Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kenjum Salangai
Kenjum Salangai
Kenjum Salangai
Ebook202 pages1 hour

Kenjum Salangai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466817
Kenjum Salangai

Read more from Rajendrakumar

Related to Kenjum Salangai

Related ebooks

Related categories

Reviews for Kenjum Salangai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kenjum Salangai - Rajendrakumar

    1

    "யேஸ்- உஷா பேசறேன்"

    பேப்பரைப் பார்த்தியாடி? திலகா கேட்டாள். பரிசுப் போட்டி.

    பரதநாட்டியப் போட்டிதானே? பார்த்தேன். பேசாம வைச்சுட்டேன்.

    ஏன்டி ஏய். நான் ஒன்னு நினைக்கிறேன். நீயும் அதையே நினைக்கறியா?

    நினைச்சென்ன பிரயோஜனம்?

    ஏன்டி?

    அந்தப் பூனைக்கு யார்டி மணிகட்டறது? நடக்கிற வேலையா அது?

    நீ ஒரு பயனில்லாதவடி. நான் சுகந்திகிட்டே பேசிப் பார்க்கறேன்.

    பேசிப் பிரயோஜனமில்லே. நான் ஏற்கெனவே பேசிட்டேன்.

    அவ ஒருத்தியாலதான்டி மேடமை வழிக்குக் கொண்டுவர முடியும்.

    "திலகா.

    சொல்லு.

    நீ சொல்றதும் ஒருவகையில சரிதான். மேடமுக்கு அவ பேர்ல எப்பவும் தனிப் பிரியம் உண்டு. அவ சொன்னாக் கேட்பாங்க.

    அதெல்லாம் தனியாகப் போய்க் கட்டுப்படியாகாதே-கும்பலாகப் போகணும். ரஜ்னி வருவாளா?

    வருவாள்... நான் சியாமாவை. முயற்சி செய்யறேன் என்றபடி அவசரமாகச் சொன்னாள்: ஏன்டி பிரேமாவை மறந்துடாதேடி. கீதாவுக்கும் - போன் பண்ணு.

    போன் பண்ணிக் கட்டுப்படியாகாது. கார் எடுத்துக்கிட்டு முதல்லே உன் வீட்டுக்கு வரேன். அங்கேயிருந்து ஒவ்வொரு வீடாகப் போகலாம்.

    ரஞ்சனி வருவாளா?

    முதல்லே நீ வருகிற வழியைப் பாருடி. உஷா உங்கப்பா ஆபீஸ் போயிட்டாரா?

    இல்லையே.

    எப்ப போவார்? நான் எப்ப வரட்டும்?

    இப்பவே வா, நான் தயார்.

    உங்கப்பா ஆபீஸுக்குப் போகல்லேன்னு சொன்னியே.

    அப்படியா சொன்னேன்? இல்லையேன்னேன். அப்படி இல்லே. பிஸினஸ் ட்டூர் கோயம்புத்தூர் போயிருக்கார்ன்னேன்.

    இவ வேற குழப்பிக்கிட்டு, சரி. போனை வை. நான் எண்ணிப் பத்தாவது நிமிஷம் உங்க வீட்டில இருப்பேன்.

    நான் அடுத்த இரண்டாவது நிமிஷமே காத்துக்கிட்டிருப்பேன்.

    கணவனுக்குக் காப்பி கொண்டு வந்து தரும்போது -

    அறையை அவசரமாகப் பெருக்கித் தள்ளி மெழுகும் போது -

    கணவன் குளித்து வருமுன் பூஜையறையில் விளக்கேற்றி வைத்துக்கொண்டு இருக்கும்போது -

    குளித்து வந்த கணவனுக்கு ஆடைகளை எடுத்துத் தரும்பொழுதெல்லாம் -

    விதான விசிறியின் காற்றுப்பட்டு மெல்ல எழுவதும் பின் படிவதுமாக அவளை ஈர்த்துக் கொண்டிருந்தது அது-புனிதாவை.

    பேப்பரில் வந்த அறிவிப்பு.

    பரிசுப் போட்டி அறிவிப்பு.

    பிரபல சோப்புக் கம்பெனி கொடுத்திருந்த விளம்பர வாசகம். அகில இந்திய பரத நாட்டியப் போட்டி.

    டெல்லியில் நடக்கிறது.

