Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன்னை காணாத கண்ணும்...
உன்னை காணாத கண்ணும்...
உன்னை காணாத கண்ணும்...
Ebook112 pages41 minutes

உன்னை காணாத கண்ணும்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வியர்வை பிடரியில் கசகசக்க... கண் விழித்தாள் பூமா. மின் விசிறி சுழலாமல் இருப்பதை பார்த்து... மின்சாரம் இல்லை என்பது புரிய... கையால் துழாவி ஜன்னலின் விளிம்பில் இருந்த கைப் பேசியை எடுத்து மணி பார்க்க காலை மணி ஐந்து! 

கட்டிலை விட்டு இறங்கியவள்... இந்த புழுக்கத்திலும் அயர்ந்து தூங்கும் கணவனை நினைத்து வியந்த வண்ணம்... அருகில் புதுமலராய் தூங்கும் தன் மகள் ஸ்ரீகாவை கைப்பேசி வெளிச்சத்தில்... பார்த்து நெகிழ்ந்தாள்... 

வாஷ்ரூம் போய் வரவும் தடைபட்ட மின்சாரம் வந்திருந்தது. மீண்டும் கணவரையும், குழந்தையையும் கண்ணுற்றவள்... புன்சிரிப்புடன் வெளியேறி முற்றம் பெருக்கி, தண்ணீர் தெளித்து ஒரு சிறிய கம்பி கோலமிட்டு வீட்டு உள்ளே நுழைய திரும்பியவள் வாசலில் தன் மாமியார் வசுமதி நிற்பதை கண்டாள். 

"என்ன... பூர்ணிமா தூக்கம் வரலையா...? எப்படி வரும். அப்பப்ப இந்த மின்சாரம் தடைபட்டு எழுப்பி விட்டுடுதே...! சரி... குழந்தை தூங்கும் போதே விட்டு வேலைகளை முடிச்சிடு" என்றார். 

பூமா... தனக்குள் சிரித்துக் கொண்டாள். இந்த அத்தைக்கு சமையலறைப் பக்கம் போவெதென்றாலே பிடிக்காது. தான் இல்லாத சமயங்களில் வேண்டா... வெறுப்பாய் ஏதோ சமைத்து வைப்பார். அதுவும் வாய்க்குள் வைக்க விலங்காது. அப்போது தான் யாரும் தன்னை சமைக்க சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணம். 

தனது திருமணம் வரை குடும்பத்தை அத்தையின் தாயார் நிர்வகித்தார் என்றும், பின்னர் மகன் வடிவேல் வீட்டிற்கு சென்று விட்டார் என்பதும் பின்னர் தெரியவந்தது. 

வடிவேல், அத்தை வசுமதியின் தம்பிதான்... தனது தம்பி பெண்ணை தனது மகனுக்கு மணம் முடிக்க வசுமதி ஆசைப்பட்டிருக்கிறாள். ஆனால் அத்தையின் குணம் தெரிந்த வடிவேலு தனது பெண்ணை தர மறுத்து விடவே வேறு வழியில்லாமல் பரத்திற்கு பூர்ணிமாவை மண முடித்தாராம். 

பூர்ணிமா... தாய், தந்தையை இழந்து அண்ணனின் தயவில் வளர்ந்தவள். அண்ணனுடன் வாழ்ந்த வாழ்க்கைதான் அவளது குளிர்காலம் என்றால்... அண்ணனுக்கு திருமணமாகி அண்ணி வந்ததும்... அவளுக்கு கோடை காலம் ஆரம்பமானது. பூமா... உண்மையிலேயே... பூமித்தாயை போல் பொறுமை காப்பவள். அண்ணியின் அடாவடித்தனத்தை பொறுத்துக் கொண்டாள். 

தன் அம்மாவின் நகைகளை போட்டு சீரும், சிறப்புமாய் அவளது அண்ணன் பிரபு... பூர்ணிமாவின் திருமணத்தை நடத்தி விட்டிருந்தான். 

புகுந்த வீட்டிலும் அண்ணியை போலவே, பூமாவிற்கு அத்தை அமைந்தாள். கணவரின் அன்பு கிடைத்தாலும் அதனை முழுமையாக பெறுவதற்கு பெரும் தடையாக இருந்த அத்தையுடன் அருகே வசித்த அவள் மகள் பபிதாவும் சேர்ந்து கொண்டாள். 

