Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Krishnai Vandhal
Krishnai Vandhal
Krishnai Vandhal
Ebook153 pages57 minutes

Krishnai Vandhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருவாடானை அருகில் உள்ள ஆலம்பாடி என்ற ஊரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீஒட்டுடைய காளியம்மன் தான் இக்கதையின் நாயகி. தாயில்லாத் தன் பக்தைக்காக அவள் எவ்வாறெல்லாம் பயணிக்கிறாள் என்பதை அறிய கதைக்குள் பயணிக்கலாம்.

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580142809759
Krishnai Vandhal

Read more from Mala Madhavan

Related to Krishnai Vandhal

Related ebooks

Reviews for Krishnai Vandhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Krishnai Vandhal - Mala Madhavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கிருஷ்ணை வந்தாள்

    Krishnai Vandhal

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மதிப்புரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    கிருஷ்ணை வந்தாள்.

    "ஆலம்பாடி காளி அம்மா

    அருளை நீயும் தருவாய்"

    என ஆரம்பித்து பிள்ளையார் சுழியிட்டு நாயகி அகல்யாவை அறிமுகப்படுத்துகிறார் நாவலாசிரியர் மாலா மாதவன்.

    அமானுஷ்யங்கள் நிறைந்தது. காளியை சிறு பெண்ணாக வருவது சுவாரஸ்யம். பெயரும் கிருஷ்ணை அர்த்தமுள்ளதாக.

    கிருஷ் என்றால் கறுப்பு. காளி கறுத்தவள் அதுமட்டுமா விஷ்ணுவின் சகோதரியல்லவா? பொறுத்தமான பெயர். தலைப்பே சற்று வித்தியாசமாக.

    நாயகி, அகல்யா காளி பக்தை, தாயில்லா பெண் சமூக பொறுப்புடன் நடந்துக்கொள்ளும் பொறுப்பானவள். மறந்து போன குலதெய்வத்தின் துணையுடன் விட்டு போன உறவை திருமணம் மூலம் புதுப்பித்து அழகான குடும்பக் கதையாக அமைகிறது. அகல்யா வாசஸ்பதிக்கா அல்லது மனோவிற்காக என சஸ்பென்ஸ் கொடுத்து கதையை விறுவிறுப்பாக்கிறார். பக்தியா? காதலா? என சோதித்து பக்திக்கு மனோ, காதலுக்கு வாசஸ்பதி என அருமையாக முடித்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறமையாக கையாண்டு இருக்கிறார்.

    ஆலம்பாடி காளியின் பாடல் கதைக்கு சிறப்பை சேர்க்கிறது. மேலும் அந்த பாடல் கல்வெட்டில் பதியவுள்ளது அதன் ஏற்றம்.

    மாலா மாதவனின் கதைகள் நேர்மறையான கருத்துகளை பிரதிபலிக்கும். இதுவும் அப்படியே.

    எழுத்துலகில் சிகரம் தொட வாழ்த்துகள் மாலா மாதவன்.

    உமா (சரண்யா) முரளி, ஸ்ரீரங்கம்.

    ஸ்ரீ காரிய சித்தி கணபதி துணை.

    மதிப்புரை

    ஸ்ரீமதி மாலா மாதவன் எழுதி சங்கப்பலகை முகநூல் குழுவில் வெளிவந்த கிருஷ்ணை வந்தாள் நாவலை வாசித்து முடிக்கையில் ஓர் பரிபூரண திருப்தி ஏற்பட்டது. பாரத பூமி பழம்பெரும் பூமி என்பதோடு மட்டுமில்லாமல் ஆத்தீகம் பேசும் பூமி, இதன் பழம்பெருமை சொல்லித் தெரிவதில்லை. இதிகாசங்கள் புராணங்கள், காப்பியங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு விதத்தில் இறைவன் நிறைந்திருப்பான்.

    கடவுளை தன் தாயாக தந்தையாக சகோதரனாக சகோதரியாக, நண்பனாக இப்படியெல்லாம் தியானித்து அவரிடம் மானசீகமாக பேசி குலாவி சண்டையிட்டு சரணாகதியடைந்து வழிபட்டு இறைவன் நம்முள்ளே இருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்திருப்பதே உண்மையான பக்தி.

