Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pazhamozhi Kathaigal
Pazhamozhi Kathaigal
Pazhamozhi Kathaigal
Ebook190 pages1 hour

Pazhamozhi Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழமொழிகள் காலம் காலமாக நம்மிடையே புழங்கிவருபவை. வாழ்வியல் உண்மைகள். நல்ல கருத்துக்களை சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவை.

தர்மத்தின் ஒரு பகுதி தான் "பகிர்தல் அறம்" எனப்படுவது. இதை எளிமையாக அன்னம் இட்டு உண் என்றார்கள்.

பழமொழிகள் சொற்சித்திரங்கள். இவைகளுக்கு ஏற்ப கதைகள் புனைந்தேன். “தினமலர் வாரமலரில்” இவை வெளிவந்து பலரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதைகள். இப்போது "புஸ்தகாவிலும் படியுங்கள் பாராட்டுங்கள்"...

Languageதமிழ்
Release dateJan 10, 2022
ISBN6580100807917
Pazhamozhi Kathaigal

Read more from Vimala Ramani

Related to Pazhamozhi Kathaigal

Related ebooks

Reviews for Pazhamozhi Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pazhamozhi Kathaigal - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    பழமொழி கதைகள்

    சிறுகதைகள்

    Pazhamozhi Kathaigal

    Sirukathaigal

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அங்காடி

    2. மணல் குதிரைகள்

    3. அண்ணி

    4. ஆவாரம் பூ

    5. செம்பருத்தி

    6. சந்ததி

    7. தாய்க்கு ஒரு தாலாட்டு

    8. வெற்றி நிச்சயம்

    9. காட்டுவெளியிடை

    10. காதல் போயின்

    11. வேரென நீ இருந்தால்

    12. நாடகமே உலகம்

    13. களப் பலி

    14. மந்தாரை

    15. நீதி சாவதில்லை

    16. மயிலு

    17. மீரா

    18. குழல் இனிது யாழ் இனிது

    19. பார்யா ரூபவதி சத்ரு

    20. உன் கண்ணில் நீர் வழிந்தால்

    21. படிக்கட்டுகள்

    1. அங்காடி

    ஆமை நுழைஞ்ச வீடும் அமீனா நுழைஞ்ச வீடும் உருப்படாது.

    (ஒரு சிறு முன்னுரை. பழமொழிகள் நமது கலாசாரங்களைச் சுருங்கச் சொல்லும் சொலவடை. நாம் அதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோம். வாழ வேண்டிய விதங்களை சிறிய சிறிய மூதுரைகளில் நமக்குச் சொல்லும் சூத்திரம்) இனி கதைகள்

    சிதம்பரம் திகைத்துப் போனான். அவன் தாய் வள்ளியம்மை சொன்னதென்ன? இவன் நினைத்தது என்ன? அவள் சொன்னது.

    என்ன தம்பி அப்பாதான் இறந்துட்டாரு ஆனால் அவர் நடத்திய இந்த பொட்டி கடையை நீ நடத்து பா இந்த கடை சாகல்லை. அய்யாவோட ஆசீர்வாதம் உனக்கு என்னைக்கும் உண்டு.

    என்ன சொல்கிறாள் இவள்? இந்த சொத்தை பொட்டிக் கடைய வெச்சு நடத்தவா இவன் ஓடி வந்தான்? கல்லாவில் உட்கார்ந்து கொண்டு காசு சேகரிக்க வந்தானா? அதுவும் இந்த கிராமத்தில் மூக்காயியும் கண்ணாயியும்தான் இந்த கிராமத்தின் உலகமகா அழகிகள் அவர்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து இவன் வாழ்க்கை கழிய வேண்டுமா என்ன?

    இதோ பார் ஆத்தா, இந்தக் கிராமத்தில் குப்பை கொட்ட முடியாது. இதுக்கு முன்னாடி நீ போட்டிருக்கிற இந்த பொட்டி கடை என்ன சூப்பர் மார்க்கெட்டா? வேண்டாம். பேசாம இதை வித்துட்டு பட்டணத்துக்கு வா. ஏதாவது நாலு காசு பாக்கலாம்.

    வள்ளியம்மை குறுக்கிட்டாள்.

