Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavukku Kalyanam
Ammavukku Kalyanam
Ammavukku Kalyanam
Ebook169 pages1 hour

Ammavukku Kalyanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சீதாவுக்கு நல்ல சங்கீத ஞானம். அப்பா சிரமப்பட்டு பாட்டு வாத்தியார் வைத்து, மூன்று வருட காலம் பயின்றாள். கல்லூரியில் பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றாள். கண்டதே காட்சி என்று மயங்கும் இளமைப் பருவத்தில், அவள் முதல்முதலாக சந்தித்த ஆணழகன் திவாகரன். கண்டதும் காதலின் விளைவாக சீதா கர்ப்பமாகிறாள். இது, சீதாவின் பெற்றோருக்கு தெரிந்ததா? இல்லையா? அதன்பின் சீதாவின் வாழ்க்கையில் நடந்த சில அதிரடி திருப்பங்களையும் வாசித்து அறிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580155608896
Ammavukku Kalyanam

Read more from Lakshmi

Related to Ammavukku Kalyanam

Related ebooks

Reviews for Ammavukku Kalyanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammavukku Kalyanam - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மாவுக்குக் கல்யாணம்

    Ammavukku Kalyanam

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    வாசலில் வந்து கேட்டருகே நின்றபடி சீதா எட்டிப் பார்த்தாள். தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டே மெள்ள பொடி நடையாக, அந்தக் காலனியின் நடுவே ஓடிய சிறிய தார்ப் பாதையைக் கடந்து, வெளியே பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய கேட்டைத் தாண்டிச் சாலைக்குள் இறங்கிக் கொண்டிருந்தனர்.

    தலை குளித்துவிட்டு இடைவரை தொங்கிய நீண்ட முடியை நீவித் தளரப் பின்னலாகத் தொங்க விட்டிருந்தாள். தோட்டத்து முன்புறக் காம்பவுண்ட் சுவர்மேல் படர்ந்து மாடியை எட்டிக் கொண்டிருந்த நித்யமல்லி மொக்குகளை முதல்நாள் மாலையே பறித்துத் தானே சரமாகத் தொடுத்துக் கட்டி வைத்திருந்தாள். குப்பென்று ஈரத் துணிக்குள்ளே மலர்ந்துவிட்ட சரத்தை தலைப் பின்னல் மீது தொங்கி வழிய சூட்டிக்கொண்டு, நீல வாயில் புடவையின் தலைப்புக் காற்றில் பறக்க, மெல்ல அசைந்து நடந்தவளது பின்னழகைப் பார்த்துப் பிரமித்துப்போய் நின்றாள் சீதா.

    கமலவல்லி காலனியில் அவர்களது வீடுதான் உட்பக்கமாகக் கடைசியாக அமைந்துவிட்டிருந்தது.

    ஒரு காலத்தில் சுற்றுச் சுவர்களுடன் மாமரங்களும் மகிழம் பூ மரங்களும் அடர்ந்து வளர்ந்து, நடுவே பல பூச்செடிகள் காற்றில் ஆட, ஒரு சிறு வட்ட அமைப்பிற்குள் கண்ணன் குழல் ஊதிக்கொண்டு பொம்மையாக நிற்க, சுற்றிலும் சல்லடைக் கண் வழியே தண்ணீர் பல வண்ணங்களில் வட்டத்தைச் சுற்றிப் பீய்ச்சிக் கொண்டு, அதைச் சுற்றிக் குழந்தைகள் ஓடிக் கலகலப்பை உண்டாக்கிய பெரிய மனிதர் ஒருவருடைய பெரிய பங்களா. நாளாவட்டத்தில் குழந்தைகள் பெரியவர்கள் ஆகி, பல திக்கிலும் வாழ்க்கை தேடி மறைய, பங்களாவின் சொந்தக்காரரும் மறைய... கட்டடம் சிதிலம் அடைந்து மரங்கள் சில பட்டுப் போக, செடிகள் வாடி மடிய கண்ணனது குழல் காணாமற் போக, அந்தச் செயற்கை ஊற்றிலே காட்டுச் செடிகள் மண்டிக்கிடக்க, சொத்துக்கு உரியவர்கள் அதைப் புதுப்பிக்கச் சிரத்தையின்றி வந்த நல்ல விலைக்கு அந்தக் காண்டிராக்ட்டரிடம் விற்று விற்றிருந்தனர்.

