Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எங்கிருந்தோ ஒரு நிழல்
எங்கிருந்தோ ஒரு நிழல்
எங்கிருந்தோ ஒரு நிழல்
Ebook77 pages29 minutes

எங்கிருந்தோ ஒரு நிழல்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

படுக்கையறையில் மங்கலான விளக்கு வெளிச்சம் கிரஹண காலத்து வெயில் போல் மிக மெலிதாக வியாபித்திருந்தது. மெத்தையில் தள்ளித் தள்ளி சற்றுப் பேச்சு அடங்கிப் போய்ப் படுத்திருந்த மைதிலியிலும் சிவராமனிலும் களைப்பு துளித்துளியாகக் கலைந்து கொண்டிருந்தது.
 "மைதிலி!" சிவராமன் மெதுவாகக் கூப்பிட்டான்.
 பதில் இல்லை.
 "ஏய்... உன்னைத்தான்..."
 "என் கூடப் பேசாதீங்க...!" குரலில் பொய்யான கோபம் இருந்தது.
 "இவ்வளவு நேரம் கழிச்சு திடீர்னு என்ன ஆச்சு உனக்கு?"
 "மத்தியானம் 'ஏன் சாப்பிடலை'ன்னு கேட்டதுக்கு இதுவரைக்கும் பதில் இல்லை. அப்புறம் ஏன் நான் பேசணும்...?"
 "ஓ... அதுக்குத்தான் இவ்வளவு நேரம் கழிச்சுக் கோவமா? அதான் சொன்னனே தாயி, மனசு சரியில்லைன்னு..."
 "மனசு சரியில்லாம போனதுக்கு என்ன காரணம்னு தான் கேக்கறேன்...?"
 சிவராமன் மெளனமாக இருந்தான்.
 "சொல்றதுக்கு இஷ்டமில்லை போலிருக்கு..."
 "சேச்சே...! அப்படியெல்லாம் இல்லை."
 "சரி, சொல்லிடறேன். சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வந்துடறேன்..." சிவராமன் எழுந்தான். மைதிலி அவனை முந்திக்கொண்டு வேகமாக எழுந்தாள்"இருங்க நீங்க... நான் போய்க் கொண்டு வரேன்!" நெகிழ்ந்து கலைந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்தபடி தண்ணீர் கொண்டு வர சமையல் அறைக்குப் போனாள். இது காதல் என்னும் மலர் அம்பு. நடு இரவில் தண்ணீர் குடித்து விட்டு வர எழுந்தவனை இருக்கச் சொல்லிவிட்டு, தானே எழுந்து ஓடுகிற இவளா வேறு ஒருவனிடமும் உறவு கொள்பவள்... அந்த அவலட்சணங்கள் வேறு. உண்மையைப் போய் இவளிடம் சொல்வதே இவளை மாசுபடுத்துவதாகும், வேறொரு கோணத்தில் விஷயத்தை வெளியிட சிவராமன் ஒரு விநாடியில் முடிவு செய்து விட்டான்.
 தண்ணீர் வந்தது. குடித்தான்.
 "மைதிலி, அப்பவே சொல்லணும்னு பார்த்தேன். இந்த ஒரு மாசமா நம்ம வீட்ல கொசுத் தொந்தரவு, ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. எல்லாம் உன் யோசனையைக், கேட்டுத் தோட்டத்து மூலையில போயும் போயும் குப்பை கொட்டறதுக்காக அவ்வளவு பெரிய குழியை வெட்டி வச்சது தான் காரணம்..."
 "தெருவில கொண்டு போய்ப் போட்டா, அடிக்கிற காத்துல இதைவிட மோசமா குப்பையெல்லாம் சுத்திச் சுத்தி வீட்டு வாசல் பக்கமாவே பறந்து வந்துடுதே. குப்பை வாரிட்டுப் போறவன் ஒழுங்கா வந்தா, நான் ஏன் தோட்டத்துக்குள்ளே குழி வெட்டச் சொல்றேன்..."
 "இப்ப இந்தக் குழியை வெட்டி, குப்பையை அதுல கொண்டு போய்ப் போடறதால தான் கொசுக்கடி தாங்க முடியலே..."
 "ஆமா, இந்தக் குழி வெட்றதுக்கு முன்னாடி நம்ம வீட்ல கொசுவெ இல்லையாக்கும்?"
 "இப்ப இருக்கற அளவுக்கு இல்லை..."
 "அப்ப உங்க இஷ்டம். மூடறதுன்னா மூடிடுங்க பேசாம..."
 "வர ஞாயிற்றுக்கிழமையே மூடிப் போட்டுடலாம்..."
 "சரி... சரி... இந்தக் கொசுப் பேச்சை விடுங்க. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க..."
 "விடமாட்டே போலிருக்கே...!"நெஜமாவே விடறதா இல்லை..."
 மனத்துக்குள் ஒரு வன்மத்தோடும், வெளியில் ஒரு அலட்சிய பாவனையோடும், அந்தக் கடிதத்தை நினைவு கூர்ந்த சிவராமன் கண்களின் பார்வை, எங்கோ மானசீகத்தில் லயித்து மீண்டது.
 "மைதிலி, என்கூட 'பாங்க்'ல ஒர்க் பண்றாரே செல்லப்பான்னு..."
 "போன வாரம் கூட வந்திருந்தாரே. ஏதோ ப்ளாட் பாக்கறதுக்கு..."
 "அவரேதான் அவரோட லைஃப்ல ஒரு ப்ராப்ளம் வந்திருச்சு. அதாவது, நாலு நாளைக்கு முன்னாடி பாங்க் அட்ரஸுக்கு அவருக்கு ஒரு மொட்டை லெட்டர் வந்தது..."
 "மொட்டை லெட்டரா? என்னங்க அப்படின்னா?"
 சிவராமன் ஒரு நிமிடம் வெறுமையாக இருந்தான். மைதிலி உண்மையாகவேதான் கேட்கிறாளா?
 "மொட்டை லெட்டர்னா தெரியாதா? எழுதறவன் தன்னோட பெயரையோ, அட்ரஸையோ கொடுக்காமலே லெட்டர் எழுதறது."
 மைதிலி ஆச்சரியத்துடன் கேட்டாள். "அப்படிக் கூடவா லெட்டர் எழுதுவாங்க?" இதைக் கேட்ட சிவராமனின் கண்ணில் மீண்டும் காதலும் மோகமும் மூண்டது.
 "மறுபடியும் லைட்டை ஆஃப் பண்ணட்டுமாடா?" உன்மத்தத்துடன் கேட்டான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 16, 2023
ISBN9798223912781
எங்கிருந்தோ ஒரு நிழல்

