Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennul Paathiyanavaley!
Ennul Paathiyanavaley!
Ennul Paathiyanavaley!
Ebook576 pages4 hours

Ennul Paathiyanavaley!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னுள் பாதியானவளே இக்கதை பெண்களை மையமாக வைத்து நகரும். இக்கதையின் நாயகன் காவல்துறை அதிகாரி. நாயகி மருத்துவர். நாயகி தன் தந்தையை இழந்தவள் எவ்வளவு துயரங்களை அனுபவிக்கிறாள். அதையும் மீறி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் நிமிர்ந்த நன்னடையும், நேர்க்கொண்ட பார்வையுமாக வாழ்பவள் தன்னை வீழ்த்த நினைப்பவர்களை எப்படி எதிர்கொள்கிறாள். தன் கணவனின் துணைக்கொண்டு அவர்களை எப்படி வீழ்த்துகிறாள்‌ என்பதையும், நாயகன் சிவா தன் காதலியை கைப்பிடிக்க அனைத்து தடைகளையும் மீறி அவளை எப்படி மணந்து கொள்கிறான், அவளுக்கு உறுதுணையாக இருந்தவன் அவளின் மீது இருந்த பழியை எவ்வாறு நீக்க உதவுகிறான். நாயகனின் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அவனுக்கு மட்டுமில்லாமல் நாயகிக்கும் எப்படி பக்க பலமாக அனைத்து விஷயங்களிலும் உதவுகின்றனர். அனைவரும் சேர்ந்து முயற்சி செய்து நாயகன் நாயகியை எப்படி சேர்த்து வைக்க முயற்சி செய்தனர் என்பதை இக்கதையில் காணலாம்.

காதல் சஸ்பென்ஸ், நகைச்சுவை, டிவிஸ்ட் அனைத்தும் இக்கதையில் இருக்கும்.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580164609724
Ennul Paathiyanavaley!

Read more from Kanchana Senthil

Related to Ennul Paathiyanavaley!

Related ebooks

Reviews for Ennul Paathiyanavaley!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennul Paathiyanavaley! - Kanchana Senthil

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என்னுள் பாதியானவளே!

    Ennul Paathiyanavaley!

    Author:

    காஞ்சனா செந்தில்

    Kanchana Senthil

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-senthil

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    பகுதி - 1

    பகுதி - 2

    பகுதி – 3

    பகுதி - 4

    பகுதி - 5

    பகுதி - 6

    பகுதி - 7

    பகுதி - 8

    பகுதி - 9

    பகுதி - 10

    பகுதி - 11

    பகுதி - 12

    பகுதி - 13

    பகுதி - 14

    பகுதி - 15

    பகுதி - 16

    பகுதி - 17

    பகுதி - 18

    பகுதி - 19

    பகுதி - 20

    பகுதி - 21

    பகுதி - 22

    பகுதி - 23

    பகுதி - 24

    பகுதி - 25

    பகுதி - 26

    பகுதி - 27

    பகுதி - 28

    பகுதி - 29

    பகுதி - 30

    பகுதி - 31

    பகுதி - 32

    பகுதி - 33

    பகுதி - 34

    பகுதி - 35

    பகுதி - 36

    பகுதி - 37

    பகுதி - 38

    பகுதி - 39

    பகுதி - 40

    பகுதி - 41

    பகுதி - 42

    பகுதி - 43

    பகுதி - 44

    பகுதி - 45

    பகுதி - 46

    பகுதி - 47

    பகுதி - 48

    பகுதி - 49

    பகுதி - 50

    பகுதி - 51

    பகுதி - 52

    பகுதி - 53

    பகுதி - 54

    பகுதி - 55

    பகுதி - 56

    பகுதி - 57

    பகுதி - 58

    முன்னுரை

    ஹாய் சகோஸ்,

    என்னுள் பாதியானவளே இக்கதை பெண்களை மையமாக வைத்து நகரும். இக்கதையின் நாயகன் காவல்துறை அதிகாரி. நாயகி மருத்துவர். நாயகி தன் தந்தையை இழந்தவள் எவ்வளவு துயரங்களை அனுபவிக்கிறாள். அதையும் மீறி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் நிமிர்ந்த நன்னடையும், நேர்க்கொண்ட பார்வையுமாக வாழ்பவள் தன்னை வீழ்த்த நினைப்பவர்களை எப்படி எதிர்கொள்கிறாள். தன் கணவனின் துணைக்கொண்டு அவர்களை எப்படி வீழ்த்துகிறாள்‌ என்பதையும்,

