Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aarambamaanathu Puthiya Thisai
Aarambamaanathu Puthiya Thisai
Aarambamaanathu Puthiya Thisai
Ebook98 pages26 minutes

Aarambamaanathu Puthiya Thisai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Sajitha Rajan
Languageதமிழ்
Release dateNov 16, 2020
ISBN9781043466640
Aarambamaanathu Puthiya Thisai

Read more from Sajitha Rajan

Related to Aarambamaanathu Puthiya Thisai

Related ebooks

Related categories

Reviews for Aarambamaanathu Puthiya Thisai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aarambamaanathu Puthiya Thisai - Sajitha Rajan

    13

    ஆசிரியர் அறை

    என் இனிய வாசகர்களே...

    உங்கள் ஜீயேவின் அன்பு வணக்கம்.

    கொரோனா என்ற கொடிய நோய் கொஞ்சம் கொஞ்சமாக தேய்பிறையாகி வருகிறது. இது மீண்டும் வளர்பிறை ஆகாமல் பார்த்துக் கொள்ள நாம்தான் முயற்சிக்க வேண்டும்.

    திரைப்பட திரை அரங்குகள் திறந்து விட்டாலும் தைரியமாகச் சென்று பார்க்க மனம் வரவில்லை. மேலும் இந்த ஊரடங்குக் காலத்தில் வெளியே எங்கேயும் போக முடியாமல் வீட்டிலேயே இருந்ததுடன் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்கப் பழகிக் கொண்டார்கள்.

    இதனால் மக்களிடம் தியேட்டரில் சென்று பார்க்கும் வழக்கம் குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

    அதேநேரம் திரைப் படங்கள் திரையிடப்படும் ஓடிடி தளங்கள் ஆரம் பத்தில் அமேசான், நெட் பிளிக்ஸ் என இருந்தது. இரண்டும் சந்தா கட்டி ஏராளமான படம் பார்த் தார்கள். இப்போது மூக்குத்தி அம்மன் படம் ம்தினி + ஹாட்ஸ்டாரில் வருகிறது. இப்படி தனித்தனி ஓடிடி தளங்களில் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினால் நம்மை அறியாமல் செலவு அதிகமாகும்.

    உலக நாயகன் தொகுத்தளிக்கும் பிக்பாஸ் சீசன் நாலு... ஆரம்பத்தில் கொஞ்சம் சுமார் ரகமாக இருந்தது. போகப்போக அதில் மொக்கப்போர்... சாரி, அக்கப்போர்களை மக்கள் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

    இதனால் மற்ற சேனல்களின் பார்வையாளர்கள் குறையத் தொடங்கி உள்ளார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பிக்பாஸ் ஒரு தொலைக்காட்சி கொரோனோவாக உள்ளது.

    இந்த முறை தீபாவளி அமைதியாகச் சென்றுவிட்டது. நண்பர்கள், உறவினர்களுடன் தீபாவளி வாழ்த்து பரிமாறிக் கொள்ள இயலாத மனநிலையில் தீபாவளி. நாம் வாழ்த்துச் சொல்லுவோம். அவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டு இருந்தால் பரவாயில்லை. ஒருவேளை ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி கஷ்ட சூழ்நிலையில் இருந் தால்... அவர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகும்.

    நான் பொதுவாகவே தீபாவளி, பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்லும் பழக்கம் இல்லை. இதற்கு முக்கியக் காரணம் எனக்கு நட்பு வட்டம் மிகப் பெரியது. இதில் எத்தனை நட்புகளுக்குச் சொல்ல முடியும்...?

    எனக்கு நிறைய வாழ்த்துகள் நேரடியாகவும், செல்போன் மூலமாகவும்,முகநூல், வாட்ஸ் அப், மெசஞ்சரில் வரும். வரும் அனைத்து வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்து விடுவேன்.

    என்றும்

    அதே அன்புடன்

    அசோகனின் ஆத்திச்சூடி

    பிக் பாஸ் - 4

    அக்கப்போரின் சொர்க்கபுரி!

    ஆளுக்கு ஆளு வைக்கறாங்க ஆப்பு!

    இந்த வாரம் யாரு... திக் திக் திக்!

    ஈரான் ஈராக் போல் உள்வீட்டு சண்டை!

    உலக நாயகரின் உன்னத சிறப்பு!

    ஊருபேரு இல்லாதவங்க உலக புகழ்!

    எடுபடாதவர்கள் விடுபடப்படுவார்கள்!

    ஏத்தங்கள் கொண்டவர்க்கும் மாற்றம் வரும்!

    ஐயமில்லை ஷிவானிக்கு வாய்ப்பு வரும்!

