Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaayum Ngyaayum Yaaraagiyaro...
Yaayum Ngyaayum Yaaraagiyaro...
Yaayum Ngyaayum Yaaraagiyaro...
Ebook142 pages1 hour

Yaayum Ngyaayum Yaaraagiyaro...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு திருமணத்தில் விதி வசத்தால் பிரிந்த தோழிகள் இன்னொரு திருமணத்தில் புரிதலோடு இணைகிறார்கள். இடையில் ஊடுருவும் இளமைக் காதலின் மணம் கதையெங்கும் சுவாசமாய் பயணிக்கிறது.

நிரல்யாவும் அஸ்வினும் காதலில் இணைவார்களா? வாங்க படிக்கலாம்!

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580142810409
Yaayum Ngyaayum Yaaraagiyaro...

Read more from Mala Madhavan

Related to Yaayum Ngyaayum Yaaraagiyaro...

Related ebooks

Reviews for Yaayum Ngyaayum Yaaraagiyaro...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaayum Ngyaayum Yaaraagiyaro... - Mala Madhavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    யாயும் ஞாயும் யாராகியரோ...

    Yaayum Ngyaayum Yaaraagiyaro...

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் -3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    பஞ்சமுகி அறிமுகம்

    எழுத்தாளர் G.A. பிரபா அவர்களின் ஊக்குவிப்பால் மாலா மாதவன், விஜி சம்பத், செல்லம் ஜரீனா, மதுரா மற்றும் சாய்ரேணு என்ற ஐந்து பெண்கள் இணைந்து பஞ்சமுகி என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள்.

    மாலா மாதவன்:

    சென்னையைச் சேர்ந்த MCA பட்டதாரி. தமிழில் கவிதைகள், கதைகள் எனப் பயணிக்கிறார். இவரது கதை கவிதைகள் கல்கி, குமுதம் சிநேகிதி, ராணி போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. வெண்பா எழுதுவதில் விருப்பம் அதிகம்.

    விஜி சம்பத்:

    சேலத்தில் வசிக்கும் முதுகலைப் பட்டதாரி. தினமணி கதிர், தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள் அனைத்து முன்னணி வார,மாத இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. தினத்தந்தியில் சில கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. ஆன்மீகப் பாடல் எழுதுவதில் வல்லவர்.

    செல்லம் ஜரீனா:

    சென்னையைச் சேர்ந்தவர். பல முன்னணி பத்திரிக்கைகளில் இவரது கதை வந்துள்ளது. இவருடைய சிறுகதைகள் சில ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகமாகவும் வந்துள்ளன. வரலாற்று நாவல் படைப்பதில் சிறந்தவர்.

    மதுரா:

    தேன்மொழி ராஜகோபால் என்ற இவர் படித்தது ஆங்கில இலக்கியம்.மரபு நவீனக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பிரபல இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் மின்னிதழ்களிலும் படைப்புகள் வெளியாகி உள்ளன

    சாய் ரேணு:

    தென்காசியில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி. ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. துப்பறியும் நாவல் எழுதுவதில் திறம் மிக்கவர்.

    அத்தியாயம் - 1

    வேக வேகமாய் அந்த நீதிமன்ற காரிடாரில் நடந்தாள் நிரல்யா. கறுப்புக்கோட்டு மடிப்புடன் இடதுகை முழங்கையில் அவள் வேகநடைக்கேற்ப ஊஞ்சலாடியது. லெமன் யெல்லோவில் கருநீல பார்டர் இட்ட சில்க் காட்டன் ஸாரியும் கருநீலத்தில் ஹைநெக் ப்ளவுசும் கம்பீரத்தைக் கூட்டின.

    தன்னுடைய சீனியரின் கேபினுக்குள் நுழைந்தவளின் பார்வை வலதுபுறம் துழாவியது. சீனியரின் அறை.

    ஹேய்... வா! வா...! நிரல்யா? சீனியர் இன்னும் வரலை

    மேக்னா புன்னகையோடு வரவேற்று கையில் வாட்டர் பாட்டிலைத் திணித்தாள்.