    வாங்கின மனிதர் மகா கெட்டிக்காரர். கொடுத்த விலைக்குமேல் பத்து மடங்கு லாபத்தை எடுத்து விட்டிருந்தார்.

    அந்தச் சுற்றுச் சுவரைச் சீர்படுத்தி அதற்குள் எதிர் எதிராகக் குட்டி வீடுகள் ஒன்பதை காம்பவுண்ட் சுவரோடு கட்டி, நடுவே தார் ரோடு போட்டு வாசலில் பாதுகாப்புக்குப் பெரிய கேட் போட்டுத் தந்து, காவலுக்கு ஒரு கூர்க்காவையும் அமர்த்திக் கொடுத்திருந்தார். வாசல் அருகே மீதமிருந்த பூமியில் தன் டாக்டர் மகனுக்கு ஒரு சிறு கிளினிக்கைக் கட்டிப் போட்டிருந்தார்.

    ஆனால் அவர் மகன் அமெரிக்காவுக்கு மனைவியுடன் போய்விடவே, புதிதாகப் பாஸ் செய்து போர்டு போடத் துவங்கியிருந்த டாக்டர் கார்த்திக்குக் அந்த கிளினிக்கை விற்றுவிட்டிருந்தார். அந்தக் காலனிக்குள்ளிருந்த கடைசி வீட்டை வாங்க முடிவெடுத்தது அவளுடைய அப்பாதான்.

    அடுத்த வீட்டில் தோசை வார்ப்பதை நம் வீட்டு ஜன்னல் வழியே பார்த்துவிடலாம். அப்படி ஒரு நெருக்கமாக நெருப்புப் பெட்டியை வரிசைப்படுத்தியது போல வீடுகள் இருந்தன. இங்கே வேண்டாம் என்று அவள் ஆரம்பத்திலே தடுத்தாள். நான் பல இடங்களில் சுற்றிப் பார்த்துவிட்டேன். இந்தக் காலனியைப் போல படு சுத்தமாக... வேறே புதுசா உருவாகியிருக்கிற வேறு எந்தக் காலனியும், பிளாட்டுகளும் இல்லை. உண்மையில் பார்க்கப் போனால் சென்னையில் விலைக்கு வாங்க ஊசிகுத்தக்கூட இடம் இப்போ இல்லை. சோறு இல்லா விட்டாலும் பரவாயில்லை. நமக்குத் தலைக்குமேல் ஒரு கூரை அவசியம் வேண்டும். சொந்த வீடு இல்லாமல் நாம் பட்டணத்திலே வாழ முடியாது. வாடகை எக்கச்சக்கம். திடீரென்று காலி பண்ணுன்னு வீட்டுக்காரன் நோட்டீஸ் விடுவான். அப்பா பயமுறுத்தினார்.

    அத்தனை நெருக்கமான குடியிருப்புப் பகுதியில் வம்பு தும்புகள் அதிகம் இருக்கும் என்று அவளுக்குப் பயம்.

    வேறு தாராளமாக, கொஞ்சம் இடைவெளி விட்டுக் கட்டிய வீடு ஏதாவது இருந்தால்...?

    மகாபலிபுரம் வரை சுற்றிப் பார்த்தாச்சு. ஊருக்கு வெளியே தென்னந் தோப்புக்குள்ளே வீட்டை வாங்கிக் குடியிருந்தால், எவனாவது வந்து மென்னியைப் பிடித்தால் கூட உதவிக்கு அக்கம்பக்கத்தார்கள் ஓடிவரமாட்டார்கள். இந்தக் காலனியைப் பார். இதற்கு ஒரு அமைப்பு இருக்கு. பெருக்க ஒரு ஆளைப் போட்டிருக்காங்க. வாசலில் பாதுகாப்பிற்காக ஒரு காவலாள். வீட்டைப் பூட்டிவிட்டு அடுத்த வீட்டுக்காரரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு வெளி வாசலுக்குப் போகலாம். உனக்கு மெட்ராஸைப் பத்தி ரொம்பத் தெரியுமே... கொஞ்சம் உயர்மட்டவாசிகள் நடுவில் போய் நாம் வசிக்க ஆரம்பிச்சா எதிர் ஃபிளாட்டிலிருந்தாலும் ஏன்னு கேட்க மாட்டான். ஹாப்பி நியூ இயர்... என்று ஒரு வாழ்த்து சொன்னால் எதையோ வாரிக் கொடுத்துவிடுவது போல முகத்தைச் சுளித்துக் கொள்வார்கள் அக்கம் பக்கத்தார்கள். இந்தக் காலனி அப்படி இல்லை. எல்லோரும் நம்மைப் போல சாதாரணமானவர்கள். அண்ணா அக்கான்னு உறவு வச்சுக்கொண்டு சுமுகமா பழகுறாங்க.

