Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இதயம் எடுத்த முடிவு!
இதயம் எடுத்த முடிவு!
இதயம் எடுத்த முடிவு!
Ebook135 pages51 minutes

இதயம் எடுத்த முடிவு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'பெண்கள் வீட்டின் கண்கள்' என்பார்கள் ஏனெனில் புகுந்த தனது வீட்டினை கண்களாய் பாவித்தனர்... அதனால்தான், நம் முன்னோர்கள் அப்படி கூறினார்கள்... அதற்கு விதி விலக்கான பெண்களும் உண்டு.

பெரும்பாலான கதைகளில் ஆண்கள்தான் பெண்களைவஞ்சிப்பார்கள், ஆனால், இக்கதையில் வரும் நாயகன் ஒரு பெண்ணாலும், அவளது குடும்பத்தாலும் படும்பாடுதான் இக்கதை... தனது "நான்கு தங்கைகளை திருமணம் செய்து கொடுத்த பின்னரே, தனக்கு ஒரு அழகான பெண் மனைவியாக வேண்டும் என்று அடம்பிடித்து... ஒரு பெண்ணை மணக்கிறான்... ஆனால், அந்தப் பெண்ணோ அவனிடம் இருக்கும் பணத்துக்காக மணக்கிறாள். தனது தாய், தந்தையுடன் சேர்ந்து கொண்டு அவனுக்கு, துரோகமும், வஞ்சகமும் செய்கிறாள். பரிதாபத்துக்குரிய... அந்த நாயகன்... அவளது பிடியில் இருந்து மீண்டானா...? பாலைவனமான அவனது 'வாழ்வு' வளம் பெறுமா... என்பதை வாசியுங்கள், விமர்சியுங்கள்...

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223141433
இதயம் எடுத்த முடிவு!

Read more from Sundari Murugan

Related to இதயம் எடுத்த முடிவு!

Related ebooks

Reviews for இதயம் எடுத்த முடிவு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இதயம் எடுத்த முடிவு! - Sundari Murugan

    1

    "எனக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு" என்று ஒரு வாடிக்கையாளர் கேட்க வேகமாக ஒரு கிலோ பார்சலை எடுத்துக் கொடுத்தான் பாலு என்ற பாலசுந்தரம். கடையில் கூட்டம் சேர்ந்திருந்தது. ஒவ்வொருவருக்கும் தேவையான பொருட்களை விற்பதில் தன் ஊழியர்களுடன் பம்பரமாய் சுழன்று வியாபாரத்தில் மும்முரமாய் இருந்தான்.

    கடையில் இரண்டு மூன்று எடுபிடி ஆட்கள் இருந்தாலும் கல்லா பெட்டியில் ‘தேமே’ என்று உட்காராமல் தானே வியாபாரத்தில் ஆர்வமாக இருப்பான்.

    கூட்டம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்த சமயம், வீட்டுக்கு தேவையானதை எடுத்து, கடையில் பார்சல் போடும் பெண் ஊழியரிடம் கொடுத்து அனுப்பினான்.

    இரண்டு பெண் ஊழியர்கள் பார்சல் போடவும், கடையை சுத்தம் செய்யவும், ஒரு ஆண் ஊழியர் மூட்டைகளை தூக்கி அடுக்கவும் வேலைக்கு வைத்திருந்தான்.

    வீட்டுக்கு தேவையான பொருட்களை கொடுக்கச் சென்ற பெண் ஊழியர் வியர்க்க... விறுவிறுக்க ஓடி வந்து... ஐயா வீட்ல உங்கம்மாவுக்கு மூச்சு திணறலாம் உங்களை உடனே, வரச் சொன்னாங்க என்று சொல்லவும்... சரி... இன்று எல்லோரும் வீட்டிற்கு போங்க என்றவன்... வேகமாக கடையை அடைத்து பூட்டி வீட்டிற்கு தனது இரு சக்க்ர வாகனத்தில் விரைந்தான்.

    அங்கே இரு தங்கைகளும் அண்ணா அம்மாவுக்கு... என்று அழ ஆரம்பிக்கவும்... ஏய்... பாலா ஆம்புலன்சுக்கு போன் போட்டியா? என்று வினாவ... ஆமாம்ண்ணே... என்ற தங்கைகளிடம்.

    சரி... அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது அழாதீங்க என்றான்.

    இல்லேண்ணே…! அம்மா ரொம்ப வலியில் துடிக்கிறாங்க.

    அம்மா என்று அம்மாவின் அருகில் பாலு சென்றதும்.

