Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் உயிர் நீதானே..!
என் உயிர் நீதானே..!
என் உயிர் நீதானே..!
Ebook184 pages1 hour

என் உயிர் நீதானே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கால்களை அகல அகலமாக வைத்து நகரத்தொடங்கிவிட்ட வைகை எக்ஸ்பிரஸின் ஏதோ ஒரு பெட்டியில் ஜெயப்பிரகாஷ் ஏறிவிட... ரயில் வேகம் பிடித்தது.
 சுப்பு அப்படியே அயர்ந்து போய் பிளாட்பாரத்தில் நின்றான்.
 டிக்கெட்கூட எடுக்காமல் இத்தனை - அவசரமாக ரயிலில் தன்னை நுழைத்துக்கொண்டு... லட்சியத்தைத் தேடி ஓடும் மனிதர்களெல்லாம் ஒரு மாதிரி கிறுக்கோ என்று தோன்றியது சுப்புவுக்கு.
 தண்ணீர்த் தொட்டியில் அரிய விஞ்ஞான உண்மையைக் கண்ட ஆர்க்கமிடீஸ் நிர்வாணமாக எழுந்து ஓடிய கதைதான் இது.
 இவர்களெல்லாம் ஆர்க்கமிடீஸின் அவதாரங்கள்.
 ரயில் கோடம்பாக்கத்தைக் கடந்து கொண்டிருக்க தன்னைச் சற்று நிதானப்படுத்திக்கொண்ட ஜெயப்பிரகாஷ் வெஸ்டிப்யூலின் அருகே நின்று கொண்டு நிதானமாகப் பார்வையைச் சுழலவிட்டார். முகம் முகமாக நகர்த்திக்கொண்டே சென்றார். அந்தப் பெட்டியில் அபிநயா நிச்சயமாக இல்லை.
 "மெள்ள அடுத்த பெட்டியை நோக்கி நடக்கத் தொடங்கினார்."
 "சார், ஒரு நிமிஷம்!" ஓர் இளைஞன்.
 "என்ன?"
 "நீங்க டைரக்டர் ஜெயப்பிரகாஷ் தானே?"
 "யாரு ஜெயப்பிரகாஷ்!" என்றார்.
 "பார்த்தியா... நான்தான் சொன்னேனே... அவர் பெரிய டைரக்டர். இது மாதிரி செகண்ட் க்ளாஸ்ல வருவாரா?"
 குரல் முதுகில் தேய்ந்ததுஅடுத்த சில நிமிடங்களில் நான்கு பெட்டி பார்த்து மெள்ளச் சலித்தார்.
 ஐந்தாவது பெட்டிக்குள் நுழைந்தார்.
 நடுவில் வரும் கதவைத் தொட்டதுபோல் அமைந்த ஓர் இருக்கையில் ஜன்னலோரம் புத்தகம் படித்தபடி அவள் அபிநயாவேதான்!
 லேசான மின்சாரத்தை நரம்புகளின் முனையில் உணர்ந்தார்.
 'இந்தப் பெண்ணைப் பார்த்தால் விவரிக்கத் தெரியாத பரவசம் ஏன் வருகிறது என்னிடம்?'
 அபிநயா இருந்த சுற்றுச் சூழ்நிலையைப் பார்த்தார்.
 அதே வரிசையின் இந்தக் கோடியில் நடுத்தர வயது பெண்மணி ஒருவர், லேசான உறக்கத்தில்.
 எதிரே ஓர் இளைஞன் சிகரெட் பிடித்தபடி அபிநயாவை அவ்வப்போது ரசித்தபடி...
 கேட்டரிங் ஊழியர்கள் தங்கள் விற்பனையைத் தொடங்கியிருந்தார்கள். காபியைச் சுமந்த எவர்சில்வர் கேனும், பிளாஸ்டிக் டம்ளர்களும் நடமாடத் தொடங்கி விட,
 அந்த சிகரெட் இளைஞன் எழுந்து வேறுபக்கமாக நடக்கத் தொடங்கினான்.
 'ஓ... இதுதான் சமயம்!'
 சற்று அவசரக் கால்களைப் பதித்து அந்த இடத்தை அடைந்தார் ஜெயப்பிரகாஷ்.
 அந்த இளைஞனின் இருக்கையை ஆக்கிரமித்தார்.
 ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் மூழ்கியிருந்தாள் அபிநயா.
 "எக்ஸ்கியூஸ் மீ மிஸ் அபிநயா?"
 சடாரென பத்திரிகையைத் தழைத்தாள், "எ... என்னையா?"
 "நீங்கதானே அபிநயா?"
 "ஆ... ஆமாம். நீங்க யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா?சுற்றிலும் பார்த்த ஜெயப்பிரகாஷ், குரலை வெகுவாகத் தழைத்துக்கொண்டு,
 "சினிமா பார்க்கற பழக்கம் உண்டா?"
 "வாழ்க்கைல இதுவரைக்கும் நான் பார்த்த ஒரே படம் 'திருவிளையாடல்' தான்... அதுவும் எங்க ஸ்கூல்ல கூட்டிட்டுப் போனதால!"
 "சினிமா பிடிக்காதா?"
 "தெரியலை!"
 "இது என்ன பதில்?"
 "எங்கப்பாவுக்கு சினிமால ஒரு வெறுப்பு உண்டு. அப்பா காரணமா அம்மாவும் அதைப் புறக்கணிச்சுட்டாங்க. ஸோ, நானும், ஆமா. நீங்க யார்னு இன்னும் சொல்லலை. அவசியமில்லாம பேசிட்டு இருக்கோமே?"
 மெல்லச் சிரித்தார் ஜெயப்பிரகாஷ்.
 இது கொஞ்சம் சங்கடமான ஆரம்பம் என்று தோன்றியது.
 அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது.
 'நான் பிரபல இயக்குநர் என்று தெரிந்து ஆர்வத்துடன் என்னிடம் ஆட்டோகிராப் கேட்கும் பெண்ணிடம் கொஞ்சம் போலித்தனம் இருக்கும்!
 இவள் சினிமாவே தெரியாதவள்!
 இவள் காமிராவுக்கு முன் நடிக்க வேண்டாம். வாழ வைத்துவிடலாம் இவளை!'
 "நான் சினிமா டைரக்டர் ஜெயப்பிரகாஷ்!"
 "அப்படியா?"- அந்த அப்படியாவில் ஓர் ஆர்வமோ, எதிர்பார்ப்போ கொஞ்சமும் இல்லை. அவனையே சுற்றும் ரசிக அலைகளின் மத்தியில் ஒரு தீவுபோல் தெரிந்தாள் அவள்,
 "சார், ஒரு நிமிஷம்!திரும்பினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798215191729
என் உயிர் நீதானே..!

