Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இதயம் போகுதே..!
இதயம் போகுதே..!
இதயம் போகுதே..!
Ebook121 pages42 minutes

இதயம் போகுதே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுட்டெரிக்கும் 'சூரியன்' தனது அக்னிக் கனலை அனலாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தான். பகல் ஒரு மணிக்கு மேல் இருக்கும். தரகர் தங்கசாமி குடையை மடக்கித் தனது கக்கத்தில் வைத்துக் கொண்டு கூர்க்காவிற்கு ஒரு சல்யூட் வைத்தார். தெரிந்தவர் என்பதால் உள்ளே போக அனுமதித்தான் கூர்க்கா. 

யூரோகான் பதித்த தரை வளைந்து அழகாக வீட்டு வாசல் வரை சென்றது. இருபக்கமும் ரோஜா செடிகளின் வரிசை அணிவகுத்து நின்றன. வீரர்கள் போல வீட்டைச் சுற்றிலும் மா, சப்போட்டா, கொய்யா, வாழை என பழ மரங்களும், செம்பருத்தி, மல்லிகை, பிச்சி, நந்தியாவட்டை இன்னும் பல பெயர் தெரியாத பூச்செடிகளும் தோட்டம் போல காட்சியளிக்க நடுவில் கம்பீரமாக தோற்றமளித்தது அந்தப் பங்களா வீடு. முழுவதும் பளிக்குத் தரை, ஏசியுடன் இந்த வெயிலில் ஊட்டியில் இருப்பதைப் போன்ற உணர்வை கொடுக்கும். 

"எந்த மகராசிக்குக் கொடுத்து வைச்சிருக்கோ, ம்ம்... நானும் அலைஞ்சி, திரிஞ்சி எத்தனையோ... ஜாதகங்களைக் கொடுத்தும் ஒன்று கூட இன்னும் 'செட்' ஆகலையே! ஒரு இடம் அமைஞ்சா கணிசமா ஒரு தொகை கிடைக்கும்ன்னு நாயா... பேயா... அலையுறேன்" என்று சலித்துக் கொண்டு வாசலில் செருப்பை உதறி வீட்டுக்குள் நுழைந்து ஐயா... இருக்காங்களா? எனக் கேட்டவாறு ஹாலில் கிடந்த ஷோபாவில் அமர்ந்தார். அது அப்படியே அவரை உள்வாங்கிக் கொண்டதும் "அப்பப்பா... எப்படி குளு, குளுன்னு இருக்கு!" என குளிரை ரசிக்கவும், "ஐயா, சாப்பிடறாங்க, வெயிட் பண்ணுங்க" என வேலைக்காரி கூறிச் செல்ல... சற்று நேரத்தில் சாப்பிட்டக் கையை துண்டால் துடைத்தவாறு தயாளன் வந்தார். 

தரகர் எழுந்து நின்று 'ஐயாவிற்கு வணக்கம்' என்று இரு கைகளை கூப்பினார். 

"ஹா...க்ஹா..." என சிரித்துக் கொண்டே "வாங்க தரகரே" என்றவர் கையசைப்பில் தரகரை உட்காரச் சொல்லி தானும் எதிர் ஷோபாவில் அமர்ந்தார். 

"ஐயா, இன்றைக்கு ஒரு நல்ல இடம் கொண்டு வந்தேன்யா" என்றவாறு ஜாதக நகல்களை எடுத்த போது ஒரு நகல் பறந்து போய் தயாளனின் காலுக்கடியில் போய் விழுந்தது. அதனைக் குனிந்து எடுத்துப் பார்த்தார் அதில் ஒரு பெண்ணின் போட்டோவும், பயோடேட்டாவும் இருந்தது.

"இந்தப் பெண்..." என வினவ... 

"ஐயா, உங்க பையனுக்கு கொண்டு வந்தது வேறேங்கய்யா..."

"பரவாயில்லை! இந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லுங்க..."

கையில் வாங்கிப் பார்த்தவர், "இந்தப் பெண் பி.ஈ. படிச்சிட்டு சென்னையில வேலை பார்க்குது. அப்பா காய்கறி கடை, அம்மா வீட்ல தான். தம்பி பி.டெக் கடைசி வருடம் படிக்கிறான்" 

"குடும்பம் எப்படி?" 