    ஐயா... சுந்தரம் தங்கச்சிங்களை உன் பொறுப்புல... விட்டுட்டு... போறேன்யா! கரை சேர்த்திடுப்பா என்று திக்கி, திணறி சொல்லவும்...

    பேசாதே...! உனக்கு ஒண்ணும் ஆகாது என்றவன் தன் தாயை தூக்கி மடியில் போடவும் அவனது மடியிலேயே உயிரை விட்டிருந்தாள் அந்த மூதாட்டி.

    அம்மா... என்று தங்கைகளுடன் சேர்ந்து அழுதான் பாலு.

    தனது அண்ணன் மற்றும் திருமணமான இரண்டு தங்கைகளுக்கும் போன் போட்டு சொல்லவும். கேட்டதும் பதறி துடித்து வந்து சேர்ந்தார்கள். சொந்த, பந்தங்கள் புடைசூழ ஆறு பிள்ளைகளை பத்து மாதம் சுமந்து பெற்றவளின் உடல் ஊர்வலமாய் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    விசேஷம் முடிந்ததும், அண்ணனிடம், இருதங்கைகளும் வந்து,

    "அண்ணா... கணவர்களின் வேலை, குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் எனவே, நாங்கள் கிளம்பறோம். அண்ணா... தங்கைகள்தான் பாவம்... அம்மா இல்லாமல் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள். நேரம் கிடைக்கும் போது வருகிறோம் என்று கிளம்பினார்கள். அண்ணன் கணேஷும், தங்கைகள் நீலாவும், கலாவும் சின்னத் தங்கைகளான பாலாவுக்கும், மாலாவுக்கும் தேறுதல் சொல்லி அவரவர் குடும்பங்களுடன் புறப்பட்டனர்.

    தாய் மாமா துரை வந்து ஏம்பா, பாலசுந்தரம்! இப்படியே இருந்தா ஆச்சா... இன்றாவது கடையை திறந்து வியாபாரத்தைப் பாரு. ஐந்து வருஷத்திற்கு முன்பு அப்பா போயிட்டாரு... அப்பவே குடும்பத்தை கவனிச்சு பொறுப்பா பார்த்துகிட்டவன் நீ...! இப்போ... அம்மாவும் போய் சேர்ந்திட்டா... இனிமேதான் நீ இன்னும் பொறுப்பா தங்கைகளை பார்த்து கரை சேர்க்கணும் என்று ஆறுதல் கூறி தேற்றினார்.

    மூத்த தங்கை நீலாவுக்கு அவர்கள் சொந்த அத்தை பையன் பாண்டியனை மணமுடித்து கொடுத்திருந்தான்... அவர்களும் மளிகை கடைதான். இரண்டாவது தங்கை கலாவை உவரியில் சொந்த விவசாயம் பார்க்கும் குமரேசனுக்கு திருமணம் செய்து கொடுத்தாயிற்று.

    மூத்த அண்ணன் கணேஷ் பெட்டிக்கடையை வைத்திருந்தான் திருமணம் முடிந்ததும் தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள மட்டுமே அவனால் முடிந்தது.

    இதனால் சின்ன தங்கைகள் திருமணம் முடிந்த பிறகே தனக்கு திருமணம் என்பதில் உறுதியாக இருந்தான் பாலு. இரு தங்கைகளின் திருமணங்கள் பெரும் சுமை தான்! இருவரையும் கரையேற்றினால்தான் பெரிய பாரம் தன் தலையில் இருந்து இறங்கும் என்று எண்ணினான்.

    இப்போதெல்லாம் மாப்பிள்ளை பார்ப்பது, பெண் பார்ப்பது கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல சிரமமாக இருக்கிறது. அதுவும் சுமாராக உள்ள தன் தங்கைகளை கரை சேர்ப்பது... அதிகம் சிரமப்பட வேண்டும். மூத்த தங்கைகள் கணவரிடமும், தனது மாமாவிடமும் சொல்லி வைத்திருந்தான் பாலாவுக்கு ஏற்ற வரன் அமைந்தால் பாருங்கள் என்று.

    தங்கை பாலாவுக்கு இருபத்தி ஐந்து கடந்து கொண்டிருக்கிறது. மாலாவுக்கு இருபத்து மூன்று. நான்கு தங்கைகளுக்கும், மூத்தவன் பாலசுந்தரம். அவனுக்கு இப்பவே முப்பத்தி இரண்டு. கடைக்குட்டிகளான இரண்டு தங்கைகளுக்கும் முடித்து இவன் திருமணத்துக்கு பெண் தேடும் போது அரை கிழடு ஆகி விடுவான்.

