Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeyoru Kolai Seivai
Neeyoru Kolai Seivai
Neeyoru Kolai Seivai
Ebook94 pages31 minutes

Neeyoru Kolai Seivai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முரளி, சீனு, திவாகர் மூவரும் விடுதியில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்கள். எதிர்காலத்தைப் பற்றி பல கனவுகளோடும் கற்பனைகளோடும் வாழும் திவாகர், எதிர்பாராதவிதமாக கைரேகை நிபுணரிடம் கைரேகை பார்க்கிறான். அதற்குப் பிறகு திவாகர் மிகவும் மனமுடைந்து போகிறான். கைரேகை நிபுணர் திவாகரிடம் கூறியது என்ன? அதன்பின் அவன் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580131010445
Neeyoru Kolai Seivai

Read more from S. Kumar

Related authors

Related to Neeyoru Kolai Seivai

Related ebooks

Related categories

Reviews for Neeyoru Kolai Seivai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeyoru Kolai Seivai - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீயொரு கொலை செய்வாய்

    Neeyoru Kolai Seivai

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    சூரியன் தன்னால் முடிந்த வரை சுள்ளென்று சுட்டான் தன் கதிர்க் கரங்களை நீட்டி அவர்களைத் தொட்டான்.

    திவாகர் முதலில் எழுந்து, முழங்காலிலும் மார்பிலும் தளர்வாகப் பரவியிருந்த லுங்கியைச் சரியாக இடுப்புக்கு கொண்டு வந்து கட்டிக் கொண்டான்.

    ஜன்னலோர கட்டிலில் வெயிலின் கொடுமையைச் சட்டை செய்யாமல் முரளி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மறுபுறம் சீனு ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்தான்.

    சீனு.

    ம்.

    எழுந்திரிடா.

    பொழுது விடிஞ்சிடிச்சா?

    போகப் போவுது.

    மணி என்ன?

    ஒன்பது.

    இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்!

    மணி ஒன்பதுடா.

    இருக்கட்டும். இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே?

    அதுக்காக?

    .....

    எழுந்திருடா...

    சுத்த லொள்ளு நீ.

    சீனு அலுப்புடன் எழுந்து கொண்டான்.

    உட்கார்ந்த வாக்கில் நெட்டி முறித்தான். வெறும் ஜட்டியோடு இருந்தவன் எழுந்து, டூ பீஸ் நாயகியைப் போல் நடந்து சென்று ஹாங்கரில் இருந்த லுங்கியை எடுத்து அணிந்து கொண்டான்.

    அந்த முரளி நாயை எழுப்பலியா?

    உன்னையாவது சத்தம் போட்டு எழுப்பிடலாம், அவனை...? உதைச்சி இல்லை எழுப்பணும்?

    அந்த அரிய வாய்ப்பை எனக்குக் கொடேன்.

    கேரி ஆன்!

    முரளி கண்ணா என்ற அன்பான அழைப்புடன் சீனு தூங்கிக் கொண்டிருந்த முரளியின் இடுப்பில் உதைத்தான்.

    முரளி உடம்பை முறுக்கிக்கொண்டான்.

    ஆனால் கண்களைத் திறக்காமலே இடுப்பைத் தடவிக்கொண்டு புரண்டு படுத்தான்.

    டேய், முரளி.

    முரளி.

    என்னடா?

    எழுந்திரு.

    முடியாது.

    மணி ஒன்பது ஆச்சிடா.

    ஆகட்டும், அதுக்கென்ன?

    அது சரி, இன்னிக்கு முழுக்க இந்த ரூமுக்குள்ளேயே அடைஞ்சிக் கிடந்து கட்டில்ல உருளப் போறியா?

    தூக்கத்தைக் கெடுத்து அருமையான என் கனவைக் கலைச்சிட்டீங்களேடா!

    அப்படி என்ன கனவு கண்டே?

    முரளி எழுந்து உட்கார்ந்தான்.

    சொல்றேன் கனவுன்னா என்ன?

    என்ன காலட்சேபமா?

    கேட்ட கேள்விக்கு பதில்.

