Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavu Kaayum Vaanam
Nilavu Kaayum Vaanam
Nilavu Kaayum Vaanam
Ebook126 pages49 minutes

Nilavu Kaayum Vaanam

By Jera

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நேர்மையும் தூய்மையும் நிறைந்த ஒருவன் உறவுகளாலும் சுயநலமிகளாலும் வஞ்சிக்கப் பட்டு, நெஞ்சம் குமுறி தவிக்கும் போது அதே நிலையில் தன்னிடம் அடைக்கலம் தேடும் ஓர் அபலைப் பெண்ணை வாழ வைக்க துடிக்கும் போராட்டமே நிலவு காயும் வானம்.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580166210644
Nilavu Kaayum Vaanam

Related to Nilavu Kaayum Vaanam

Related ebooks

Reviews for Nilavu Kaayum Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavu Kaayum Vaanam - Jera

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிலவு காயும் வானம்

    Nilavu Kaayum Vaanam

    Author:

    ஜெரா

    Jera

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jera

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ஆதவன் தன் விழிகளை மெல்லத் திறக்கும் போதே அந்த வீட்டில் ஆனந்த ராகம் ஆர்பரித்துக் கொண்டு இருந்தது. வெளிச்சம் தன் விரல்களைச் சூப்பும் போது வீடு விழா கோலத்தில் விளையாட ஆரம்பித்து விட்டது. ஊர் ஜனம் மொத்தமும் முண்டியடித்து மொய்த்ததில் இன்னும்-இன்னும் என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பதைப் போல வீடு வாழ்த்துப் பாட்டுக்களால் வசம் இழந்து கொண்டு இருந்தது. சும்மா விடுவாரா வைரம், இந்த ஊரே அவர் கையில் இருக்கும் போது! கண்ணுக்குத் தெரியாத வலையில் மீன்களாக எல்லோரையும் பிடித்து வைத்திருக்கும் பெரிய மனிதரல்லவா அவர்!

    வைரத்தைப் பொறுத்தவரை எந்த காரியத்திலும் ஒரு ஆதாயம் இருக்க வேண்டும்! அதை அடைவதற்காக, எந்த எல்லைக்கு எட்டிப் பார்க்கவும் அடுத்தவரின் பலவீனத்தை சரியாகப் பயன் படுத்துவதற்கும் அவர் தயக்கம் காட்டியதே இல்லை. இன்று அவர் பிறந்த நாள்! ஊரே கொண்டாடும் திருவிழாவாக அதை உருவாக்க அவர் சிரமப்படவே இல்லை. தன்னைப் போற்றிப் பாடும் பாடலை ரசித்துக்கொண்டே வைரம் கைக்கூப்பியபடி உள்ளிருந்து வெளியே வந்தார்.

    எல்லாரும் இருந்து சாப்பிட்டுட்டு போங்க...

    சும்மாவா? விருந்து சாப்பாடு! எவன் போடுவான்... இந்த ஊர்ல பாயாசம்னா பாயாசம்... முந்திரி பருப்பு மட்டும் மூணு கிலோ, ஆதங்கம் வெளிப்பட எரிச்சலோடு முணு முணுத்த வைரம் நீண்ட பெருமூச்சுடன் அதுக்காகவாவது மொய் எழுதிட்டுப் போனா சரி என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார். யதேச்சையாக பாட்டுச் சத்தம் நின்றுபோனதை உணர்ந்து கொண்டவர் உள்ளே பார்த்து சத்தம் போட்டார்.

    அட- ஏன்யா, நிறுத்திட்டீங்க... பச்சை நோட்டு பல்லை இளிச்சுகிட்டு வாங்கல? பாடுங்கைய்யா படார் என்று பாடல் தொடரவே வைரம் திருப்தியான பார்வையோடு மெல்லத் திரும்பினார், எதிரே அவருடைய கனமான கைத்தடிகளானகண்ணுசாமியும், வைத்தியர் வரதராஜனும் தென்படவே அவர் முகத்தில் தென்றல் வீசியது. குனிந்து குழைந்து வணக்கம் போட்ட அவர்களை பந்தாவாக வரவேற்றார்.