"நல்ல குடும்பமய்யா... நம்மளவுக்கு வசதி வராது ஆனா, இவங்களும் வீடு பரவாயில்லாம போட்டுருக்காங்க; அவங்கவுங்க ரூம்ல ஏசி வைச்சிருக்காங்க பெண்ணுக்கும் நூறு பவுன் போடுவாங்க..." 

"பரவாயில்லை... இந்த ஜாதகத்தையும் நம்ம பையனோட ஜாதகத்தையும் பொருத்தம் பாருங்க! பையன் தான் எந்தப் பெண் போட்டோவையும் பிடிக்கலைன்னு சொல்லி இந்த நாலு வருஷமாநாளை கடத்திக்கிட்டு இருக்கானே! வயது இருபத்து ஒன்பது முடிய போகுது பிடி கொடுக்க மாட்டேங்கிறானே!" 

என்று எழுந்து கொண்டவர் ரூபாய் ஆயிரத்தை எடுத்து தரகர் கையில் திணித்து விட்டு "வீட்ல கோவிலுக்குப் போயிருக்கா! நீங்க நம்ம வீட்லேயே சாப்பிட்டுட்டு போங்க" என வேலைக்காரியை கூப்பிட்டு சொல்லிவிட்டு தன்னறைக்குச் சென்று விட்டார். இன்னும் கொஞ்சம் லேட்டா வந்தாலும் தரகர் பார்த்திருக்க முடியாது. 

தயாளர் பெயருக்கேற்றாற் போல் தயாள குணமுள்ளவர். பிறப்பிலேயே இவர் ஒன்றும் பெரிய கோடீஸ்வரர் இல்லை இந்த வசதி வாய்ப்பெல்லாம் ஒரு இருபத்தைந்து வருடத்திற்குள் வந்ததாகும். 

'ரியல் எஸ்டேட்' பிசினஸ் அவரை இந்த உயரத்திற்கு தூக்கி நிறுத்தியது. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223545293
இதயம் போகுதே..!

Read more from Sundari Murugan

Related to இதயம் போகுதே..!

Related ebooks

Reviews for இதயம் போகுதே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இதயம் போகுதே..! - Sundari Murugan

    1

    சுட்டெரிக்கும் ‘சூரியன்’ தனது அக்னிக் கனலை அனலாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தான். பகல் ஒரு மணிக்கு மேல் இருக்கும். தரகர் தங்கசாமி குடையை மடக்கித் தனது கக்கத்தில் வைத்துக் கொண்டு கூர்க்காவிற்கு ஒரு சல்யூட் வைத்தார். தெரிந்தவர் என்பதால் உள்ளே போக அனுமதித்தான் கூர்க்கா.

    யூரோகான் பதித்த தரை வளைந்து அழகாக வீட்டு வாசல் வரை சென்றது. இருபக்கமும் ரோஜா செடிகளின் வரிசை அணிவகுத்து நின்றன. வீரர்கள் போல வீட்டைச் சுற்றிலும் மா, சப்போட்டா, கொய்யா, வாழை என பழ மரங்களும், செம்பருத்தி, மல்லிகை, பிச்சி, நந்தியாவட்டை இன்னும் பல பெயர் தெரியாத பூச்செடிகளும் தோட்டம் போல காட்சியளிக்க நடுவில் கம்பீரமாக தோற்றமளித்தது அந்தப் பங்களா வீடு. முழுவதும் பளிக்குத் தரை, ஏசியுடன் இந்த வெயிலில் ஊட்டியில் இருப்பதைப் போன்ற உணர்வை கொடுக்கும்.

