Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varambu Meerum Vayathu
Varambu Meerum Vayathu
Varambu Meerum Vayathu
Ebook82 pages27 minutes

Varambu Meerum Vayathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முதுகலைப் பட்டம் பெற்று, ஐ.பி.எஸ் கனவுகளோடு வாழ்கிறான் பிரதாப். எந்தப் பெண்ணின் தோற்றமும் மனதில் விரிக்காத வலையை, மலர்விழியின் உருவமும் நிறமும் அவனுக்குள் வலையை விரிக்கத் துவங்கின. விரித்த வலையில் சிக்கிக் கொண்ட பிரதாப்க்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி என்ன? என்பதைக் காண்போம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580131010444
Varambu Meerum Vayathu

Read more from S. Kumar

Related authors

Related to Varambu Meerum Vayathu

Related ebooks

Related categories

Reviews for Varambu Meerum Vayathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varambu Meerum Vayathu - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வரம்பு மீறும் வயது

    Varambu Meerum Vayathu

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    டிரைவ்-இன் ரெஸ்டாரண்டில் பட்டர் மசாலாவைப் பிரதாப் ருசித்துக்கொண்டிருந்தான்.

    இன்று அவனுக்கு 25 வருடம் 4 மாதம் 3 நாட்கள். முதுகலைப் பட்டம் பெற்று மூன்று வருடங்களாகிவிட்டன. ஒருமுறை ஐ.ஏ.எஸ் எழுதிவிட்டு, ஐ.பி.எஸ்ஸாவது க்ளிக் ஆக வேண்டுமென்று கவலைப்பட்டு, கிடைக்காமல் மனதைத் தேற்றிக்கொண்டவன்.

    நினைவு தெரிந்த நாளாகவே பணம், வசதிகள் என்று எதற்கும் ஏங்காத வெள்ளிக் கரண்டிப் பிறப்பு.

    சிட்னி ஷெல்டன், ஃபோர்சித் நாவல்கள், ஆக்ஷன் ஆங்கிலப் படங்கள், முற்றிலும் எதிர்ப் பதமாக நீல பத்மநாபன், பிரபஞ்சன் நாவல்கள், கோவிந்த் நிஹாலனி, எம்.டிவி படங்கள் என்று பொழுதைக் கொன்று கொண்டிருந்தான்.

    எப்போதாவது துஷ்ட நண்பர்களுடன் கொஞ்சம் குடித்திருக்கிறான். ஆனால் எப்போதும் பெண்களைத் துரத்தியதே இல்லை. தவிர, முறையற்ற பெண் சுகங்களுக்குப் பயந்தான்.

    வெய்ட்டரிடம் பில் கேட்க நினைத்த போதுதான் அவள், அவன் கண்ணில் விழுந்தாள்.

    இதயத் துடிப்பு, நாடி, சுவாசம் எல்லாம் லயம் மாறின.

    அவள் மெல்லிய உடல்வாகுடன் உருக்கி ஊற்றப்பட்ட பொன்னிறத்தில் ஜொலித்தாள்.

    இதுவரை எந்தப் பெண்ணின் தோற்றமும் மனதில் விரிக்காத வலையை, அவளுடைய உருவமும் நிறமும் அவனுக்குள் விரிக்கத் துவங்கின.

    காப்பியா சார்?

    ஜஸ்ட் எ மினிட். அந்த டேபிளுக்கு யார் சர்வ் பண்றது? வெய்ட்டரின் முகத்தில் ஓர் இகழ்ச்சிப் புன்னகை படர்ந்தது.

    ‘அதானே, ஜொள்ளுப் பசங்க எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன்? அந்தப் பொண்ணு மேல உன் கண்ணு விழுந்துடுச்சா? அலையாதடா, பரதேசி.’

    ஹலோ, அந்த டேபிள் யார் சர்வ் பண்றது?

    நான்தான், சார்.

    வெல். நான் அந்த டேபிளுக்குப் போறேன். ஒரு ஐஸ் கிரீம் கொண்டு வாங்க.

    ஒண்ணு போதுமா, சார்?

    பிரதாப்புக்கு அந்தக் கேள்வியின் விஷமம் உறைக்கவில்லை. அவன் இயல்பாகப் பதில் சொன்னான். முதல்ல ஒண்ணு கொண்டு வாங்க. அப்புறம் தேவைன்னா சொல்றேன்.

    அவன் எழுந்து போய் அவளுக்கு எதிரே உட்கார்ந்தான்.

    தனக்கு எதிராகப் புதிதாக வந்து உட்கார்ந்திருப்பவனைப் பார்த்து அவள் கண்கள் படபடத்தன. கூட்டிலிருந்து விழுந்த குருவி மாதிரி சடசடவென்று இமைகள் உதறிக்கொண்டன.

    அவன் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அவள் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

    அவளுக்கு ஒரு குளிர்பானமும், அவனுக்கு ஐஸ்க்ரீமும் வந்தன.

    அவன் ஐஸ்க்ரீமைச் சுவைத்தபடியே அவளையும் ரசித்தான். ஆனால் அவள் குளிர்பானத்தை ஒரு சிப் உறிஞ்சிவிட்டு, எதையோ ஆழ்ந்து பார்த்தாள். அடுத்த சிப்புக்குப் பிறகும் அதே பார்வை.

    அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தை மீறி அவள் பார்வை நிலைத்திருப்பது எதில் என்று அறியும் ஆர்வம் வந்தது.

    பார்த்தான்.

    ஏதோ மேப். அதன் மீது ஐ.டி.டி.சி முத்திரை இருந்தது. சிட்டி மேப்பா?

    நிமிர்ந்தாள்.

    மீண்டும் இமைகள் படபடத்தன. தலையை ஒருபுறம் சாய்த்து யோசித்துவிட்டு, ஆமா, என்றாள்.

    மே ஐ ஹெல்ப் யூ?

    அவளுக்கு இப்பொழுது உதவி தேவைதான்! வலிய வந்து உதவக் காத்திருக்கும் இந்த இளைஞனின் நட்புக் கருத்தை ஏற்பதா, வேண்டமா? என்று யோசித்தாள்.

    நீங்க ஊருக்குப் புதுசா?

    ஒரு வகையில.

    புரியல.

    இங்கே நிறைய உறவினர்கள் இருக்காங்க. மயிலாப்பூர்ல எங்க மாமா. ஊட்டியில எங்க சித்தப்பா... ஆனா அவங்க யாருடைய வீட்டிலயும் நான் தங்க விரும்பலை. அதனால தனியா ஹோட்டல்ல ரூம் எடுத்திருக்கேன்!

    உங்க பேரண்ட்ஸ்?

    லண்டன்ல இருக்காங்க.

    ஐ, ஸீ, நீங்க அங்கேதான் வளர்ந்தீங்களா?

    எங்க அப்பாதான் அங்கே வளர்ந்தார்.

    குழப்பறீங்க.

    எங்கப்பா பிரிட்டனைச் சேர்ந்தவர். அம்மா தமிழ்ப் பெண்மணி. அவளுடைய

    Enjoying the preview?
    Page 1 of 1