Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puyal Eppothu Ooyum?
Puyal Eppothu Ooyum?
Puyal Eppothu Ooyum?
Ebook157 pages40 minutes

Puyal Eppothu Ooyum?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100802948
Puyal Eppothu Ooyum?

Read more from Vimala Ramani

Related to Puyal Eppothu Ooyum?

Related ebooks

Reviews for Puyal Eppothu Ooyum?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puyal Eppothu Ooyum? - Vimala Ramani

    www.pustaka.co.in

    புயல் எப்போது ஓயும்?

    Puyal Eppothu Ooyum?

    Author :

    விமலா ரமணி

    Vimala Ramani

    For other books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    புயல் எப்போது ஓயும்?

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    புயல் எப்போது ஓயும்?

    1

    அண்ணா சாலையில் ஓடுகிறது டாக்ஸி. ஸ்பென்ஸர் சிக்னல் சிகப்புக் கண் சிமிட்ட, டாக்ஸி பக்கத்து வெள்ளைக் கன்டெஸாவுடன் சமமாய் நிற்கிறது.

    டாக்ஸியின் பின்சீட்டின் வலப்புறம் கையிலிருக்கும் புத்தகத்தில் விழி இருந்தாலும் மனம் எங்கேயோ வட்டமிட டாக்ஸி டிரைவர் சின்னியின் கேள்வியில் திடுக்கிறாள் வினோதினி.

    இதய இரைச்சல், சாலை வாகனங்களை மிஞ்சிவிடுமோ என அஞ்சும் வினோதினி காக்கி உடுப்பணிந்த சின்னியின் பின் புறத்தைப் பார்க்கிறாள். அவள் பார்வை மீண்டு பக்கவாட்டில் திரும்ப, டாக்ஸிக்கு அடுத்து இடம் பிடித்து நிற்கும் வெள்ளைக் கன்டெஸாவில் இடப்புறக் கண்ணாடி திறந்திருக்க, அந்தப் பெரிய மனிதர் சஃபாரி சூட்டில் கண்ணாடியை மூக்கின் மீது தள்ளிவிட்டபடி மடியிலிருக்கும் ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    டாக்ஸியிலிருந்து பார்க்கும் இவளை அவர் கவனிக்கவில்லை.

    ''நானும் ரெண்டுதரம் கேட்டுட்டேன் அண்ணி, உங்கப்பா உசிரோட இருக்கிறதா அண்ணன் சொல்லுது. ஆனா எங்கே இருக்காருன்னு நீங்களாவது சொல்லுங்க அண்ணி.''

    சின்னியின் கேள்வியில் உடல் நடுங்க, கார் கண்ணாடி மேலேற்றி, தன்னை மறைத்தபடி அந்தக் கன்டெஸா மனிதர் பார்த்துவிடுவாரோ எனக் கிளிக் குஞ்சாய்ச் சுருண்டு உட்காருகிறாள் வினோதினி.

    ''என்னங்க அண்ணி, நான் கேட்டுட்டே இருக்கேன். பதில் பேச மாட்டேன் என்கிறீங்க அண்ணன் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாரா?''

    சின்னி கேட்டுக் கொண்டிருக்கும்போதே சிக்னல் கண் பச்சைக் கண்ணாடி அணிந்துகொள்ள டாக்ஸி எதிராஜ் சாலையிலும் வெள்ளை கன்டெஸா நேராகவும் பிரிந்து ஓடுகின்றன.

    ''ஊம்… இருக்கார் கிராமத்தில், சின்னி பிளீஸ்… குயிக்கா போயேன். நேரமாச்சு.''

    ''இதோ ரெண்டே நிமிஷம். அண்ணன் வீட்லயும் இப்படித் தொட்டிலிட்டுப் பெயர் சூட்டுவிழான்னு நடத்தணும்னு எனக்குக் கொள்ளை ஆசை அண்ணி. அண்ணன் எப்ப கேட்டாலும் பேச்சை மாத்தறாரு.''

    சின்னியின் பேச்சு அவளை வியக்க வைக்கிறது. தனியாக பஸ்ஸிலோ ஆட்டோவிலோ வந்திருக்கலாம். ஆனந்தன் இவனைப் பாதுகாப்பாய் அனுப்புவதாய் நினைத்து இந்த வாயாடி சின்னியுடன் வழிகூட்டி அனுப்பி…

    ''சின்னி, நேரமாச்சு… குயிக்கா போ: ஒருநாள் சாவகாசமா உன் கேள்விகளுக்குப் பதில் சொல்றேன்.''

    இவள் எரிச்சலில் மெளனிக்கிறான் சின்னி. அந்த இளைஞனுக்கு, நாம் நல்லதைத்தானே கேட்டோம் எதற்காக இவள் இப்படிக் கோபிக்கிறாள் தவிக்கிறாள். நாலு வார்த்தை தொடர்ந்து பேசாத அண்ணியா இது?