    கண்ணுசாமி, ஆளுயர மாலையை அவர் கழுத்தில் போட்டான். வைரம் விருப்பம் இல்லாதவர் போல என்னத்துக்கு இந்த மாலை, மரியாதை எல்லாம் என்று இழுக்கவே... கண்ணுசாமி அவர் அருகில் குனிந்து தணிவாக அப்ப தூக்கிடட்டுமாஎன்றான். திடுக்கிட்ட வைரம் விடுய்யா- ஒரு பேச்சுக்கு சொல்லக் கூடாதுங்கறே என்றவர் ம்...அப்புறம்... என்று கொக்கி போட்டார் எங்க மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றார் வைத்தியர்.

    வைரம் அதுக்கென்ன கெடக்குது கழுதை வாயிருக்கற பசங்க எல்லாரும் எடுத்து... வீசற வெத்து வேட்டு- இந்த மாலை மட்டும்தானா இல்லே...அது எப்படிங்க? ஐயாவைப் பத்தி தெரிஞ்சும் அரைகுறையா வருவமா – கையில கவர் இருக்கே"ஆட்டிக்காட்டினார் வைத்தியர்.

    அப்பாடா என்று கவரைத் தொட்டுக் கும்பிட்ட வைரம், நீங்க எல்லாம் நம்ம ஆளுங்க –மாலை போட்டதும் மனசு குளுந்து போச்சு, போயி சாப்பிடுங்க... விருந்து அவர் முடிக்கும் முன்பே அது வரை அவர்களுடன் சற்றுத் தள்ளி ஏக்கத்தோடு நின்றிருந்த ஒருவன் வைரத்தை இடித்துத் தள்ளி விட்டு உள்ளே போக எத்தனித்தான், பாய்ந்து அவனைப் பிடித்த வைரம் பதறிப் போனார்.யாருய்யா நீ! எங்கப் போறே என்று கூவினார். அவனோ படுகூலாக சாப்பிடத்தான்—விருந்துன்னு சொன்னீங்களே- வேகமா போகலேன்னா எல்லாம் வீணா போயிடாது". வைரம் நக்கலாக கிண்டலடித்தார். ஓகோ! கழுவி கவிழ்த்துடுவாங்கன்னு மனசுல காப்ராவா – அதோ பாரு...

    பந்தி நம்பர் ஒண்ணு- ஒழுங்கா வட்டி கட்டறவனுக்கும் ஒரு லெவலுக்கு மேலே மொய் எழுதறவனுக்கும்...

    பந்தி நம்பர் ரெண்டு- இந்த அரைகுறை...ஐம்பது நூறு ஆசாமிகளுக்கு...

    பந்தி நம்பர் மூணு இருக்கே –முழநீளத்துக்குநாக்கைத் தொங்க போட்டுகிட்டு முட்டி மோதி கிட்டு இருக்கே அந்தக் கஞ்சிக் கும்பலுக்கு... இதுல நீ எந்த ரகம்?... வைரத்தின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவன் அது... வந்து... சாப்பிட்டுட்டு வெத்தலை பாக்கு போட்ட பின்னாலே வெளாவரியா பேசலாமே!