    சாரி, இந்தக் கேள்வியை நாங்க சாய்ஸ்ல விட்டுட்டோம்.

    எ ட்ரீம் இஸ் நத்திங் பட்...?

    தமிழ்ல சொல்லுங்க, புரொபசர்.

    வெல்கம், கனவு என்பது வேறொன்றுமில்லை.

    அப்ப விட்டுடு.

    முழுசாக் கேளு... நம் அடி மனதில் புதைந்து கிடக்கும் நிறைவேறாத ஆசைகளே கனவுகளாக வெளிப்படுகின்றன.

    அறுக்காதேடா, அப்படி என்ன பொல்லாத கனவைக் கண்டே?

    நம்ம மிஸ் காலேஜ் இருக்காளே...

    யூ மீன் பிருந்தா?

    யெஸ்.

    அவ உங்க அண்ணிடா.

    கொலை விழும்.

    அப்புறம் உங்க அண்ணி தாலி அறுத்திடுவா.

    ஷிட், கனவைக் கலைச்சதுமில்லாம இப்படி லொள்ளு பண்றியே! என்ன அற்புதமான கனவு தெரியுமா?

    சொல்லித் தொலை.

    பிருந்தா இல்லே...

    உங்க அண்ணி தானே!

    ச்சே, நான் சொல்லவேயில்லை.

    சரி சொல்லு.

    குறுக்கே பேசக் கூடாது, அண்ணே!

    பேசலை.

    பிருந்தா என் கனவில் நடனமாடினா.

    பரதநாட்டியமா?

    பரதேசி, அதெல்லாம் பெரியவங்க பாக்கறது.

    வேறென்ன?

    கேபரே!

    சீனு உணர்ச்சிவசப்பட்டு, தலையணையால் அவனைத் தாக்கினான்.

    பிருந்தா கேபரே ஆடினாளா, என்ன திமிர் உனக்கு?

    இங்கே பாரு கண்ணா, நடனம் கேப்ரே, ஆடறது பிருந்தா. ஐயா ஜிவ்வுனு மேல போகும்போது எழுப்பிட்டே...!

    நல்லவேளை... பாவி இந்நேரம் என்னவெல்லாம் செஞ்சிருப்பே... திவாகர் குறுக்கிட்டான்.

    ஏற்கனவே ரொம்ப நேரமாயிடுச்சி. இன்னிக்கு ஸ்விம்மிங் ஃபூலுக்கு போறதா நாம திட்டமிட்டோம். உனக்கு ஞாபகமிருக்கா?

    இருக்கு.

    சீக்கிரம் கிளம்புங்கடா.

    முப்பது நிமிடங்களில் அவர்கள் தயாரானார்கள்.

    புறப்பட்டார்கள்.

    கடற்கரைச் சாலை வெயிலும் போக்குவரத்தும்...? பரபரத்துக் கொண்டிருந்தது.

    பிளாட்பார ஓரத்தில் ஏதோ சச்சரவு.

    எல்லோரும் அதை கவனிக்காமல் மேலே செல்ல அவர்கள் மட்டும் அங்கே மூக்கை நுழைத்தார்கள்.

    ஸ்கெலிடன் போன்ற சச்சலான இருவர் எதிரெதிரே நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    என்னமோ அங்கியே நின்னு ஜம்ப் பண்ணிக் காட்றியே! இங்கே வந்து ஜம்ப் பண்ணேன், பாக்கலாம்.

    பசங்க சாமான் எடுத்துட்டு வரலே. இல்லேன்னா இந்நேரம் ஒரு வழி பண்ணியிருப்பேன்.

    இன்னா பண்ணிடுவே?

    இன்னா பண்ணணுமோ அதைப் பண்ணியிருப்பேன். அப்பால ஒரே குபாரா ஆய்ட்டிருக்கும்.

    முரளி சொன்னான், திவா, கொஞ்ச நேரம் நின்னு குபாரைப் பார்த்துட்டுப் போயிடலாம்.

    இங்கே ஒண்ணும் நடக்காது. வா, போகலாம்?

    Enjoying the preview?
    Page 1 of 1