    இந்த கிருஷ்ணை வந்தாள் நாவலிலும் நாவலின் நாயகியான அகல்யாவுடன் முதல் அத்தியாயத்திலேயே பயணிக்கத் துவங்கி விடுகின்றாள் அம்பிகை. தன் பக்தையின் துயர் நீக்க அவளுடன் ஓர் தாயாக தோழியாக அம்பிகை பயணிக்கையில் நாமும் அவருடன் இணைந்து பயணிக்கத் தொடங்கி விடுகின்றோம்.

    அகல்யாவின் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளை கலைவதுடன் அவளை ஒரு மகள் போல வழி நடத்தி அவளுக்கேற்ற வாழ்க்கைத் துணையையும் தேடிக்கொடுத்து அருள் பாலிக்கின்றாள் கிருஷ்ணை.

    அகல்யாவின் குடும்பம், அவளது அத்தை குடும்பம், அத்தை குடும்பம் அவர்களை விட்டு பிரிந்த காரணம், அகல்யையை ஊரார் சித்த பிரமை பிடித்தவள் என்று எண்ணுவதும் பின்னர் தெய்வ சக்தி படைத்தவள் என்று போற்றுவதையும் அத்தை மகன் வாசஸ்பதியின் காதலையும் அவனுடைய அண்ணன் மனோகரனுடைய அம்பிகை உபாசனையையும் கதையின் நிகழ்வுகளாக அற்புதமாக கோர்த்து ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பிக்கையிலும் ஓர் அழகான பக்திப்பாடலுடன் தொடங்கி விறுவிறுப்பாகவும் தொய்வில்லாத நடையிலும் எளிமையான எழுத்தாலும் பாங்குறப் படைத்துள்ளார்.

    வாசஸ்பதி வனஸ்பதி பெயரை கிண்டல் செய்து கதையினூடே நகைச்சுவை பூக்கவும் வைத்துள்ளார்.

    அத்தை மகளா? அம்பிகையின் அருளா என்று வருகையில் மனோகரன் அம்பிகையின் தாஸனாவும், வாசஸ்பதி அகல்யாவின் தாஸனாவதுமாக கதையை நிறைவாக முடித்தது வெகு சிறப்பு.

    அகல்யாவின் மனக்குழப்பங்கள், வாசஸ்பதி அகல்யாவை சந்தித்ததும் ஏற்படும் காதல் அண்ணனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற அவனது தவிப்பு, அகல்யாவின் தந்தையின் தங்கை பாசம், இப்படி குடும்ப உணர்வுகளை அழகாக எழுத்தில் கொண்டு வந்தது மிகவும் திறமையான எழுத்தாளராய் அவரை பரிணமிக்க வைத்துள்ளது.

    மொத்தத்தில் கிருஷ்ணை வந்தாள் படிக்க ஆரம்பித்தால் நம்முடன் கிருஷ்ணை வருவாள். படித்து முடித்தும் நம் மனம் முழுக்க கிருஷ்ணை நிரம்பி நம்மோடு தொடர்வாள்.

    கிருஷ்ணை வந்தாள் ஸ்ரீமதி மாலா மாதவன் அவர்களின் எழுத்துக்கு ஓர் மணிமகுடம் என்று சொல்லலாம். மேலும் பல்வேறு நாவல்கள் எழுதி எழுத்துலகில் சாதனை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    என்னையும் ஓர் சிறந்த படைப்பாளராக விமர்சகராக பாவித்து மதிப்புரை தருமாறு கேட்டமைக்கும் என் அன்பு நன்றிகள்.

    அன்புடன்,

    நத்தம். எஸ். சுரேஷ்பாபு.

    அத்தியாயம் 1

    ‘ஆலம் பாடி காளி – அம்மா

    அருளை நீயும் தருவாய்

    காலம் தோறும் நீயே – எங்கள்

    கைவி ளக்காய் வருவாய்

    ஞால மெங்கும் நிறைவாய் – காளி

    ஞான ஒளியை வழங்கு

    கால தேவி நீயே – காளி

    கவிதை வடிவும் நீயே!’

    அகல்யா தன் நோட்டில் பிள்ளையார் சுழியிட்டுத் தன் மனதில் உதித்த பாடலை எழுதி வைத்தாள். அப்பா சுந்தரவதனன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றபின் முழுநேரக் கோவில் வாசியாக ஆகிவிட்டார். அவரின் பணி முடிந்த பிறகு மகளுடன் அமைதி கொஞ்சும் ஆலம்பாடி கிராமத்தில் வீடு வாங்கிக்கொண்டு அங்குள்ள காளியம்மன் கோவில் வேலைகளிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்.