    எந்த வெற்றி ஆனாலும் உழைக்கணும் ஐயா உழைப்பிலேதான் இருக்கு வெற்றி நம்ம கையிலதான் இருக்கு.

    கேட்க நல்லா இருக்கும்மா… வீட்டுக் கடன்… எந்த நேரத்திலேயும் அமீனா வருவானா வருவானான்னு பார்க்கிறேன் வீட்டையும் கடையையும் ஜப்தி பண்ணினா என்ன மிஞ்சும்? ஆமை நுழைஞ்ச வீடும் அமீனா நுழைஞ்ச வீடும் உருப்படாது’ன்னு சொல்லுவாங்க.

    இல்ல தம்பி நான் சொல்றதை கேளு உங்கப்பா கடன்பட்டுதான், இந்த கடையை நடத்திதான் உன்னை படிக்க வைத்தார். இந்தக் கடையைக் காப்பாத்தறது நம்ம கடமை. ஐயாவோட கடையில ஒக்காந்து வியாபாரம் பார்த்தா உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் நானும் அப்பப்போ கடைக்கு வந்து உன்ன பாத்துக்கிறேன் அப்பாவை பார்த்து பார்த்துதான் நான் நிறைய வியாபார நுணுக்கங்களை எல்லாம் கத்துக்கிட்டு இருக்கேன்… உனக்கு அது உதவியாக இருக்கும். என்ன சொல்ற?

    சிதம்பரம் கோபமாக கிளம்பினான். வள்ளியம்மை யோசனையில் ஆழ்ந்தாள்.

    இந்த வீட்டை ஜப்தி செய்ய விட்டுவிடக்கூடாது இந்த வீட்டில்தான் பெரியவர் தன் இறுதி மூச்சை விட்டார். இவளுடைய கடைசி காலம் இங்குதான் முடிய வேண்டும். இவளுக்கு தெரியும் வங்கிக் கடனுக்காக அடிக்கடி சில டாக்குமெண்ட்ஸ் கையெழுத்துப்போட இவள் போனபோது அந்த மேனேஜரை இவள் நன்கு அறிவாள் ஒருமுறை அவர் கேட்டார்.

    என்னம்மா பெரியவரும் போயிட்டாரு. இனிமே நீங்க தனியா என்ன பண்ண போறீங்க? பேசாம இந்த வீட்டை வித்திட்டு கடனை அடைத்துவிட்டு நிம்மதியா இருங்க அம்மா.

    இவள் பேசவில்லை. அவள் மீண்டும் அந்த வங்கியை நாடிச் சென்றாள் மேனேஜரிடம் பேசினாள்.

    நான் கடன் கட்டிடறேன். எங்க வீட்டுக்காரரை கடனாளியாக்க விரும்பல நானே கடன் கட்டறேன்.

    எப்படிம்மா?

    என்னால முடியும். ஆனா நீங்க உதவணும். என்றவள் தனது சில எண்ணங்களைக் கூறினாள். மீண்டும் லோன் வாங்கினாள். அந்த கிராமத்தில் இருந்த சில படித்த பெண்களையும், வேலை இல்லாமல் இருந்த பெண்களையும் ஒன்று திரட்டினாள்.

    ஒரு புதிய ஆரம்பம் உருவானது.

    வள்ளியம்மை அங்காடி என்ற ஒரு புதிய உருவம் அந்தக் கடைக்குக் கிடைத்தது. பழைய இடத்திலேயே அந்த புதிய கடையை நிர்மாணித்தாள். வீட்டில் தயாரித்த பொருட்கள், பலகாரங்கள், ஊறுகாய்கள், தினுசு தினுசான பொருட்கள்… அத்துடன் மரச் செக்கில் ஆட்டப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை விளம்பரத்துடன் விற்க ஆரம்பித்தாள். பத்திரிகைகளில் சின்னச்சின்ன நோட்டீஸ்கள் வைத்து ஊருக்கெல்லாம் அனுப்பினாள். ஒரு சிறிய டெம்போவை வாங்கி அதிலே எல்லா பொருட்களையும் ஏற்றி வீடு வீடாக சென்று விற்றாள். துணைக்காக சில பெண்கள் வந்தார்கள். வியாபாரம் வளர்ந்தது புதிது புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.