Read more from Stella Bruce

Related to எங்கிருந்தோ ஒரு நிழல்

Related ebooks

Related categories

Reviews for எங்கிருந்தோ ஒரு நிழல்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எங்கிருந்தோ ஒரு நிழல் - Stella Bruce

    1

    சென்னை, தியாகராய நகரின் உஸ்மான் சாலையில் அந்த வங்கி என்றைக்கும் போல மிக விச்ராந்தியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. மின்சார விசிறிகளின் அனிச்சையான இயக்கத்துக்கு ஒப்பாகவே, அங்கு ஊழியர்களின் பணிகளும் ஈடுபாடற்ற சாயல்களில் நடந்தேறிக் கொண்டிருந்தன. அந்த மிதமான சூழலில் எந்த சிரமமும் பளுவும் எவரிடமும் இல்லாமலிருந்தது. வருகிற வார விடுமுறையில் எந்த தியேட்டரில் டிக்கெட் ரிசர்வ் செய்யலாம்; சென்ற வாரம் பார்த்த நாடகம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் பேசிக் கொள்ளத்தான் ஊழியர்கள் என்ற போர்வையில் சிலர் அங்கு கூடி கலைகிறார்களோ என வாடிக்கையாளர்கள் கண்டு மனம் பொருமுகிற மிதப்பான அந்தச் சூழலில் சிவராமன் மட்டும் மன உணர்வுகளின் கனம் தாங்க முடியாதவனாகத் தன்னுடைய இருக்கையில் இறுகிப் போய் உட்கார்ந்திருந்தான். மனம் பாறையாகக் கனத்தது. சிந்தனையும் திரவமாகக் குழம்பி கலங்கிப்போயிருந்தது. பாண்ட் பாக்கெட்டில் திணித்து வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்து மறுபடியும் மறுபடியும் வாசித்தான்.