    முதல் பரிசு தங்கக் கோப்பையுடன் பத்தாயிரம் ரூபாய் பரிசு. மற்றும் - இரண்டு பேர்களுக்காக (விமானத்தில்) உலக உல்லாசச் சுற்றுப்பயணம் என்றது விளம்பரம்.

    அவள் பார்வை போகுமிடத்தை யுணர்ந்த ரமேஷ் நடந்துபோய் -

    பத்திரிகையைத் திருப்பிப் போட்டு விளம்பரத்தை, மறைத்தான்.

    கண்ணில் நீர் தளும்ப முகத்தைத் திருப்பிக் கொண்டாள். புனிதா.

    கைக்குட்டை எங்கே?

    அவள் உள்ளே போய்த் திரும்பும்போது கத்திக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள்.

    வேலையைக் கவனமா பார்க்காம பார்வை ஏன் சிதறுது?

    ஏன்?

    அங்கே பீப்பாய்க்குக் கீழே பார்; எத்தனைக் குப்பை?

    (மனதிற்குள்ளாக வந்து - நின்ற வேலைக்காரி சொன்னாள். உனக்கு ஏம்மா இந்த வேலை எல்லாம். நான் பார்த்துக்கமாட்டேனா?)

    மனதிற்குள்ளாகவே பதிலும் சொன்னாள்.

    (எனக்கும் வேறு வேலை வேணாமாடி? சும்மா இருந்தா சோம்பல் வருது.)

    பிளாஸ்டிக் முறத்தை எடுத்து வந்தாள். வியந்தாள்.

    பெருக்கி மெழுகிவிட்ட பிறகும் அதெப்படி இத்தனைக் குப்பையும் வருகிறது.

    குனிந்து பெருக்கும்போது கிழிக்கப்பட்ட செய்தித்தாள் துண்டுகளில் ஒன்று ‘உலக உல்லாசப் பயணம்’ என்றதும் -

    குனிந்த நிலையிலேயே கண்களை உயர்த்திப் பார்த்தாள்.

    மூன்று நிலைக் கண்ணாடியில் இவள் பார்வையை உணர்ந்து திரும்பினான்.

    என்னடி பார்க்கறே?

    பேசாமல் கண்ணீருடன் பார்த்தாள்.

    கேட்கிறேனில்லே? ஏன்? எதுக்காக இப்படிப் பார்க்கறே?

    பிளாஸ்டிக் முறத்திலிருந்த விளம்பர துண்டத்தை எடுத்துக் காட்டினாள்.

    ஏன் இதைக் கிழிச்சீங்க?

    தேவையில்லாத எதுவும் வீட்டுக்குள்ள இருக்கக்கூடாது. உடனே அதைத் தூக்கி எறியணும். அதுதான் பாலிஸி.

    ஸோ? கேள்வியாகப் பார்த்தாள். தேவை யில்லேன்னு ஆயிட்டா என்னைக் கூடத் தூக்கி எறியத் தயங்க மாட்டீங்க, அப்படித்தானே?

    அவன் முகத்தைத் திருப்பிக் கொண்ட விதமே அவள் கேள்விக்குப் பதிலாக,... ஆமா மென்றது.

    வாசலை நோக்கிப் பிளாஸ்டிக் முறத்தைக் கொண்டு போனாள். குப்பையை இவள் கொட்டவும் -

    தெருவில் அபூர்வமாக வரும் பல்லவன் ஒன்று காற்றை வாரியிறைத்து விட்டுப்போக -

    காற்றில் அல்லாடிய குப்பைக் காகிதத்தில் ஒன்று அவள் புடவையில் வந்து ஒட்டிப் பிரியமாக நின்றது. எடுத்துப் பார்க்க -

    அது ‘பரத நாட்டியப் போட்டி’ என்றது.

    பிடிவாதமாகத் தெருவில் உதிர்த்துவிட்டுக் கண்ணீரை வழித்தவாறு திரும்பியபோது -

    சோபாவில் அமர்ந்திருந்த கணவனைக் கண்டதும் பிடிவாதமாகத் தன்னை - உற்சாகத்துக்கு மாற்றிக் கொண்டாள்.

    உங்களுக்கு ஆஸ்பிடல் போக நேரமாச்சுன்னு நினைக்கறேன். என்றவள், குரலில் இனிப்பைத் தேக்கிக் கேட்டாள்... இன்னும் கொஞ்சம் காப்பி கொண்டு வரவா?

