Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rewa
Rewa
Rewa
Ebook71 pages27 minutes

Rewa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரேவா… இதில் வாழ்வின் இறுதி நாட்களில் இருக்கும் ஒரு பெண்ணின் மனோதிடம், மனவலிமை இவற்றைப் பேசுகிறது. இத்துடன் இருக்கும் சிறுகதைகள் ஒவ்வொரு விதமான உணர்வை சிறுகதையாய் கடத்துபவை. கதம்பமாய்த் தொகுத்திருக்கிறேன். கட்டாயம் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்!

Languageதமிழ்
Release dateDec 27, 2022
ISBN6580142809297
Rewa

Read more from Mala Madhavan

Related to Rewa

Related ebooks

Reviews for Rewa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rewa - Mala Madhavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ரேவா

    Rewa

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பறவை வானிலே

    பரோட்டாக் கடன்

    பொக்கிஷம்

    பூட்டுத் திறப்பு

    ரேவா

    ரௌத்திரம் பழகு

    சிறை

    சிவசக்தி

    சௌக்கியமா கண்ணே சௌக்கியமா

    சூட்கேஸ்

    தாலிப்பொன்

    திருப்பம்

    தொட்டுச் செல்லுமோ தோட்டா

    துறவு

    வாழைக்கும் வரும் வசந்தம்

    வெற்றிடம் இவ்விடம்; காற்றே நீ எவ்விடம்?

    விரலோடு விளையாடு

    பறவை வானிலே

    அவளது இருக்கை மெல்ல மேலே எழும்பத் தொடங்கியது.

    கண்ணை மூடிக் கொண்டாள். இப்படி பறப்பது அவளுக்கு முதல் முறை. என்ன செய்ய? பறந்து தான் ஆக வேண்டிய கட்டாயம்.

    அவனை நினைக்கும் போதெல்லாம் மனம் இலேசாகப் பறக்கும் தான். அது வேறு!

    அவனுக்காக அவள் இருக்கையே மேலே எழும்பும் போது... தன் காலின் அழகிய காலணியை யாரோ வலுக்கட்டாயமாக உருவுவது போல் இருக்க குனிந்து பார்த்தாள். அவனோ?

    சே! சே! என் நினைப்பெல்லாம் அவன் மீதே இருக்கிறது. இது வேறு! காலணியின் மேல் தன் கட்டை விரலை அழுத்திக் கொண்டாள்.

    மனமே களவு போய் விட்டது. காலணி போனால் தான் என்ன? என்னவோ காபந்து பண்ணுகிறாளாம்.

    இருக்கை எழும்பியதில் கிளம்பிய ஆட்டம் இடமும் வலமுமாய்... அப்போதே அவன் சொன்னான்

    ரொம்ப வெயிட் போடாத! கஷ்டம்!

    மனசு கல்மிஷம் இல்லாம இருந்தா தன்னால வெயிட் ஏறும் நண்பா!

    ஒரு நாள் தெரியும்! அவன் திரும்பிக் கொண்டான்.

    தெரிந்ததே! இப்போ தெரிந்ததே! சொல்ல அவன் தான் பக்கத்தில் இல்லை. மெல்ல எழும்பியதில் உடலின் பாரம் என்னை கீழே தள்ளி விடுவாயோ எனக் கேட்டது.

    முதலில் ஒல்லிக் குச்சி உடம்பாகணும்... இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி இருக்க வேண்டாம். இக்கட்டே தான். இருக்கை அளவு போதும் போதாமலும்... அதிலும் அது மேலே எழும்பியதில் எந்தச் சத்தமும் காதில் கேட்டு விடாதவாறு இயர் ப்ளக்கை செருகிக் கொண்டாள்.

    உடல் மட்டும் இலேசாகப் பறந்தது.

    காற்றோடு அலைகிறேனா? என்னை கைவிட்டு விட்டதா இருக்கை? இல்லை... இல்லை... கண்ணை மூடிக் கொண்டே காலால் நிரடிப் பார்த்தாள். இருக்கையின் கால் நான் இருக்கேன் என்றது. இருப்பே இல்லாதது போல் இஃதென்ன இலகுவான பறத்தல்! ஆஹா! ஆஹா! சுகானுபவம்!

    நானும் பறவையானேன்... விட்டு விடுதலையாகி வரும் சிட்டுக் குருவியைப் போல... அவன் இதைக் கேட்டால் சிட்டுக் குருவியா எனச் சிரிப்பான். பினனென்ன? யானையை யாராவது சிட்டுக் குருவி என்பார்களா? சிரிப்பான்.

    இப்போது என்ன அவனுக்கு? இறுக மூடிய கண்களை மெல்லத் திறந்தாள். வெண்பஞ்சு மேகம் என்னை எடுத்துக் கொள்ளேன் என்றது. பிடித்தாள். தடுத்தது. போ என விட்டுவிட்டாள் . ஓட்டமாய் ஓடியது.

    மீண்டும் கண்ணை மூட இருக்கை இறங்கியது.

    ரிமூவ் யுவர் சீட் பெல்ட்ஸ் குரல் கேட்டதும் பெல்ட்டை அவிழ்த்து எழுந்தாள்.

    தன் முதல் விமானப் பயணத்தை இவ்வாறு முகநூலில் பதிவு செய்தாள்

    பரோட்டாக் கடன்

    காலை பத்து மணிக்கு டிரெயின். நண்பர்கள் குடும்பத்தோடு ஷேத்ராடனம் செல்வதாய் ஏற்பாடு. எல்லோரையும் தன் வீட்டுக்கு முதல் நாளே வந்து விடுமாறு கூறி இருந்தார் வஜ்ரவேல். அவரின் தர்மபத்தினி சீதாவும் சரிதான் என்று வாய் நிறைய சிரித்தாள். ஒரே மகள் பல்லவிக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1