Vettai
By S. Kumar
()
About this ebook
வேலை தேடிய லதா குடும்பத்தைப் பிரிந்து, காதலனைப் பிரிந்து அந்த எஸ்டேட்டுக்கு வருகிறாள், வேட்டை வெறி ஊறிய கிழவரைப் பராமரிக்கும் நர்சாக. ஆனால் அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகள் அவளை அச்சுறுத்துகின்றன. இறுதியில் உயிருக்கு அஞ்சி ஓடுகிறாள். தப்பிப்பாளா?
Read more from S. Kumar
Kolaikku Saatchi Illai Rating: 0 out of 5 stars0 ratingsBommai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsAayul Sirai Rating: 0 out of 5 stars0 ratingsKuthiraiyil Oru Rajakumaran Rating: 0 out of 5 stars0 ratingsVanam Mannil Veezhvathillai Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Paartha Pinbu Naan... Rating: 0 out of 5 stars0 ratingsNeeyoru Kolai Seivai Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya India Rating: 0 out of 5 stars0 ratingsVarambu Meerum Vayathu Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsPriyam Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsKanavai Thurathiyavargal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Yaar Theriyuma? Rating: 0 out of 5 stars0 ratingsSundara Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKondral Paavamillai Rating: 0 out of 5 stars0 ratingsKanavalavu Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsClick Click Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsEngey Andha Iruvar? Rating: 0 out of 5 stars0 ratingsAthiradi Padai Rating: 0 out of 5 stars0 ratingsKanney Kadathugirean Rating: 0 out of 5 stars0 ratingsIrakkam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsKolai Vairam! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kaayangal Rating: 0 out of 5 stars0 ratingsEndha Kathavum Thirakkum Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravai Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsKaattil Nila Rating: 0 out of 5 stars0 ratingsVaasalile Vazhai Maram Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Maranam Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Kuzhappam Enna? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vettai
Related ebooks
Kangal Mayangiya Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsThaa! Rating: 5 out of 5 stars5/5Kolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsPookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Vidiyum Varai Madiyil Iru..! Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsThoongatha Vizhigal Irandu Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Thappinal Maranam Rating: 0 out of 5 stars0 ratingsVazhigal Moodapattullana Rating: 0 out of 5 stars0 ratingsWhisky Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsKaathiru, Kaadhalikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsKichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Uyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Soorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Raadhaiyai..., Kothaiyai... Seethayai... Rating: 0 out of 5 stars0 ratingsOdi Va, Omana...! Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsKanneerai Thodatheergal Rating: 0 out of 5 stars0 ratingsIrul Kolaigal Rating: 0 out of 5 stars0 ratingsSathangai Ittal Oru Maathu Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Pala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsகோவையில் ஒரு குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsKovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Vettai
0 ratings0 reviews
Book preview
Vettai - S. Kumar
https://www.pustaka.co.in
வேட்டை
Vettai
Author:
எஸ். குமார்
S. Kumar
For more books
https://www.pustaka.co.in/home/author/s-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
பிளாட்பாரத்தில் கொல்லம் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது.
ரயில்வே டி.வி. தூர்தர்ஷனைப் பாராட்டத் தூண்டிக் கொண்டிருந்தது. அடிக்கடி சாந்தி ஸ்வீட் வாங்கச் சொல்லிக் காரமாகக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தது.
ரயில்களிலிருந்து பாசஞ்சர்கள் வித்தியாசப்பட்டார்கள். நேரத்தோடு வந்து சார்ட் பார்த்து, தங்கள் இருக்கைகளில் கர்சீப், கூடை, பை, ப்ரீப்கேஸ் எல்லாம் வைத்துவிட்டு, கீழே இறங்கி
கூஜாவில் தண்ணீர் பிடித்தார்கள்.
வாட்டர் பாட்டிலை நிரப்பினார்கள்.
தலை சீவினார்கள்.
பூ வைத்தார்கள். கொஞ்சம்
கண்ணீர் விட்டார்கள்.
கொஞ்சம் சிரித்தார்கள்.
