Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Palingu Mandapam
Palingu Mandapam
Palingu Mandapam
Ebook175 pages57 minutes

Palingu Mandapam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100803813
Palingu Mandapam

Read more from Vimala Ramani

Related to Palingu Mandapam

Related ebooks

Reviews for Palingu Mandapam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Palingu Mandapam - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    பளிங்கு மண்டபம்

    Palingu Mandapam

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பயணம்

    2. தாஜ்மகால்

    3. யமுனைக்கரை

    4. காதல் ராஜ்யம்

    5. அனரின் சமாதி

    6. தாயக்கட்டம்

    7. சிறைக்கூடம்

    8. முகூர்த்தம்

    9. மாலை மாற்றங்கள்

    10. புதிய வேலை

    11. அற்புதங்கள்

    12. பெளர்ணமி

    13. வாக்கிங் ஸ்டிக்

    14.சேலன்ஜ்

    15. சந்திப்பு

    16. சங்கமம்

    17. தடங்கள்

    18. திருப்பம்

    19. வெறுப்பு

    20. உறவு

    21. வரவேற்பு

    22. பிரிவு

    1. பயணம்

    ஆக்ரா ஸ்டேஷனில் தாஜ் எக்ஸ்பிரஸ் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய கும்பல் அவசரம் அவசரமாக ஸ்டேஷனுக்கு வெளியே காத்துக் கொண்டிருந்த டூரிஸ்ட் பஸ்ஸை நோக்கி விரைந்தது. ஏ.சி. கோச், டீலக்ஸ், ஆர்டினரி - இப்படித் தரம் பிரிக்கப்பட்டவைகளாக பஸ்கள் ஸ்டேஷனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தன. பிரயாணிகளின் கும்பல் பஸ்ஸை முற்றுகை இட்டது. அந்த அந்த பஸ்களுக்கு உரியவர்கள் அதில் ஏறினர். டிக்கெட்டுகளை சரிபார்த்து அவர்களை அனுப்பியவண்ணம் இருந்தான் ஒரு ஆள்.

    பிரகாஷ் தன் டிக்கெட்டைப் பார்த்துக் கொண்டார்.

    இந்த பஸ் தான்! ஏ.சி. பஸ்...பிரகாஷ் ஏறி சௌகர்யமான ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டார். பஸ்ஸில் கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது. அவரவர்கள் ஒரு வழியாக இடம் கண்டுபிடித்து ஓடிவந்து கொண்டிருந்தனர்.

    அந்த பஸ்ஸில்... ஒரு புறம் இந்தி, ஒரு புறம் தமிழ்... ஒரு புறம் ஆங்கிலம்... மொழிப்பிரச்சனை இன்றி அவரவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பிரகாஷின் பக்கத்து சீட் காலியாகத்தான் இருந்தது.

    திடீரென்று பஸ்ஸில் ஒரு கலகலப்பு! ஒரு இளம் பெண் சிரித்தபடி, தன் தோழிகளுடன் பேசியபடி அந்த பஸ்ஸையே கலகலப்பாக்கிக்கொண்டு அதில் ஏறினாள்.

    ‘அரே... ஜஹக் நஹி'

    'இடமில்லை என்று ஒருத்தி சொன்னாள்.’

    தேகோ! வஹாங் ஹை

    அதோ அங்கே இருக்கிறது என்று சொன்னபடி அந்தப்பெண் பிரகாஷ் பக்கத்தில் வந்து அமர்ந்துவிட்டாள்.

    எக்ஸ்க்யூஸ் மி ஸார்… இஃப் யூ டோண்ட் மைண்ட்...

    தட்ஸ் ஆல்ரைட்

    பிரகாஷ் கொஞ்சம் ஒதுங்கி உட்கார்ந்தார்.

    பஸ் கிளம்பும் நேரமாகிவிட்டது, அவள் தோழிகள் விடைபெற்றனர். அவர்கள் டீலக்ஸ் பஸ்ஸில் வருகிறார்கள் போலும்!

    இந்தப் பெண். தன்னந்தனியாக... இந்த வட இந்தியப் பெண்களுக்கே துணிச்சல் அதிகம்...

    பிரகாஷ் அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார்.