பபிதா வேலைக்குப் போனாலும் வேலை நேரம் போக மீதி நேரங்களில் தனது தாய் வீட்டிலேயே இருப்பாள். தன் தாயுடன் சேர்ந்து கொண்டு பூமாவின் நிம்மதியை பறிப்பாள். 

திருமணமாகி ஐந்து வருடங்கள்... குழந்தையில்லாமல் இருந்த பூமாவை... அத்தையும், அண்ணியும் சேர்ந்து கொண்டு பேசிய பேச்சுக்கள் கொஞ்சம் அல்ல. எல்லாம் சகித்துக் கொண்டு மௌனமாக இருந்து சமாளித்த பூமா கணவரிடம் அவர்களைப் பற்றி கூறவே மாட்டாள். 

இதுவே அவர்களுக்கு வசதியாகிப் போய் விட்டது. தன் எதிர்ப்பை புழு கூட நெளிந்து தெரிவிக்கும் அதைக்கூட செய்யாதது இவள் தவறுதான். குழந்தையின்மைக்கு இவள் காரணம் இல்லையென்றும் இவள் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவே பெண்கள் நல மருத்துவர் டாக்டர் இந்திரா கணேசன் தெரிவித்திருந்தார். 

பரத்திற்கு விந்தணு குறைபாடு இருந்ததால் செயற்கை கருவூட்டல் முறையில் தீர்வு என்பதை டாக்டர் உறுதிப்படுத்தினார். சிகிச்சையின் பலனாக ஸ்ரீகா பிறந்தாள். 

அத்தையும், அண்ணியும் கொடுக்கும்... வேலைகளை செய்ய முன்னிலும் இப்போது... இன்னும் பொறுமை கூடி விட்டது என்றே சொல்லலாம். தன் குழந்தை பிறந்த ஒரே வாரத்தில் மருத்துவமனையில் இருந்து நேராக கணவரின் வீட்டிற்கு வந்து விட்டாள். இதுவே அவளை அத்தை ஏளனமாக பார்க்க ஏதுவாயிற்று. 

பேறுகாலம் பார்க்கக்கூட பிறந்த வீட்டில் வக்கு இல்லை என்றாள் அத்தை வசுமதி. எந்த ஒரு ஒத்தாசையும் மருத்துவ மனைக்கு வந்து அவள் செய்தது இல்லை. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223260820
உன்னை காணாத கண்ணும்...

Read more from Sundari Murugan

Related to உன்னை காணாத கண்ணும்...

Related ebooks

Reviews for உன்னை காணாத கண்ணும்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன்னை காணாத கண்ணும்... - Sundari Murugan

    1

    வியர்வை பிடரியில் கசகசக்க... கண் விழித்தாள் பூமா. மின் விசிறி சுழலாமல் இருப்பதை பார்த்து... மின்சாரம் இல்லை என்பது புரிய... கையால் துழாவி ஜன்னலின் விளிம்பில் இருந்த கைப் பேசியை எடுத்து மணி பார்க்க காலை மணி ஐந்து!

    கட்டிலை விட்டு இறங்கியவள்... இந்த புழுக்கத்திலும் அயர்ந்து தூங்கும் கணவனை நினைத்து வியந்த வண்ணம்... அருகில் புதுமலராய் தூங்கும் தன் மகள் ஸ்ரீகாவை கைப்பேசி வெளிச்சத்தில்... பார்த்து நெகிழ்ந்தாள்...

    வாஷ்ரூம் போய் வரவும் தடைபட்ட மின்சாரம் வந்திருந்தது. மீண்டும் கணவரையும், குழந்தையையும் கண்ணுற்றவள்... புன்சிரிப்புடன் வெளியேறி முற்றம் பெருக்கி, தண்ணீர் தெளித்து ஒரு சிறிய கம்பி கோலமிட்டு வீட்டு உள்ளே நுழைய திரும்பியவள் வாசலில் தன் மாமியார் வசுமதி நிற்பதை கண்டாள்.

