Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalaratha Ullam
Thalaratha Ullam
Thalaratha Ullam
Ebook136 pages46 minutes

Thalaratha Ullam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு ஏழை விவசாயியான அப்பா, தன் மகள் நன்கு படித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால், அதற்கு மாறாக அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்தது என்ன? எப்படி அதற்கு தீர்வு கண்டார்? என்பதையும் வாசித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580160510485
Thalaratha Ullam

Read more from W.R. Vasanthan

Related to Thalaratha Ullam

Related ebooks

Reviews for Thalaratha Ullam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalaratha Ullam - W.R. Vasanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தளராத உள்ளம்

    (சிறுகதைகள்)

    Thalaratha Ullam

    (Sirukadhaigal)

    Author:

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பாட்டியிடம் கற்ற பாடம்

    2. தளராத உள்ளம்

    3. இரண வைத்தியம்

    4. வடநாட்டுத் தோழி

    5. ஊருக்கு ஒரு பிள்ளை

    6. முடி சூடா ராணி

    7. சோம்பலுக்கு ஒரு பாடம்

    8. மாயச் சிறை

    9. கப்பலோட்டிய தமிழன்

    10. காயம்பட்ட கால்

    11. தங்கம் பித்தளை ஆகுமா?

    12. அப்பாவுக்கா புரியாது?

    முன்னுரை

    சென்ற தலைமுறைச் சிறுவர்களை விடவும், இந்தத் தலைமுறைச் சிறுவர்களுக்கு எதிர்ப்படும் பிரச்சனைகள் அதிகம். வீடும், பள்ளிக்கூடமும் மட்டுமே உலகம் என்றிருந்த காலம் போய், அவர்களது எல்லைகள் இந்தச் சுவர்களைத் தாண்டி விரிந்துவிட்டன.

    சமுதாயச் சூழல்களின் மாறுதல்களுக்கு ஏற்ப அவர்கள் சிந்தனைகளிலும், செயல்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு காலம் இது. கதைகள் சொல்லி பாட்டிமார் வளர்த்த நன்னெறிகளும், பாலூட்டிச், சீராட்டும் போதே அன்னையர் நெஞ்சில் விதைத்த அறநெறிகளும் தொலைக்காட்சி மோகத்தின் முன் மண்டியிட்டு நிற்கின்றன.

    இது ஒரு புறமென்றால், எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை இன்னொரு புறம் பிஞ்சு மனங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. பெரும் சூறாவளியில் அகப்பட்ட பறவைக் குஞ்சுகளைப் போலச் சிறகடித்து, எதிர்நீச்சலிட்டுக் கரைசேர அவர்கள் பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது.

    இன்றைய சிறுவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் எதிர்ப்படுகிற அழுத்தங்களை பல்வேறு கோணங்களில் அலசிப் பார்த்து, இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களே, இந்தக் கதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகளின் மையக் கருவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று மனித நேயம் குறைந்து, மனிதன் சுயநலப் போர்வைக்குள் தன்னை முடக்கிக்கொண்டு கிடக்கிறான். பிறரைக் குறித்த அக்கறை பெரிதும் குறைந்து வருவதைக் கண்ணெதிரில் காண்கிறோம். எனவேதான் ஒவ்வொரு கதையிலும் மனித நேயம் மேலோங்கி நிற்பதில் கவனம் செலுத்தியுள்ளேன்.

    இந்தப் புத்தகத்தைப் படிக்கும் சிறுவர்களும், சிறுமிகளும் நிச்சயம் நற்பயனடைவார்கள் என்று நம்புகிறேன். இன்றைய சமுதாயப் போக்கினால் கறைப்பட்ட எண்ணங்களையும், நோக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் இந்தச் சிறுகதைத் தொகுப்பினை அவர்கள் முன் வைக்கிறேன்.

    வி.ர. வசந்தன்

    1. பாட்டியிடம் கற்ற பாடம்

    மதனின் பெரிய பெட்டியை போர்ட்டர் தலையில் தூக்கிக்கொண்டார். அவனது ஜோல்னா பையையும் மற்றொரு துணிப்பையையும் இரு தோள்களிலும் தொங்க விட்டுக்கொண்டார். மீந்திருந்த அவன் புத்தக மூட்டையைக் கையில் தூக்கிக்கொண்டு, இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

    அவசரமாக அவரைத் தடுப்பதுபோல் முன்னால் வந்த மதன், என்ன போர்ட்டர், இந்தப் பையை விட்டுட்டீங்களே என்று தன் கையில் வைத்திருந்த சின்னத் தோல் பையை அவரிடம் நீட்டினான்.

    புருவத்தை நெரித்து, அவனை மேலும் கீழும் நோக்கிய போர்ட்டர், எனக்கு இரண்டு கைதான் இருக்கு. இதுக்கு மேல எதைத் தூக்க... அது சின்ன பைதானே. நீயே கையில வச்சுக்க என்று மேலே நடந்தார்.

    மதனின் முகம் சிவந்தது. இவ்வளவு சாமான்களையும், இதோ இருக்கிற இரயில் நிலையம் வரை தூக்கிட்டு வர பத்து ரூபாய்க்குக் குறைய மாட்டேன்னு நீங்க மட்டும் பிடிவாதம் பண்ணினீங்க... உங்களுக்குப் பணத்தைக் கொடுத்துட்டு நான் தூக்கிட்டு வரணுமா? என்று கேட்டான் கடுகடுப்புடன்.