    எந்த மகராசிக்குக் கொடுத்து வைச்சிருக்கோ, ம்ம்... நானும் அலைஞ்சி, திரிஞ்சி எத்தனையோ... ஜாதகங்களைக் கொடுத்தும் ஒன்று கூட இன்னும் ‘செட்’ ஆகலையே! ஒரு இடம் அமைஞ்சா கணிசமா ஒரு தொகை கிடைக்கும்ன்னு நாயா... பேயா... அலையுறேன் என்று சலித்துக் கொண்டு வாசலில் செருப்பை உதறி வீட்டுக்குள் நுழைந்து ஐயா... இருக்காங்களா? எனக் கேட்டவாறு ஹாலில் கிடந்த ஷோபாவில் அமர்ந்தார். அது அப்படியே அவரை உள்வாங்கிக் கொண்டதும் அப்பப்பா... எப்படி குளு, குளுன்னு இருக்கு! என குளிரை ரசிக்கவும், ஐயா, சாப்பிடறாங்க, வெயிட் பண்ணுங்க என வேலைக்காரி கூறிச் செல்ல... சற்று நேரத்தில் சாப்பிட்டக் கையை துண்டால் துடைத்தவாறு தயாளன் வந்தார்.

    தரகர் எழுந்து நின்று ‘ஐயாவிற்கு வணக்கம்’ என்று இரு கைகளை கூப்பினார்.

    ஹா...க்ஹா... என சிரித்துக் கொண்டே வாங்க தரகரே என்றவர் கையசைப்பில் தரகரை உட்காரச் சொல்லி தானும் எதிர் ஷோபாவில் அமர்ந்தார்.

    ஐயா, இன்றைக்கு ஒரு நல்ல இடம் கொண்டு வந்தேன்யா என்றவாறு ஜாதக நகல்களை எடுத்த போது ஒரு நகல் பறந்து போய் தயாளனின் காலுக்கடியில் போய் விழுந்தது. அதனைக் குனிந்து எடுத்துப் பார்த்தார் அதில் ஒரு பெண்ணின் போட்டோவும், பயோடேட்டாவும் இருந்தது.

    இந்தப் பெண்... என வினவ...

    ஐயா, உங்க பையனுக்கு கொண்டு வந்தது வேறேங்கய்யா...

    பரவாயில்லை! இந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லுங்க...

    கையில் வாங்கிப் பார்த்தவர், இந்தப் பெண் பி.ஈ. படிச்சிட்டு சென்னையில வேலை பார்க்குது. அப்பா காய்கறி கடை, அம்மா வீட்ல தான். தம்பி பி.டெக் கடைசி வருடம் படிக்கிறான்

    குடும்பம் எப்படி?

    நல்ல குடும்பமய்யா... நம்மளவுக்கு வசதி வராது ஆனா, இவங்களும் வீடு பரவாயில்லாம போட்டுருக்காங்க; அவங்கவுங்க ரூம்ல ஏசி வைச்சிருக்காங்க பெண்ணுக்கும் நூறு பவுன் போடுவாங்க...

    பரவாயில்லை... இந்த ஜாதகத்தையும் நம்ம பையனோட ஜாதகத்தையும் பொருத்தம் பாருங்க! பையன் தான் எந்தப் பெண் போட்டோவையும் பிடிக்கலைன்னு சொல்லி இந்த நாலு வருஷமாநாளை கடத்திக்கிட்டு இருக்கானே! வயது இருபத்து ஒன்பது முடிய போகுது பிடி கொடுக்க மாட்டேங்கிறானே!

    என்று எழுந்து கொண்டவர் ரூபாய் ஆயிரத்தை எடுத்து தரகர் கையில் திணித்து விட்டு வீட்ல கோவிலுக்குப் போயிருக்கா! நீங்க நம்ம வீட்லேயே சாப்பிட்டுட்டு போங்க என வேலைக்காரியை கூப்பிட்டு சொல்லிவிட்டு தன்னறைக்குச் சென்று விட்டார். இன்னும் கொஞ்சம் லேட்டா வந்தாலும் தரகர் பார்த்திருக்க முடியாது.

    தயாளர் பெயருக்கேற்றாற் போல் தயாள குணமுள்ளவர். பிறப்பிலேயே இவர் ஒன்றும் பெரிய கோடீஸ்வரர் இல்லை இந்த வசதி வாய்ப்பெல்லாம் ஒரு இருபத்தைந்து வருடத்திற்குள் வந்ததாகும்.