    பிறகு காப்பிப் பொடி கொடு, கடுகு கடன் கொடுன்னு வந்து அசட்டையாக ஒட்டிப்பாங்க.

    அது தப்பில்லை சீதா. இந்தக் காலத்திலே இனி மேலே நாம் பட்டணத்தில் இருந்தாலும் சரி கிராமத்தில் இருந்தாலும் சரி, அக்கம் பக்கத்தாருடன் அனுசரித்துக் கொண்டு போகணும். அப்பத்தான் நிம்மதியாக வாழ முடியும்.

    என்னவோ அப்பா உங்க இஷ்டம். உங்க பணத்தைப் போட்டு வாங்கப் போறீங்க.

    இதை நான் சாம்பவிக்காக வாங்கறேன். அவ பேரிலேயே எழுதி வச்சுடப் போறேன். குழந்தையும் இப்போது வேலை செய்ய ஆரம்பிச்சுட்டா, இந்தக் காலனியில் வீடு வாங்கினால் பல செளகரியம். வெளியே சாலையில் இறங்கினால் கொஞ்ச தூரத்தில பஸ் நிலையம். இந்தப் பக்கம் திரும்பினால் கடைகள், மூலையில் பிள்ளையார் கோயில். அதுகிட்ட மருந்துக்கடை, பூக்கடை, துணிக்கடை, மளிகைக்கடைன்னு வரிசையா எல்லாம் இருக்கு. இன்னும் கொஞ்ச தூரத்திலே கலைக்கோயில்னு ஒரு சபா, அதில் மெம்பரா சேர்ந்துட்டா வாரத்துக்கு ஏதாவது ஒரு நாட்டியமோ, நாடகமோ, கச்சேரியோ பார்த்துக்கொண்டு பொழுதை இனிமையாகக் கழிக்க முடியும். போக்குவரத்துக்குக் கஷ்டப்படாம பொடி நடையா அங்கே போய்வர சுலபமா இருக்கும்.

    கூவம் நதியின் நாத்தம் அப்பப்போ... காத்தோட வரது. கிணற்று ஜலத்தில்கூட நதியின் நீர் இறங்கும்னு சொல்வாளே. வேறு ஒரு முட்டுக்கட்டை போட்டுப் பார்த்தாள்.

    கூவம் நதி மட்டுமா வாசனையைப் பட்டணத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறது. மூலை முடுக்குகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளும்தான் அங்கங்கே வாசனையைக் கிளப்பிக் கொண்டிருக்கு. நான் படிச்ச காலத்திலிருந்த பட்டணமா இது? ஜனத்தொகை நிரம்பி வழிஞ்சுக் கொண்டு இருக்கு. கார்ப்பரேஷன் குழாயில்கூடச் சேறும் மண்ணும் தண்ணியோட கொட்டறதே...

    ராத்திரி வேளையில் ஒரே கொசுவாம்.

    கொசுவலை போட்டுப்போம். நம்மை பொறுத்தவரை தண்ணீரை காய்ச்சிக் குடிப்போம், அப்படியே நீரில் கொஞ்சம் அசுத்தம் இருப்பது ஒரு வகையில் நல்லது. பல நோய்களைத் தடுக்க நமக்கு உடம்பில் சக்தி அதைக் குடித்ததும் கொஞ்சம் கொஞ்சமாகத் தானே உருவாகிவிடும். அப்பா சாமர்த்தியமாக எல்லாவற்றிற்கும் பதில் அளித்தார். பிடிவாதமாக அந்த வீட்டைத் தன் பேத்திக்கு வாங்கி வைத்து, தேவைப்பட்ட சாமான்களை வாங்கிப் போட்டு அவர்களைக் குடியேறச் செய்துவிட்டார்.

