Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbin Mugavari Neeyanal...
Anbin Mugavari Neeyanal...
Anbin Mugavari Neeyanal...
Ebook210 pages1 hour

Anbin Mugavari Neeyanal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பவித்ரா ஏழ்மையின் சூழலால் சமையல் வேலைக்கு வந்தாலும் அவள் ஒரு சிறந்த நிர்வாகி, படிப்பறிவு மிக்கவள், பல துறைகளில் சிறந்தவள் என்று உணர்த்திவிடுகிறார். அவளிடம் இருக்கும் ஒரு திறமைதான் மிகப்பெரிய இடத்தைக் கொடுக்கிறது. அதைப்போல தியாவிற்கு படப்பிடிப்பில் முக்கிய இடத்தைக் கொடுத்து அழகு பார்க்கிறார். நாவலின் வில்லி என்று நினைத்துக்கொண்டு வரும்போதே அவளின் வித்யாசமான பெண்மைக்கே உரிய பாச உணர்வு மத்தாப்பாய் ஒரு இடத்தில் மலர்கிறது. அதை வாசித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580155908601
Anbin Mugavari Neeyanal...

Read more from R. Sambavi Sankar

Related to Anbin Mugavari Neeyanal...

Related ebooks

Reviews for Anbin Mugavari Neeyanal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbin Mugavari Neeyanal... - R. Sambavi Sankar

    http://www.pustaka.co.in

    அன்பின் முகவரி நீயானால்...

    (உள்ளம் வருடும் உன்னத புதினம்)

    Anbin Mugavari Neeyanal...

    Ullam Varudum Unnatha Puthinam

    Author :

    சாம்பவி சங்கர்

    R. Sambavi Sankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sambavi-sankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    ஆசிரியர் குறிப்பு

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    வாழ்த்துரை

    எழுத்தாளர்- நாவலாசிரியர்- ‘கலை நன்மணி’

    முனைவர் கே.ஜி. ஜவஹர்

    முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் ‘வரமா சாபமா' என்று விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், என்னைக் கேட்டால் அது வரம் என்றே சொல்வேன். இன்றேல் கதை, கவிதை, நாவல் என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் திண்டிவனம் சாம்பவி சங்கர் என்ற அற்புதமான நட்பு எனக்குக் கிடைத்திருக்காது.

    ஒரு கத்தியை வைத்து கனியையும் வெட்டலாம், கையையும் வெட்டலாம் என்று இருக்கும்போது, கனிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்று வருபவர் சாம்பவி.

    குடும்பத் தலைவியாக, தாயாக, ஒரு பள்ளியின் ஆசிரியராக, எல்லாவற்றிற்கும் மேலாக எழுத்தாளராகவும் சிறப்புற பரிணமிக்கிறார். சமீபத்தில் இவர் முதல் நூலான 'நிழல் பயணம்' படிக்க நேர்ந்தது. அது அவரின் முதல் நாவலாகவே தெரியவில்லை. ஒரு கைதேர்ந்த அனுபவமிக்க ஒரு எழுத்தாளரின் ஆளுமை அதில் தெரிந்தது.

    நான் பெரிதும் போற்றும் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நக்கீரனின் முதன்மைத் துணை ஆசிரியரும், 'இனிய உதயத்தின்' இணை ஆசிரியருமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அதன் அணிந்துரையில் சொன்னதுபோல, சாம்பவியின் கவிதைகள் வீணைச் சொற்களால் வேயப்பட்டிருக்கிறது என்றால், கதைகளும் கட்டுரைகளும் கருத்தாளுமைகளால் களை கட்டுகின்றன. ஆகவே 'எழுத்தில் நான் ஒரு எல்.கே.ஜி. என்று இவர் என்னிடம் சொன்னதை, முற்றிலுமாகப் புறம் தள்ளுகிறேன்.’