    வைரம் மிகவும் கோபமானார்... வைத்தியரே...யாருய்யா இந்த ஆளு வைத்தியர் பதறிப் போய் வைரத்தின் கையைப் பிடித்து சமாதானப்படுத்தினார். தெரிஞ்சவர் தான் –அக்கரையில இருக்கே அரியக்குடி அது சொந்த ஊரு... ஐயாவைப்பாத்து பத்து எழுதி பணம் வாங்கிட்டுப் போக வந்திருக்காரு. வைரம் பதட்டத்தில் இருந்து பரவசமானார்...கஸ்டமரா... அதான் நெத்தியில எழுதி ஒட்டி இருக்கு!... வெட்டிப் பையன்னு... ஆமா உன் பேர் என்ன? வைத்தியர் குறுக்கிட்டு பண்டாரங்க என்றார். வைரம் உதட்டைச் சுழித்து என்னது... பணியாரமா என்றார். பண்டாரம் பவ்யமாக பதில் சொன்னான். இல்லீங்க... பண்டாரம்... ‘பண்டு பண்டுன்னு’ லோகு செல்லமா கூப்பிடும் என்றான் வைரம் சந்தேகமாக, ஆமா! பணம் எதுக்கு என்று விசாரித்தார். பண்டாரம் பளிச்சென்று பதில் சொன்னான் மொட்டையடிக்க." வைத்தியரே, ‘என்னய்யா இவன் நல்ல நாள் அதுவுமா மொட்டைங்கறான்’- போகச் சொல்லுய்யா! அவனை... வைரம் கடுப்பாகி கத்துவதைப் பார்த்து பரபரப்பான பண்டாரம் கைக்கூப்பி வைரத்தை ‘கூல்’ ஆக்கினான்.

    தங்கச்சிக்கு கல்யாணமானா குடும்பத்தோட திருப்பதியில மொட்டைப் போடறதா வேண்டுதல்... லோகு சொல்லிச்சு, லோகநாயகி நம்ம சம்சாரம் வைரம் உடனே பள பளப்பானார். அடடே! நம்ம சம்சாரமா அப்ப அடிச்சிட வேண்டியதுதான் மொட்டை... இதா பாரு பண்டாரம்! நான் குழந்தை மாதிரி மனசிலே எதுவும் தங்காது கையில இருக்கறதை மொய்யா வச்சிட்டு ரெண்டாம் நம்பர் பந்தியில உட்காரு... வீட்டுக்கு போனதும் நம்ம லோகுவை கேட்டேன்னு சொல்லு..."

    வைத்தியர் கிண்டலாக வைரத்தைப் பார்த்தார் ஆனாலும் ரொம்பவே அலையறீங்க... பெரிய மனுஷன் பண்ற காரியமா இது?. உடனே கண்ணுச்சாமி குறுக்கிட்டான் தொடுப்பு வச்சிக்கிட்டா தான் தொரைன்னு கும்பிடறாங்க... சம்சாரம் தவிர இப்படி சில சமாச்சாரம் இல்லேன்னா வாழ்க்கை சப்புன்னு போயிடாது? வைரம், கண்ணுச்சாமியின் முதுகில் தட்டிக் கொடுத்து சிலாகித்தார்... ‘யோவ் வைத்தி பந்திக்கு பந்தி பம்பரமாக சுத்திக்கிட்டு இருக்காளே பள்ளிப்பட்டி பாப்பா, அட்வான்ஸ் மட்டும் ரூவா ஆயிரம்... விழிகள் விரிய வாய் பிளந்த படி பாப்பாவைப் பார்க்கும் வைத்தியரின் தலையில் தட்டிய வைரம் பாக்கறான் பாரு கண்ணுலயே கவ்விப் புடிக்கற மாதிரி என்று கருவினார்... வைத்தியர் பெருமூச்சு விட்டபடி பொருமினார்... மாசத்துக்கு எத்தனை வேலைக்காரியை மாத்துவீங்க-வைரம் பலமாக சிரித்தார்.

    வூட்டுக்காரியை மாத்தினாதான்டா விவகாரம் –வேலைக்காரியை மாத்தி கிட்டே இருந்தா! அது வியாபாரம். லாபம் இருக்கில்லே.

    கண்ணுச்சாமி நொந்த குரலில் வெந்தபடி சலித்துக் கொண்டான். நீங்க லாபக்கணக்கு போட்டுக் கஷ்டப்பட்டு காசைப் பாக்குறீங்க... ஆனா! உங்க மகன் தங்கதுரை, காலரைத் தூக்கி விட்டு பந்தாவா திரியறான். வேலையை விட்டுட்டான் தெரியுமா!

    தங்கதுரையை சொந்த மகனாக என்றுமே வைரத்தின் மனம் ஏற்றுக் கொண்டதில்லை... இவர் தப்பிக்க முடியாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1