    ஸ்... ஸப்பா நீரை அருந்தியவள்...

    இந்த ட்ராபிக்கில் நீந்திக் கரை சேருமுன்னே எனர்ஜியெல்லாம் கரைஞ்சிடுது மேகி

    இன்னிக்கு பதினொரு மணிக்கு உன்னுடையமீ டூ கேஸ் தானே!

    ம்

    சீனியர் வருவாரா

    தெரியலையே! முந்தாநாள் டிஸ்கஸ் பண்ணினார். நானும் பாயிண்ட்ஸ் சொன்னேன். ஓக்கே செய்தார்

    அப்புறமென்ன ஆல் தி பெஸ்ட்! தூள்கிளப்பு கண்ணு

    கை குலுக்கினாள்.

    வெங்க்கி எங்கே? நீயும் அவனும் தானே அந்த மினிஸ்டர் சொத்து கேஸ் எடுத்துருக்கீங்க

    ஆமாம் அவனும் வர நேரம்தான்

    நிரல்யா அடுத்து தான் அப்பியர் ஆக உள்ள வழக்கின் கடைசிநேர தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

    ஒரு முன்னணி நடிகன் மீது ஒரு நடிகை தொடுத்தமீ டூவழக்கு. ஷுட்டிங்கின் போதும் கேரவனில் வைத்தும் தன்னிடம் மிஸ்பிஹேவ் செய்ததாகவும் லவ்டார்ச்சர் தந்ததாகவும் வழக்கு தொடுத்திருந்தாள்.

    மீடியா மொத்தமுமே தன் பார்வையை த் திருப்பியது. அந்த நடிகன் முன்னணி நடிகன் மட்டுமல்ல எந்த கிசுகிசுவிலும் மாட்டாதவன். சினிமா இலக்கியம் கலைகள் வரலாறு இப்படி எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவான் பத்திரிகையாளர்களிடமும் நல்ல நட்புடன் இருப்பவன்.

    சீனியரின் நீண்டநாள் நண்பரின் மகன் அந்த நடிகன். அக்மார்க் நல்லவன் என்று பேரெடுத்தவன் மீது அந்த நடிகை வீடியோ கிளிப்புகளோடு குற்றம் சுமத்தியிருக்க வழக்கை கையிலெடுத்த சீனியர் தன்னுடைய பிரதம சிஷ்யை நிரல்யாவிடம் கொடுத்து விட்டார். இதில் அவரே அப்பியரானால் பெரும் புகழ் கிடைக்கும். அத்தனை ரசிகக்கூட்டம் அவனுக்கு. அவன் இதிலிருந்து மீள வேண்டும் என்று ரசிகர் மன்றக் கூட்டங்கள் பாலாபிஷேகம் முதல் நடையாத்திரை அன்னதானம் முடியிறக்கல் என்று பலவித விஷயங்களைச் செய்து கொண்டிருந்தது.

    இப்பேர்ப்பட்ட வழக்கை சீனியர் அவளை நம்பிக் கொடுத்ததில் அவளுக்கும் பெருமைதான். அத்தனை சீக்கிரம் வருகின்ற புகழைத் தூக்கி தன் ஜுனியர்க்கு தாரை வார்க்க மனசு வருமா?

    அவருக்கு இருந்தது.

    என்னுடைய ஜுனியர் என்பதில் பெருமை கொள்கிறவர்...

    அவர் பேரையும் அவர் வைத்த நம்பிக்கையையும் காப்பாற்றனுமே!

    நிரல்யா கொஞ்சம் தடுமாறினாள்.நீண்ட மூச்செடுத்து பின்பு அம்மாவை

    சீனியரை மனதில் கொண்டு வந்து வணங்கிக் கொண்டாள்.இருக்கையை விட்டெழுந்து கறுப்புக் கோட்டை மாட்டிக் கொண்டு வெளியேறவும் அவளுக்கு முன்னே... . சின்ன மைக்குடன் பின்புறமாய் நடந்தபடியே... .