    எவன் ஒருவன் தனக்குள்ள திறமைகளைக் கண்டுபிடித்து வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துகிறானோ அவனே வாழ்வில் சரசரவென முன்னேறுகிறான். சாம்பவி இதில் வெற்றிபெறுகிறார். இன்றேல் அவருக்கு, பிரபல பத்திரிகையின் இணைய இதழில் தொடர் எழுத வாய்ப்பு வந்திருக்குமா? மனதை படபடக்கச் செய்யும் 'மரண முகூர்த்தம்' என்ற அவர் தொடர், எழுத்துலகில் களத்தில் இறங்கியதுமே அவர் அடித்த ஒரு சிக்ஸர்.

    ஒருவருக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது. உழைப்பில் நம்பிக்கை, பிறரை மதிக்கும் பாங்கு, பிறர் திறமைகளை போற்றுதல், அவர்களிடம் உள்ள நல்ல சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்ளுதல் போன்ற காரணங்களும் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதை உணர்ந்து செயல்படுகிறார் சாம்பவி.

    சிலர் தங்கத்தின் மேல் இருந்து கொண்டு, திட்டமிடல் உழைப்பு இல்லாமல் அதைப் பாறையாக மாற்றிவிடுவார்கள். சிலரோ பாறைமேல் இருந்தாலும் அது தங்கமாக மாறிவிடும். சாம்பவி இரண்டாம் வகை!

    எழுத ஆரம்பித்த மிகக் குறுகிய காலத்தில் பளீரென ஒளி வீசுகிறது இவர் வளர்ச்சி. அதற்கு உதாரணம் தங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் அன்பின் முகவரி நீயானால் என்ற நாவல், வாசகர்களின் குறிப்பாக பெண்களின் மனதைக் கொள்ளை கொள்ளப்போகும் நாவல்.

    மலையில் இருந்து புறப்படும் அருவி ஆறாகி, அமைதியான சிற்றோடை வடிவம் எடுப்பதைப்போல இவர் மனதிலிருந்து கொட்டும் கற்பனை அருவி மென்மையான ஒரு காதல் கதையாய் மாறி இறுதியில் நம் மனதில் சங்கமிக்கிறது.

    திரைப்படக் குழு ஒன்று ஒரு அழகிய கிராமத்தில் வந்து இறங்குகிறது. ஒரு நாற்பது நாட்கள்...! அதற்குள் எத்தனை சம்பவங்கள். ஒருபுறம் நாவலின் நாயகன் ரமேஷ் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனராகக் கதையைக் நகர்த்துகிறான் என்றால் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தால் ஒரு சராசரி மன உணர்வுகள் கொண்ட ஒரு ஆண்மகனாக கதையைக் கொண்டு போகிறான். இதை தன் எழுத்தில் அற்புதமாக வடித்திருக்கிறார் சாம்பவி.

    கதையிலும் அதிக பாத்திரங்கள் இல்லை. ரமேஷ், பவித்ரா, தியா, ஷாலு. இதில் படப்பிடிப்பின் நாயகி ஷாலுவிற்குகூட அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. கதை என்பதே பவித்ரா, ரமேஷ், தியாவைச் சுற்றித்தான்!

    கிராமத்தில் சாப்பாடு சரியாக இல்லையென்ற ரமேஷின் ஆதங்கத்தை சரி செய்ய கம்பெனி மேனேஜர் ராமுவால் சமையல் வேலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட பவித்ரா வந்து சமையலை ஆரம்பிக்கும்போது கதையும் ஆரம்பமாகிறது. அதன் பிறகு வரிக்கு வரி சஸ்பென்ஸ்தான். எப்படியோ படிப்பவர்களுக்கு பவித்ரா மீது பசக்கென்று பாசம் ஒட்டிக்கொள்ள செய்துவிடுவது ஆசிரியருக்கு கிடைத்த முதல் வெற்றி.

    பவித்ரா சமையல் தொடருமா? மறுபடி வேலை கிடைக்குமா? பிற்பகுதியில் வரும் தியா பவித்ராவை மதிப்பாளா? ஒரே அறையில் தியாவுடன் சிரித்து விளையாடும் ரமேஷிற்கு பவித்ராவின் மீதான பார்வையென்ன? அது காதலா கருணையா? உடல் நலம் பாதிக்கப்பட்ட ரமேஷ் படப்பிடிப்பை ரத்து செய்வானா? ஒரு குடும்பக் கதையில் இது போன்ற பல சஸ்பென்ஸ் வைப்பது சாம்பவியால்தான் முடியும். படிப்பவர்களின் மனதை கைகோர்த்து அழைத்துச் சென்று மெல்ல இயல்பான சூழ்நிலையில் சஸ்பென்ஸ்களை விடுவித்துக் கொண்டே செல்கிறவிதம் அல்லது சொல்கிறவிதம் அருமை.

