Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sevvanathil Oru Asthamanam
Sevvanathil Oru Asthamanam
Sevvanathil Oru Asthamanam
Ebook62 pages22 minutes

Sevvanathil Oru Asthamanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அர்ச்சனா கோடிஸ்வரி..பணக்கார தாமோதரசாமியின் ஒரே புதல்வி.வயதான பாட்டியின் பராமரிப்பில் அர்ச்சனா வளர...பணக்கார தந்தை மகளின் கவலையின்றி தேசம் தேசமாகச் சுற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அர்ச்சனாவிற்கு நாட்டியத்தில் ஈடுபாடு ஏற்பட்ட காரணத்தால் வீட்டிலேயே நடனம் கற்ற ஏற்பாடாக வயதான கன்னியப்ப மாஸ்டர் நியமிக்கப் படுகிறார். காவலுக்கு பாட்டி.
காலம் இப்படிச் சென்றிருந்தால் கவலையில்லை.ஆனால் மாஸ்டருக்கு உடம்பு முடியாமல் போக மாஸ்டரின் மகன் கண்ணன் மாஸ்டராக..வருகிறான்.
“பெரிய இடத்து சாமசாரம் ஜாக்கிரதை கவனமாக இரு.” என்று கன்னியப்பன் எச்சரித்தும் கூட பாழாய்ப் போன காதல் குறுக்கிட என்ன நடந்தது ? பெரிய கோடீஸ்வர மாப்பிள்ளைக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணம் நிச்சியமாக ..”சங்கமித்திரையின் துறவு “
என்கிற நாட்டிய நாடகத்தை திருமணத்திற்கு முன் அரங்கேற்ற அர்ச்சனா விரும்ப.....
துறவு நடக்கிறது.... ஆனால் யாருக்கு? ஏன் ? எதற்காக ?
எல்லாவற்றிகும் நாவல் பதிலளிக்கும். படியுங்கள்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580100806241
Sevvanathil Oru Asthamanam

Read more from Vimala Ramani

Related to Sevvanathil Oru Asthamanam

Related ebooks

Reviews for Sevvanathil Oru Asthamanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sevvanathil Oru Asthamanam - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    செவ்வானத்தில் ஓர் அஸ்தமனம்

    Sevvanathil Oru Asthamanam

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    அர்ச்சனா... அர்ச்சனா...?

    அப்பாவின் குரல் கம்பீரமாக ஒலித்தது.

    காலில் சதங்கை கஜ்ஜைகளை கட்டிக் கொண்டிருந்த அர்ச்சனா நிமிர்ந்தாள்.

    கம்மிங் டாடி-என்ற குரல் கொடுத்தாள்.

    அந்த மிக மிக மிக மிகப் பெரீய்ய பங்களாவின் போர்ட்டிகோவில் வெளிநாட்டுக் கார் ‘சிலுக்கு’ ஜாலம் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தது. அத்தனை பளபளபளபள!

    வெள்ளை யூனிபார்மில் டிரைவர் எஜமானரின் உத்திரவுக்காக மிக மிக பவ்யமாகக் காத்துக் கொண்டிருந்தான்.

    முன்புறம் பரந்து விரிந்து கிடந்த பெரிய லானில் ஒரு ‘ஒலிம்பிக்ஸ்' நடத்தலாம்... அத்தனை பெரிசு!

    ரிஸப்ஷன் ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்தால் இன்னொரு மூலையில் அமர்ந்து கொண்டிருப்பவருடன் பேச வேண்டுமென்றால் போன் செய்வதுதான் உசிதம். இல்லாவிட்டால் என்ன சொன்னீங்க? என்று அவர் கேட்டுக் கொண்டே இருக்கலாம்... அவ்வளவு தூரம்!

    மூலையில் வைக்கப்பட்டிருக்கும் அலங்காரம் கேரள திருவிளக்கு ராக்ஷஸதனத்துடன், ‘ப்ராளோ' தேய்க்கப்பட்ட பளபளப்புடன் ஆகாசத்துக்கும் பூமிக்குமாய் நின்றது. விலை பத்தாயிரம்... இருபதாயிரம்? வேண்டாம் விட்டு விடுங்கள்.

    கலை பொக்கிஷங்கள் விலை மதிப்பற்றவை.

    மற்றொரு மூலையில் வைத்திருக்கும் பிரும்மாண்ட பீங்கான் ப்ளவர்வாஸ் ஜாடிக்குள் புகுந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாடலாம்! அதில் வண்ணவண்ண பூக்கள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தன.

    தரையில் விரிக்கப்பட்ட காஷ்மீர் ரத்தின கம்பளம் பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கிவிட்டு மல்லாந்து கிடந்தது.

    அழகையும், ஆடம்பரத்தையும் பறை சாற்றும் கண்ணாடி பீப்பாய்கள், ராஜசிம்மாசனம் போன்ற அமைப்புள்ள சோபா செட்டுக்கள்...

    கொஞ்சம் உள்ளே வருகிறீர்களா? நுழையும்போது கவனமாக வாருங்கள் - கண்ணாடி போல் சுத்தமாகத் துடைக்கப்பட்ட இந்த மாபெரும் ஹாலின் பளிங்குத் தரையில் மெல்ல கால் வைத்து நடவுங்கள்... வாசலில் போடப்பட்டிருக்கும் அரை அடி கனமுள்ள மிதியடியில் காலை சுத்தமாகத் துடைத்துக்கொண்டு உள்ளே வாருங்கள்...

    கொஞ்சம் நிமிருங்கள்

    இது மகாப் பெரிய சாண்டிலியர்... நவீன சினிமா அரங்குகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் சென்டர்பீஸ் போன்றதுதான் இதுவும்

    அந்தரத்தில் தொங்கும் இது எத்தனை சுத்தமாக இருக்கிறது...

    ஷோகேஸ் நிறைய விதவிதமான கப்புகள், ஷீல்டுகள், பரிசுக் கேடயங்கள்...

    தங்க போட்டோ பிரேம்களில் சில நக்ஷத்திரங்கள். இதோ இந்தப் பிரேமில்

    Enjoying the preview?
    Page 1 of 1