஸ்மீட் வெச்சிருக்காங்களாம்... உடனடியா லேட்டஸ்ட் பாங்க் ஸ்டேட்மென்ட் வேணுமாம்... காபி எடுத்து கொடுத்துட்டு வந்தேன்.

    அஞ்சு மணிக்கு மேல வேலை செய்யணும்னு ரூல் கெடையாது அர்ச்சனா...

    வயசான அந்த ராமானுஜம் சார் டென்ஷனோட நிக்கறப்ப, ஹெல்ப் பண்ணணும்னு தோணறது இயல்புதானே மோகன்?

    என் ஞாபகம் இல்லையா உனக்கு?

    இல்லாம எப்படிப் போகும்?

    இல்ல சரி, கௌம்பித்தான் ஆகணும்னு சொல்லியிருக்கலாமே...

    மனசு வரலே மோகன்... சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கிட்டு பார்வை குறையோட அல்லாடிகிட்டிருக்கிற மனுஷர்... அடுத்த வருஷம் ரிடயராகப் போறவர்... கெளம்பணும்னு ஒரு வார்த்தைல முடிச்சுட்டு வந்திருக்கலாம். தானே காபி எடுப்பார். நிச்சயமா தப்புத் தப்பா எடுப்பார். பிரஸ்மீட்ல ஈசியா கண்டுபிடிப்பாங்க. குடைஞ்சு எடுத்துடுவாங்க. மினிஸ்டர் கோபம் இவர் மேல பாயும்... பாவம்...

    உன் இரக்கம் என் வரையிலயும் பாயுமா அர்ச்சனா?

    அர்ச்சனா புன்னகை விலகிய முகத்துடன் திரும்பி மோகனைப் பார்த்தாள்.

    ஏன் இவ்வளவு நம்பிக்கைக் குறைவு? எதற்காக இத்தனை வாக்குவாதம்? மோகன் புரியவில்லையா உனக்கு? மிக விரும்புகிறேன் உன்னை. தினம் உன்னுடன் தனியாகப் பேச ஆசைப்படுகிறேன். நேசம் ததும்பும் அந்தப் பார்வையை என் விழிகளில் பதித்துக் கொள்ள காத்திருக்கிறேன். இன்று நடந்தது நானே எதிர்பாராதது. மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவி. ஈரம் இன்னும் விலகாத நெஞ்சின் மெல்லிய கசியல். மிகச் சுலபமான இதை நீ உணர்ந்து கொள்வாயென்று எதிர்பார்த்தேன். அவ்வளவு புத்திசாலி இல்லையா நீ?

    என்னிக்கு வருது எக்ஸாம் அர்ச்சனா?

    எக்ஸாம்? என்ன எக்ஸாம்?

    டிபார்ட்மென்ட் எக்ஸாம். ப்ரமோஷன் டெஸ்ட்...

    தெரியாதே... எஸ்டாப்ளிஷ்மென்ட் செக்ஷன்ல இருக்கிறவர் நீங்கதான்... என்கிட்ட கேட்டா எப்படி மோகன்?

    யு நோ பெட்டர்னு நெனைச்சேன்.

    எதை வெச்சு?

    விழுந்து விழுந்து வேலை பண்ணிக் கொடுக்கறியே...

    புரியலே...

    ஜால்ரா ஓசையெல்லாம் நா கேட்டதேயில்லே... எங்க வீட்டுல காக்கா வளர்க்கறதில்லே... குறுக்கு வழில நா நடக்கறதில்லே.

    என்ன... என்ன சொல்கிறான் இவன்? ரத்தம் அவள் உடல் பூரா கொதித்தது.

    வில் யு ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் மோகன்?

    கல்லூரிப் பெண்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

    2

    மிக வசதியான இடத்தில் கட்டப்பட்ட அழகிய பெரிய வீடு அது.

    நகரத்தின் நெஞ்சுப் பகுதி.

    வலது பக்கம் ஐந்து நிமிடம் நடந்தால் பஸ் டெர்மினஸ். இடது பக்கம் கூப்பிடுகிற

    Enjoying the preview?
    Page 1 of 1