    அவனை வெறுப்புடன் பார்த்த போர்ட்டர், அடுத்தவங்க கஷ்டம் தெரியாத ஜென்மங்க என்று முணுமுணுத்தவாறு, ‘சரி, இப்படிக் கொண்டா" என்று அந்தப்பையை அவன் கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டார்.

    அவரை வென்றுவிட்ட திருப்தி மதனின் முகத்தில் தோன்றியது.

    இரயிலில் சரியான கும்பல். எப்படியோ உட்காருவதற்கு இடம் கிடைத்தது. விடுதியில் தங்கி படித்து வந்த மதன் விடுமுறைக்கு ஊர் திரும்பிக் கொண்டிருந்தான். இந்த இரவு பாசஞ்சர் இரயிலைவிட்டால், அவனது கிராமத்திற்கு வேறு இரயிலும் இல்லை. எனவே எப்படியாவது சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு போய்த்தான் ஆக வேண்டும்.

    மதனின் அப்பா ஒரு கடுமையான உழைப்பாளி. ஒரு சாதாரண விவசாயியாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் தன் உழைப்பால் இன்று பல ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார். தன் இளமைப் பருவத்தில் அவர் அனுபவித்த வறுமையையும், கஷ்டங்களையும் அவர் என்றும் மறந்ததில்லை. எனவே அவர் எப்போதும் மற்றவர்களிடம் பரிவோடும், அன்போடும் நடந்து கொள்வார்.

    ஆனால் அதற்கு நேர் எதிர் விதமாக இருந்தது மதனின் நடத்தை. அவன் யாரையும் மதிப்பதில்லை. பிறர் சிரமங்களைப் புரிந்துகொள்வதுமில்லை. எதிலும் அலட்சியமாக இருப்பதும், தேவையில்லாமல் பெருமை பாராட்டிக் கொள்வதும் அவனது குணமாகவே ஆகிவிட்டிருந்தது. அவனது தகப்பனார் பலமுறை இதைக் கவனித்துக் கண்டித்திருக்கிறார். ஆனாலும் அவனது போக்கு மாறுவதாக இல்லை.

    இரயில் ஓடிக் கொண்டிருந்தது. பொழுது நன்றாக இருட்டிவிட்டது. பொழுது விடியும்போதுதான் இரயில் ஊர் போய்ச் சேரும். அதுவரை இப்படி உட்கார்ந்துகொண்டே பிரயாணம் செய்வது எவ்வளவு சிரமம்? கூட்டம் குறைந்தால் சற்றுப் படுக்கலாம் என்று நினைத்த மதன், ஒவ்வொரு நிலையத்திலும் இரயில் நிற்கும்போது, யாராவது இறங்குவார்களா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இருவர் இறங்கினால் மூவர் ஏறிக் கொண்டிருந்தார்கள். ‘இது ஏது தொல்லை’ என்று மனதுக்குள் சலிப்படைந்தான் அவன்.

    அடுத்த நிலையத்தில் இரயில் நின்றபோது மூட்டை முடிச்சுகளோடு ஏறிய ஒரு மூதாட்டி, மதன் எதிரே வந்து அமர்ந்துகொண்டாள்.

    இரயில் புறப்பட்டதும், அவள் மதனைப் பார்த்து, தம்பி, நீ எந்த ஊர் போகணும்? என்று கேட்டாள்.

    ‘நான் எந்த ஊர் போனால் இவளுக்கென்ன’ என்று மனதுக்குள் கறுவிய மதன், வேலாண்டிப் புதூர், பாட்டி... எதுக்குக் கேட்கற? என அவள் முகத்தைப் பார்த்தான்.

    அப்படியா, நம்ம பக்கத்து ஊர்தான்... எனக்குக் காட்டுப்பட்டி என்றவாறு தன் சுருக்குப் பையைப் பிரித்து வெற்றிலையை எடுத்து வைத்துக்கொண்டு அதில் சுண்ணாம்பைத் தடவலானாள் பாட்டி.

    நிதானமாக வெற்றிலையைச் சுருட்டி வாய்க்குள் அடக்கியவள் மதனிடம், வேலாண்டிப் புதூர்ல, நீ யாரு மவன்? என்று கேட்டாள்.

    ‘அவசியமான கேள்வி’ என்று மனதுக்குள் வெகுண்ட மதன். எதுக்குக் கேட்கற பாட்டி? இப்ப உனக்கு என்ன வேணும்? என்றான் எரிச்சலுடன்.

    அவனைப் பார்த்துப் பொக்கைவாயால் சிரித்தவள், ஒண்ணுமில்லப்பா, உடம்புக்கு முடியல கொஞ்சம் படுக்கணும். இப்படி தரையில் படுக்கறேன்... இந்த மூட்டை முடிச்சுகளை கொஞ்சம் பார்த்துக்கறியா? என்றாள் மெதுவாக.

    ‘ஆகா, ஆளைப்பார், படுக்கணுமாமில்ல? சந்தர்ப்பத்தைப் பார்த்து இரண்டு மணி நேரமா காத்திருந்தா, இப்ப ஏறியவளுக்கு ரொம்ப அவசரம்!’ என்று நினைத்தவன் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தயங்கினான்.

    அவனது பதிலை எதிர்பாராத பாட்டி, ஒரு துண்டை எடுத்து, இரண்டு இருக்கைகளுக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1