Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbu Vellam
Anbu Vellam
Anbu Vellam
Ebook165 pages51 minutes

Anbu Vellam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித சமூகம் என்ற பெரிய கட்டமைப்பில் மட்டும் இயல்பாக இல்லாமல், நாகரிகம் கற்றுத் தந்த பல சீர்கேடுகளுள் ஒன்றாக சுயநலம் என்பது வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. இன்று உலகம் முழுவதும் காணப்படும் அவலநிலைக்குக் காரணமே பிறர் நலன் கருதா மனப்பாங்குதான். ஒரு சிறு விளக்குக்கூட, அறையில் மண்டிக்கிடக்கும் இருளை அகற்றிவிடுகிறதே! அந்த நோக்கிலேயே எழுதப்பட்ட இந்தக் கதைகள் உங்கள் மன அறைக்கு வெளிச்சமூட்டினால் மகிழ்ச்சியடைவேன்.

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580160509401
Anbu Vellam

Read more from W.R. Vasanthan

Related to Anbu Vellam

Related ebooks

Reviews for Anbu Vellam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbu Vellam - W.R. Vasanthan

    http://www.pustaka.co.in

    அன்பு வெள்ளம்

    Anbu Vellam

    Author:

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. சம்மட்டி அடிகள்

    2. சோற்றுப் பருக்கை

    3. உயிரின் விலை

    4. அணுகுமுறை

    5. மாயச் சட்டை

    6. அன்பு வெள்ளம்

    7. பணமும் பணிவும்

    8. காலம் தந்த பரிசு

    9. அவசரப் புத்தி

    10. அகம்பாவம்

    11. மனிதாபிமானம்

    12. புதிய பாதை

    முன்னுரை

    ஒரு நாள் விடிகிறது.

    பரபரப்பாக எழுந்து நம் அலுவல்களைப் பார்க்கிறோம். அந்த நாள் மறைகிறது. மறுநாள் மலர்கிறது. மறுபடியும் அன்றாட வேலைகள் கவலைகள் என்று புலர்வதும், மறைவதும் தெரியாமல் காலங்கள் ஓடுகின்றன. இந்த வேகமான வாழ்க்கையில், நமது முன்னேற்றத்தையும், பிரச்சனைகளையும் கவனிப்பதற்கே நேரம் போதுமானதாக இருப்பதில்லை. இதில் பிறரைப் பற்றி அக்கறை கொள்வதற்கு எங்கே அவகாசம் இருக்கிறது?

    நம்மில் பலர் அப்படித்தான் நினைக்கிறோம். இந்தப் புத்தகத் தலைப்பான ‘அன்பு வெள்ளம்’ என்ற சிறுகதையில் வரும் சிறுபெண் அஸ்மிதாவும்கூட அப்படியேதான் நினைக்கிறாள். ஆனால் இந்த உலகமே ஒன்றையொன்று சார்ந்து வாழும்படியாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றின் உதவியில்லாமல் மற்றொன்று வாழ்வதில்லை என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

    பூக்களின் மகரந்தத்தை மற்றொன்றுக்குக் கடத்துவதற்கு வண்டுகளின் உதவி தேவைப்படவில்லையா? காற்றின் உதவியில்லாமல், கார்மேகங்கள் திரண்டு மழை பொழியக் கூடுமா? சூரியனின் உதவியில்லாமல் காரிருள் விலகுவதுண்டா?

    மனித சமூகம் என்ற பெரிய கட்டமைப்பில் மட்டும் இயல்பாக இல்லாமல், நாகரிகம் கற்றுத் தந்த பல சீர்கேடுகளுள் ஒன்றாக சுயநலம் என்பது வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. இன்று உலகம் முழுவதும் காணப்படும் அவலநிலைக்குக் காரணமே பிறர் நலன் கருதா மனப்பாங்குதான். யுத்தங்களுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும், ஏன் தீவிரவாதத்திற்கும்கூட மனித இனத்தில் வளர்ந்து நிற்கும் அந்த மனப்பாங்கே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஆயிரம் கோடிகள் பணத்தை விண்வெளி ஆராய்ச்சி என்று இழக்கும் நாம், உணவில்லாமல் அலையும் அனாதை மாந்தர்களை மறப்பது ஏன்?