    தூய வெண்மையான நிறம், அலைச்சலின் அசதி அவள் கன்னங்களைச் செம்மையாக்கி இருந்தது. இத்தனை நேரம் 'தாஜ் எக்ஸ்பிரஸில்' ஈடுகொடுத்த தன் தலைமயிரை மீண்டும் வாரிக் கொண்டிருந்தாள் அவள் தன்னை மற்றவர்கள் பார்க்கிறார்களே என்கிற கூச்சமோ, அதனால் ஏற் பட்ட தயக்கமோ அவளிடம் இல்லை. தன் ஹாண்ட்பாக் கைத் திறந்து அதிலிருந்து டாய்லெட் பாக்ஸை எடுத்து முகத்தைச் சரிசெய்து கொண்டாள். லிப்ஸ்டிக்கை நேர்ப் படுத்தினாள். பஃப்பின் மூலம் பவுடர் போட்டுக் கொண் டாள். தலைக்கு கிளிப் போட்டுக் கொண்டு மயிரை அலட் சியமாகப் பின்புறம் சரியவிட்டிருந்தாள். "கூலிங்கிளாஸை' எடுத்துப் போட்டுக் கொண்டாள். இத்தனை நேரம் பஸ் பயணிகள் அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந் தவர்கள் அவள் நிமிர்ந்ததும் அவரவர்கள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர்.

    தர்ஜ் மஹால் தேக்னே ஜாதி?

    தாஜ் மஹால் பார்க்கப் போகிறாயா? என்று பிரகாஷ் அவளிடம் கேட்டார்.

    ஓ! ஆப்கோ ஹிந்திமாலும்... கித்னா அச்சா?

    ஓ - தங்களுக்கு ஹிந்தி தெரியுமா? எத்தனை நல்ல தாய்ப் போயிற்று? - என்றவள் சளசளவென்று ஹிந்தியில் பேச ஆரம்பித்து விட்டாள்.

    அவளுக்கு இப்படி அடிக்கடி 'டூர்' போவது பிடிக்குமாம். காலேஜில் படிக்கிறாளாம். தன் சினேகிதிகளுடன், சிலசமயம் தனியாக இப்படிக் கிளம்பி ஊர் சுற்ற வந்து விடுவாளாம். இன்று ஆக்ரா ஸ்டேஷனில் தான் தன்னுடைய தோழிகள் சிலரைச் சந்தித்தாளாம். எல்லோரும் தாஜ்மஹால் பார்க்கப் போகிறார்களாம்- என்றவள் -

    ஜீ தாஜ்மஹாலை இப்படி மாலை நேரத்தில் பார்த்தால் போதாது...பெளர்ணமி நிலவில் பார்க்கவேண்டும்... எப்படி இருக்கும் தெரியுமா? தாஜ்மஹால் அப்படியே மிதக்கும்! வெண்மையாக, நீலமாக, பச்சையாக எத்தனை கலரில் அது காட்சியளிக்கும் தெரியுமா?

    அவள் விவரித்துக் கொண்டே போனாள், இந்தியில்.

    பிரகாஷுக்கு அவள் சொன்னாள். அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவள் சொன்னாள். கனவுகள் காணும் ஆவுல் அவள் கண்களில் தெரிந்தது.

    பிரகாஷ்...

    அவர் கனவு கண்டு முடித்து விட்டவர்!

    மறுபடியும் இந்தப் பெண் கனவு காண வைத்து விடுவாள் போலிருக்கிறதே?

    எக்ஸ்க்யூஸ் மி ஸார்… நான் ரொம்ப அதிகம் பேசிவிட்டேனோ? - அந்தப் பெண் கேட்டாள்.

    'நோ... நோ... நீ.. நீ... என் மகள் மாதிரி. சொல்லம்மா... ஐ லைக் இட் கோ அஹெட்...'

    ஸார்... தாஜ்மஹால் இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா ஸார்?

    பிரகாஷின் கண்களில்... மனக்கண்களில் தாஜ்மஹால் சிரித்தது. அந்தப் பளிங்கு மண்டபத்தை எத்தனை எத்தனை தடவைகள் பார்த்திருக்கிறார். அங்கு எத்தனை எத்தனை கனவுகள் கண்டிருக்கிறார்! அதன் காலடியில் எத்தனை கனவுகளைப் போட்டு மிதித்திருக்கிறார்... இவரை... இவரைப் பார்த்தா இந்தப் பெண் இப்படிக் கேட்டுவிட்டாள்?