அநியாய விலை கொடுத்துத் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டார்கள்.
ஆவின் பால் குடித்தார்கள்.
தேத்தண்ணி - காரணப் பெயர் - சுவைத்தார்கள்.
குவியல் குவியலாக நின்று ஊர்நாடுகளுக்குச் சென்று செய்ய வேண்டியவை பற்றியும் –
செய்யவிருப்பவை பற்றியும் –
அவசரமாகப் பேசினார்கள்.
ஆச்சி, அப்பத்தா, அப்பச்சி, ஆயி, அப்பன், மாமனுக்குச் செய்திகள் பரிமாறினார்கள்.
அவர்களுக்கு நடுவே ஹேமலதா கொஞ்சம் வசீகரமாகத் தெரிந்தாள். பெத்த பூப்போட்ட சாரி. மெல்லிய தேகம். நீள முகம். சற்றுப் பெரிய நெற்றி, உள்ளடங்கிய கண்களும், வயிறும். சுழித்த நாபி. சுளிக்காத முகம். முகவாயின் கூர்மையில் படைப்புலகக் குறும்பு.
அவளுக்கு எதிரே சண்முகநாதன். அவளை விட மூன்றங்குல உயரம். நீண்ட திடமான கால்கள். குறுகிய இடுப்பு. அகன்ற மார்பு. மார்பில் சற்றுப் பெரிய வெள்ளிக் கொலுசு அல்லது செயின். ரோமானிய மார்பு. ஃப்ரெஞ்ச் தாடி. இந்திய சிகரெட்.
பத்திரம், ஹேமா.
போகாதேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன், இப்பவே டிக்கெட்டைக் கிழிச்சிப் போட்டுட்டுக் கீழே இறங்கிடறேன்.
…..
சொல்லுங்க, நாதன்.
முடியாது, ஹேமா.
அவ்வளவுதான், உங்க அன்பு?
வேணாம், போகாதேன்னு சொல்லி உன்னைத் தடுத்து நிறுத்த எனக்கும் ஆசைதான். ஆசையும் அன்பும் மட்டும் போதுமா, ஹேமா? சர்வ வல்லமை படைத்த பணம் வேணுமே!
இதைக் காரணமாச் சொல்லித்தான் எங்க அம்மா வாயை அடைச்சேன். அவங்களுக்கு விருப்பமேயில்லை. இங்கேயே எங்காவது ப்ரைவேட் நர்ஸிங் ஹோம்ல ஐந்நூறு, ஆயிரம் கிடைச்சாலும் பரவாயில்லை. போயிட்டு வா. அவ்வளவு தூரம் போக வேணாம்னு சொன்னாங்க.
அவங்க சொல்றதும் நியாயம்தானே?
அப்போ டிக்கெட்டைக் கிழிச்சுப் போட்டுடவா?
அதை நீயே முடிவு செய்.
உங்களுக்கு மனசில்லே. போய்த் தொலையட்டும். வேற யாராவது அழகான பொண்ணை சைட் அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டிங்க.
இல்லை, ஹேமா. யூ ஆர் ராங். உன் மேல எந்த முடிவையும் திணிக்கிற உரிமை எனக்கில்லே.
காதலா, இப்படியெல்லாம் பேசக்கூடாது. நான்தான் அதிகாரம் பண்ணு, உரிமை எடுத்துக்கன்னு கெஞ்சறேனே!
நான் ஒரு வெறும் பய ஹேமா. என்னால ஒரு முழம் பூ வாங்கி உன் தலையில் வைக்க முடியாது. ஏன், பீச்ல சுண்டல் வாங்கித்தரக்கூட என் அண்ணன்கிட்ட பாக்கெட் மணி வாங்கிட்டு வரணும். அப்புறம் அதிகாரமாவது, உரிமையாவது?
ஏன், இப்படி விரக்தியாகவே பேசறீங்க? நீங்க ஒரு போஸ்ட் க்ராஜுவேட்.
"என்ன பிரயோஜனம்? எம்.ஏ. ஹிஸ்டரின்னா,