Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இதயம் துடிக்க மறந்ததேன்..?
இதயம் துடிக்க மறந்ததேன்..?
இதயம் துடிக்க மறந்ததேன்..?
Ebook130 pages50 minutes

இதயம் துடிக்க மறந்ததேன்..?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலிக்கும் இளைஞர்கள், தான் காதலித்த பெண்ணை மனைவியாக கரம் பிடித்ததும் சாதித்துவிட்டதாக நினைத்து விடுகிறார்கள். தான் அவளை நன்றாக வைத்திருக்கிறோம் என்று நம்பியிராமல் தன் வீட்டு மனிதர்கள் அவளிடம் நன்றாக இருக்கிறார்களா? அவளை எப்படி நடத்துகிறார்கள்? என்பதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்பதைச் சொல்வதே இந்தக் கதையின் ஓட்டம். இதனை படித்துவிட்டு குறைநிறைகளை விமர்சியுங்கள்

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223264583
இதயம் துடிக்க மறந்ததேன்..?

Read more from Sundari Murugan

Related to இதயம் துடிக்க மறந்ததேன்..?

Related ebooks

Reviews for இதயம் துடிக்க மறந்ததேன்..?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இதயம் துடிக்க மறந்ததேன்..? - Sundari Murugan

    1

    இதமான குளிரில் நல்ல தூக்கத்தில் இருந்தாள் சங்கரி. தூரத்தில் ஒரு கோயிலில் ஒலித்த மணியின் ஓசை ஐந்து முறை அடித்து மணி ஐந்து என பறைசாற்றியது.

    லேசாக கண்களை திறக்க முயற்சித்தாள் கண்களை திறந்தாலும் உடல் இந்த குளிருக்கு... இன்னும் கொஞ்சம் படுத்திரேன் என்று கெஞ்சியது.

    அதனை பொருட்படுத்தாது படுக்கையில் இருந்து எழுந்ததும் தனது உள்ளங்கைகளை தேய்த்து கண்களில் ஒற்றியவள் மெதுவாக படுக்கையை விட்டு இறங்கி குளியலறைக்குள் நுழைந்தாள்.

    பதினைந்தே நிமிடத்தில் வெளியே வந்தவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.

    நேற்றே அண்ணி சுகுணா என்னென்ன சமையல் செய்ய வேண்டும் என்ற மெனுவை கொடுத்திருந்தாள். அதன்படி சமையலை ஆரம்பித்து காலை ஏழு மணிக்குள் சமையலை முடிக்கவும்...

    பால்காரர் வர அனைவருக்கும் காபி போட்டு ரெடியாக எடுத்து வைக்க அப்போது அம்மா அங்கே வந்தாள்.

    என்னடி சங்கரி இந்தக் குளிரில் காலையில் எழுந்து எல்லாத்தையும் தனியாவே பண்ணியிருக்கியே என்னை கொஞ்சம் எழுப்பி விட்டிருந்தா காய்கறியையாவது நறுக்கி தந்திருப்பேன்ல?

    இல்லம்மா... நீயே ஆஸ்துமா இழுப்புல அவஸ்தை பட்டுட்டிருக்கே இந்த குளிர்ல எழுப்புனா இருமல் உன்னைக் கொல்லும்.

    அதுக்கில்லைடி... என்று இரும ஆரம்பித்தாள்...

    ஐயோ... அம்மா... சொன்னேல்ல... இந்தா இந்தக் காபியை முதல்ல குடி! என்று ஒரு டம்ளரில் ஊற்றி தன் தாய் சரசுவிடம் தர அதனை கையில் வாங்கி தன் வாயில் வைக்கவும்...

    என்ன நடக்குது இங்கே? என்று அகங்கார குரல் ஒலிக்க...

    அதிர்ச்சியில் தன் கையில் இருந்த டம்ளரை தவறவிட்டாள் சரசு... வாசலில் ஆணவம் கலந்த அதிகாரத்துடன் நின்றிருந்த சுகுணா என்ன இது! நீங்க குடிச்ச எச்சிலைதான் தினமும் எங்களுக்கு தருவீங்க போல...

    அண்ணி... எதுக்கு இப்படி பேசறீங்க? அம்மா அவங்க டம்ளர்லதான் குடிக்கிறாங்க அது எப்படி எச்சிலாகும்...