    குட்மார்னிங் மேம்! இந்த கேஸை பற்றி சொல்லுங்களேன்

    அவனுடைய ஐ.டி. கார்டு சட்டைப்பைக்குள் இருந்தது.

    கோர்ட்டில் நடக்க இருக்கிற கேஸ் பற்றி எதுவும் பேசக்கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா மிஸ்டர்

    மிஸ்டர்நிரூப் உதயம் சேனல் ரிப்போர்ட்டர்

    நீ எதுவானாலும் இருந்து தொலை என்பது போல பார்த்தவளை

    மேம்... ப்ளிஸ்! சின்னதா எதாவது சொல்லுங்க மேம். எங்க வியுயர்ஸ்க்காக

    கோ டு ஹெல்என்று முனகியவள் தன்னுடைய தோழனும் கொலீக்குமான இளஞ்சேரனிடம் கண்ணைக் காட்ட அவன் தம்ஸ்அப் காட்டினான். அவன் பார்வை போன திக்கில் வெள்ளை நிற ஆடி கார் ஒன்றிருக்க திருப்தியுடன் நீதிமன்ற அறையுள் நுழைய முயல்கையில்...

    அவளை மறிப்பது போல்.

    ஆல்தி பெஸ்ட் நிரும்மா

    என்று கிசுகிசுத்தான் அந்த இளைஞன்.

    அண்ட் ஹேப்பி பர்த் டே

    முறைக்க முயன்றவள் தோற்றுப்போய் பூத்து வெடிக்க இருந்த புன்னகையை சட்டென்று மறைத்துக் கொண்டாலும் விழிகள் சதி செய்தன.

    தேங்க் யூ அஸ்வின்

    யாருமறியாமல் அவளின் கையை அழுத்தி விடுவித்தவன் நகர்ந்தான் நொடி நேர இடைவெளியில்...

    நிரல்யாவின் முகம் சிவந்து போனது. தன்னை மீட்டுக் கொள்ள அவகாசமும் அவளுக்குத் தேவைப் பட்டது.

    பேரன்பின் கலந்துரையாடல் க்ஷணநேரம் இருஜோடி விழிகளில் கரைந்து உருகியது.

    ஏனோ அந்தக் குரலும் அது ஏந்தி வந்த செய்தியும் அத்தனை பிடித்தமாயிருந்தது. நிரல்யாவிற்கு.

    தேவையான நேரத்தில் தேவையான விஷயத்தை தேவையான விகிதத்தில் கலந்து முகிழ்க்கும் குரல் தனி ஸ்பெஷல்தானே.!

    அவனுடைய அந்தக் குரலும் அப்படிப்பட்டதுதான்.

    பாதரஸ வழுவழுப்போடு மினுமினுப்பாகவும் கையின் அழுத்தக் கதகதப்பில் சேர்ந்து கலந்து அவளுள் இறங்கியது.

    நகர்ந்து சென்றவனை நிமிர்ந்து பார்க்க அந்த நொடிக்காகவே காத்திருந்தவன் போல கண்சிமிட்டிச் சிரித்தான் அந்த குறும்புக்காரன்.

    மீண்டும் ஒருமுறை தன்னுள் சிவந்து போனவள் அதை வெளிக்காட்டாமலிருக்க முயன்று போராடினாள்.

    வக்கீலானால் தான் என்ன? வாதிடும் திறமைதானிருந்தாலென்ன? பெண்ணின் இயல்பு போய்விடுமா? தன்னுடையவன் என்ற உரிமையாளன் முன்னே கன்னம் சிவந்துதானே போகும்.

    தன் இருக்கையில் அமர்ந்து தன்னை மீட்டுக் கொண்டவள் கோப்பை விரித்து வைத்துக் கொண்டாள்.

    நீர்வெளியொன்றின் மேற்பரப்பில் சிந்தாமல் சிதறாமல் உள்நுழையும் பிம்பமாய் அவளுள்ளே நுழைந்திருந்தான் அவன்.

    இன்று நிரல்யா தனியாக வாதிடும் மூன்றாவது வழக்கு. முதலிரண்டிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1