Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayul Sirai
Aayul Sirai
Aayul Sirai
Ebook95 pages27 minutes

Aayul Sirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெள்ளைச்சாமி கிராமத்தில் வாழும் கீழ்சாதி இளைஞன். அவனை சாதி சொல்லி இழிவுப்படுத்தியதால் உணர்ச்சிவசப்பட்டு ஒரு கொலை செய்கிறான். சிறைக்கு சென்று பின் விடுதலையானதும் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை தெரிந்து கொள்ள யதார்த்தமான இந்நாவலை படியுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580131006293
Aayul Sirai

Read more from S. Kumar

Related authors

Related to Aayul Sirai

Related ebooks

Reviews for Aayul Sirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayul Sirai - S. Kumar

    http://www.pustaka.co.in

    ஆயுள் சிறை

    Aayul Sirai

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னுரை

    வெள்ளைச்சாமி கிராமத்தில் வாழும் கீழ்சாதி இளைஞன். அவனை சாதி சொல்லி இழிவுப்படுத்தியதால் உணர்ச்சிவசப்பட்டு ஒரு கொலை செய்கிறான். சிறைக்கு சென்று பின் விடுதலையானதும் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை தெரிந்து கொள்ள யதார்த்தமான இந்நாவலை படியுங்கள்.

    *****

    அத்தியாயம் 1

    வெள்ளைச்சாமி வார்டர் வந்து நிற்பதைப் பார்த்தான்.

    வாங்க, ஐயா.

    இன்னிக்கு வியாபாரம் எப்படி?

    நல்லா நடந்தது. போட்ட முதல் முப்பது ரூபா. லாபம் இருபது. பத்து உங்க பணம்... பத்து என் சேமிப்பு.

    காசை அவரிடம் நீட்டினான்.

    ஆமாம், உங்கம்மா வந்து பார்த்து ரொம்ப நாளாகுது போலிருக்கே!

    ஆமாம்.... என்றபோது அவன் முகம் சுருங்கி வேதனைப்பட்டது.

    அம்மாவுக்கும் ரொம்ப வயசாயிடிச்சி. ஊர் உலகத்தில இந்த வயசில பிள்ளைங்க சம்பாதிக்க அம்மா உட்கார்ந்து சாப்பிடுவாங்க. ஆனா எங்கம்மா? நூறு ரூபா செலவு பண்ணி, நூத்தம்பது கிலோ மீட்டர் பஸ்ஸில் வந்து என்னைப் பார்த்துட்டுப் போறாங்க. அடுப்பில வெந்து, ஆப்பம் வித்து தன்னைத் தானே காப்பாத்திக்கிறாங்க.

    கவலைப்படாதே, எல்லாம் சரியாயிடும். இப்ப நீ வியாபாரம் பண்ணி, என் கிட்ட சேமிச்ச காசே அஞ்சாயிரம் இருக்கு. தொழில் கூலி வேற வரும். போகும்போது நீ வெறும் ஆளாப் போக மாட்டே! அப்புறமென்ன, உங்கம்மாவை உட்கார வச்சி சோறு போடு. நான் வரட்டுமா?

    ஐயா, நாளைக்குக் கடலை மிட்டாயைக் குறைச்சி, பீடி அதிகமா வாங்கிட்டு வாங்க.

    சரி.

    வார்டர் புறப்பட்டுப் போய் விட்டார்.

    வெள்ளைச்சாமி அப்படியே மல்லாந்து படுத்தான்.

    மேயக்காலில் இப்படி மல்லாந்து படுத்தால் நீலவானமும் குன்றும் குமரன் கோயிலும் பெரிய மரங்களும் காட்சி தரும். அது அவனுடைய சொந்த ஊர் மயிலத்தில்.

    இங்கே -

    கனத்த கற்கூரை, காற்றுப் புக ஒரு சிறிய ஜன்னல்.

    வார்டர் சொன்னதைப் போல் ஊர் திரும்பும்பொழுது அவனிடம் கணிசமாகப் பணமிருக்கும். அம்மாவை உட்கார வைத்து சோறு போடலாம். உடம்பில் கூட தெம்பிருக்கிறது. உழைக்கலாம்.

    ஆனால்....

    தண்டனை அடைந்து சிறைக்கு வந்தபொழுது அவன் வயது இருபத்திரண்டு. மாமன் மகள் செண்பகத்தை மணந்து வாழ்ந்திருக்க வேண்டிய வயசு...

    இப்பொழுது செண்பகத்துக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பீடி பற்ற வைத்துக் கொண்டான்.

    கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட்டு விடுவதே மேல்! என்ன, தண்டனை விதிக்கப்பட்ட காலத்துக்கும் நிறைவேற்றப்படும் காலத்துக்கும் இடையில் நகரும் நாட்கள் தான் நரகமாகச் செல்லும். மற்றபடி அது பரவாயில்லை. இந்த ஆயுள் சிறை தான் கொடூரம்.

    பீடி அணைந்து விட்டிருந்தது. தீக்குச்சியை உரசிப் பற்ற வைத்துக் கொண்டான்.

    இதொன்று தான் லாபம். ஆயுள் கைதி என்பதால் கான்விக்ட் வார்டர் வேலையும் கடலைமிட்டாய், பீடி வியாபாரம் செய்ய அனுமதியும்.

    உதட்டில் சூடு தெரிய பீடியை வீசி எறிந்தான்.

    எத்தனை விதமான பைத்தியங்கள் மனிதனைப் பிடித்து ஆட்டுகின்றன!

    மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை...

    Enjoying the preview?
    Page 1 of 1