    ம்ம்... என்னடி கொழுப்பா வாய்... ரொம்ப நீளுது?

    ம்க்கும் உன்னை விடவா? இருமல் வந்தது...

    என்னங்க... இங்க வாங்க என்னமோ எங்க அம்மாவுக்கும், தங்கைக்கும் கையை வாயில வைச்சாக்கூட கடிக்கத் தெரியாதுன்னு சொல்லுவீங்க அப்பப்பா... என்ன பேச்சு பேசறாங்க...?

    என்ன சுகுணா காலங்காத்தாலே உன் தர்பாரை ஆரம்பிச்சிட்டியா? சங்கரியின் அண்ணன் சந்தானம் எரிச்சலுடன் எழுந்து வந்தான்...

    உங்க அம்மா...

    என்னம்மா செஞ்சே... காலங்காத்தாலே... ஆரம்பிச்சாச்சா... ச்சே...

    அண்ணா! அம்மாவுக்கு ரொம்ப இருமலா இருந்திச்சி அதான் ஒரு டம்ளர் காபியை ஊற்றிக் கொடுத்தேன்... இதுக்குத்தான் அண்ணி...

    என்னடி... ஊமை மாதிரி இருந்துகிட்டு உங்கண்ணன்கிட்டே என்னை போட்டுக் கொடுக்கறீயா அவரை எனக்கெதிரா சிண்டு முடியுறே

    இருமலின் ஊடே... இ...தோ... பாருப்பா இப்படிதான்... ஒரு சின்ன விசயத்தையும் ஊதி பெரிசாக்கிடறா தாங்க முடியாமல் இரும...

    சரிம்மா...! அவதான் சண்டைக்கு வர்றா... உனக்கு முடியல இல்ல... கொஞ்சம் பேசாம இருக்கக்கூடாதா?

    டேய்... அவகிட்டே இதைச் சொல்லாம எங்களையே அடக்கு...

    இதோ பாருங்க இது நான் கட்டிய வீடு என் சொல்படி நடக்கறதா இருந்தா இங்கே இருங்க! பிடிக்காதவங்க வீட்டை விட்டு போயிடலாம் என்றான் மகன்.

    ஏண்டி... இது என் வீடு... என் புருஷன் கட்டிய பழைய வீட்டைத்தான் இடிச்சுக் கட்டி இருக்கீங்க என்றாள் இருமிய படியே...

    அம்மா கொஞ்சம் சும்மா இரேன் என்றாள் சங்கரி

    ம்க்கும்... என் புருஷன் லோன் போட்டு கட்டிய வீடு இது... என்றாள் சுகுணா.

    யாரோட நிலத்திலே கட்டினான்? உன் புருஷன்னா வானத்தில் இருந்தா குதிச்சான்...? என்னோட வயிற்றில் வந்தவன் தானே என்றாள் இருமியபடியே...

    ஏம்மா... அவதான் பேசுறான்னா நீயும் இப்படி சரிக்கு சமமா பேசிகிட்டு...

    ஆமாம்பா... உன்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சதும் வேலை கிடைச்சுது! ஆனா கையோட இந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கிறே வீட்ல அம்மா, தங்கச்சி இருக்காங்களேன்னு ஒரு வார்த்தை கேட்போம்னு தோணிச்சா... உனக்கு? உன் தங்கை என்ன பண்ணிட்டா? ஒரு காபி குடிக்க கூட இந்த வீட்ல உரிமை இல்லை? அதை தட்டி கேட்க உனக்கு துப்பு இருக்கா? எப்பபாரு நீங்க பணிஞ்சு போங்கன்னு எங்களையே குறை சொல்லிட்டு... இந்த பெண்ணை நெனைச்சிதான் அதிகமா... எனக்கு கவலை... நான் வாழ்ந்து முடிச்சாச்சு...!

    "அம்மா... பேசாம ரூமுக்குள்ளே... போம்மா என்ற மகள் சங்கரியிடம்

    விடுடி! எத்தனை நாள்தான் இப்படியே பேசாமலே இருக்கிறது... இது வந்து ரெண்டு வருஷம் ஆகுது... சமையலறையில் போய் ஒரு காபி போட்டிருப்பாளா...? எப்பபாரு குற்றம் சொல்லறதும், குறைசொல்றதும்... விடாமல் இருமல் தொடங்க... சரசு திடீரென மயங்கி சரிந்தாள்.

