Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kan Thirantha Neethi Thevathai
Kan Thirantha Neethi Thevathai
Kan Thirantha Neethi Thevathai
Ebook71 pages19 minutes

Kan Thirantha Neethi Thevathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Sajitha Rajan
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466633
Kan Thirantha Neethi Thevathai

Read more from Sajitha Rajan

Related to Kan Thirantha Neethi Thevathai

Related ebooks

Related categories

Reviews for Kan Thirantha Neethi Thevathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kan Thirantha Neethi Thevathai - Sajitha Rajan

    11

    1

    14 ஏக்கர் பரப்பளவில் ஹைடெக் டவர் என்ற 17 மாடிகளை கொண்ட கட்டிடம் கம்பீரமாக சரவணம்பட்டியில் நின்று கொண்டிருந்தது. கட்டிடத்தின் வளாகத்தை சுற்றி பல்வேறு வகையாக மரங்கள், பூக்களை புன்னகையாக உதிர்த்து, பணியாளர்களை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தன. நகரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பினும் இந்த வளாகத்தில் இருக்கும் மரங்கள் அங்கு இருப்போருக்கு குளிர்ந்த தென்றலை மட்டுமே கொடுத்தது. ஹைடெக் டவரின் 15, 16 மற்றும் 17 மாடியில் சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற எம்.என்.சி நிறுவனம், கிட்டதட்ட 1500க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் தினமும் படு பிஸியாக இயங்கி வருகிறது.

    16வது தளத்தில் மென் பொறியாளராக அபிநயா பணியாற்றி வருகிறாள். அழகான, யாரையும் அதிர்ந்து கூட பேச தெரியத, அந்த 22 வயதான அபிநயா, தினமும் கதவை திறந்து மற்ற கேபின்களை கடந்து தன்னுடைய காபினுக்கு போவதற்குள் குறைந்தது 100 ஆண்களாவது தங்களை மறந்து பார்க்கும் அளவுக்கு அழகு. அவளை பார்ப்பதற்காகவே ஒரு நாள் தவறாமல் வேலைக்கு வரும் சில இளைஞர்களும் இருக்கிறார்கள்.

    காலை 9.30 மணிக்கு ஆபீசுக்குள் நுழைந்து, தன் கேபினுக்குள் போய் கம்பூட்டரை ஆன் செய்தாள், அவள் செய்து கொண்டிருக்கும் பிராஜெக்ட் ஃபைலை ஓபன் செய்த போது, சுழலும் நாற்காலியை நகர்த்திக் கொண்டு அபிநயா அருகில் வந்தாள் டீம்மேட் ரோமா.

    அபி, இன்னும் ஒரு வாரத்தில் பிராஜெக்ட் ரிபோர்ட் நாம குடுத்தாகனும், ரெடி ஆயிடும் தானே என்று கேட்டாள் ரோமா.

    90 சதவீதம் முடிஞ்சது ரோமா, அநேகமா இன்னைக்கு போறதுக்குள்ள முடிச்சிடலாம், டெஸ்டிங் நீ எவ்ளோ சீக்கிரம் முடிக்கிரயோ அவ்ளோ சீக்கிரம் புராஜ்கெடை சப்மிட் பண்ணிரலாம் என்றாள் அபிநயா.

    இரண்டு நாள் டே அண்டு நைட் உட்கார்ந்தா டெஸ்டிங் முடிச்சிருவேன். அப்பறம் இன்னொரு விஷயம் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன், நம்ம சிஇஓ உன்னை பார்க்கணும்னு சொன்னாரு

    அவர் ஆஸ்திரேலியா போறதா சொன்னாரே போகலயா? என்று கேட்டாள் அபிநயா.

    ஆஸ்திரேலியால நடக்க இருந்த கிளைண்ட் மீட்டிங் கேன்சல் ஆகிவிட்டது அதனால போகவிலை; நீ போய் அவரை பார்த்துட்டு வா

    இப்பவே போய் பார்த்துட்டு வந்துடுறேன், இல்லைனா வர்க் ஸ்டார்ட் பன்னதுக்கு அப்பறம் போக மறந்துடுவேன்; வந்து வொர்க்கை ஸ்டார்ட் பன்றேன் என்று கூறி சிஇஒ ரோஷன் அறைக்கு சென்றாள்.

    எக்ஸ்கியூஸ் மீ

    உள்ள வாங்க அபி, உட்காருங்க என்று ரோஷன் தனக்கு எதிரில் இருந்த சேரை காண்பித்தான்.

    ரோஷனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அபி.

    என்னை பார்க்கணும்னு சொன்னங்களா ரோஷன்?

    இங்க நீங்க சாப்ட்வேர் டெவலப்பரா வேலைக்கு சேர்ந்து எத்தனை மாசம் ஆகுது? என்று கேட்டான் ரோஷன்.

    ஒரு வருஷம் இருக்கும்

    இந்த ஆபீஸ்ல வொர்க் பன்ற எல்லாரையும் மாதிரி நீங்க இல்லை, யூ ஆர் சம்திங் டிஃப்ரண்ட், முதள் நாள் வேலைக்கு வரும் போது பார்த்த அதே பொருமை, நளினம், அழகு எதுவுமே மாறாம அப்படியே இருக்கு, யு ஆர் சம்திங் ஸ்பெஷல் டு மீ

    இதை கேட்டவுடன் அபியின் முகம் சற்றே மாறியது, எதுக்கு கூப்டங்கனு சொல்லவே இல்லை ரோஷன் என்று கேட்டாள் அபி.

    உங்களுக்கு எம்.எல்.ஏ சண்முக பாண்டியனை தெரியுமா?

    கேள்விபட்டிருக்கேன்…… ஆனால் அவரை பற்றி…

    அவரை பற்றி உங்க கிட்ட எதுக்கு கேக்கறேனு யோசிக்கறங்க கரெக்டா?

    ஆமாம் என்பதை போல் தலையாட்டினாள்.

    சம்மந்தம் இருக்கு, எம்.எல்.ஏ சண்முக பாண்டியனோட மகன் சர்வேஷ் என்னோட பிரண்ட். போன மாதம் நாம்ம கோவா டிரிப் போனப்ப எடுத்த போட்டோஸை அவன் பார்த்தான். சோ அவனுக்கு உங்களை பார்த்ததும் ரொம்ப புடிச்சிருச்சு அதனால….

    அதனால….. என்ன?

    சட்டர்டே அவனோட கெஸ்ட் ஹவுஸில் உங்களுக்கு ஒரு பிரைவேட் பார்ட்டி அரேஞ்ச் பன்னிருக்கான். நீங்க நான் சர்வேஷ் மட்டும். வேற யாருக்கும் தெரியாது

    இதை கேட்டதும் கோபத்தில் அபிநயாவின் முகம் சிவக்க ஆரம்பித்தது, "இதோ பாருங்க மிஸ்டர் ரோஷன் நா இங்க வரது வேலை செய்ய தானே தவிர பார்ட்டிக்கு கிடையாது.

    Enjoying the preview?
    Page 1 of 1