    ''சரிங்க அண்ணி. நீங்க திரும்ப வரவரைக்கும் நான் டாக்ஸியோட வெயிட் செய்யறேன்.''

    ''வேணாம்.''

    ''அண்ணன் திட்டும். அண்ணிக்கு இல்லாத காரான்னு என்னைப் பேசும்.''

    'நான் பார்த்துக்கறேன். நீ போயிரு.''

    ''இப்பவே மணி ஆறு. இருட்டிரும் அண்ணி. திருவான்மியூருக்கு எப்படி தனியா…''

    ''எனக்கு வழி தெரியும்.''

    சாலைகளின் சப்தங்களைத் தவிர்த்து அந்தச் சந்தில் ஓடி நிற்கிறது டாக்ஸி.

    அந்தக் குட்டி பங்களாவின் முகப்பு வண்ணவிளக்குகளும் தோரணங்களுமாய் நல்வரவு சொல்கின்றன. சக பேராசிரியைகளின் சந்தடி தெரிகிறது.

    வினோதினி மெல்ல இறங்கி, டாக்ஸியிலிருந்து பரிசுப் பொருளைக் குனிந்து எடுக்கும்போது மாருதி ஜிப்ஸி வேகமாக வந்து சடன்பிரேக்கில் நிற்கிறது.

    திறந்த கதவிலிருந்து நட்சத்திரம் உதிர்வது போல மாணவி மஞ்சுபாஷிணி இறங்குகிறாள். உடன் அந்த மனிதர் இறங்கி அவள் கையில் பரிசுப் பொருளைக் கொடுக்கிறார்.

    ''ஒ.கே. டேட். நீங்க போயிட்டு வண்டிய அனுப்பிருங்க.பை.''

    மஞ்சுவின் தந்தை மீண்டும் மாருதியில் ஏற அது வேகம் பிடித்து இவள் பார்வையிலிருந்து மட்டுமே மறைகிறது.

    இவள்… இவள்… அவர் மகளா… அது தான் இத்தனை நாட்கள் இவளை எங்கோ நெருக்கமாய்ச் சந்தித்த உணர்வு இருந்ததா?

    நல்லகாலம் அந்த மனிதர் இவளைப் பார்க்கவில்லை.

    ''ஹலோ மேடம், குட் ஈவினிங்.''

    மாணவியுடன் உள் நுழைகிறாள் வினோதினி. மாணவிகள். கல்லூரி பேராசிரியைகள், சொந்த பந்தம் என அந்தக் குட்டி பங்களா பிதுங்குகிறது.

    அன்றைய கதாநாயகனாகப் பூமிப்பந்தின் புதுவரவு தொட்டிலில் மைவிழியும் திருஷ்டி பொட்டுமாய்க் கை கால் உதைத்துப் பூங்குரல் கொடுக்கிறது.

    தொட்டிலிட்டுப் பெயர் சூட்டி இனிப்பு வழங்கி… லாலி பாடி… வினோதினி தாமரை இலையாய் ஒட்டாமல் அந்தக் கூட்டத்திலும் தனித்து விடப்பட்டவளாய்த் தெரிகிறாள்.

    கன்டெஸா மனிதரும், மாருதி மனிதரும் மனதில் விஸ்வரூபமெடுக்கிறார்கள். இத்தனை வருடங்கள் கண்ணில் படாதஇவர்கள் இன்று மட்டும் சொல்லி வைத்தது போல ஏன் தென்பட்டார்கள்.

    பெண்களின் சிரிப்பொலி தொடர்ந்து,அடுத்த வருஷம் நம்ம வினோதினிக்கு மகன் பிறக்கணும். நம்ம புரொபஸர்ஸ்ல வினோதினிக்குத்தான் குழந்தை இல்ல. யாரோ சொல்கிறார்கள்.

    ''ஆமாம் வினோதினி. அடுத்து நீங்கதான்.''

    யாரோ தோளைத் தொட, வினோதினி தவிப்பாய்த் தவிர்க்கப் பார்க்கிறாள். அவள் கவனம் மஞ்சுவையே சுற்றுகிறது. கல்லூரித் தோழிகளுடன் சிரித்து ஐஸ்கிரீம் சாப்பிடும் மஞ்சுவின் அங்கங்களின் செழுமை அளவுக்கதிகமாய் வெளியுலகு பார்க்கிறது.

    கூட்டத்தில் இருக்கும் சில ஆடவர்களின் திருட்டு விழிகள் மஞ்சுவிடம் ஊன்றுவது

    Enjoying the preview?
    Page 1 of 1