Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Devi Ennai Thedukiraal
Oru Devi Ennai Thedukiraal
Oru Devi Ennai Thedukiraal
Ebook85 pages38 minutes

Oru Devi Ennai Thedukiraal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466480
Oru Devi Ennai Thedukiraal

Read more from Rajendrakumar

Related to Oru Devi Ennai Thedukiraal

Related ebooks

Related categories

Reviews for Oru Devi Ennai Thedukiraal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Devi Ennai Thedukiraal - Rajendrakumar

    7

    1

    என்னைச் சந்தியுங்கள்.

    என் முழுப் பெயரைச் சொன்னால் தூங்கிப் போய் விடுவீர்கள். அதனால் நண்பர்கள் கூப்பிடும் கிங்ஸ்லீ என்கிற பேரையே சிபாரிசு செய்கிறேன்.

    என்னை நீங்கள் அப்படியே கூப்பிடலாம். மனோதத்துவ நிபுணர்.

    என்னைப் பார்க்கிறவர்களுக்கெல்லாம் வியப்பு வரும். இத்தனை சின்ன வயதில் டாக்டராகி, இருக்கிற ஆங்கில எழுத்துக்களை எல்லாம் பட்டமாக்கி வாலாக்கிக் கொண்டு என்ன இது? என்பார்கள்.

    நாற்பதைத் தொடப் போகிறேன் என்றால் நம்பமாட்டார்கள்.

    டோண்ட் பீ சில்லி யூ மஸ்ட் பிட்வெண்ட்டி ஃபைவ் என்பார்கள். நானும் அதிகம் வாக்கு வாதம் செய்யமாட்டேன்.

    என் தோற்றம் அப்படி.

    என் ஸ்டெனோ என்னை விட இளமையாகத் தெரிவாள் மெரிலீன். (அந்த மெரிலீன் மன்றோ செத்த அதே நாளில் இவளும் கன்சீவ் ஆனாளாம். அதனால் அந்தப் பெயர். மெரிலீன்) வயதை நம்பமாட்டீர்கள்.

    சகஜமான பெண்.

    ‘பாய்! இன்றைக்கு சோளாவில் தந்தூரி சிக்கன் சாப்பிடலாமா? ஃபிஷ் ப்ரை மண்ட்’ என்பாள்.

    பத்து மணிக்கு ஆபீஸில் நுழையும்போதே இன்னைக்கு வீட்டில் டிஃபன் பிரமாதமாயிருந்ததா, ஒரு பிடி பிடிச்சிட்டேன் என்றுக் கொண்டே வருவாள். மணி பதினொன்றைத் தொடு முன் -

    பாய். சாண்ட் விட்ச்சும் காபியும் ஆர்டர் பண்ணவா? என்பாள்.

    சரியான தின்னி பண்டாரம். ஆனால் -

    என்ன தின்றாலும் பெருக்காத உடம்பு. திண்ணென்று அப்படியொரு கவர்ச்சி. உடம்பை ஒட்டின மினி ஸ்கர்ட்டின் இடுப்புப் பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டவென்றே ஓவல் ஷேப்பில் வெட்டி விட்டிருப்பாள்.

    பளபளப்பாகத் தெரியும் அந்த இடுப்பு வளைவுகளுக்காகவே ஆயிரம் ரூபாய் இங்கிரிமெண்ட் தரத் தயார். (சொல்லி விடாதீர்கள் அவளிடம்.)

    இடுப்பில் என்ன மெரிலீன், சிகப்பாக கன்றிப் போய் தெரிகிறது?

    நேற்று மனநோய் விடுதிக்குப் போனோமில்லையா. அப்ப ஒரு பைத்தியம் கிள்ளி விட்டது என்றாள்.

    எந்தப் பைத்தியம்? என்று நான் கேட்கவில்லை. எனக்கே தெரியும். நான் தான் அது.

    "நீ ஏன் கல்யாணமே பண்ணிக்கலே மேரி?

    எனக்குக் குழந்தைகள் இதை அலம்பி விட அருவருப்பாயிருக்கு. அதனால் குழந்தை ஆசை இல்லை. கல்யாணம் ஆனால் வருகிறவன் சும்மா இருக்க மாட்டானே, அதனால்தான். கையை ஆட்டினாள். நோ மேர்யேஜ்.

    எனக்குக் குழந்தை ஆசை அதிகம். அதனால் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளும் ஆசை இல்லை. ஆனால்... கண் அடிப்பேன். அந்த ஆசை மட்டும் உண்டு.

    ச்சீய் என்றாலும் சொல்லுவாள். இருங்க பாய், ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் உங்களைக் கற்பழிக்கப் போறேன்

    சிரிப்பேன். போடி கெய்வீ’.

    போன் ஒலித்ததும் -

    அடிக்க வரும் அவள் கைகளைத் தடுத்து விட்டு போனை எடுத்தேன்.

    ஹலோ! என்ற அந்தப் பெண்ணின் குரலில் குயில் இருந்தது.

    எஸ் கிங்ஸ்லி ஹியர்

    சைக்கியாட்ரிஸ்ட்...

    யா...

    என் பேர் தேவி

    சொல்லுங்கள். என்ன செய்யட்டும் உங்களுக்கு?

    உதவியில்லை. சின்ன கல்சல்ட்டேஷன்

    காதலன்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமா? நெவர் மைண்ட். பிரச்சனையை என்னிடம் விடுங்கள். அவர்களில் யோக்கியமான ஆளை நானே தேர்ந்தெடுத்துத் தருகிறேன்

    அதெல்லாமில்லை. ஒரு வேறு தினுசான பிரச்சனை. நூறு வயதுப் பிரச்சனை.

    புரியவில்லை. பிரச்சனைக்குமா வயது? அதுவும் நூறு வயது தொண்டு கிழமான பிரச்சனையா?

    ஆமாம்

    எனக்கே ஒரு சுவாராஸ்யம் வந்து விட்டது. சொல்லுங்கள்

    போனிலேயேவா?

    இடத்தை சொல்லுங்கள் நானே வரேன்

    வேண்டாம். இங்கே என் வீட்டில் பிரைவசி இருக்காது. நானே வருகிறேன் உங்களைத் தேடி

    போனை வைத்து விட்டு முறைத்துக் கொண்டிருக்கும் மெரிலீனைப் பார்த்துச் சொன்னேன்-

    ஒரு தேவி வருகிறாள் என்னைத் தேடி!

    எரிச்சலாக நிமிர்ந்தாள். குளியலறைக்குப் போய் ஒப்பனையை ஒற்றிக் கொண்டு வந்தாள்.

    வருகிறவளை விட அழகி என்று காட்டிக்க அலங்காரம் நடக்கிறதாக்கும் என்ற என்னை திரும்பிப் பார்த்து முறைத்து--

    கைப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

    ஏய்... ய். எங்கே போறே?

    தேவியோ தேவ தூதனோ உன்னைத் தேடி வருகிறப்ப நான் எதுக்கு நடுவில? நான் போறேன்...

    எழுந்துப் போய் இழுத்து வந்து அமர்த்த, அவள் துள்ளி துள்ளி எழ, நான் மீண்டும் மீண்டும் அழுத்தும் போது தான் -

    அவள் கதவைத் திறந்து வந்தாள். "ஓ ஸாரி. உங்கள் காதல் விளையாட்டில் குறுக்கிட்டதற்கு

    Enjoying the preview?
    Page 1 of 1