    நாயகன் சிவா தன் காதலியை கைப்பிடிக்க அனைத்து தடைகளையும் மீறி அவளை எப்படி மணந்து கொள்கிறான், அவளுக்கு உறுதுணையாக இருந்தவன் அவளின் மீது இருந்த பழியை எவ்வாறு நீக்க உதவுகிறான். நாயகனின் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அவனுக்கு மட்டுமில்லாமல் நாயகிக்கும் எப்படி பக்க பலமாக அனைத்து விஷயங்களிலும் உதவுகின்றனர். அனைவரும் சேர்ந்து முயற்சி செய்து நாயகன் நாயகியை எப்படி சேர்த்து வைக்க முயற்சி செய்தனர் என்பதை இக்கதையில் காணலாம்.

    காதல் சஸ்பென்ஸ், நகைச்சுவை, டிவிஸ்ட் அனைத்தும் இக்கதையில் இருக்கும்.

    அன்புடன்

    காஞ்சனா செந்தில்.

    பகுதி - 1

    சென்னையில் சத்யா மருத்துவமனை மிகவும் பரபரப்பாக, அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. தொழிலதிபர் ஈஸ்வரன் மீது கொலை முயற்சி நடந்ததால் இந்த பரபரப்பு. அந்த மருத்துவமனையின் உரிமையாளர்தான் ஈஸ்வரன்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியான ஈஸ்வரனின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உறவினர்கள் தொழில் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அங்கே ஒன்று கூடினர். ஈஸ்வரனின் மனைவி சத்யாம்பிகை அழுதுகொண்டே இருந்தார். அவரை அவரின் மகள் ஸ்ருதியால் சமாதானம் செய்ய முடியவில்லை. ஈஸ்வரன் மிகவும் நல்லவர். அதுமட்டுமல்லாமல் இல்லாதவர்களுக்கு படிப்பிற்காகவும், அவர்களுக்கு பணம் தேவைப்பட்டாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருபவர். தொழிலில் கொடிகட்டி பறப்பவர். உறவினர்கள் ஈஸ்வரனின் மீது உள்ள பாசத்தினால் வந்திருக்க, ஆனால் தொழிலதிபர்கள் தன் மீது ஏதாவது பழி வந்து விடுமோ என்ற பயத்தில், தான் இந்த தவறை செய்யவில்லை என்று நிரூபிப்பதற்காக வந்திருந்தனர். ஸ்ருதி அவளின் அம்மாவை சமாதானம் செய்து கொண்டிருக்க, அவர்களை நோக்கி வீர நடை போட்டு வந்தாள் நம் கதையின் நாயகி சக்தி. ஸ்ருதி, அம்மா அங்க பாருங்க சக்தி அக்கா வராங்க என்றதும் சத்யாம்பிகை, சக்தி உங்க மாமா எப்படி இருக்காரு என்னம்மா ஆச்சு? சக்தி, அத்தை ப்ளீஸ் கொஞ்சம் உட்காருங்க என்று அவரை அமர வைத்தவள், ஸ்ருதி கொஞ்சம் தண்ணி கொடுடா என்றவள் வலுக்கட்டாயமாக சத்யாம்பிகைக்கு தண்ணியைப் புகட்டினாள்.

    அத்தை கவலைப்படாதீங்க மாமா ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிடாங்க கத்தி ரொம்ப ஆழமா இறங்கல அதனால பயப்படும்படி எதுவும் இல்லை என்றாள்.

    சக்தி யாருமா இப்படி பண்ணியிருப்பா? நீ மட்டும் இல்லனா அவரை யார் காப்பத்தி இருப்பா? என்று அழுதார் சத்யாம்பிகை.