    எனவேதான், இரு தங்கைகளும் அண்ணனை முதலில் திருமணம் செய்ய வற்புறுத்தினர்... ஆனால் அவனோ... ‘எல்லாத் தொல்லைகளும் என்னோடு போகட்டும். எனக்கு மனைவியாக வருபவள் என்னோடு சேர்ந்து இந்த குடும்பத்து சுமைகளை சுமக்காமல் வாழணும். எனவே, இந்த இரு தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகுதான் தனக்கு திருமணம்’ என்பதில் உறுதியாக இருந்தான்.

    கொஞ்சமாவது தாய் பேச்சைக் கேட்டு நடந்தான் இந்த அண்ணன் இப்போது அந்தத் தாயையும் பறிகொடுத்து முழுவதும் அண்ணனையே சார்ந்திருக்கும் நிலை...

    பாலசுந்தரம்... தங்கைகள் மீது பாசமாக இருந்த போதிலும் அப்பப்போ குதர்க்கமாக பேசி தங்கைகள் மனதை புண்படுத்துவான்... நான் இல்லையெனில் உங்களுக்கு ஒரு நாதியும் கிடையாது என்று சொல்லி சமயத்தில் அழ வைப்பான்.

    ஆனால், சாப்பாட்டிற்கோ துணி, மணிக்கோ எந்த ஒரு குறையும் இல்லாது பார்த்துக் கொண்டான். எனவே பாலாவும், மாலாவும் அண்ணனிடம் மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டனர்.

    அதே போல் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர்... மிகவும் பாசமுடன்... பிரியமுடன் இருந்தனர்.

    அதிலும் ஒருத்தி பிரியும் நேரம் வந்தது.

    2

    ஊரில் உள்ள ஆறு, குளம், கிணறெல்லாம் தண்ணீர் இல்லாமல் வறண்டிருந்தாலும் சுவாதி வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் மட்டும் என்றைக்கும் தண்ணீர் வற்றியதே இல்லை.

    முன்னாடி, ஓடு வேய்ந்த திண்ணை வைத்த பழைய பாணி வீடு பின் பக்கம் கிணறு சிறிய தோட்டம் என ரம்யமாக இருந்தது. எல்லாம் சுவாதியின் கைங்கர்யம், பள்ளிப்படிப்பை உள்ளூரில் படித்து முடித்திருந்த அவளால் கல்லூரி செல்ல மனமிருந்தும் அண்ணனுக்கு மனமில்லாது போனதால் அண்ணிக்கு எடுபிடியாய் இருக்க நேர்ந்தது. அதுவும் வாய் பேச முடியாத சரியாக காதும் கேளாத ஊனம் அவளுக்கு.

    வீட்டு வேலைகளை செய்வது, அண்ணன் - அண்ணிக்கு எடுபிடி வேலை... இதோடு நன்றாக துணிகளையும் தைத்துக் கொடுக்க கற்றிருந்தாள். எனவே, நன்கு பழக்கமான பெண்கள் அவளிடம் தங்களது துணிகளை தைக்க கொடுக்கிறார்கள். அதில் கிடைக்கும் பணத்தைக் கூட அண்ணி ஆனந்தி பறித்துக் கொள்வாள்... அண்ணனுக்கு ஒரே ஒரு மகன் அவன் பனிரெண்டு முடித்து இந்த வருடம் கல்லூரிக்கு செல்கிறான். தன் தாய் அலமேலு இருந்த போது கொஞ்சமாவது தன்னை மனுசியாய் மதித்தாள் அண்ணி! அம்மா மறைந்த இந்த இரண்டு வருடத்தில் தன்னை ஒரு பொருட்டாய் நினைப்பதே இல்லை.

    அம்மாவும் இருந்த வரை எவ்வளவோ முயற்சி செய்தாள் தன் மகளை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்து விட, ம்கூம், ஒன்றும் முடியவில்லை. வாய் பேச முடியாத, காதும் கேளாத சுவாதியை கட்டிக் கொள்ள எந்த மாப்பிள்ளை தேடி வருவான்?

    ஆனால் சுவாதி பிறர் வாயசைப்பதை வைத்தே என்ன பேசுகிறார்கள் என ஊகித்துக் கொள்வாள் மேலும், எழுதி காண்பித்தால் படித்து புரிந்து கொள்வாள்.

    பெண்களுக்கு ஜாக்கெட்டில் ‘ஸ்டோன் ஒர்க்’ வைத்து மாடலாக தைத்து கொடுத்தாள். அதில் தனது கற்பனை

    Enjoying the preview?
    Page 1 of 1