    ‘அன்பார்ந்த சிவராமன் அவர்களே,

    உங்களிடம் ஓர் அதிர்ச்சியான உண்மையைச் சொல்ல வேண்டி இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். அந்த அதிர்ச்சியான உண்மை உங்களுடைய மனைவியைப் பற்றியதாகும். உங்களுடைய மனைவி மைதிலியின் அளவற்ற அழகைப் பார்த்து மயங்கித்தான் அவளை நீங்கள் மணம் புரிந்து கொண்டீர்கள் என நான் நினைக்கிறேன். ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. மிகவும் அழகாக இருக்கும் பெண்கள் ஆபத்தானவர்கள். அவர்களின் நடத்தை நம்பத் தகுந்ததாக இருக்காது என்பதை நீங்கள் யோசித்தே பார்க்கவில்லை. உங்களை மணம் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே உங்களுடைய மனைவி மைதிலிக்கு அருண் என்ற காதலன் இருந்தான். அவன் நல்ல அழகான வாலிபன். ஆனால், மிகவும் ஏழை. அதனால், வசதியான வாழ்க்கைக்காகத்தான் மைதிலி உங்களை மணக்க முன்வந்தாள். இன்னும் உங்கள் அருமை மனைவிக்கு அந்த அருண் என்பவருடன் தொடர்பு இருந்து வருகிறது. அடிக்கடி அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அந்தப் பையனின் வீடு ஆதம்பாக்கத்தில் தான் இருக்கிறது. சில நாட்களில் அவன் குரோம்பேட்டையில் இருக்கும் உங்களுடைய வீட்டுக்கே சென்று உங்கள் மனைவியைச் சந்திக்கிறான். இரண்டு நாட்களுக்கு முன்பும் அவர்கள் இரண்டு பேரும் தாம்பரம் வித்யா தியேட்டரில் சினிமா பார்த்தார்கள். என்னுடைய கேள்வி இதுதான் பெரிய அழகி என்பதற்காக உங்கள் மனைவியின் இந்த முறை கெட்ட கள்ள உறவை நீங்கள் சகித்துக் கொள்வீர்களா?

    இப்படிக்கு உங்கள் மேல் அனுதாபப்படும்,

    உண்மை நண்பன்.’

    பணிபுரியும் வங்கி முகவரிக்கு இன்று வந்த இந்த மொட்டைக் கடிதத்தைப் படித்து முடித்த மறு நிமிஷமே வாழ்க்கை அபாயம் மிகுந்ததாகச் சிவராமனை உலுக்கி விட்டது. உலகமே அற்றுப் போய் தனித்து விடப் பட்டாற் போலிருந்தது. மனைவி மைதிலியை நினைத்தான். மைதிலி பற்றிக் கடிதத்தில் விவரிக்கப்பட்டிருப்பவையெல்லாம் அவளுக்குப் பொருந்துகிறதா என்று எண்ணிப் பார்த்தான். உடனே அவளைப்பற்றி அப்படி அனுமானிக்க முடியவில்லை. அந்த அனுமானத்தை நோக்கி சிவராமனின் அறிவு அத்தனை விரைவாகச் செயல்படவில்லை என்றாலும் கூட, மைதிலியின் ஏகபோகக் கணவன் என்ற அவனின் பெருமிதம் மிக பலமான அதிர்வுக்கு உள்ளாகியிருந்தது.

    கடிதத்தை உடனே கிழித்துப் போட்டுவிடலாமா என்று நினைத்தான். ஆனால், அதற்கும் மனம் உடன் படவில்லை. ஏதோவொரு கோணத்தில், கடிதத்தில் உள்ளடங்கியிருந்த விஷயம் மைதிலி பற்றிய ஒரு ரகசியச் செய்தியாகவும் அவனுள் கண் சிமிட்டியது. கடிதத்தில் சொல்லப்பட்டிருப்பவை உண்மையாக இருக்கலாமோ என்றும் திசை மாறிவிடமுடியவில்லை; வடிக்கப்பட்ட பொய்யாக இருக்குமென்று அறுத்து ஒரேயடியாக விடுபடவும் இயலவில்லை. முன் பின் உணர்ந்திராத முள் வலைக்குள் சிக்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. மைதிலியின் எல்லா அழகும் அவனுடைய நினைப்பில் தோன்றின. அவளுடைய அழகான மனமும் உடலும் அவனுக்குத்தானே, அவனுக்கே தானே? மைதிலியில் ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க, சிவராமனுள் ஏதோ ஓர் இனிமை ஊற்றாகக் கசிந்தது.

    நிஜமா சொல்லுங்க! இதுவரைக்கும் என்னைத்தவிர வேறெந்தப் பெண்ணையும் நீங்க தொட்டதுகூடவா கிடையாது?

    ஏன் என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா மைதிலி?

    நம்பிக்கை இல்லாம கேக்கலைங்க. சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு கேக்கறேன்.

    "நிஜமாவே தொட்டது கிடையாது. தொடவே கூடாதுன்னு வைராக்கியம் எதுவும் கிடையாது. எப்படியாவது தொட்டுப் பார்த்துடணும்னு ரொம்ப ஆசைப்பட்டிருக்கேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1