Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alaikadalin Naduve...
Alaikadalin Naduve...
Alaikadalin Naduve...
Ebook124 pages47 minutes

Alaikadalin Naduve...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அலைகடலின் நடுவே" நாவல் மிகச் சிறந்த இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாவல் அழகாக விளக்கியுள்ளது. பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளையும் திரைப்படம் போல அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியின் சிறப்பும் மேன்மையும் இந்த நாவலின் மூலம் உணர முடிகிறது.

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580155911071
Alaikadalin Naduve...

Read more from R. Sambavi Sankar

Related to Alaikadalin Naduve...

Related ebooks

Reviews for Alaikadalin Naduve...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alaikadalin Naduve... - R. Sambavi Sankar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அலைகடலின் நடுவே...

    Alaikadalin Naduve...

    Author:

    சாம்பவி சங்கர்

    R. Sambavi Sankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sambavi-sankar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 1

    அதிகாலை நேரம்.

    மல்லிகைத் தோட்டத்தில் இருந்து தவழ்ந்து வரும் நறுமணக் காற்று சிலுசிலுவென குளிர்ச்சியாய் வீசிக்கொண்டிருந்தது. பனியின் சில்லிப்பில் தாவரங்கள் சிலிர்த்து விரைத்து அங்கங்கே நின்றுகொண்டிருக்க, கொண்டைச் சேவல்கள், ‘கொக்கரக்கோ...’என அவற்றின் பாசையில் சுப்ரபாதம் பாடி, பூமியைத் துயில் எழுப்பின. அதே நேரம், எங்கோ உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து...

    ‘செல்லாத்தா... செல்ல மாரியாத்தா...

    எங்க சிந்தனையில் வந்து அரை வினாடி நில்லாத்தா...’

    -என, அந்த நேரத்திலும் அலுப்பில்லாமல் பக்திமணம் கமழ பாடிக்கொண்டிருந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி.

    கோதை மெல்லப் புரண்டு படுத்தாள். விடிந்துவிட்டது என்று அவள் மனம் உணர்த்திய போதும், இமைகளில் மிச்ச சொச்ச தூக்கம் தூளி கட்டித் தொங்க, அப்படியே சில நிமிடம் கிடந்தாள். முதல் நாள் போட்ட பள்ளிச் சீருடையைப் பிரிய மனமில்லாமல், அப்படியே படுத்து உருண்டதில், அது கசங்கிப் போயிருந்தது. ஆனாலும், கசங்காத குட்டி ரோஜாவைப் போல் இருந்தாள் கோதை.

    குண்டு குண்டு கருநாவல் விழிகள். பம்பளிமாஸ் கன்னம். ரிப்பனின் இறுக்கமான அடக்குமுறையை மீறி, வெளியே முகத்தில் விழுந்திருந்தன முடிக்கற்றைகள். பூசினாற்போன்ற உடல் வாகு. வீட்டு வறுமைக்கும், கோதையின் தோற்றத்துக்கும் கிலோ மீட்டர் கணக்கில் டிஸ்டன்ஸ் இருந்தது.

    எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். அம்மா மலரோ, பூ வியபாரத்துக்குக் கிளம்பிப் போயிருந்தாள் என்று அவள் படுத்திருந்த இடம் சொன்னது. தங்கை ராணி, கோரைப் பாயிலிருந்து மண் தரைக்குச் சென்று, வாயில் எச்சில் ஒழுக தூங்கிக் கொண்டிருந்தாள்.

    தோட்ட வேலையும், பள்ளிக் கூடமும் மனத்திரையில் எட்டிப்பார்க்க, திடீரென தன்னைச் சுறுசுறுப்பாக்கிக் கொண்டாள். அந்த பதினொரு வயதுத் தென்றல், மல்லிகைத் தோட்டத்தை நோக்கி, ‘வேகு வேகு’ என ஓடுவது போல் நடந்தாள்.