    இதற்குள் அந்தக் கோச்சிற்காக நியமிக்கப்பட்ட 'டூரிஸ்ட் கைடு' வந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

    அவர்கள் பார்க்கப்போகும் இடங்களைப் பற்றிய சிறு குறிப்பு தந்தான். ஆக்ரா கோட்டை., பதேல்பூர் சிக்ரி - ஷாஜஹானை ஒளரங்கசீப் சிறைவைத்த இடம் - அங்கிருந்து தூரத்தே தெரியும் தாஜ்மஹாலை... தான் கட்டிய தாஜ்மஹாலை தன் கடைசி மூச்சு உள்ளவரை ஷாஜஹான் பார்த்துப்பார்த்து உயிரை விட்ட கதை - எல்லாவற்றையும் அந்த 'கைடு' சரித்திர ஆதாரங்களுடன் விவரித்தான்.

    பிரகாஷின் காதைக் கடித்தாள் அந்தப் பெண், சுஷ்மா - ஆமாம்... அது தான் அவள் பெயர்.

    ஜீ… ஐவில் டெல் யூ எவ்ரிதிங் அபௌட். தாஜ்மஹால்...

    பிரகாஷ் சிரித்துக் கொண்டார்.

    "சொல் பெண்ணே சொல். எனக்கே எல்லாவற்றையும் சொல். இதே போன்ற டூரிஸ்ட் கோச் ஒன்றில் இதே மாதிரி 'கைடாகப் பணிபுரிந்து கொண்டு, வருகிற பயணிகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்த எனக்கே இன்று நீ கதை சொல்கிறாயா? சொல்... உன்னை இந்தக் 'கோச்சில்' சந்தித்த மாதிரிதான் அன்று நான் யமுனாவையும் சந்தித்தேன். அவளோடு பேசினேன்... பழகினேன். பத்து வருடத்திய பழைய கதை... மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறேன், சொல்... இன்று யமுனை வறண்டு விட்டது. என் மனக் கோவிலின் பளிங்கு மண்டபம் சிதைந்து விட்டது! இந்த உடைசல்களைப் பொறுக்கிக் கொண்டு நான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஜீவ ஊற்றில் நீர் சுரக்காது என்று தெரிந்தும் அந்த மணலின் சூட்டில் நடக்க ஆசைப்படுகிறேன். சொல் சுஷ்மா... தாஜ்மஹால் கதையை எனக்குச் சொல் சுஷ்மா... பளிங்கு மண்டபம் யமுனையின் கரையில் மட்டும் இருக்கவில்லை. காதல் தோல்வி கண்ட ஒவ்வொருவரின் இதயத் துள்ளும் அது மோனமாய்க் கொலுவீற்றிருக்கிறது!

    பஸ் கிளம்பிவிட்டது.

    சுஷ்மா என்னவோ ரொம்ப நாள் பழகியவள் போல் பேசிக்கொண்டு வந்தாள். பிரகாஷ் மனம் எங்கெங்கோ பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

    2. தாஜ்மகால்

    ஆக்ரா கோட்டையில் நடந்து நடந்து யமுனாவின் கால்கள் வலியெடுத்து விட்டன.

    அப்பப்பா... எத்தனை எத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். ஜூம்மா மசூதி, புலந்த் கேட், தீவானே காஸ், பாஞ்ச் மஹால், பீர்பல் மாளிகை அப்பாடியோ தாஜ்மஹால் பார்ப்பதற்குள் காலே போய் விடும் போலிருக்கிறதே! பிரகாஷ் - கைடு பிரகாஷ்அனைவருக்கும் உற்சாகமாக விளக்கிக் கொண்டு வந்தான் ஆங்கிலத்திலும், இந்தியிலும்.

    அவன் கண்கள் அடிக்கடி யமுனாவைப் பார்த்த வண்ணமிருந்தன.

    என்ன ஸார். அப்போது பிடித்து பதேல்பூர் சிக்ரியிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே! தாஜ்மஹாலை எப்போது காட்டப் போகிறீர்கள்? என்றாள் பொறுமை இழந்து.

    "இதோ...

    Enjoying the preview?
    Page 1 of 1