    அன்பு என்ற ஆதாரப் பண்பை இழந்ததனால் அல்லவா ஆதரவற்றுத் தவிக்கும்போதுதான் உதவி என்பதன் உயர்வு என்ன என்று தெரிகிறது.

    இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும். ‘சோற்றுப் பருக்கை’, ‘உயிரின் விலை’, ‘அன்பு வெள்ளம்’, ‘மனிதாபிமானம்’ போன்ற கதைகளில் மனிதநேயமே வலியுறுத்திச் சொல்லப்படுகிறது.

    மற்ற கதைகளிலும்கூட முதிர்ச்சியடையாத இளம் மனங்களில் தோன்றும் தவறான எண்ணங்களும், அதன் விளைவுகளும், மனிதநேய அடிப்படையில் தரப்படும் வழிகாட்டல்களும் அடங்கியுள்ளன.

    ‘அன்பு வெள்ளம்’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு நிச்சயம் உங்களுக்கு பயனுள்ள ஒரு புத்தகமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு சிறு விளக்குக்கூட, அறையில் மண்டிக்கிடக்கும் இருளை அகற்றிவிடுகிறதே! அந்த நோக்கிலேயே எழுதப்பட்ட இந்தக் கதைகள் உங்கள் மன அறைக்கு வெளிச்சமூட்டினால் மகிழ்ச்சியடைவேன்.

    கதைகளுக்கான காட்சிகளை உயிரோட்டத்துடன் சித்தரித்த ஓவியர் திரு. J.P. சிவம் அவர்களுக்கு என் நன்றி.

    புத்தகமே நமக்கு நல்ல தோழனாகவும், சிறந்த ஆசானாகவும் இருக்கிறது. எனவே புத்தகம் படிக்கும் வழக்கத்தை சிறு வயதிலிருந்தே நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    வி.ர. வசந்தன்

    1. சம்மட்டி அடிகள்

    முறுக்கு டப்பாவை ஒரு கையிலும், டீ கேனை மறுகையிலும் தூக்கிக்கொண்டு கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்த தண்டபாணிக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது. பகல் முழுக்க இந்தச் சுடுமணலில் நடந்து நடந்து விற்பதுகூட பெரிதாகப்படவில்லை. ஆனால் சிலர் தன்னை ஒரு மனிதனாகக்கூடக் கருதாமல் சுடுசொற்களை வாரியிறைப்பதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.

    எல்லோரையும்போல தனக்கொரு தந்தை இருந்திருந்தால் இப்படியொரு அவலநிலை வந்திருக்குமா என்று ஏங்கினான் அவன். இந்த வியாபாரத்தில் கிடைக்கும் சொற்ப வருமானதான் அனைத்துச் செலவுகளும். அம்மா நாலு வீடுகளில் வேலை செய்வதில் கிடைக்கும் பணமே வயிற்றுப்பாட்டுக்கு உதவுகிறது.

    மணலில் கால் புதைய நடந்துகொண்டிருந்தவன் வட்டமாக அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்து அங்கு நகர்ந்தான்.

    முறுக்கு... முறுக்கு... சூடா டீ...

    உரக்க கூவியவாறு அவன் வர, அந்தக் கூட்டத்தில் ஒருவன், டேய் மச்சி, டீ வாங்குடா என்றான் அருகில் இருந்தவனிடம்.

    தண்டபாணிக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவர்கள் அருகில் சென்று நின்றுகொண்டான்.

    டேய் தம்பி, முறுக்கு எப்ப போட்டது?