    ஈஸ்வரனை நான்கைந்து பேர் கொலை செய்ய முயற்சிக்க, அப்போது அந்தப் பக்கமாக வந்த சக்தியும் அவளின் தம்பி சத்தீஷும் அது ஈஸ்வரன் கார் என்பதை தெரிந்தவர்கள் வேகமாக செல்வதற்குள் அவர்கள் டிரைவரை தாக்கியவர்கள் ஈஸ்வரனை கத்தியால் குத்தி ஓடிவிட்டனர். சக்தி, மாமா!!! என்று கத்திக் கொண்டு ஓட சத்தீஷும் வேகமாக சென்று அவர்களை பிடிக்க முயல அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சக்தி அவரை உடனடியாக மருத்துவமனை அழைத்து வந்துவிட்டாள். ஈஸ்வரின் மகன் கிரிஷ் தொழில் சம்மந்தமாக வெளியூர் சென்றிருக்க, அவனுக்கு விஷயம் தெரிவிக்கப்பட உடனடியாக கிளம்பி வந்தவன் புயலாக சத்யா மருத்துவமனைக்குள் நுழைந்தான். கிரிஷ் வந்தவன் தன் அம்மா அழுது கொண்டிருக்க அவனும் கலங்கியவனாக, அம்மா! என்றிட சக்தியாம்பிகை தன் மகனின் குரலைக் கேட்டவர் ஓடிச்சென்று அவனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

    கிரிஷ் தன் அம்மாவுக்காக தான் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டவன், அம்மா ப்ளீஸ் அழாதீங்க. அப்பாவுக்கு எதுவும் ஆகாது. நான் அவரை பார்த்துட்டு வரேன் என்றவன், ஐசியு சென்றான். அங்கே சக்தி, Dr. கயல் இருவரும் ஈஸ்வரனுடன் இருக்க கிரிஷ் வேகமாக உள்ளே நுழைந்தவன் தன் அப்பாவை பார்த்ததும் ஓடிச்சென்று அவரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

    கயல் அங்கே கிரிஷைப் பார்த்ததும் சக்தியிடம் சொல்லிக் கொண்டு வெளியேறினாள். வெளியே வந்தவளின் மனம் ஏதோ பாரமாய் இருக்க கண்கள் தானாக கலங்கியது. ஈஸ்வரன் சக்தி, கயலை படிக்க வைத்தவர். அவரால்தான் இருவரும் இன்று மருத்துவர்களாக இருக்கின்றனர். சக்தி ஈஸ்வரனின் நெருங்கிய நண்பனின் மகள். கயல் அப்பா சக்தியின் அப்பாவிடம் பணிபுரிந்தவர். சக்தி, கிரிஷ் என்ன நீங்க குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க? நீங்களே இப்படி செய்தா அத்தைக்கு யார் ஆறுதல் சொல்வா அழாதீங்க. மாமா ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிட்டார் என்று அவனை சமாதானம் செய்தாள். கிரிஷ், அப்பாவை இந்த நிலைமையில் பார்க்க என்னால் முடியல சக்தி என்று மீண்டும் அழ அவனை சமாதனம் செய்த சக்தி தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

    சக்தி, கிரிஷ் மாமாவை கொலை செய்ய முயற்சித்தது யாருன்னு உடனடியா கண்டுபிடிங்க.

    சக்தி நான் இதைப்பத்தி போலீஸ் கமிஷனரிடம் பேசியிருக்கேன். அவங்க யார் என்று தெரிஞ்சா அவங்கள நான் சும்மா விட்ருவேனா என்ன? என்று ஆக்ரோஷமாக கத்தினான்.

    இவர்கள் பேசிக் கொண்டிருக்க சக்தியின் அறைக் கதவை யாரோ தட்ட, சக்தி, உள்ள வாங்க என்றதும்... ஆண்களே பொறாமைப்படும் அழகிய ஆண்மகன் ஒருவன் உள்ளே வந்தான்.