    மெல்லிய இருளிலும் அவள் கால்கள், பாதைகளை அடையாளம் கண்டுகொண்டு, விரைந்தன.

    பூங்கோதை, பால்யம் மாறாத சிறுமி. கவலையறியாக் கவிதை. பருவத்துக்கு வராத பச்சை மண்.

    தரையெங்கும் பனியின் ஈரம் படர்ந்து, சில இடங்களில் அது மண்ணைச் சேறாக்கி குழப்பி இருந்தது. அந்த மல்லிகைத் தோட்டம் குன்றுகள் சூழ்ந்த பிரதேசம் போல், இருளில் ஈரமாய்க் கட்சியளித்தது.

    இலைகளின் இடையில் உறங்கிய தேனீக்களும், செடிகளின் வேரடியில் பதுங்கி, கனவில் லயித்திருந்த சிறு சிறு சேற்று நண்டுகளும், பூங்கோதையின் துள்ளலான காலடி ஓசை கேட்டுத் தாறுமாறாய் ஓடி, எங்கெங்கோ அடைக்கலம் புகுந்தன.

    தோட்டத்தின் சொந்தக்காரர்கள் பூப் பறிப்பவர்களுக்கு வசதியாக, ஆளுக்கொரு பையைக் கொடுப்பார்கள். இரண்டு கிலோ பிடிக்கும் அளவுக்கு, இடுப்பில் கட்டிக்கொள்ளும் நாடாவோடு அந்தப் பை தைக்கப்பட்டிருக்கும்.

    பூங்கோதை அந்தப் பையை இடுப்பில் கட்டிக்கொண்டு பூப் பறிக்கத் தொடங்கினாள். அவளது கொஞ்ச நஞ்ச தூக்கக் கலக்கமும் தெறித்து ஓடிவிட்டது.

    அருகில் இருந்த பெண்ணிடம் அக்கா, நான் கிழக்குப் பக்கம் போய், அங்கே இருக்கும் இரண்டு சாலில் பூப்பறிக்கிறேன் என்று கூறிக்கொண்டே பூப்பறிக்க ஆரம்பித்தாள் கோதை.

    கம்ப்யூட்டர் கீபோர்டில் டைப் அடிப்பது போல, கட கடவென்று இரண்டு கைகளாலும் பூவைப் பறித்து, இடுப்பில் கட்டியிருக்கும் பையில் விறுவிறுப்பாகப் போட்டுக் கொண்டிருந்தாள். கீழே துளிர்த்துவரும் இளஞ்செடியை மிதிக்காமல், பக்குவமாக அடிவைக்க வேண்டும். காலை நேரம் என்பதால் செடியில் கட்டெறும்புகள் எங்கே இருக்கிறது எனத் தெரியாது. பூப் பறிக்கும் அவசரத்தில், கை விரல்களில் நறுக் நறுக் என, பீஸ் வாங்காமல் ஊசி போடும் கட்டெறும்புகளைத் தூசியைத் தட்டுவது போல், தட்டிவிட்டுக் கொண்டே பூப் பறித்தாள் கோதை. கொத்தாக இருக்கும் குருத்துகளையும் அரும்புகளையும் சேதப்படுத்தாமல் கவனமாகப் பறிக்க வேண்டும். அப்படித்தான் பறித்தாள்.

    வேகவேகமாக அடியெடுத்து வைக்கும் போது, சின்னச் சின்ன முட்கள் கால்களை அதிரடியாய் நலம் விசாரிக்கும். ஆறாவது படிக்கும் சிறுமியான பூங்கோதை, இப்படித்தான் தோட்டத்தில் பகுதி நேர விவசாய கூலியாய் வேலை செய்துகொண்டு இருக்கிறாள்.

    பளீர் என்று விடிந்துவிட்டது. பறவைகள் குறுக்கும் நெடுக்குமாக வானில் பறந்தன. வானம் தெளிவாக இருந்தது.