    திரைப்படத்துறையில் எள்ளளவும் கால் பதிக்காதவர் சாம்பவி என்று சொன்னால் நம்பவே முடியாது. காரணம் நாவலின் கதைக்களமே ஒரு சினிமா படப்பிடிப்புதான். ஆனால் நாவலில் இயக்குநர் படும்பாடு, அவர் படப்பிடிப்பில் முரண்டு பிடிக்கும் தியாவினை நல்ல வார்த்தைகள் சொல்லித் திருத்துவது, இயக்குநருக்கு மட்டுமல்ல அங்கு பணிபுரியும் ஒவ்வொருவரும் செய்யும் தொழிலே தெய்வம் என்று இருப்பதால் அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்று தியாவிற்கு சொல்வது போன்ற சிறப்பான காட்சி அமைப்புகளையும் வைக்கிறார்!

    கோடம்பாக்கத்தில் நடக்கும் ப்ரிவியூ ஷோவில்தான் ஆசிரியர் தன் க்ளைமாக்ஸ்ஸையே வைத்திருக்கிறார். மிகப் பெரிய டுவிஸ்ட் அது!

    விருந்தில் பறிமாறப்படும் பாயசத்தில் மிதக்கும் முந்திரிகள்போல் நாவலின் சுவைக்கு மெருகூட்டுகின்றன சில சொற்றொடர்கள் நம்மை சிந்திக்கவும் வைத்து விடுகின்றன.

    நாயகி பவித்ராவின் தோழி அவளை உயர் படிப்பிற்கு அழைக்கும்போது, நிலாச்சோறு சாப்பிட ஆசைப்படலாம்... ஆனால் நிலாவிற்கே சென்று சோறு சாப்பிட என்னிடம் வசதியில்லை என்ற அர்த்தத்தில் பவித்ரா சொல்லும் போது மனம் நெகிழ்கிறது.

    'ஒருவரிடம் நாம் கை நீட்டிவிட்டால் அவரிடமே கைகைகட்டி நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்' என்ற வார்த்தைகளும், சூழ்நிலையை மாற்றுகிறார்கள் வலியவர்கள், சூழ்நிலையால் மாறுகிறார்கள் எளியவர்கள் போன்ற வரிகளும் ரொம்பவே சிந்திக்க வைக்கின்றன.

    ஆசிரியர் பெண்மையைப் போற்றுகிறவர் என்பதும், பெண்களின் பலதுறை வளர்ச்சிகளில் அக்கறை கொண்டவர் என்பதும் பெண்களின் பாத்திரப் படைப்பில் காட்டிவிடுகிறார். பவித்ரா ஏழ்மையின் சூழலால் சமையல் வேலைக்கு வந்தாலும் அவள் ஒரு சிறந்த நிர்வாகி, படிப்பறிவு மிக்கவள், பல துறைகளில் சிறந்தவள் என்று உணர்த்திவிடுகிறார். அவளிடம் இருக்கும் ஒரு திறமைதான் மிகப்பெரிய இடத்தைக் கொடுக்கிறது. அதைப்போல தியாவிற்கு படப்பிடிப்பில் முக்கிய இடத்தைக் கொடுத்து அழகு பார்க்கிறார். நாவலின் வில்லி என்று நினைத்துக்கொண்டு வரும்போதே அவளின் வித்யாசமான பெண்மைக்கே உரிய பாச உணர்வு மத்தாப்பாய் ஒரு இடத்தில் மலர்கிறது.

    நாவலில் தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமேயில்லை. ‘அன்பின் முகவரி நீயானால்' அருமையான நாவல். இதைப்போன்ற மேலும் பல உயிரோட்டமான நாவல்களை சாம்பவி சங்கர் அவர்கள் படைத்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவருக்கு எழுத்துலகில் ஒரு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

    என்னுரை

    நன்றி மலர்கள்!