    வந்தவனை பார்த்த சக்திக்கு ஏதேதோ எண்ணங்கள் மனதினில் உலா வர அவனையே பார்த்துக் கொண்டிருக்க, கிரிஷ் யாரென்று திரும்பிப் பார்க்க அங்கே வந்தவனை கண்டவன், சிவா! என்று அவனை கட்டிக்கொண்டான். ஆமாங்க நம் கதையின் நாயகன் சிவாதான். கிரிஷ், என்னடா திடீர்னு வந்து இருக்க ஆச்சரியமா இருக்கு என்று கிரிஷ் கேட்க அங்கு பதில்தான் இல்லை. வேற என்னங்க நாயகனும், நாயகியும் பார்வை பரிமாற்றம் செய்து கொண்டிருந்தனர். கிரிஷ் இதைப் பார்த்தவன் சிவாவின் முதுகில் தட்ட அதில் தன்னிலை அடைந்த சிவா, எப்படி இருக்க கிரிஷ்? பெரியப்பாவை பார்க்கதான் வந்தேன். ஒன்னும் கவலைப்படாத கண்டிப்பா அவரை கொல்ல முயற்சி செய்தது யார் என்று கண்டுபிடிச்சிடலாம் டா.

    சிவா நீ வந்தது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குடா. சரி லீவுக்கு வந்திருக்கியா?

    இல்லடா நான்தான் பெரியப்பாவின் கேசை எடுத்து நடத்த போறேன். நான் இரண்டு நாட்களுக்கு முன்தான் இங்கே விருப்ப மாற்றலில் வந்தேன். காலையில் எனக்கு கமிஷனர் ஆபீஸில் இருந்து கமிஷனர் என்னை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. கமிஷ்னர் பெரியப்பாவின் விஷயத்தை எங்கிட்ட கூற எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு. உடனடியாக இந்த கேஸை நான் எடுத்துக்கறேன் என்று சொல்லிட்டு வந்தேன் என்றான். கிரிஷ் மட்டுமல்லாமல் சக்திக்கும் இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரொம்ப சந்தோசம்டா. எப்படி உனக்கு நன்றி சொல்றதுன்னே தெரியல என்று கலங்கியவனை, என்னடா சொல்ற அவர் எனக்கும் அப்பாதானே. ஒரு போலீஸா மட்டும் இல்லாம ஒரு மகனா இது என்னுடைய கடமையும் கூட, சாரி சொல்லி என்ன அந்நியப்படுத்தாதடா.

    சரிடா சரிடா என்றவன், சக்தி இவன்தான் என் சித்தப்பாவின் மகன் சிவா என்றும். சிவா உனக்கு சக்தியை ஞாபகம் இருக்கா கலைச்செல்வன் மாமாவின் மகள் என்று அறிமுகம் செய்து வைத்தான்.

    சிவா, ‘என் உயிரை எப்படிடா ஞாபகம் இல்லாமல் இருக்கும்?’ என்று தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

    சக்தி உனக்கு சிவாவை ஞாபகம் இருக்காமா?

    கிரிஷ் எனக்கு ஞாபகம் இல்லை.

    இதைக் கேட்ட நம் கதாநாயகனின் முகம் சென்ற போக்கை பார்க்கனுமே இதை கவனித்த கிரிஷ் உள்ளுக்குள் சிரித்தவன், சரி இப்போ தெரிஞ்சுக்கோ இவர்தான் நம் வீட்டின் காவல்துறை அதிகாரி சிவா என்றிட இருவரின் பார்வையும் விலகாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, கிரிஷ் சரிடா சிவா நாம் கிளம்பலாமா? என்று கேட்க,

    சக்தி, மிஸ்டர். சிவா நீங்க மாமா கேசை எடுப்பது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. அதுவும் எங்க மாமாவுக்கு தெரிந்தவராகவும் இருக்கீங்க. ஆல் தி பெஸ்ட் சிவா அவளின் வார்த்தையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவன்,

    ரொம்ப தேங்க்ஸ் சக்தி உங்களுக்கும் பெரியப்பாவின் உயிரை காப்பாற்றியதற்காக என்றான். மிஸ்டர். சிவா அது என்னுடைய கடமை மட்டும் அல்ல என்னுடைய பொறுப்பும். ஈஸ்வர் மாமா என்னுடைய அப்பா. நான் என் அப்பாவுக்காக எதையும் செய்வேன் என்றாள்.