    ‘ரியல் எஸ்டேட்’ பிசினஸ் அவரை இந்த உயரத்திற்கு தூக்கி நிறுத்தியது.

    2

    காயப்போட்ட துணிகளெல்லாம் வானவில்லின் வண்ணங்களாய் காற்றில் ஆடி காய்ந்து கொண்டிருந்தன. பால்கனியில் ஒரு பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள் குறள்.

    அறைக்குள்ளே தோழிகள் நால்வரும் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். கண்டிப்பா மோடி சிறந்த பிரதமர் புகழ்பெறுவார் என்றும், பார்க்கலாம் என்றும் இருவராக பிரிந்து இரு கோஷ்டியாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

    ஐந்து தோழியரும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். இந்த ‘வொர்க்கிங் வுமன்ஸ்’ ஹாஸ்டலில் தங்கி, ஒரே கம்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தனர்.

    திடீரென, டிராக் மாறி ஏன்டி திவ்யா? ஒருத்தன் உனக்கு ஞாயிற்றுக்கிழமை வெளியே போகும் போதெல்லாம் ‘லவ் டார்ச்சர்’ குடுக்கிறான்னு சொன்னியே? இப்போ எப்படி? என்றாள் ஒருத்தி

    இந்தா பாரு என்று திவ்யா எழுந்துப் போய் ஒரு லெட்டரோடு வந்தாள்.

    என்னடி எழுதியிருக்கான்?

    படிச்சி பாருங்கடி...

    அதனை வாங்கி ஒவ்வொருத்தராக பிடித்து பார்த்துவிட்டு, முடிவில் குறள் இங்கே வாயேன்! நீயும் இதனைப் படித்துப் பாரேன்டி என கோரஸாகக் கத்தினர்.

    தான் படித்த பக்கத்தினை மனதில் நோட் பண்ணி மூடிய புத்தகதை செல்ப்பில் வைத்து விட்டு தோழிகள் கொடுத்த லெட்டரை வாங்கி கொண்டாள் திவ்யா

    ஹாய், ப்ரண்ட்ஸ் நாம இதை இப்படியே விடக்கூடாது. ‘ஒரு தலைக் காதலால்’ இப்ப நிறைய சம்பவங்கள் அதாவது கொலைகள், கொள்ளை, அமிலம் வீச்சு இப்படி நாளும் நடக்கிறதைப் பார்க்கிறோம். பத்திரிக்கைகளில் படிக்கிறோம். எனவே, இதை நாம முளையிலேயே கிள்ளி எறியணும்.

    என்னடி பண்ணச் சொல்றே...

    என்ன செய்யலாம் என யோசிங்க என்றாள்

    நாளைக்கு ஷோபியோட ‘ரிஷப்ஷன்’ இருக்கில்லே?

    ஆமா, நாளைக்கு ரிஷப்ஷன் நெக்ஸ்ட் சன்டே மேரேஜ் அதுக்கென்ன இப்போ? என்றாள் உமா.

    நாம எல்லாரும் ரிஷப்ஷனுக்கு போயிட்டு வந்திடுவோம்.

    சரி! ஷோபிக்கு என்னடி ப்ரசண்ட் பண்ணலாம்...

    எல்லோரும் சேர்ந்து ஒரு ‘ரிங்’ வாங்கலாம் என முடிவு செய்தனர். மறுநாள் காலையில் ஒவ்வொருவரும் அசத்தலான ட்ரஸ்ஸில் புறப்பட்டனர்.

    அந்த ஆசாமியை மிரட்டி விட்டு, ஜூவல்லரி ஷாப் போயிட்டு ரிஷப்ஷனுக்குப் போவதாக திட்டம்.

    இந்த ‘டர்னிங்’ல தான் அவன் நிற்பான் நீங்க பின்னால வாங்க நான் முதல்ல போறேன் என்ற திவ்யா முதலில் போக, தோழியர் பின்னாடி நின்றனர்.

    அப்போது, திவ்யா அருகில் வந்த ஒரு இளைஞன்

    Enjoying the preview?
    Page 1 of 1