    பதில் சொல்லாமல் எழுந்தான். ஒற்றை விரலை அசைத்துக் காட்டி வெளியேறிப் போனான்.

    அவனைத் தொடர்ந்து வாசலுக்குப் போனாள்.

    அவன் சின்னதான - சிகப்புக் காரில் ஏறிக் கொண்டான். திரும்பி இவளைப் பார்த்து விட்டு இக்னீஷியன் காயலைத் திருக -

    வண்டி உறுமியது.

    பார்வையைத் திருப்பிக் காரை நகர்த்தினான். அவனது கார் ஓசை தேயுமட்டும் நின்றுவிட்டுத் திரும்பினாள்.

    வேடன் கதவைச் சாத்தித் தாழ் போட்டுக்கொண்டாள். திடீர்த் தனிமை அந்த வீட்டைக் கவ்வினார் போன்று அமைதி அலறியது.

    மவுனம் முனகியது.

    உள்ளே போய்க் கட்டிலில் அமர்ந்தாள்...

    சரிந்து தலையணையில் கையை மடித்து வைத்து முழங்கையில் மோவாயைத் தாங்கினாள்.

    கண்களை மூடியதும்- தின்றதை மீண்டும் அசை போடும் மாடு போல -

    காட்சி வந்தது.

    மிகப் பழைய காட்சி. அப்போது அவள் சின்னப் புனிதா. ஐந்து வயதுச் சின்னப் பாப்பா.

    சின்னக்காலுக்கு அந்தச் சலங்கை மிகப் பெரியது. ஆனாலும், மடித்துக் கட்டி-தன்னைவிடப் பெரியதும் சிறியதுமான பெண்களுக்கு நடுவே –

    நட்டுவனார் தட்டும் நட்டுவாங்கத் தாளக் கட்டுக்குக் கேற்ப-

    இடுப்புகளைக் கைகளால் தாங்கிக் காலால் சலங்கையைச் சிலிர்க்கவிட்டுக் கொண்டிருந்தாள்.

    சின்னப் புனிதா.

    -தாம்-தீதை-தக்கத் தோம் தை.

    அந்த மாஸ்டர் நல்லவர். ஆனாலும், கடுமையாகக் கத்துவார். ஒழுங்கா ஆடலேன்னா கால்மேலே ஒன்னு போடுவேன். ஆடு என்பார். ஆனால் -

    மார்க்கெட்டில் ஒருநாள் அம்மாவையும் என்னையும் பார்த்தபோது இதே மாஸ்டர் பிரியமாக என் கன்னத்தைத் தட்டினார்.

    பிரமாதமான உற்சாகமிருக்கு பாப்பாவுக்கு.

    அம்மா பூரித்துப் போனாள்.

    ஆமாம்மா. எதையும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தா போதும். உடனே புடிச்சிக்கிறா.

    வீட்டில் அப்பாவிடம்-பக்கத்து வீட்டு அலமேலு மாமியிடம் ஏன், வீட்டுக்கு வருகிற போகிறவர்களிடமெல்லாம் ஒரு மாதத்துக்கு அம்மா பெருமையாடிக்கொண்டே இருந்தாள்.

    நல்ல ஆர்வமிருக்காம் என் மகளுக்கு. மாஸ்டர் பாராட்டினார் - வாய் கொள்ளாமப் பாராட்டினார். சொன்னாரே. பார்த்துண்டே இருங்கோ. இன்னும் ஆறே மாசத்தில மேடை ஏத்தி அரங்கேற்றம் நடத்திக் காட்டறேன்னு சபதமே செய்திருக்கார்னா பாருங்களேன்.

    அம்மா பூரிப்பாகச் சொன்னாள். அப்பா மகிழ்ந்து போனார்.

    ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் என் மக பெரிய டான்ஸரா ஆகப்போகிறா.

    ஆமாம்டி- பத்மா சுப்ரமண்யத்தை எல்லாம் சாப்பிடப் போறா.

    அது மட்டுமென்ன ஹேமமாலினி மாதிரி பெரிய ஸூப்பர் ஸ்டார் ஆகப் போறா. பார்த்துண்டே இருங்கோ. பெரிய ஸ்டார் ஆக்கப் போறேன்.