    அம்மா... என்றலறியபடி சங்கரி அருகில் வர,

    அம்மா...! என்று சந்தானமும் பதற... அங்கே எதையும் காணாது உயிரற்ற சடலமாகக் கிடந்தாள் சரசு. ஒரே ஆதரவான சங்கரி கதறினாள். பயந்து போன சந்தானமும் அம்மா! என்று அழுதவாறு அலற உண்மையிலேயே உயிர் போயிருந்தது.

    ஆயிற்று தனக்கென்று ஆதரவாய் இருந்த தன் தாயை பிரிந்து இதோ ஆறு மாதங்கள் ஓடியேப் போய்விட்டது...

    அண்ணி சுகுணா காலால் ஏவும் வேலைகளை தலையால் செய்து முடித்தாள் சங்கரி. இதனால் சண்டை, சச்சரவின்றி அமைதியாய் நாட்கள் நகர்ந்தன.

    வீட்டில் இருக்கும் நேரத்தை விட அவள் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் நேரமே அவளுக்கு ஆறுதலாக இருக்கும் ஒரு கார்மெண்ட் ஆலையில் கணினி வேலை செய்து வந்தாள் சங்கரி.

    அவள் வேலை முடிந்து செல்வி, கலாவுடன் வெளியே வந்தாள். தோழிகள் இருவரும் வேறு தெரு என்பதால் அவர்கள் இருவரும் எப்போதும் இணை பிரியாது இருப்பர்... ஆனால் சங்கரி அதிகம் யாரிடமும் ஒட்ட மாட்டாள். அப்படி இருப்பதால்தான் அன்று தனியாக வெளியே வரும் போது அந்த சம்பவம் நடந்தது.

    தூரத்தில் ஒருவன் ஒரு பெண்மணியின் கழுத்து சங்கிலியை திருடி வேகமாக வண்டியில் ஏறி வருவது தெரிந்தது. அவனது முகத்தை அடையாளம் காணலாம் என்றால் ஹெல்மெட் அணிந்திருந்தான்... ஐயோ... கண் முன்னாடியே ஒரு திருடன் போகிறான் எதுவும் அவனை செய்ய முடியலேயே கடவுளே என்று அவள் வேண்டவும்... அந்த வண்டியின் குறுக்கே ஒரு நாய் ஓட நிலை தடுமாறி நாய் மீது வண்டியை ஏற்றி எகிறி விழுந்தான் அடிப்பட்ட வலியில் ‘லொள்’ ‘லொள்’ என குரைத்தபடி ஓட அதற்குள் துரத்திய கும்பல் நெருங்கவும் வண்டியை அப்படியே போட்டுவிட்டு ஓடினான் திருடன்

    ஒரு சந்தில் திரும்ப அங்கே காக்கி உடையில் காவலர் இருவர் வரவும்... அதிர்ந்த திருடன் கையில் இருந்த சங்கிலியை அங்கே ஒருவன் கைபேசியில் பேசிக் கொண்டிருக்க அவனது கையில் திருடிய தங்கச் சங்கிலியை திணித்து விட்டு ஒரு கட்டை மதிலை தாண்டி மின்னலென ஓடி மறைந்தான்.

    அந்தக் கும்பல் கையில் செயினுடன் நின்ற அந்த இளைஞனை சுற்றி வளைக்க... அந்த இளைஞன் என்ன ஏது என்று உணரும் முன்,

    ஏன்டா திருட்டு நாயே! என்று அந்தக் கும்பல் அவன் மேல் பாய்ந்தது.

    இரண்டு காவலர்களும் இங்கே என்ன கலாட்டா என்று கும்பலை விலக்கி விட அந்த இளைஞன் அடி வாங்கிய நிலையில் என்ன நடந்தது என்று தெரியாமல் பரிதாபமாக நின்றான்.

    ஏன்யா எதுக்காக இவனைப் போட்டு அடிக்கிறீங்க

    "சார்...

    Enjoying the preview?
    Page 1 of 1