    இன்னிக்கு காலையில் போட்டதுதான் சார். மொறப்பா இருக்கும் என்றவன் டப்பாவைத் திறந்து ஒரு முறுக்கை எடுத்து நீட்டினான்.

    அதை வாங்கி உடைத்து வாயில் போட்டுக்கொண்டவன். தூ, தூ, தூ என்ன உப்பு என்று துப்பியவாறு அதை மணலில் வீசியெறிந்தான்.

    டீ எப்படி இருக்கு?

    சூடா இருக்கு என்ற தண்டபாணியின் குரல் விழுந்து போயிருந்தது.

    ஊத்து பார்ப்போம்.

    டீயாவது வாங்க மாட்டார்களா என்ற ஆசையில் ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தான். அதை வாங்கி உறிஞ்சியவன் சர்க்கரை விலை ரொம்ப ஏறிப் போச்சாக்கும் என்று நக்கலாகக் கேட்க, வேணும்னா சக்கர போட்டு ஆற்றித் தரேன் சார் என்றான் அவன் அவசரமாக.

    ஏற்கனவே குளுந்து போய்கிடக்கு. இதுல ஆற்றி வேற தர்றியா. ஒண்ணும் நல்லா இல்ல, போ என்று விரட்டினான் அவன்.

    மனமொடிந்து போன தண்டபாணி நின்று கொண்டிருந்தான். ஏய் என்னடா நிக்கற?

    விளையாட்டு ஆர்வத்திலிருந்த அந்த ஆளிடமிருந்து சீற்றமாக வந்தது கேள்வி.

    காசு…

    எதுக்குக் காசு அவன் முறைப்பாகப் பார்க்க, அந்த முறுக்குக்கும் டீக்கும் சார் என்றான் அவன் பரிதாபமாக.

    அடி செருப்பால… வாயில் வைக்க முடியாததுக்கு காசா என்றவன் டீயை மணலில் கொட்டிவிட்டு டம்ளரை அவனிடம் தூக்கி வீசினான்.

    மற்றவர்களும் அவன் மீது கோபப்பார்வையை வீச, பயந்துபோன தண்டபாணி டம்ளரை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டினான்.

    மனது ரணமாகி வலித்தது. சோர்ந்து போனவனாக அருகிலிருந்த பூங்காவில் சென்று அமர்ந்தவன், மேற்கொண்டு விற்பதற்கு மனதற்றவனாக வீட்டிற்குச் சென்றுவிடலாமா என்று எண்ணினான்.

    அப்போது, என்ன தம்பி வியாபாரமெல்லாம் எப்படி? என்று கேட்டவாறு அவனருகில் வந்து உட்கார்ந்தார் கடற்கரைக் காவலரான சிவலிங்கம்.

    அவன்மீது இந்தக் கடற்கரையில் பரிவுகாட்டுகிற ஒரே ஆள் அவர்தான். அவனது வாடிய முகத்தைப் பார்த்ததும் வியாபாரம் சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டவராக, என்ன ஓட்டமில்லியாக்கும் என்று அவன் முகத்தைப் பரிவுடன் பார்த்தார்.

    தன் கண்களில் நிறைந்துவிட்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன், நடந்ததை அவரிடம் கூறி வருந்தினான்.

    வாங்கலேன்னாகூட பரவாயில்லை. ஆனா ஒரு மனிதத்தன்மைகூட இல்லாம, தூக்கி வீசினதை என்னால பொறுத்துக்க முடியல… இதுக்கு நம்ம துறைமுகத்துல போய் மூட்டை தூக்கினாகூட பொளச்சிக்கலாம்போல இருக்கு.

    என்ற தண்டபாணியை ஆதரவுடன் பார்த்தார் அவர். "அட, விடு தம்பி, இதுக்குப் போய் இப்படி வருத்தப்படறியே… இந்த சமுதாயம், இந்த ஜனங்க

    Enjoying the preview?
    Page 1 of 1