Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Monikavukku Motcham
Monikavukku Motcham
Monikavukku Motcham
Ebook77 pages25 minutes

Monikavukku Motcham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொழிலதிபர் ராகவன் மனைவியை இழந்தவர். அவரது மூத்த மகள் அருணா தற்கொலை செய்து கொண்டு இறக்கிறாள். இளைய மகள் மோனிகாவைக் கொல்லப் போவதாக மிரட்டல் கடிதம் வருகிறது. ராகவனைக் கொல்லும் முயற்சியும் நடக்கிறது.

இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் விசாரணை செய்கிறார். மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவருகின்றன.

Languageதமிழ்
Release dateSep 3, 2022
ISBN6580131008709
Monikavukku Motcham

Read more from S. Kumar

Related authors

Related to Monikavukku Motcham

Related ebooks

Related categories

Reviews for Monikavukku Motcham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Monikavukku Motcham - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மோனிகாவுக்கு மோட்சம்

    Monikavukku Motcham

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    ப்ளு மவுண்ட்டன் எக்ஸ்பிரஸ் வந்து நின்றதும் போர்ட்டர்கள் அவசரமாக வந்து வாசற்கதவுகளை அடைத்துக்கொண்டு நின்றார்கள்.

    ப்ளாட்ஃபார்ம் கூட்டத்துக்கும் போர்ட்டர்கள் கூட்டத்துக்கும் நடுவே இறங்கிய ஜனங்களும் சேர ப்ளாட்ஃபார்ம் நிரம்பி வழிந்தது.

    சென்ட்ரலின் வழக்கமான இரைச்சலோடு புதிய வரவுகளின் இரைச்சலும் சேர்ந்து காதைக் கிழித்தன.

    மோனிகா தேவதையாக இறங்கினாள்.

    வருகையைப்பற்றி அனாவசியமாக தந்தியடித்து அப்பாவின் பிசியான நேரத்தைப் பங்குபோட விரும்பாததால் அவளுக்காக கார் வந்து காத்திருக்காது.

    சென்டரல் ஹிக்கின் பாதம்சில் புத்தகங்களைப் பொறுக்கினாள்.

    சற்றுத்தள்ளி அவன் நின்றிருந்தான். ரிச்சர்ட்.

    நகர்ந்து செல்லும் ஜனக் கூட்டத்தைச் சுழன்றுசுழன்று அவன் கண்கள் வேட்டையாடின.

    தொலைந்த பொம்மையைத் தேடும் குழந்தையைப்போல் அந்தக் கண்கள் எங்கும் எல்லாவற்றிலும் அலைந்து அலைந்து எழுந்தன.

    மீண்டும் ரிச்சர்டின் கண்கள் அவளிடமே வந்து தங்கின.

    மோனிகாவின் தேவதைத் தோற்றம் சுண்டியிழுத்தது.

    பிரம்மா என்கிற கேபிடலிஸ்ட், மார்க்ஸ், எங்கல்ஸ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மொத்தமாக அழகை அவளிடம் கொட்டிவிட்டான்.

    ரிச்சர்ட் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவே இல்லை.

    புதிய புத்தகங்களைத் தேடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள். சூட்கேசைக் காலருகே வைத்திருந்தாள். அபூர்வமாக அதன் பக்கமும் அவள் கண்கள் சென்றன. என்றாலும் நேரம் செல்லச்செல்ல வேறுவேறு புத்தகங்களைப் புரட்டுவதிலும் தேர்வு செய்வதிலும் ஆழ்ந்து ஈடுபட்டாள்.

    அவள் பக்கத்தில் ஒருவன் வந்து நின்றான்.

    ரிச்சர்ட் தன் பார்வைக் கோணத்தின் குறுக்கே வந்த அந்த நந்தியையும் தரிசித்தான்.

    சற்றே முரடான உருவம். சட்டைக்கு வெளியே திரண்ட கைகள். முடிச்சுமுடிச்சாக கரடிமுடி. நல்ல உயரம். மிக நாகரீகமாக உடுத்தியிருந்தான், என்றாலும் உடை மட்டுமே நாகரீகத்தைக்கொண்டு வந்துவிட முடியாது என்பதற்கு அவன் ஓர் உதாரணம்.

    இவனுக்கும் புத்தகங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

    ஆனால் வாங்கினான்.

    புறப்படும்பொழுது கீழே வைக்கப்பட்டிருந்த மோனிகாவின் சூட்கேசை எடுத்துக்கொண்டு நகர்ந்தான்.

    அவள் அதைக் கவனிக்கவில்லை.

    ஆனால், ரிச்சர்டின் கவனத்திலிருந்து அது தப்பவில்லை.

    அவன் மிக வேகமாக நகர்ந்து அவனுக்குக் குறுக்கே வந்து நின்றான்.

    அவன் அதைத் தற்செயல் என்று கருதி விலகி நடக்க முயல, ரிச்சர்ட் மீண்டும் குறுக்கே சென்றான்.

    மிஸ்டர், வழி விடுங்க.

    பெட்டியை வச்சிட்டுப் போப்பா.

    பகல் கொள்ளையா இருக்கே!

    அதனாலதான் வேண்டாங்கிறேன்.

    அவன் வியர்த்தான்.

    தாக்கிவிட்டு ஓடலாமா என்று யோசித்தான்.

    இயலாது.

    ரிச்சர்ட்... 26. ஆறு இரண்டு. எண்பது கிலோ. செதுக்கப்பட்ட உடல். முகத்தில் வலிமையின் கம்பீரமும் படிப்பின் ஜொலிப்பும்.

    அப்பொழுதுதான் பார்த்தாள், மோனிகா.

    என் சூட்கேஸ் என்று கீறீச்சிட்டுத் திரும்பினாள்.

    அவனையும் ரிச்சர்டையும் பார்த்துவிட்டு அங்கிருந்து வந்தாள்.

    இதோ உங்க சூட்கேஸ்.

    அவன் சட்டென்று சூட்கேசைக் கீழேபோட, மோனிகா அதைப்பற்ற-

    "நம்ம உடமைகளை நாமதான் பத்திரமாப் பார்த்துக்கணும்.

    Enjoying the preview?
    Page 1 of 1