Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Chinna Thavaru
Oru Chinna Thavaru
Oru Chinna Thavaru
Ebook144 pages47 minutes

Oru Chinna Thavaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466732
Oru Chinna Thavaru

Read more from Rajendrakumar

Related to Oru Chinna Thavaru

Related ebooks

Related categories

Reviews for Oru Chinna Thavaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Chinna Thavaru - Rajendrakumar

    1

    அமைதியான அடையாறு கஸ்தூரிபா சாலையில் திரும்பிய ஆட்டோ, தோட்டத்தைச் சுற்றி வந்து போர்ட்டிகோவில் நின்றபோது -

    வராண்டாவில் அவள் அப்பா நின்றிருந்தார். பெயர் கைலாசம்.

    அவரது திறந்த மார்பின் வெள்ளைப் பட்டைகள் பழனி மணம் வீசி, பூஜை முடித்து இப்போதுதான் வெளியே வருகிறார் என்றன.

    என்ன பூரணி ஆட்டோவிலே வரே? போன் பண்ணி இருந்தா வண்டியை அனுப்பி இருப்பேனே? ஏற்கெனவே டிரைவர் வந்து பார்த்து நீ இல்லேன்னு திரும்பிட்டான்.

    பீச்சிலே போன் கிடையாதுப்பா. ஜூலி வந்திருந்தா, அப்படியே ஒரு வாக்கிங் போயிட்... பர்சைத் துழாவினவள் சலித்துக் கொண்டாள். அம்பது காசு இருக்காப்பா? குறையுது.

    அவர் உள்ளே போகத் திரும்புமுன் தடுத்தாள்.

    வேண்டாம்பா. இருக்குது.

    ஆர்ப்பாட்டமாக ஆட்டோ கிளம்பிப் போனதும் - படி ஏறி வந்த மகளைக் கவனித்தார். என்ன இது? தலையெல்லாம் ஒரே மணல்?

    அந்த ஜூலி சனியன் மணல்ல பிடிச்சுத் தள்ளிடுச்சுப்பா.

    சரி சரி. உடனே போய் ஷாம்பூ போட்டுக் குளிச்சுடு. பச்சை மீன் வீச்சம் குடலைப் பிடுங்குது. உங்கம்மா பார்த்தா கத்துவா.

    சிரித்துக்கொண்டே உள்ளே போனவள் சட்டென்று நின்றாள்.

    இன்னும் ஓர் அடி வைத்திருந்தால் எதிரே வந்த அம்மா மேல் மோதி இருப்பாள்.

    ஏண்டி பிரம்மஹத்தி! மணி ஏழடிக்கப் போறது, எங்கேடி தொலைஞ்சே?

    சரியாப் போச்சு. இடுப்பைத் தாங்கிக்கொண்டு கண்ணில் சலிப்புக் காட்டினாள். மறுபடியும் உனக்காக முழுக்க இன்னொருதரம் சொல்லியாகணுமா? அப்பாவையே கேட்டுக்க. நகர்.

    அம்மாவை நகர்த்திவிட்டு மாடி ஏறிப் போனாள். புத்தகத்தை மேஜை மேல் விட்டெறிந்தாள். அதே வேகத்தில் வாட்சைக் கழற்றும்போது -

    சின்னி எட்டிப் பார்த்தாள்.

    என்னடி?

    காப்பி வேணுமான்னு அம்மா கேட்டுட்டு வரச் சொன்னாங்க பாப்பா.

    அவுட்! அவுட்! என்று அவளை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தினாள்

    காரணமின்றி உற்சாகம் பிய்த்துத் தள்ள சிரித்தவளின் மனதில் அந்தக் கேள்வி வந்தது.

    ‘அவள் - அந்த ஜூலி கேட்ட அனுபவம் எப்படி இருக்கும்?’ சிரிப்பு அவள் உதட்டிலேயே உறைந்தது.

    குளியலறைக்குள் போய்க் கதவைச் சாத்தி வாஷ் பேசின் கண்ணாடியின் முன் நின்றாள். மெதுவாக முந்தானையைத் தள்ளினாள். பெண்மையின் பூரிப்பினால் ரவிக்கையின் திணறல் புரிந்தது. மெதுவாக களைந்து எறிந்துவிட்டு வெறித்துப் பார்த்தாள்.

    ‘ஆடையற்ற இந்த நிலையில் ஓர் ஆண் பிள்ளை பார்த்துவிட்டால் என்ன செய்வான்?’

    ‘அவனுக்கு எப்படி எல்லாம் வெறி பிடிக்கும்?’