Read more from Devibala

Related to என் உயிர் நீதானே..!

Related ebooks

Related categories

Reviews for என் உயிர் நீதானே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் உயிர் நீதானே..! - Devibala

    1

    படபடவெனக் கதவு அதிர்ந்தது.

    நேரம் இரவு பதினொன்று என்று சுவர் கடிகாரம் அறிவித்து ஓய்ந்தது.

    மறுபடியும் கதவு அதிர்ந்தது.

    போர்வையை முகத்தைவிட்டு விலக்கினான் அவன். சட்டென எழுந்து உட்கார்ந்தான். கண்களை ஒருமுறை தேய்த்துவிட்டுக் கொண்டான்.

    யாரது?

    பதிலில்லை.

    ஆனால் கதவு தொடர்ந்து சந்தித்தது.

    படுக்கையைவிட்டு எழுந்த அவன், லுங்கியைச் சரியாக இடுப்பில் அமைத்துக் கொண்டான். மெள்ள நடந்துபோய் விளக்கைப் போட ஹால் வெளிச்சம் பெற்றது.

    கதவை அணுகி, தாழ்ப்பாளை விலக்கினான். திறந்தான் அவள் உள்ளே நுழைந்தாள்.

    நீ... நீயா...?

    நானே தான்! ஏன் என்னை எதிர்பார்க்கலையா?

    இ... இந்த நேரத்துல... இங்கே...

    துரோகத்துக்கு நேரம், காலம் உண்டா பாலா?

    நீ... எ... என்ன சொல்றே?

    சொல்ல வரலை. கேட்க வந்திருக்கேன்.

    என்ன கேட்க?

    என்னை ஏமாத்தின உன்னை நான் சும்மா விடமாட்டேன்.

    என்ன செய்ய முடியும் உன்னால?

    முடியும். நியாயம் கேட்க முடியும். அது கிடைக்காத பட்சத்துல தீர்ப்பு வழங்கவும் முடியும்!

    சரக்கெனக் கத்தியை உருவினாள்.

    பாலா ‘திடும்’ மென அதிர்ந்து பின் வாங்கினான்.

    கட்... கட்... கட்...!

    ஜெயப்பிரகாஷ் அலற, பிடித்த கத்தியோடு அப் படியே நின்றது நடிகை நிருபமா.

    கீழே படுத்துக்கிடந்த ராஜன் எழுந்து நிற்க.

    ரீடேக் எடுக்கணும்!