    பரிமளாக்கா, மணி ஏழரை ஆயிடுச்சி, நான் ஸ்கூலுக்கு போகனும். பூவை அளந்துக்கோங்க என்று கூறியதும், தோட்டக்கார பரிமளா பூவை எடைபோட்டாள். ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் அதிகமாக இருந்தது. கோதை, தன் இடுப்பில் சொருகியிருந்த நோட்டில் அன்று பறித்த பூவின் எடையைக் குறித்துக்கொண்டு வீடு நோக்கி ஓடிவந்தாள்.

    ***

    ஓணாங்கொடியால் வேலி போடப்பட்ட படலுக்கு உள்ளே அவர்களின் குடிசை இருந்தது. வெளியே வலது மூலையில் அகலமாகக் குட்டிப் பலகைப் போல 4 கருங்கல்லைப் போட்டு அந்த இடத்தில், கழுத்து ஒடிந்த இரண்டு பானைகளில் தண்ணீர் நிரப்பட்டு இருந்தது. சோற்றுப் பருக்கையுடன் சில அலுமினியப் பாத்திரங்கள் நசுங்கி வளைந்த நிலையில் அதன் அருகே கிடந்தன. அதுதான் அவர்கள் வீட்டின், பாத்திரம் தேய்க்கும் புழக்கடை.

    இன்னொரு புறம், இரண்டு கோழிகள் மண்ணைக் கால்களால் பறித்து, எதையோ தேடி, கர்மசிரத்தையாகக் கொத்தித் தின்று கொண்டிருந்தன.

    கூரைவீட்டின் திண்ணைச் சுவர் இடிந்து விழுவதற்கு அடுத்த மழையை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அந்தத் திண்ணையிலும் பயமில்லாமலும், முதல் நாள் குடித்த சாராய போதை தெளியாமல், உடலில் ஆடை இருக்கிறதா என்ற நினைப்பு கூட இல்லாமல், உள்ளே போட்டிருந்த டிராயர் தெரிய, கைலியுடன் ஒரு ஜடம் உருண்டு கிடந்தது. அதன் பெயர் மாரியப்பன். கோதையின் அப்பா.

    வேகமாக வீட்டிற்குள் ஓடிவந்த கோதை, அப்பா மீது ஒரு அழுக்கு வேட்டியைத் தேடிப் போர்த்திவிட்டாள். அடுத்து அவசரமாக நாலு விறகு வைத்து, அடுப்பைப் பற்றவைத்தாள். புழக்கடையில் இருந்த பாத்திரத்தைக் கழுவி உலை வைத்துவிட்டு, வேகவேகமாக வெளியே ஓடிப்போய் தெருவில் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்த தங்கை ராணியைக் கூட்டிவந்து, குளிப்பாட்டி அவளுக்கு சீருடை போட்டுவிட்டாள்.

    இதற்கிடையில் உலையில் அரிசி போட்டு சாதம் வடித்தாள். ரேஷன் அரிசியின் வாசம் ஊரெல்லாம் வீசியது. பலமுறை அரிசியை கோதை கழுவியதால் வாடை கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது.சோற்றில் தண்ணீர் ஊற்றித் தொட்டுக் கொள்ள, கோடிவீட்டு குப்பம்மா கொடுத்த நார்த்தங்காய் ஊறுகாயை வைத்து ராணியிடம் சாப்பிடக் கொடுத்தாள்.

    அக்கா, தினமும் கஞ்சியா... வேணாம் கா என, நான்காவது படிக்கும் ராணி முரண்டு பிடித்தாள்.

    அம்மா, பூ விக்க டவுனுக்கு போயிருக்காங்க. வரும்போது நீ திங்கறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வருவாங்க. இப்ப இந்த கஞ்சியைக் குடிச்சிக்க. என்று ராணியை சமாதானப்படுத்தி குடிக்கவைத்தாள்.

    கிழிந்த பையையும், அதைவிட கிழிந்த செருப்பையும் மாட்டிக்கொண்டு. தங்கை

    Enjoying the preview?
    Page 1 of 1