    கூடைமுடைய கற்றுக்கொடுத்தாள். முடையப்பட்ட கூடைகளில் அவர்கள் வாங்கிய பொருட்களை போட்டு குறைந்த விலையில் அவர்களிடம் கொடுத்தபோது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த அங்காடி விரைவாக மினி சூப்பர் மார்க்கெட்டாக விசுவரூபம் எடுத்தது எல்லா பொருட்களையும் அழகழகான ஆர்ட் பேப்பர்களில் பேக் செய்து வாசலில் டிஸ்பிளே செய்தாள். அதற்கென்று தனியான ஷோ கேஸ்… அந்தக் கிராமத்துக்கு இது மிக அதிகம்.

    வள்ளியம்மை உங்களை அழைக்கிறது என்று அதற்கு ஒரு வாசகம் அமைந்தது. அத்துடன் பாம்படமும், பின் கொசுவமும் வைத்து கட்டப்பட்ட செட்டிநாட்டுப் புடவையும் அடையாளங்கள் ஆயின.

    பர்பி, கடலை மிட்டாய், கடலை உருண்டை, ஊறுகாய் வகைகள் ஆவக்காய், எலுமிச்சங்காய் தொக்கு, மிக்ஸ்ட் வெஜிடபிள், பொடி வகைகள் இப்படி பல பொருட்கள் வள்ளியம்மை கடையிலே கிடைத்தன. இராப்பகலாக உழைத்தாள். எங்கும் வள்ளியம்மை, எதிலும் வள்ளியம்மை. காதில் பாம்படம் பின் கொசுவம் வைத்து கட்டப்பட்ட செட்டிநாட்டு புடவை ட்ரேட்மார்க் ஆயின. அமீனா நுழைய இருந்த வீடு ஆனந்தபுரியானது. இவள் விதையாக வீழ்ந்து மரமாக முளைத்த கதை இது.

    ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன சிதம்பரம் வரவில்லை. இவளும் தேடவில்லை.

    அன்று ஆறாவது ஆண்டு விழா. இவள் கணவன் நாச்சியப்பன் பிறந்தநாள். இன்று கடைக்கு வரும் அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் இவள் லட்டு பொட்டலங்கள் தருவாள். எதிரில் நாச்சியப்பன் ஆள் உயரத்தில் மாலைகளுடன் கம்பீரமாக புகைப்படத்தில் நின்று கொண்டிருந்தார். ஊதுவத்தி வாசனை மூக்கைத் துளைத்தது. வணங்கிவிட்டு கடைக்குக் கிளம்பியபோது நாலு வயது குழந்தை உள்ளே நுழைந்தது இவள் கையில் இருந்த பலகாரத்தை பார்த்துவிட்டு கையை நீட்டி யாசித்தது இவளுக்கு என்னமோ போல் இருந்தது உடனே அவசரமாக பார்சலை பிரித்து ஒரு லட்டுவைத் தந்து,

    நீ யாரப்பா? என்று கேட்டாள். லட்டு தின்றபடி அந்த குழந்தை சிரித்தது. வாசலை நோக்கித் திரும்பியது.

    அங்கே ஒரு பெண் குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள்.

    யார் இவள்? அவள் மெல்ல பேசினாள்

    நான் உங்க மருமகள். இவன் உங்க பேரன். வள்ளியம்மை திரும்பிப் பார்த்தாள். அந்த குழந்தை வாயில் லட்டு துகள்களுடன் இவளைப் பார்த்து சிரித்தது. இவளுக்கு மேனி எல்லாம் சிலிர்த்தது. வெண்ணெய் உண்ட கண்ணன் தன்னுடைய வெண்ணெய் உண்ட வாயால் ஈரேழு உலகத்தையும் யசோதைக்குக் காட்டினான் அல்லவா? அதுபோல இவளும் யசோதையாகி திகைத்துப் போனாள்.