    ஏன் சார், சரியா வரலையா? நிருபமா.

    எக்ஸ்பிரஷன் இம்ப்ரூவ் பண்ணனும். உன்னை ஏமாத்திட்டுப் போனவன்... அவன்கிட்ட நீ நியாயம் கேட்க வரும்போது ஆவேசமா நுழையணும். ஒரு மாதிரி ஜுவாலையில் நிக்கற மாதிரி முகம் கணகணனு எரியணும் நான் செய்யறேன். நல்லா கவனுச்சுக்க!

    டைரக்டர் ஜெயப்பிரகாஷ் எழுந்தார்.

    ஃப்ளோரின் மத்தியில் வந்து நின்றார்.

    ஒரு நிமிடம் கண்மூடி நின்றார்.

    மூடிய கண்களுக்குள் அவள் முகம் வந்து நின்றது.

    ஐயாம் ஸாரி

    மன்னிப்பு கேட்டுட்டா என்மேல படிஞ்ச கறை விலகிடுமா?

    இது ப்ளாங்க் செக். உனக்கு வேண்டியதை நீ நிரப் பிக்கலாம். கமான்!"

    பணத்தால என்னை விலைக்கு வாங்கறியா? நான் கேட்டதை உன் கரன்ஸிகளால் எனக்கு வாங்கித் தர முடியுமா?

    என்ன அது? சொல்லு!

    வாழ்க்கை! தரமுடியுமா உன் பணத்தால?

    சடாரென்று கண்களைத் திறந்தார் ஜெயப்பிரகாஷ்.

    என்ன சார் யோசனை?

    இல்லை. ஸீன் என்னனு கொஞ்சம் இமாஜின் பண்ணுப் பார்த்தேன். நௌ லிஸன்!

    அந்தக் காட்சியை நிருபமா செய்யவேண்டிய பகுதியை- நடித்துக் காட்டத் தொடங்கினார்.

    அத்தனை பேரும் அசந்து போய் நிற்க,

    ஓகே! டச்சப் பண்ணிட்டு வந்துருங்க. அன்வர் ரெடியா? ஸ்டாண்ட் பை ஸ்டுடியோ, ஃப்ளோர் சைலன்ஸ். கமான்!

    சுறுசுறுவென காமிரா கோணத்துக்கு ஆணையிட,

    அவர் இயங்கும் இந்த நேரத்தில் இயக்குநர் ஜெயப்பிரகாஷைப் பற்றி...

    அகர்வால் பவன் பாஸந்தி - ஜெயப்பிரகாஷின் நிறம். ஐந்தரை அடி உயரம், அதற்குத் தக்க உடம்பு, முகத்தில் வசீகரம். வயது இப்போது நாற்பத்திநாலு.

    இந்த இருபது வருடங்களில் ஜெயப்பிரகாஷ் இயக்கிய படங்கள் இருபத்து மூன்று.

    அதில் பதினைந்து படங்கள் நூறு நாட்கள்.

    நான்கு படங்கள் வெள்ளி விழா...

    ஒன்று பொன் விழா படம்.

    மூன்று தோல்விப் படங்கள்.

    ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது.

    டைரக்டர் ஜெயப்பிரகாஷ் தாஜில் தனக்கென அமைந்த பிரத்தியேக அறையில் சன்னலோரம் சிகரெட் பிடித்தபடி நின்றார்.

    கண்ணாடி சன்னலுக்கு வெகு கீழே வாகங்களின் மௌன இயக்கம்.

    மின்சார மணி தன் சங்கீத ஓசையை வெளிப்படுத்த, திரும்பினார் ஜெயப்பிரகாஷ்.

    வா சுப்பு!

    கதவைத் திறந்து கொண்டு அந்த நடுத்தர வயது மனிதன் பவ்யமாக வந்து நின்றான்.

    வேட்டியும் சந்தன நிற ஸ்லாக்கும் அணிந்து சோடாப்புட்டி கண்ணாடிக்குள் தன் கோழிமுட்டை விழிகளைச் சுழல விட்டவன், கையிலிருந்த ஆல்பத்தை அவரிடம் தந்தான்.

    எட்டுப் பொண்ணுங்க! எல்லாமே முறைப்படி நடனம் கத்துக்கிட்டு அரங்கேற்றம் ஆனது. நடிக்கற ஆசையுள்ள பெண்கள், விடியோ காஸெட்டும் இருக்கு. பார்க்கணுமா?

    போடு!

    எட்டுப் பெண்களின் ஓரிரு நிமிட நடனங்களைப் பார்த்துவிட்டுக் கண்மூடி உட்கார்ந்தார் ஜெயப்பிரகாஷ்.