    ஒரே டவுட் ரியலா... ரிகர்சலா.?

    ஓவர் பில்டப்புகள் ஓரம் கட்டப்படும்!

    ஔ பியுட்டிஃபுல் அரெஞ்மெண்ட்ஸ்!

    ஃக்கப்போர் விஷயம் பக்காஜோரு!

    ஆராம்பமானது புதிய திசை

    1

    மேகமலையை நோக்கி, இருபுறமும் விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்திருந்த மரங்களால் சூழப்பட்டிருந்த ரோட்டில் பயணித்துக் கொண்டிருந்தது இன்ஸ்பெக்டர் வெற்றியின் கார்.

    வெற்றிமாறனைப் பற்றி சொல்ல வேண்டுமானால் - ஆறடி உயரம், சாக்லெட் பிரவுன் நிறம், கட்டுக்கோப்பான உடல்.காக்கி யூனிபார்மை போட்டுவிட்டு தன் புல்லட்டில் சென்றால் ரோட்டில் செல்லும் இளம்பெண்களின் கண்கள் ஒரு நிமிடமாவது வெற்றியை பார்த்து ரசித்துவிட்டுதான் திரும்பும். தற்போது ஒரு வார காலத்திற்கு காக்கிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தன் காதல் மனைவியுடன் மேகமலையில் இருந்த பாரடைஸ் பங்களாவிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த மனைவி பிரியம்வதா இயற்கை காட்சிகளை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

    வெற்றி, இந்த இடம் சூப்பரா இருக்குல, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள்.

    இதுக்கே இப்படி சொன்னா எப்படி, இன்னும் மேக மலைக்கு போய் சேர்ந்தா நீ அங்கிருந்து வரவே மாட்டே... அவ்ளோ சூப்பரா இருக்கும். என்று கூறியபடியே பிரியாவின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டார் வெற்றி.

    நமக்கு கல்யாணம் முடிச்சு 2 வருஷம் ஆகுது, இந்த ரெண்டு வருஷத்துல இப்போ தான் உங்க முதல் பொண்டாட்டியை மறந்து, என் கூட இருக்கீங்க...

    முதல் பொண்டாட்டியா? உன் புருஷன் உத்தமன்டி பொண் டாட்டி; என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டையே இது உனக்கே நியாயமா என்று பொய் அதிர்ச்சியோடு கேட்டார்.

    உங்க காக்கியை தான் சொல்றேன், எந்நேரமும் வேலை, அக்யூஸ்ட், ஸ்டேஷன்-னு இருப்பீங்க, இப்போவாவது என்னை வெளிய கூட்டிடு வர தோணுச்சே... என்று கூறி செல்லமாக முறைத்தாள்.

    என்ன பிரியா பண்ணுறது... என்னோட வேலை அந்த மாதிரி. எந்த நேரத்தில எங்க கிரைம் நடக்கும் என்று சொல்லவே முடியாது எப்பவுமே அலார்டடா இருக்கணும், அதனால தானே உன்ன என்னால சரியா கவனிக்க முடியாம போயிருச்சு. அதுக்குதான் இப்போ ஒரு மாதம் மெடிக்கல் லீவ் போட்டிருக்கிறேன், இந்த ஒரு மாதம் ஃபுல்லா நாம இந்த மேகமலையில்தான் இருக்கப் போறோம், இங்க என்னோட ஃபிரண்ட் வீடு இருக்கு, அங்கேயே ஸ்டே பண்ண சொல்லியிருக்கிறான். சோ... இந்த ஒன் மன்த் ஃபுல் டைம் ஃபேமிலி டியூட்டிதான்.

    இது நம்மளோட மூணாவது டிரிப் பிளான். ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் எங்கயாவது போயிட்டு அப்பறம் எமர்ஜென்சி டியூட்டினு லீவ கேன்சல் பண்ணிருக்கீங்க, இப்பவும் அப்படி பண்ணா நான் உங்ககிட்ட பேசவே மாட்டேன். அப்பறம் டைவர்ஸ் தான்; அப்பறம் நீங்க காக்கியையே கட்டிட்டு அழ வேண்டியதுதான்.

    டைவர்சா? உன் புருஷனை பார்த்தால் உனக்கு பாவமா இல்லையா?

    இல்லை... இந்த ஒன் மன்த் ஃபுல்லா என் கூட இருக்கிறதா பிராமிஸ் பண்ணிருக்கீங்க. மீறினால் டைவர்ஸ் தான்.

    "ஐயோ அவ்வளோ பெரிய தண்டனையெல்லாம் எனக்கு வேண்டாம்; இந்த ஒன் மன்த் உன்னை விட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1