Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbenum Siragukal
Anbenum Siragukal
Anbenum Siragukal
Ebook111 pages25 minutes

Anbenum Siragukal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறாள். தன்னை வேண்டாம் என்று உதறிச் சென்ற அப்பாவை மீண்டும் தேடி வருகிறாள், அவள். தாத்தா, பாட்டிக்கு வயசாகிவிட்டதால் அப்பாவின் ஆதரவிற்காக வருபவளை அந்த வீடே வெறுக்கிறது. ஆனால், தன் அன்பான செயல்கள் மூலம் அவர்கள் அனைவருக்கும் நல்லதையே செய்து அவர்கள் தனக்கு செய்த கெடுதல்களில் இருந்தும் மீண்டுவந்து அப்பாவின் அன்பை பெறுகிறாளா, அபிநயா?.....

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580101007639
Anbenum Siragukal

Read more from Ga Prabha

Related to Anbenum Siragukal

Related ebooks

Reviews for Anbenum Siragukal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbenum Siragukal - GA Prabha

    https://www.pustaka.co.in

    அன்பெனும் சிறகுகள்

    Anbenum Siragukal

    Author:

    ஜி.ஏ. பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    ஐந்து

    ஆறு

    ஏழு

    எட்டு

    ஒன்பது

    பத்து

    பதினொன்று

    பன்னிரண்டு

    ஒன்று

    "காக்க காக்க, கனக வேல் காக்க

    நோக்க, நோக்க நொடியில் நோக்க"

    விழிக்கும்போதே தன்னிச்சையாக வாய் முணுமுணுத்தது.

    அபிநயா கண் திறக்காமல் அப்படியே கிடந்தாள். இப்படி படுத்திருப்பது அதிகாலையின் சுகம்.

    அபிநயா எப்போதும் விழிப்பு வந்தவுடன் எழ மாட்டாள். அதிகாலை நாலரைக்கெல்லாம் விழிப்பு வந்துவிடும். அந்த நேரம் பிரம்ம முகூர்த்தம். பிரார்த்தனை செய்ய ஏற்ற நேரம் என்பார் தாத்தா.

    பிரார்த்தனை என்று என்ன இருக்கிறது? தேவைகள் ஒன்று நிறைவேறினால், அடுத்தது ஒன்று ஏற்பட்டுக்  கொண்டேதான் இருக்கும். அவளின் பிரார்த்தனை ஒன்றுதான்.லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து

    உலகம் என்பது எல்லோரையும் சேர்த்துதான். அனைவரும் நன்றாக நலமாக இருந்தால் நாமும் சுகம். இதில் தாத்தா, பாட்டி, எங்கோ விலகி இருக்கும் அப்பா என்று அனைவரும் அடக்கம். இது ஏன்?, அவளின் ஒரு வயதில் இறந்துபோன அம்மா கூட அவளின் அடுத்த பிறவியில் எங்கோ சுகமாக இருக்கட்டும்.

    அபிநயா சிறிது நேரம் தன் மூச்சை ஆழ்ந்து கவனித்தாள். லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து என்று பதினோர் முறை சொன்னவள் கந்த சஷ்டி கவசம் சொன்னாள். முடிக்கும்போது முழுதாக உடல் அவள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒரு உற்சாகம்.

    குட், அபிநயா. எழுந்திரு- என்று சொல்லியபடி எழுந்தாள்.

    எப்போதும் எனக்கு, நான் என்று சொல்லி வழக்கமில்லை. அபிநயா என்று தன் பெயரைத்தான் சொல்லுவாள். தாத்தா கூட அடிக்கடி சொல்லுவார்.பெயர் அப்படிங்கறது மற்றவர்கள் கூப்பிட என்று.

    அபிநயா என்று யார் முழுப் பெயரையும் சொல்லி அழைக்கிறார்கள்?. அபி, அபிதான். பாட்டி மட்டும் குட்டிம்மா. தாத்தா எப்போதும் கண்ணா. இவர்களைத் தவிர வேறு என்ன சொந்தங்கள் இருக்கிறது?

    அவளின் ஒரு வயதில் அம்மா இறந்து போனாள். அப்பா ராகவன் வேறு திருமணம் செய்து கொண்டு சித்தி மங்கை வந்தாள். அபியை அவள் சரியாக கவனிக்காமல், உடல் முழுதும் புண் வந்து சிரமப் பட்டவளை ஒரு நாள் வந்த தாத்தா பார்த்து தன்னுடன் எடுத்து வந்து விட்டார்.

    இந்த இருபது வருடங்கள் தாத்தாதான் சகலமும். இந்தப் பக்க விசேஷம் எதற்கும் ராகவன் வந்ததில்லை. அவரைப் பற்றி மற்ற உறவுகள் சொல்வதுதான். தாத்தா ஒரு வெறுப்பில் ராகவன் பற்றியே பேசுவதில்லை.

    படிம்மா என்று உற்சாகப் படுத்துவார். ஒரு பெண்ணுக்கு நிரந்தரமான புருஷன் படிப்புதான்- என்றவர் எம்.காம் படிக்க வைத்தார். அப்படியே சி.ஏ. செய்ய வைத்தார். நகரில் பிரபலமான ஆடிட்டரிடம் பயிற்சிக்குப் போகிறாள்.

    எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார்.

    ஆரம்பப் பள்ளி தமிழாசிரியர். அவளுக்கு இதிகாசங்கள், புராணங்கள், சங்க இலக்கியங்கள் என்று பழக்கப் படுத்தியவர்.

    நல்ல கல்வி என்பது வாழ்க்கை ஓட்டத்துக்கு. வாழ்வதற்கு. வாழ்வை ருசிக்க இலக்கியம் அவசியம் என்பவர் நல்ல கதைகள் என்றுதான் சொல்வாரே தவிர இது இலக்கியம் இது கமர்ஷியல் என்று பிரிக்க மாட்டார்.

    மனதில் நிற்கும் எல்லா எழுத்துக்களும் இலக்கியம்தான்- என்பார்.

    வீட்டில் சங்க இலக்கிய புத்தகங்கள், பதினெட்டு புராணங்கள், கல்கி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், லா.ச.ரா, லஷ்மி, ராஜேஷ் குமார், சுபா,பட்டுக்கோட்டை பிரபாகர் என்று எல்லாமே ரசனையாக இருக்கும்.

    தினமும் மாலை,ஒரு சங்க இலக்கியப் பாடலை எடுத்து வைத்து விளக்கம் சொல்வார்.

    தமிழ் நம் தாய்மொழிம்மா. அதுல நமக்கு ஆழ்ந்த அறிவு, பரிசயம்  இருக்கணும். அது ஒரு கடல். பிற மொழிகளிலும் பண்டித்யம் இருக்கணும். ஆனா தமிழை முழுசா படிக்காம, ஆங்கிலம்தான் உசத்தின்னு சொல்றது மடத்தனம்- என்னும் தாத்தா ஆங்கிலக் கலப்பு இல்லாமல்தான் பேசுவார்.

    மத்த நாடுகளைப் பாரு. அவனவன் தன் தாய்மொழியில்தான் பேசுவான். நம்ம தமிழன் மட்டும்தான் தமிழைத் தவிர ஆங்கிலத்தில்தான் பேசுவான்- என்னும் தாத்தா அவளையும் இயல்பான தமிழில்தான் பேசச் சொல்வார்.

    பழகிப் போன ஆங்கில வார்த்தைகளை விட முடியாது. ஆனா, வீட்டில், தெரிந்தவர்கள், மத்தியில் முடிந்த அளவு தமிழில் பேசு. ஆங்கிலம் என்பது அலுவலக மொழி- என்பார்.

    அபிநயா தமிழில், ஆங்கிலக் கலப்பு இல்லாமல்தான் பேசுவாள்.

    அதுவே ஒரு இனிமை என்றது மனம்.

    கவசம் சொல்லும்போது பிரமித்தது மனம். ஒவ்வொரு பாகமாகச் சொல்லி, காக்க, காக்க எனும்போது மனம் அந்த உறுப்புகளில் நிலை கொள்கிறது. என்ன ஒரு அற்புதம்? இதைத்தானே ஆழ்நிலை தியான வகுப்புகளில் சொல்லித் தருகிறார்கள். என்ன ஒரு அருமையான உளவியல் தத்துவம்?

    மனம் கவசத்தில் உருகியது.

    வெளியே தாத்தா ஆதித்ய ஹ்ருதயம் போட்டிருந்தார். பாட்டி காபி போடும் வாசனை.

    இன்னமும் தாத்தா காபிக் கொட்டை வாங்கி அரைத்துத்தான் காபி குடிப்பார்.

    என்ன சொல்லு. கொட்டையை சுடச் சுட அரைத்து, டிகாஷன் போட்டு, காபி குடிப்பதில் இருக்கும் சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை

    அதுவும் பாட்டி கை காபி

    ஆமாம். பொண்டாட்டி கை காபின்னா அதோட ருசியே வேற- தாத்தா கண் சிமிட்ட, பாட்டி லேசாய் வெட்கப் பட வீடே அழகாய், ஆனந்தமாய் இருக்கும்.

    அபிநயா புன்னகையோடு எழுந்தாள்.

    அம்மாடி எழுந்துட்டியா?- தாத்தா. காபி குடிச்சுட்டு வரியா. போய் காய்கறி வாங்கிண்டு வந்துடலாம்.

    உங்களுக்கு எதுக்கு தாத்தா சிரமம். நான் வண்டில போய் வாங்கிண்டு வந்துடறேன்.

    இல்லம்மா. நாமளே போய் பச்சைப் பசேல்னு காய்களை பார்த்து வாங்கறது தனி உற்சாகம்

    ஆமா, அப்படியே நாலைந்து பச்சைப் பிஞ்சுகளை ரசிச்சுட்டு வரலாமே.

    நான் எதுக்குடி வெளில் போகணும். உன் முகத்தை விடவா. அந்த பசுந்தளிர்கள் அழகு?

    "போதுமே. நான்

    Enjoying the preview?
    Page 1 of 1