Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaanal Neeril Sila Meengal
Kaanal Neeril Sila Meengal
Kaanal Neeril Sila Meengal
Ebook50 pages18 minutes

Kaanal Neeril Sila Meengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Sajitha Rajan
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466633
Kaanal Neeril Sila Meengal

Read more from Sajitha Rajan

Related to Kaanal Neeril Sila Meengal

Related ebooks

Related categories

Reviews for Kaanal Neeril Sila Meengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaanal Neeril Sila Meengal - Sajitha Rajan

    12

    1

    இரவு 11 மணி. ஆர்கேஎம் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த டாக்டர் சூரிய மூர்த்தியிடம்,

    டாக்டர் என் மனைவிக்கு என்ன ஆச்சு, பயபட ஒன்றும் இல்லையே. கடந்த 5 வருஷமா குழந்தை இல்லாம இப்போதா கர்பமானா டாக்டர். குழந்தை பொறக்க போகுதுனு சந்தோஷமா இருந்தோம் ஆனால் இப்போ இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. தயவு செய்து எப்படியாவது என் மனைவியை காப்பாத்துக்க டாக்டர் என்று பதற்றமான குரலில் சுந்தரம் கூறினான்.

    சாரி மிஸ்டர் சுந்தரம் எங்களால் முடிந்த அளவிற்கு உங்கள் மனையையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்ற முயற்சி எடுத்து வருகிறோம். உங்க மனைவிக்கு அதிகமா பிளட் லாஸ் ஆகியிருக்கு. உங்க மனைவியுடையது ரொம்ப ரேர் பிளட் குரூப், எங்க ஹாஸ்பிடல் பிளட் பேங்கில் தற்போது ஏபி நெகட்டிவ் பிளட் இல்லாத்தால் வெளியில் இருக்கும் பிளட் பேங்குகளுக்கு தகவல் கொடுத்துருக்கோம். நீங்களும் உங்க சைடில் இரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்ங்க, எவ்வளவு சீக்கிரம் பிளட் கிடைக்கிதோ அவ்வளவு சீக்கிரம் உங்கள் மனைவியின் உயிரை காப்பாற்றலாம் என்றார் டாக்டர் சூரிய மூர்த்தி.

    கண்டிப்பாக டாக்டர் எப்படியாவது ஏபி நெகட்டிவ் இரத்ததிற்கு ஏற்பாடு பண்றேனு, சுந்தரம் கண்ணீர் கலந்த பதற்றமான குரலில் செல்லிவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

    டாக்டர் மீண்டும் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றார். அங்கு வெண்டிலேட்டர் உதவியினால் தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களில் இருந்தாள் சுந்தரின் மனைவி உமையாள்.

    நர்ஸ் மாலா, டாக்டரிடம், டாக்டர் இந்த பொண்ணு ரொம்ப சீரியஸா இருக்காங்க ஹார்ட் பீட் குறைந்து கொண்டே வருகிறது. உடனடியா இரத்தம் கொடுத்தாகனுமே என்றாள்.

    ஐ நோ மிஸ் மாலா அவளுடையது ரேர் பிளட் குரூப்பா இருக்கரதால இப்போதைக்கு பிளட் அவைலபிளிட்டி இல்லை. அவளின் கணவர் கிட்ட ரெடி பண்ண சொல்லிருக்கேன். விடியும் வரை பார்ப்போம் என்று கூறிவிட்டு உமையாளின் மருத்துவ அறிக்கையை கையில் எடுத்தார் டாக்டர் சூரிய மூர்த்தி.

    அடுத்த நாள் காலை 8 மணிக்கு வார்டு பாயாக பணிபுரியும் பிரகாஷ் மருத்துவமனைக்குள் நுழையும் போது, அவன் நண்பன் முருகன், டேய் நண்பா அந்த பொண்ணு இறந்துட்டா…அரை மணி நேரத்துக்கு முன்பு அவள் உயிர் பிரிந்தது என்றார்.

    யாருடா? எந்த பொண்ணு? என்றார் பிரகாஷ்.

    டேய் நேத்து நாம கிளம்பும் போது எமர்ஜென்ஸி வார்ட்லெ அட்மிட் ஆனாளே அந்த பொண்ணு தாண்டா. அவளுக்கு அபார்ஷன் ஆயிருச்சு, ரொம்ப இரத்தம் போயிருச்சு அவளோட இரத்தம் வகை அதிகம் யாருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1