    அனைவருக்கும் என் புன்னகை வணக்கம்.

    இலை தாங்கும் காம்பும் அறியாமல், இதழ் விரியும் மலரின் மெல்லிதழாய், இதயத்துள் விரிந்த என் கனவின் கருவான எழுத்துக்களை, கருவில் எனைச்சுமந்த அன்னைக்கும்,

    அறிவின் கரு கொடுத்த தந்தைக்கும், சமர்ப்பிக்கிறேன்.

    தமிழ்ப் புலவர் பட்டம் பெற்ற இணையருக்கு பிறந்ததால்தான், தமிழன்னையின் கருணைமிகு பார்வை, சற்றேனும் என்மீது படர்ந்ததிருக்கிறது என்று எண்ணுகிறேன்.

    அரிச்சுவடி கற்றுத்தந்த பெற்றோரின் பெருமைக்கு நான் அளிக்கும் சிறு அன்பு இந்நூலின் சமர்ப்பணம்!

    உலகம் அறியா உன்னதப் பருவத்தில் அவரின் கரம்பிடித்தேன், கரம்பிடித்த நாள் முதல், எந்தன் அன்பின் முகவரி அவரானார். அலைகடலின் நடுவே, அன்பெனும் தோணியிலே, எங்கள் முப்பத்து மூன்றாண்டு கால இல்லறத்தின் பயணம் நல்லறமாய்... என் எழுத்துலக பயணத்திலும் மைல் கல்லாய் வழி நடத்தும் என் அன்புக் கணவருக்கும் நன்றியெனும் வார்த்தைகளை அன்பினில் கோக்கிறேன். என் எழுத்துக்களை ரசித்து ஊக்கப்படுத்தும் உடன் பணியாற்றும் தோழிகளுக்கு நேசமிகு நன்றிகள்.

    தன்னுடைய 50 ஆண்டுகால எழுத்துலகப் பயணத்தில், பட்டங்களும், விருதுகளும் பல பெற்ற கீர்த்திமிகும் எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர் ஐயா, எனக்கு வாழ்த்துரை வழங்கியதற்கு, பெருமகிழ்வுடன் கூடிய நன்றியினைத் தெரிவிக்கிறேன்.

    என் எழுத்துலக பீஷ்மராய் எனை வழிநடத்தும் - எனைப் போன்ற வளரும் எழுத்தாளர்களை இனம் கண்டு உற்சாகமூட்டும் ஆரூர் தமிழ்நாடன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.

    அருமையாக இந்நூலினை ரவிவர்மாவின் ஓவியம்போல் அழகாக வடிவமைத்த மணிஎழிலன் அவர்களுக்கும், மனம் மகிழ் நன்றிகள்.

    அன்புடன்,

    சாம்பவி சங்கர்

    9597893720

    ஆசிரியர் குறிப்பு

    ஆசிரியர் பெயர் சாம்பவிசங்கர். அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை. 34 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் தொடர்ந்து பணியிலிருப்பவர். பள்ளி கலைநிகழ்ச்சிகளில் நாடகம், பாடல்கள், கட்டுரை என தயாரித்துவழங்கி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவார்.

    இவரின் நிழல்பயணம், அன்பின் முகவரி நீயானால் நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது.

    முதல் நாவலான அன்பின் முகவரி நீயானால் நாவல் கவிப்பேரரசு வைரமுத்து, மற்றும் கவிஞர் மு. மேத்தா அவர்களால் வெளியிடப்பட்டது.

    நக்கீரன் இணையத்தில் வெளிவந்த மரணமுகூர்த்தம் என்ற பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றம் தொடர்பான நாவல் வாசகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மாயப்புறா என்ற குடும்பநாவல் வெளிவருகிறது. நக்கீரன் குழுமம் இவருக்கு புதின இளவரசி என்ற சிறப்புப் பெயரை வழங்கியுள்ளது.

    இவரின் அன்பின் முகவரி நீயானால் நாவல் நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களின் கரங்களால் மாசிலா விஜயா விருது பெற்றது. விருதுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1