    ‘உனக்கு எனி செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்?’

    பரிதாபமாய்த் தலையை ஆட்டி ‘இல்லை’ என்றாள்.

    ஓ, பேபி! யூர் மிஸ்ஸிங் சம்திங்.

    ச்சீய். மூக்கைத் தூக்கி உதட்டைக் குவித்துக் கண்ணடியில் தெரிந்த இன்னொரு பூரணிக்கு ஒழுங்குகாட்ட, அவளும் காட்டினாள்.

    நீ ஒரு சரியான அசடு.

    காரணமில்லாமல் ஒரு சோர்வும், சோகமும் நெஞ்சைக் கப்பிக்கொள்ள ஷவர் குழாயை முழுவதுமாகத் திருகிச் சீற விட்டாள். செயற்கை மழையில் நுழைந்து நின்றாள்.

    குளிர்ந்த நீர் அவள் உடம்பெல்லாம் ஓடிச் சிலிர்க்க வைத்ததும் மனத்தில் மீண்டும் அந்தக் கேள்வி வந்தது. ‘எப்படி இருக்கும்? அந்த அனுபவம் எப்படி இருக்கும்?’

    கூடவே எச்சரிக்கையும் வந்தது. ‘நினைக்காதே. அதைப் பற்றி நினைக்காதே’

    ஷவரை நிறுத்திய அதே வினாடி ஷாம்பூ பாட்டிலைக் கெந்தி எடுத்தாள்.

    மாக்ஸி அணிந்து தலையைத் துவட்டியவாறு அவள் படியிறங்கி வந்தபோது அப்பாவும் அம்மாவும் சாப்பாட்டு மேஜையில் காத்திருந்தார்கள்.

    வாங்க! அம்மா குத்தலாக, தீட்டுப் போக தேய்ச்சுக் குளிச்சீங்களா?

    என்னம்மா நீ உதட்டைச் சுழித்தாள். பிறகு சிரித்தாள். மாசா மாசம் பதினாறாம் தேதி கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் இப்ப வந்து கேட்கிறே.

    சனியனே, நான் அதைச் சொல்லலே. அம்மா சீறினாள். அந்தச் சட்டைக்காரியோட ஒட்டி ஒரசி நடந்து வந்தியே அதை - என்றவள் -

    பூரணி, அம்மா! என்று வாயைப் பொத்தியதும் நடுங்கிப் போனாள்.

    என்னடி? என்றாள் பீதியுடன்.

    தீண்டாமை பற்றிப் பேசக்கூடாதம்மா! சட்டம் வந்திட்டுது. அப்புறம் அப்புறம் எத்தனை மாசம்ப்பா உள்ளே தள்ளுவாங்க?

    ஆறு மாசத்துக்குக் குறையாமே. என்று அவரும் சொல்லவே மேலும் நடுங்கினாள் அம்மா.

    நான் அதைச் சொல்லலேடியம்மா. அவள் கண்ட கண்ட அந்நியப் பதார்த்தம் எல்லாம் தின்பாளே அதைச் சொன்னேன்.

    அந்நியப் பதார்த்தமா? இல்லேம்மா. அவள் சுத்த சுதேசி. நம்ம ஊர் ஆட்டுக்கறி, நம்ம ஊர்க் கோழி, நம்ம வங்காள விரிகுடா கடல் மீன் இதெல்லாம்தான் தின்னுவாள்.

    குழந்தை...

    சும்மா இருங்க அம்மா குமட்டினாள் தேமேன்னு சாப்பிடறதை விட்டுட்டு அப்பாவும் பெண்ணும் கண்டதை எல்லாம் சொல்லிட்டு... எனக்கு வயத்தைப் பெரட்டுது.

    அவர்கள் ரசித்துப் சிரித்தார்கள்.

    சாப்பிடும் போது ஓரக் கண்ணால் கவனித்தாள் பூரணி.

    ‘என்ன?’ என்று கேட்க அம்மா இவளைச் சுட்டிக் காட்டி, ‘கேளுங்கோ’ என்று முணுமுணுப்பாய்ச் சொல்ல -

    கையில் அள்ளிய சாதத்தைத் தட்டிலேயே போட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி.

    நான் வேணும்னா கண்ணை மூடிக்கவா?

    ஏண்டி?

    பின்னே என்ன? இந்த வயசிலே ஜாடைப் பேச்செல்லாம் பேசியாகறது

    தடிக் கழுதை! அம்மா அசடு வழிந்தாள். உன்னை உதைச்சா என்ன?