    கோவில் கும்பாபிஷேகம் அப்போதுதான் முடிந்திருந்ததால் சுந்தரவதனத்திற்குப் பல வேலைகள். நடுவில் அம்மா இல்லாத தன் ஒரே மகள் அகல்யாவைக் கவனிப்பதற்குக்கூட அவருக்கு நேரமில்லை.

    அகல்யா கல்லூரிப் படிப்பை முடித்தவள் என்றாலும் வெளியூரில் சென்று வேலை பார்த்தவள் இல்லை. உள்ளூரில் வயதானவர்களுக்கென்று பாடசாலை இருந்ததில் அதில் பகுதி நேர டீச்சராக இருந்து வந்தாள். ஒரு பக்கம் வயதானவர்கள் படிக்க இன்னொரு பக்கம் பள்ளிக் குழந்தைகள் ட்யூசனுக்கு வந்து உட்கார்ந்திருப்பார்கள். கல்லூரியில் படித்த பெண்கள் தன்னார்வத்துடன் அவ்வூரில் அதனை நடத்தி வந்தனர்.

    அகல்யா மிகவும் அமைதியான சுபாவம். அதுவே அவளை நிறைய யோசிக்க வைத்தது. நிறைய எழுதவும் வைத்தது. ஓய்வு நேரங்களில் காளியம்மன் மேல் பாடல் எழுதிக் கொண்டிருப்பாள். அவளுக்கு அதுவே பழகி, எழுந்தாலும் உட்கார்ந்தாலும் காளி ஸ்மரணைதான். அந்தளவு அம்மனுடன் ஒன்றிவிட்டவள்.

    அன்றைய தினம் கோவிலில் லட்சார்ச்சனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் மக்கள் கூட்டம் ஏகமாய் வந்து கொண்டிருக்க காளியம்மன் தன் பரிவாரங்களோடு கருணை பொங்க அமர்ந்திருந்தாள்.

    அகல்யாவுக்கும் அன்று வேலைகள் நிறைய. கைகாட்டி நிறுத்தம் சென்று மதுரையில் இருந்து பஸ்ஸில் வந்த மல்லிகைப் பூக்களை, மாலையாகத் தொடுக்கும் வேலை அவளுக்கு. காலையில் ஆட்டோவில் போய் வாங்கி வந்தவள் இதோ இன்னும் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து தொடுத்துக்கொண்டு இருக்கிறாள்.

    தங்க நிறத்தில் உடலோடு கிடந்த சேலையும், தலைக்குக் குளித்ததால் ஈரம் சொட்டும் அவள் முடியும், பிரகாசமான முகமும் பார்ப்பவர் கண்ணுக்கு அவளை அழகியாகக் காட்டின.

    என்ன அகலு! வெள்ளனவே பூ வாங்கிட்டு வந்திட்டியா? ஊர்ப் பெரியவரின் மனைவி பூவாத்தா கரிசனையோடு கேட்க...

    ஆமாத்தா! இன்னிக்கு லட்சார்ச்சனையாச்சே. கூட்டம் குமியறதுக்குள்ள கட்டி முடிச்சுடலாம்ன்னு பார்த்தேன். வேகம் இல்லாம போச்சு புன்னகைத்தாள்.

    இப்படிக்கா தள்ளு பூவை. எனக்குக் கட்டத் தெரியாட்டாலும் நீ கட்டுறதுக்கு ஏதுவா அடுக்கியாவது வைக்கறேன்.

    வேலையைத் தொடர்ந்தவள்...

    ஆமா... இன்னிக்குப் பொழுதுக்குத் தெரிஞ்சுரும்னாரே பூசாரி. காளியம்மா யாரு வாக்கில வந்து நிக்கப் போறாளோ? என்ன சொல்லப் போறாளோ?

    என்ன ஆத்தா தெரிஞ்சுரும்? எதுவும் களவு போயிருச்சா? அகல்யாவின் கேள்வியில்...

    "அடியாத்தி! உனக்குத் தெரியாதாக்கும்! நம்மூருல நடக்கற கிடைத் திருட்டு. கிடையப் போட்டாப் போதும். மறுநாளு பாதி ஆடுகதான் கெடையில் கெடக்கு. மீதி காத்தோடல்ல காணாமப் போகுது! யாரு செய்யறாக? என்னதுக்குன்னு ஊரு சனமே மண்டையப் பிச்சுக்கிட்டு கெடக்கறது உனக்குத்

    Enjoying the preview?
    Page 1 of 1