    அந்தப் பெண் நிமிர்ந்தாள். வெற்று நெற்றி மூளிக் கழுத்து

    இவளுக்கு பகீரென்றது ஐயோ சிதம்பரம் என்று கதறினாள். அந்தப் பெண் மெல்ல கூறினாள்:

    "நாங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணிட்டோம். ஆனா இவரு ஆரம்பிச்ச பிசினஸ் அத்தனையும் நஷ்டம். வங்கி கடன் அடைக்க முடியல கடன் கொடுத்தவங்க நெருக்க ஆரம்பிச்சாங்க. மேலே மேலே கடன்… நான் உடனே சொன்னேன் உங்க அம்மா நல்லா இருக்காங்களே… அவங்ககிட்ட போய் கேளுங்க அப்படின்னேன். ஆனால் அவர் சொல்லிவிட்டார்,

    ‘என் தாய் முகத்தில் நான் முழிக்க தகுதியற்றவன். ஆமை நுழைந்த வீடுன்னு சொன்னேன் ஆனா அது ஆமை நுழைந்த வீடு இல்ல. நான் நுழைஞ்ச வீடு. என்கூட அறியாமை, கல்லாமை, முயலாமை எல்லாமே நுழைஞ்ச வீடு. இதை நான் லேட்டாத்தான் புரிஞ்சுட்டேன்.’ இப்படிச் சொன்னவர் கடன் தொல்லை தாங்காம ஒரு நாள் தற்கொலை பண்ணிட்டார்…"

    மேலே பேச முடியாமல் அவள் அழுகிறாள்.

    வள்ளியம்மை அந்தச் சிறுவனை முத்தமிட்டபடி கேட்கிறாள்…

    உன் பேர் என்னப்பா?

    சிறுவன் லட்டு தின்ற வாயுடன் சொல்கிறான்.

    நாச்சியப்பன்

    2. மணல் குதிரைகள்

    மணல் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற்போல

    தாத்தாவும் பேத்தி மீனாவும் அந்த ஆற்றுப் படுகையில் நடந்து கொண்டிருந்தார்கள். ஆறு வறண்டு இருந்தது. ஆங்காங்கே மணல் திட்டுகள்… மண் குதிரைகள் போல. இப்போது நான்கைந்து வருடங்களாக ஆறு இப்படித்தான் இருக்கிறது, ஆறு மணலாகக் காட்சியளிக்கிறது. மணல் திட்டுகள் ஆங்காங்கே சிறு சிறு குன்றுகளாக… தள்ளி இருந்து பார்த்தால் ஆறு ஸ்தம்பித்து நிற்பதுபோல தோன்றும். ஆற்றின் நடுவே ஒரு நீராழி மண்டபம். முன்பு ஆற்றில் வெள்ளப் பெருக்கு திடீரென்று வந்துவிட்டால் நடு ஆற்றிலே பாதி வழி சென்று கொண்டிருப்பவர்களுக்கு ஒரு புகலிடமாக அந்த மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தை சுற்றி தண்ணீர் நிரம்பி விடும். தண்ணீர் வடிய ஒரு நாள் ஆகும். பிறகு அதிலேயே தங்கியவர்கள் தம் தம் வீடு திரும்புவார்கள் இது ஒரு பதிவு. அது அந்தக் காலம் இப்பொழுது தண்ணீரும் இல்லை தங்க வேண்டிய அவசியமும் இல்லை ஆறு வடிந்ததும் தண்ணீர் போக்கு குறைந்ததும் அந்த மணல் திட்டுகளில் ஏதாவது சில பொருட்கள் கிடைக்கும். காக்காய் பொன், கிளிஞ்சல், சங்கு போன்றவை அங்கிருக்கும் சிறுவர்கள் ஓடி ஓடி அதை தேடித்தேடி எடுப்பார்கள். தாத்தா பேத்திக்கு கதைசொல்லியபடி நடந்து கொண்டிருந்தார்.

    இந்த மண் குதிரை இருக்கு பாத்தியா?

    குதிரையா? எங்க தாத்தா? நான் ஏறலாமா?

    பெரியவர் சிரித்தார்.

    "இல்லம்மா அது குதிரை இல்ல… மணல்திட்டு இப்போ அதை நம்பி ஆற்றில் இறங்கினால் நாம மூழ்கிப் போயிடுவோம் ஆனால் முன்பு அப்படி இல்லை. ஒரு காலத்துல கடற்கரையில் இருந்து ஐம்பது மீட்டர் தொலைவில் உள்ள பனை ஓலைகளை எல்லாம் எடுத்துட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1