    நீங்க சொல்லுங்கப்பா. அம்மா எதுக்கு டான்ஸ் ஆடறா?

    அது ஒண்ணுமில்லேடா. உனக்கொரு மாப்பிள்ளையைப் பார்த்திருக்காளாம். அதை உன்கிட்டேதான் சொல்லணுமாம்.

    கிளுகிளுப்புடன் தலையைக் குனிந்து கொண்டாள்.

    என்னடா சொல்றே? அப்பா கேட்டார். கேளேண்டி பெத்தியோல்லியோ?

    என்னடி சொல்றே?

    அட போம்மா. இப்ப எதுக்கு எனக்குக் கல்யாணம்? என்ன அவசரம்?

    அவசரமா? இது நல்லாயிருக்கு. கோபமாகச் சொன்னாள் அம்மா. உன் வயசிலே எனக்கு நீயே பொறந்துட்டே புரியறதா?

    நல்லாவே புரியறது.

    என்ன?

    எங்கப்பா ஒரு பெர்ர்ர்ர்ரிய ஆளுன்னு.

    கைலாசத்தின் முகம் ஆயிரம் கோணலாயிற்று. அவ எதையோ கேட்டா அவளுக்குப் பதில் சொல்லுடா. எதுக்கு என்னை வார்றே?

    எதையோ சொல்ல முயன்ற பூரணி சொல்லாமல் தட்டில் ஒற்றை விரலால் கோலம் போட ஆரம்பித்தாள்.

    பெரிய இடம்டி. பையன் பார்க்க லட்சணமாய் இருக்கான். அமே...ரிக்கா கம்பெனியிலே வேலை. பெரிய சம்பளம். காரு பங்களா, ராணி மாதிரி இருக்கலாம். அவனே தேடி வந்து உன்னைக் கேட்கிறான்.

    எப்படித் தெரியும்? கண்களை மட்டும் உயர்த்திக் கேட்டாள். நான் இங்கே இருக்கிறது அவருக்கு எப்படித் தெரியும்?

    நம்ம அலமேலு பொண்ணோட கல்யாணத்திலே உன்னைப் பார்த்திருக்கிறானாம்.

    உடனே காதலிக்க ஆரம்பிச்சுட்டானாக்கும்? பய பெரிய ஆளுதாண்டி பூரணி.- அப்பா.

    சித்த சும்மா இருங்க. என்று கணவனை அதட்டிவிட்டு, பூரணியிடம் கேட்டாள் அம்மா. ரொம்ப நல்ல பையன். உசக்க வளர்ந்து இருக்கான். தலைமயிரெல்லாம் உங்கப்பா மாதிரி அடர்த்தியா அலை அலையா...

    ஏமாந்துடாதேடா குழந்தை. அப்பா தலை மாதிரியே நரை கண்டு இருக்கான்னு இப்பவே கேட்டுடு.

    அச்சோ. சும்மாவே இருக்கமாட்டீங்களா? அம்மா கத்தினாள். நீங்களாவும் வரன் தேடமாட்டீங்க. வரதையும் ஆயிரம் சொத்தை சொல்லிட்டிருப்பீங்க.

    சரி சரி.

    காதைப் பொத்திக் கொண்டாள் பூரணி.

    அதுக்காகச் சண்டை போட ஆரம்பிச்சுடாதேயம்மா. நீ சொல்லி நான் மறுக்கவா போறேன்? உனக்குப் பிடிச்சா சரி. நீ கிழிச்ச கோட்டைத் தாண்டுவேனாம்மா.

    அவள் பேச்சில் இருந்த கேலியை உணராதவளாகப் பூரித்துப் போனாள் அம்மா.

    அடி என் ராசாத்தி!

    "படிக்கிறியா பூரணி?"

    மேஜை விளக்கு முகத்தில் புள்ளிக் கோலம் போட படித்துக் கொண்டிருந்த பூரணி உதட்டைச் சுழித்துச் சிரித்துக் கொண்டாள். பிறகு முகத்தை சீரியஸாக்கித் திரும்பினாள்.

    என்ன கேட்டே? கவனிக்கலே?

    படிக்கிறயான்னு கேட்டேன்.

    இல்லையே. டான்ஸுன்னா ஆடிட்டு இருக்கேன்! திடீரென்று கோபத்துக்கு மாறினாள். "அம்மா உன் மாப்பிள்ளை புராணத்தை கேட்க

    Enjoying the preview?
    Page 1 of 1