    என்ன... பூர்ணிமா தூக்கம் வரலையா...? எப்படி வரும். அப்பப்ப இந்த மின்சாரம் தடைபட்டு எழுப்பி விட்டுடுதே...! சரி... குழந்தை தூங்கும் போதே விட்டு வேலைகளை முடிச்சிடு என்றார்.

    பூமா... தனக்குள் சிரித்துக் கொண்டாள். இந்த அத்தைக்கு சமையலறைப் பக்கம் போவெதென்றாலே பிடிக்காது. தான் இல்லாத சமயங்களில் வேண்டா... வெறுப்பாய் ஏதோ சமைத்து வைப்பார். அதுவும் வாய்க்குள் வைக்க விலங்காது. அப்போது தான் யாரும் தன்னை சமைக்க சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணம்.

    தனது திருமணம் வரை குடும்பத்தை அத்தையின் தாயார் நிர்வகித்தார் என்றும், பின்னர் மகன் வடிவேல் வீட்டிற்கு சென்று விட்டார் என்பதும் பின்னர் தெரியவந்தது.

    வடிவேல், அத்தை வசுமதியின் தம்பிதான்... தனது தம்பி பெண்ணை தனது மகனுக்கு மணம் முடிக்க வசுமதி ஆசைப்பட்டிருக்கிறாள். ஆனால் அத்தையின் குணம் தெரிந்த வடிவேலு தனது பெண்ணை தர மறுத்து விடவே வேறு வழியில்லாமல் பரத்திற்கு பூர்ணிமாவை மண முடித்தாராம்.

    பூர்ணிமா... தாய், தந்தையை இழந்து அண்ணனின் தயவில் வளர்ந்தவள். அண்ணனுடன் வாழ்ந்த வாழ்க்கைதான் அவளது குளிர்காலம் என்றால்... அண்ணனுக்கு திருமணமாகி அண்ணி வந்ததும்... அவளுக்கு கோடை காலம் ஆரம்பமானது. பூமா... உண்மையிலேயே... பூமித்தாயை போல் பொறுமை காப்பவள். அண்ணியின் அடாவடித்தனத்தை பொறுத்துக் கொண்டாள்.

    தன் அம்மாவின் நகைகளை போட்டு சீரும், சிறப்புமாய் அவளது அண்ணன் பிரபு... பூர்ணிமாவின் திருமணத்தை நடத்தி விட்டிருந்தான்.

    புகுந்த வீட்டிலும் அண்ணியை போலவே, பூமாவிற்கு அத்தை அமைந்தாள். கணவரின் அன்பு கிடைத்தாலும் அதனை முழுமையாக பெறுவதற்கு பெரும் தடையாக இருந்த அத்தையுடன் அருகே வசித்த அவள் மகள் பபிதாவும் சேர்ந்து கொண்டாள்.

    பபிதா வேலைக்குப் போனாலும் வேலை நேரம் போக மீதி நேரங்களில் தனது தாய் வீட்டிலேயே இருப்பாள். தன் தாயுடன் சேர்ந்து கொண்டு பூமாவின் நிம்மதியை பறிப்பாள்.

    திருமணமாகி ஐந்து வருடங்கள்... குழந்தையில்லாமல் இருந்த பூமாவை... அத்தையும், அண்ணியும் சேர்ந்து கொண்டு பேசிய பேச்சுக்கள் கொஞ்சம் அல்ல. எல்லாம் சகித்துக் கொண்டு மௌனமாக இருந்து சமாளித்த பூமா கணவரிடம் அவர்களைப் பற்றி கூறவே மாட்டாள்.

    இதுவே அவர்களுக்கு வசதியாகிப் போய் விட்டது. தன் எதிர்ப்பை புழு கூட நெளிந்து தெரிவிக்கும் அதைக்கூட செய்யாதது இவள் தவறுதான். குழந்தையின்மைக்கு இவள் காரணம் இல்லையென்றும் இவள் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவே பெண்கள் நல மருத்துவர் டாக்டர் இந்திரா கணேசன் தெரிவித்திருந்தார்.

    பரத்திற்கு விந்தணு குறைபாடு இருந்ததால் செயற்கை கருவூட்டல் முறையில் தீர்வு என்பதை டாக்டர் உறுதிப்படுத்தினார். சிகிச்சையின் பலனாக ஸ்ரீகா பிறந்தாள்.