    அந்தப் பேச்சு மட்டும் வாணாம்டி. சினிமா எல்லாம் நம்ம குடும்பத்துக்கு வரப்படாத ஆசை. டான்ஸோட நிக்கட்டும்.

    எனக்கு அப்போதிருந்த வயதுக்குக் கொஞ்சமும் புரியாத பேச்சு அது.

    ஏழாவது வயதில் அரங்கேற்றம்.

    ஆர்.ஆர்.சபாவில் ஏகமாய்க் கூட்டம் வழிந்தது.

    எழுந்து போய்ப் பீரோவைத் திறந்து ஒளித்து வைத்த ஆல்பத்தை வெளியே இழுத்து வந்தாள்.

    மறைக்கப்பட்ட மகிழ்ச்சிச் சின்னம். அவர் கண்ணில் படக்கூடாது.

    பட்டுவிட்டால் -

    இதையும் பிளாஸ்டிக் கூடையில் அள்ள வேண்டி வரும்.

    கொஞ்சம் முன்னால் பத்திரிகை விளம்பரத்தை, அள்ளியது போல.

    ஆசையுடன் புரட்டினாள்.

    ஒன்று ஒன்றாக நாட்டிய முத்திரைகள்.

    ஆடும் போதே எடுத்த படங்கள்.

    சிலவற்றில் சிரித்தாள். சிலதில் கெஞ்சினாள். பலதில் கோபமாக மறுத்தாள்.

    கைகளை விரித்து, கழுத்தை லாவகமாக உடைத்தாள். அசைத்தாள்.

    ஒரு காலை நீட்டி, மறுகாலை மடக்கி, கையில் தலையைத் தாங்கித் தூங்குவது போல -

    தாயே யசோதாவுக்காக சுட்டுப் பிஞ்சு விரலை நீட்டிக் கோபமாக முறைத்தாள்.

    வியப்பாக இருந்தது.

    சின்ன - இத்தனை சின்ன வயதிலேயே இவ்வளவு பாவங்களையா காட்டியிருக்கிறேன். அதுவும் வினாடிப் பொழுதில் மாற்றி - மாற்றி.

    புரட்டியபோது- அடுத்த படத்தில் -

    அந்த நாள் அமைச்சர் மைக்கில் பேச-அருகில் மாலை தரையில் புரளப் புரள நின்றிருந்தாள்.

    அன்றைக்கே அமைச்சர் சொன்னார் –

    தில்லையில் மட்டுமே இருந்த நடன தெய்வத்தைக் குழந்தை வடிவிலே இந்த சிங்காரச் சென்னையிலே அழைத்து வந்து மேடையில் ஆடவிட்டது போல் இருக்கிறது. பிரமிப்பும் கூடவே வருகிறது.

    பட்டம் கொடுத்தார்.

    தங்கத்தாலான சிங்காரப்பதுமை!

    கூட்டம் கை தட்ட... தட்ட...

    அப்பா பெருமை தாளாமல் விதிர்த்துச் சந்தோஷத்தால் பூரித்துப் போனார்.

    ஜெயலலிதா (அப்போதைய நட்சத்திரம்) ஆசையாகக் குனிந்து மோவாயைப் பற்றிக் கன்னத்தில் முத்தமிட்டதாகக் காட்டியது இன்னொரு படம்,

    அம்மா நன்றி சொன்னது-மகிழ்ச்சியால் திக்கு முக்காடியது எல்லாமே பசுமையாக நினைவில் ஊறிக் கண்ணீராகிக் கண்ணில் வழிந்தது.

    போன் ஒலிப்பது கேட்டதும் –

    எழுந்து போய் எடுத்தாள். யாரு?

    கிளுகிளுப்பான இரண்டொரு குரல்கள் அடக்கமான குரலில் சிரித்து, இருக்காங்க. என்று பேசிக் கொண்டன.

    வச்சுடு என்று யாரோ சொல்வது கேட்டதும், தொடர்பு துண்டாகிறது.

    ஹலோ யாரு? யார் பேசறது? என்று இவளது அலறலான கேள்வி வீணாகி,

    போன் குறட்டை விட –

    போனைப் பொருத்தி விட்டு மீண்டும் அறைக்குள்ளே போனாள்.

    இப்போது ஆல்பத்தை –

    பதினேழு வயது இளம் பெண்ணாக-- பின்னணியில் பாரீஸ் டவர் தெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1