    மதுரையில் அப்பா ஒரு தட்டெழுத்து யந்திர விற்பனை நிறுவனத்தில் முக்கிய அலுவலராக வேலை பார்த்து ஓய்வடைந்தவர். அருகிலிருந்த கிராமத்தில் ஒரு வீடும் காய்கறித் தோட்டம் ஒன்றும் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அம்மா உயிருடன் இருந்திருந்தால் அவைகளை விற்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டாள்.

    கணவன் ஓய்வடைந்ததும் அந்தக் கிராமத்து வீட்டில், தோட்டத்தில் காய்க்கும் காய்களைப் பறித்து சமைத்து சாப்பிட்டுவிட்டு, கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டே காலத்தை நிம்மதியாகக் கழிக்க ஆசைப்பட்டாள்.

    ஆனால் அவள் தேடிய நிம்மதிக்குப் பதிலாக மகள் தந்த அதிர்ச்சியே அவள் வாழ்க்கைக்கு எமனாக வந்தது. சாம்பவி பிறந்த சில நாட்களில் அம்மா மாரடைப்பால் இறந்து போனாள். சாம்பவியின் வருங்காலத்தை உத்தேசித்துதான் அப்பா பட்டணத்தில் வீடு வாங்கினார்.

    அப்பாவுக்குக் சாம்பவி மீது உயிர். பேத்தி கல்லூரி படிப்பின் போது ஹாஸ்டலில் தங்க நேர்ந்தது. மகள் சீதா பட்டணத்தில் ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கும் இடம் இல்லாததால் அவள் வேலைக்குப் போகும் பெண்கள் வசிக்கும் விடுதியில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அப்பா மதுரையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தார். இப்படி ஆளுக்கு ஒரு மூலையாக இனியும் இருக்கத் தேவையில்லை. செக்ரெட்டரியல் கோர்சையும் முடித்துவிட்ட பேத்திக்கு நண்பர் உதவியால், ஒரு பிரபல நிறுவனத்தில் டைப்பிஸ்ட் கம் ரிஸப்ஷனிஸ்ட் என்றதொரு வேலையும் வாங்கி கொடுத்துவிட்டிருந்தார். கையில் இருந்த ரொக்கத்தைப் பேத்தியுடன் கூட்டுக் கணக்கில் வங்கியில் கட்டியிருந்தார்.

    அதில் வந்த வட்டி, பேத்தியின் சம்பளம், மகளுக்குக் கிடைத்த வருவாய் இவைகளை வைத்துக்கொண்டு அந்த வீட்டில் அவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து வாழ முடியும் என்பது அவர் எடுத்த முடிவான தீர்மானம். சிலமாத வாழ்க்கையில் சீதாவுக்கு அந்தக் காலனியைப் பிடித்துப் போயிருந்தது.

    வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு பள்ளிக்கூடம் போய்வர அலுப்பாக இருக்கவில்லை.

    மகளும் பேத்தியும் புறப்பட்டுப் போனதும், அப்பா வீட்டில் சும்மா இருக்கவில்லை. சுற்றிலுமிருந்த அந்த கையகலத் தோட்டத்தை அவர் கருத்துடன் பேணிக் கவனித்துக் கொண்டார். அவசரமாக அவள் அலம்பிப் போட்டுவிட்டுப்போன பாத்திரங்களைத் துடைத்து ஒழுங்காக அலமாரித் தட்டில் அடுக்கி வைத்தார். மீதி உணவுப் பொருட்களைப் பத்திரமாக ஃபிரிட்ஜில் வைத்து மூடினார்.

    அவர்கள் வேலையிலிருந்து திரும்பி வருவதற்குள் காப்பி போட்டு, தான் சாப்பிட்டுவிட்டு மீதியை பிளாஸ்க்கில் போட்டு தயாராக வைத்திருந்தார்.

    கொடியில் காயப் போட்டிருந்த துணிகளை கொடுத்து நடமாடும் இஸ்திரிக்காரரிடம் பெட்டி போட்டு, அவர்கள் வேலைக்கு உடுத்திப் போகத் தயாராக படுக்கை அறை முக்காலி மீது எடுத்து வைத்திருந்தார். தண்ணீர் மோட்டார் போடுவது... மின் விசையை அளவோடு துண்டித்துக் கணக்கில் வைத்துக் கொள்வது,

    Enjoying the preview?
    Page 1 of 1