    எதுவுமே சொல்லலையே? -சுப்பு.

    எதுவுமே தேறலை. அதான்

    இதுவரைக்கும் நடனம் தெரிஞ்ச அழகான, சினிமா ஆசையுள்ள அறுபத்து நாலு பேரைப் பார்த்தாச்சு. எதுவுமே உங்களுக்குப் பிடிக்களேன்னா, இனிமே புதுசா கிடைக்கும்னு எனக்குத் தோணலை! - சுப்புவின் குரலில் சலிப்பு இருந்தது.

    என் மனசுல ஒரு உருவம் பதிஞ்சு போயிருக்கு சுப்பு. இன்னிக்கு நேத்திக்கு இல்லை. இருபது வருஷமா உறைஞ்சு கிடக்கு. அது கை கால் முளைச்சு, ரத்தமும் சதையுமா- என் கதாநாயகியா கண் முன்னால வந்து நிக்கணும். நடக்குமா சுப்பு?

    அவர் குரல் - உணர்ச்சி வசப்பட்டுத் தத்தளித்தது.

    கண்ணோரம் லேசாக ஈரம் பட்டிருந்தது.

    ஓரளவு தேறக்கூடிய பெண்களை உங்க திறமையால மின்ன வைக்கக் கூடாதா? ஸ்டார் மேக்கராச்சே நீங்க!

    ஒரு சிகரெட் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார் ஜெயப்பிரகாஷ்.

    வெல் நீ புறப்படு சுப்பு!

    அண்ணா மறுபடியும்...?

    ப்ளீஸ் சுப்பு! உதவி செய்! இன்னும் பெண்கள் இருக்காங்களானு தேடு. இந்த தேசத்துப் பெண்கள்ல என் கதாநாயகி எங்காவது ஒரு மூலைல இருப்பா கண்டிப்பா அவ எனக்குக் கிடைப்பா நான் நம்பறேன் சுப்பு.!

    சரிண்ணா! கடவுள் உங்க பக்கம் இருக்கட்டும்!

    கதவைச் சாத்திவிட்டுப் படுக்கையில் வந்துவிழுந்தார் ஜெயப்பிரகாஷ்.

    ஸ்கிரிப்ட் கூட ரெடியாகிவிட்டது.

    மற்ற நடிகர்களின் கால்ஷீட், லொகேஷன் என்று சகலமும் ஓரளவு தீர்மானித்து விட்டார்.

    சலிப்போடு எழுந்து டி. வி.யைப் போட்டார்.

    ஏதோ ஒரு பேட்டி நடந்து கொண்டிருக்க, அணைக்கப் போனார்.

    ‘அடுத்த நிகழ்ச்சி சில நொடிகளில்!’

    தொடர்ந்தது.

    ‘நடன அரங்கம்’ என்ற டைட்டில் கார்டு வந்தது.

    தலையணையை அண்டம் கொடுத்தபடி சாய்ந்து உட்கார்ந்தார்.

    ‘குமாரி அபிநயா’ என்ற எழுத்துக்கள் விழுந்து அது விலக... அந்தப் பெண் வந்து வணக்கம் சொன்னது- தன் அழகான மருதாணி விரல்களைக் குவித்து..

    ஜெயப்பிரகாஷ் தடாலென எழுந்து நின்றார்.

    நரம்புகளை ஊடுருவிக்கொண்டு ஒரு டி. ஸி. கரண்ட் ‘விருட்’ டென்று வேர் வரை பாய்ந்தது.

    ‘இவள் தான்!’

    ‘நான் கற்பனையில் எழுதிவைத்த சித்திரம் இது தான்!’

    பாய்ந்து சென்று காலியான வீடியோ காஸெட்டை டெக்கில் நுழைத்துப் பதிவு பட்டனை அழுத்தினார்.

    அபிநயா, நாடாவில் இறங்கத் தொடங்கினாள்.

    அவசரமாக டெவிபோனை இயக்கினார் ஜெயப்பிரகாஷ்.

    சுப்பு இருக்கியா?

    .....

    உடனே புறப்பட்டு வா!

    அடுத்த இருபது நிமிடங்களில் சுப்பு உள்ளே நுழைந்தான்.

    என்னண்ணா?

    கிடைச்சிட்டா என் கதாநாயகி!

    அப்படியா?

    காஸெட்டைப் பார்த்துட்டு உன் அபிப்பிராயம் சொல்லு!

    அதைப் பார்த்து முடித்ததும், சுப்பு சுவாசிக்கக்கூட மறந்து போனான்.