    அத்தையும், அண்ணியும் கொடுக்கும்... வேலைகளை செய்ய முன்னிலும் இப்போது... இன்னும் பொறுமை கூடி விட்டது என்றே சொல்லலாம். தன் குழந்தை பிறந்த ஒரே வாரத்தில் மருத்துவமனையில் இருந்து நேராக கணவரின் வீட்டிற்கு வந்து விட்டாள். இதுவே அவளை அத்தை ஏளனமாக பார்க்க ஏதுவாயிற்று.

    பேறுகாலம் பார்க்கக்கூட பிறந்த வீட்டில் வக்கு இல்லை என்றாள் அத்தை வசுமதி. எந்த ஒரு ஒத்தாசையும் மருத்துவ மனைக்கு வந்து அவள் செய்தது இல்லை.

    கடவுள் அருளால் பூமாவிற்கு சுகப்பிரசவம்... பக்கத்து வீட்டு பார்வதி பாட்டி இரண்டு நாட்களாய் மருத்துவமனையில் இருந்து உதவி செய்தார்.

    மாமியாரும், நாத்தனாரும் குழந்தை அழுதால் கூட அதனை தூக்குவது கிடையாது. இதில் இவளை நாங்கள்தான் பார்த்துக் கொள்கிறோம் என்று வாயாலேயே வடை சுட்டனர்.

    அன்று நடந்த அந்த நினைவுகளை நினைத்துப் பார்த்த பூமாவிற்கு கண்கள் கலங்கியது. விரக்தியில் சிரிப்பும் வந்தது.

    இன்று தான் எப்படி... இப்படி இருக்கிறோம்.

    குடும்பத்தை பிரிந்து கணவரை பிரிந்து பைத்தியம் பிடித்தவள் போல் வாய் விட்டு சிரித்தாள்.

    2

    "என்னப்பா பரத்! அலுவலகத்தை விட்டு. வீட்டுக்கு போக மனம் இல்லையா...?" என்றார் அக்கவுண்டன்ட் ஆறுமுகம்.

    அப்போதுதான்... சுற்றும் முற்றும் பார்த்த பரத். ‘அடடா அனைவருமே போய் அலுவலகமே வெறிச்சோடி கிடக்கிறதே...!’ என்று நினைத்தவன் தன்னுடைய தலையில் தட்டிக் கொண்டு தனது கேபினில் கிடந்தவற்றை எடுத்து ஒழுங்கு படுத்தி விட்டு தனது பேக்கை மாட்டியபடி வெளியே வந்தான்.

    வண்டியை உசுப்பி கிளப்பியவன் வீட்டிற்கு போக மனமில்லாது தன் மனம் போன போக்கில் வண்டியை ஓட்டினான். தன்னிஷ்டபடி வண்டியை ஓட்டியவன் கர்மவீரர் பூங்காவின் முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்து... ஒரு வேப்பர நிழலில் கிடந்த சிமெண்ட் பெஞ்சில் போய் ஆசுவாசமாய் அமர்ந்தான். அப்போது அவனது காலுக்கருகில் ஒரு பந்து வந்து விழ... அதனை தன் கையில் எடுத்தான். அப்போது அங்கே ஒரு குழந்தை வரவும். ஹேய் ஹேன்ஸம் என்ன தேடறீங்க என்று ஆசையாக விசாரித்தான்.

    பந்து என்று கூற குழந்தை கையில் பந்தை கொடுத்து.. முதுகை தட்டிக் கொடுக்க... பந்து கையில் கிடைத்ததும் குழந்தை குதூகலத்துடன் பறந்தோடியது தன் தந்தையை நோக்கி.

    சட்டென்று தனது குழந்தை ஸ்ரீகா நினைவு வந்தது. குட்டி. உன்னை பிரிந்து வாழும் இந்த நாட்கள் எல்லாமே எனக்கு நரகம் தான். எங்கே இருக்கீங்கடா... நீயும், அம்மாவும் எப்படிடா... என்னை மறந்தீங்க?

    Enjoying the preview?
    Page 1 of 1