    இது டி. வி. நிகழ்ச்சியாச்சே! டி. வி. ல இத்தனை நல்ல முகங்களெல்லாம் வருமா?

    சுப்பு உடனடியா இந்தப் பெண்ணைச் சந்திக்கணும்!

    டி வி. ஸ்டேஷன் போய் விலாசம் வாங்கணும். இதோ...

    "வா சுப்பு! விலாசம் கிடைச்சுதா?"

    சுப்பு விலாசத்தை ஜெயப்பிரகாஷிடம் நீட்டினான்.

    என்ன சுப்பு இது? அந்தப் பெண்ணோட வீட்டு விலாசம் வேணும்.

    நமக்கென்ன? நமக்கு வேண்டியது இந்தப் பொண்ணுதானே?

    நோ... யூ ஆர் ராங்! பெண்கள் கல்லூரியில் சினிமா டைரக்டர் நுழைஞ்சு அவளைச் சந்திக்க முயற்சி செய்யறது அத்தனை நாகரிகமா படலை எனக்கு!

    ஒரு தவறும் இல்லை. முறைகேடு என்ன இருக்கு இதுல? நேரா பிரின்சிபாலைப் போய்ப் பார்க்கறோம். விவரத்தைச் சொல்லி அபிநயாவை வரவழைக்கிறோம். அபிநயா விரும்பினா, கல்லூரி அவளைக் கட்டுப்படுத்த முடியாது!

    அப்படீங்கறியா?

    நான் போய் முதல்ல விவரம் தெரிஞ்சுட்டு வர்றேன்.

    ரெண்டு பேருமாவே போயிடலாம்.

    தன் ராசியான சந்தன நிற ஸபாரியை எடுத்து அணிந்து கொண்டார் ஜெயப்பிரகாஷ்.

    சுப்பு கவலைப்பட்டான்.

    ‘கடவுளே! எத்தனை எதிர்பார்ப்புகள் இந்த மனிதனிடம்? ஒரு நடன நிகழ்ச்சினய வைத்து அந்தப் பெண்ணை முடிவு செய்தாயிற்று. நாளை காமிராவுக்கு முன் நிற்கும்போது இவரது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யுமா அந்தப் பெண்?’

    அதே நேரம் ஹாஸ்டல் வார்டனிடம் லீவு லெட்டரைச் சமர்ப்பித்தாள் அபிநயா.

    என்ன திடீர்னு?

    அப்பா, அம்மாவைப் பார்க்கணும்னு தோணிருச்சு மேடம். அதான்!

    நாலு நாள்ல வந்துரு. யூனிட்டெஸ்ட் இருக்கு.

    பெட்டியோடு தன் அறையைவிட்டு வெளியே வந்தாள் அபிநயா.

    வாசலை அணுகி, ஆட்டோவைக் கைதட்டி அழைத்தாள். அருகே வந்ததும் அதில் ஏறிக்கொண்டாள். ஆட்டோ அகன்றதும் ஜெயப்பிரகாஷின் கார் வந்து நின்றது.

    பிரின்சுபால் அறையை அணுகி பியூனிடம் தன் விசிட்டிங் கார்டைத் தர...

    அழைக்கப்பட்டார்.

    அவர் உள்ளே நுழைந்ததும், பிரின்சிபால் எழுந்து நின்று வரவேற்றார்.

    உட்காருங்க சார்!

    உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கோம்?

    என்ன படப்பிடிப்புக்குக் கல்லூரியைப் பயன்படுத்திக்கணுமா?

    இல்லை. உங்க மாணவி, சமீபத்துல டி. வி. ல நிகழ்ச்சி தந்த அபிநயாவை நான் சந்திக்கணும்!

    இருங்க, வரச் சொல்றேன்!

    தகவல் அனுப்பிய பத்தாவது நிமிடம், அபிநயாவுடன் ஒன்றாகப் படிக்கும் வித்யா வந்தாள். விவரம் சொன்னாள். ஹாஸ்டல் வார்டனிடம் லீவு லெட்டர் கொடுத்துவிட்டுச் சற்று முன் தான் அபிநயா புறப்பட்டாள் என்றாள்.

    எந்த ரயில்? ஜெயப்பிரகாஷ் அவசரமாகக் கேட்டார்.

    வைகை எக்ஸ்பிரஸ்!

    சுப்பு, புறப்படு!

    சரேலென ஓட்டமாக வெளிப்பட்டார் ஜெயப்பிரகாஷ்.

    காருக்குள் பாய்ந்தார்.

    எழும்பூர் ரயில் நிலையத்தைக் குறிவைத்து கார்

    Enjoying the preview?
    Page 1 of 1