    சக்திக்கு சிவாவை தெரியாது என்று சொன்னாலும் அவனை யாரென்று அறிமுகப்படுத்திய பிறகு ஒருசில சிறுவயது ஞாபகங்கள் அவளுக்கு நிழலாடின. சிவாவிற்கு ‘எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டாளே!’ என்று நினைத்தவன் ‘இவளை எப்படியாவது பழையபடி மாத்திடனும்.’ என்று முடிவெடுத்தான். சிவா, சக்தி நாம் இன்னொரு நாள் மீட்பண்ணலாம் என்றவன் அவளிடம் விடைபெற்று அவளை பிரிய மனமில்லாமல் அவளை மீண்டும் மீண்டும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே கிரிஷுடன் வெளியே வந்தான். கிரிஷ் இதையெல்லாம் தெரிந்தாலும் தெரிந்தும் தெரியாதவனை போல நடித்துக் கொண்டிருந்தான். சக்தி சிவாவை பார்த்தவளுக்கு மனதில் இனம்புரியாத உணர்வு தோன்ற எத்தனையோ ஆண்களை கடந்து வந்தவளுக்கு இவனை பார்க்கும் பொழுது சொல்லமுடியாத ஏதோ ஒன்று மனதில் போராட்டம் செய்து கொண்டிருந்தது.

    கிரிஷ் நம்ப சக்தியா இவ என்னால கொஞ்சம்கூட நம்பவே முடியலடா. எவ்வளவு ஜாலியா இருப்பா, ஓரிடத்தில் நில்லாமல் வளைய வந்துட்டே இருப்பா. இப்போ எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்காளேடா.

    நான் அவளை வந்து பார்த்திருக்கனும். வேலை வேலை என்று சரியாக ஊருக்கு வராததால் அவளை பார்க்க முடியாம போய்டுச்சு. என்றான். கிரிஷ், ஏய் நீ ஏன்டா அவள பாக்கணும். அவளை பாத்துக்கதான் நாங்க எல்லாம் இருக்கோமே? என்று அவனை சீண்டும் விதமாக கேட்டான். டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா அவ யாரு நம்ப கலைச்செல்வன் மாமாவோட பொண்ணு. அவ இப்படி இருக்கிறது எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குடா. அதனாலதான் சொன்னேன். வேறு எதுவும் இல்லை என்று சொல்லி சமாளித்தான்.

    ‘நல்லா சமாளிக்கறடா. நீ இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆட போற பார்க்கலாம்’ என்று மனதில் நினைத்த கிரிஷ் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

    சரிடா சொல்லு அவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கா?

    அதை நான் இன்னொரு நாள் சொல்றேன்டா. சரி இப்ப வா கிளம்பலாம் என்று சமாளித்தான் கிரிஷ்.

    நடந்தது என்னவென்று சிவாவுக்கு தெரிந்தால் நடக்கும் விபரீதத்தை நினைத்து பார்த்தவன் அவனிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தான். சக்தியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சம்பவத்தை இப்பொழுது சொன்னால் அவனால் தாங்க முடியாது என்று நினைத்தான் கிரிஷ். அப்படி சக்தியின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? இதம் தரும் தென்றலாய் இருந்த அவளின் வாழ்க்கை சூறாவளியாய் மாறுவதற்கு காரணம் என்ன?? பார்க்கலாம்.

    பகுதி - 2

    மறுநாள் காலை சக்தி தனது வீட்டின் பூஜை அறையில் சஷ்டி கவசம் படித்து கொண்டிருந்தாள். இதை படிக்காவிட்டால் ஏனோ அந்த நாள் அவளுக்கு சரியாக அமையாது என்பது அவளின் நம்பிக்கை. படிக்கும்போது அவள் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்களை வைத்து அவளின் மனநிலையை புரிந்து கொள்வான் சத்தீஷ். சக்தியின் அம்மா சமையலறையில் இருக்க சத்திஷ் அங்கே சென்றவன் தன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். கலைச்செல்வன் தன் மனைவியை எந்த வேலையும் செய்ய அனுமதித்ததில்லை. அவர் இருக்கும் வரை தன் மனைவியை மகாராணிபோல் உணர வைத்தவர் வீட்டின் அனைத்து வேலைகளுக்கும் பணியாட்களை நியமித்திருந்தார். ஆனால் அவர் இறப்பிற்குப்பின் வசந்திக்கு ஓய்வு என்பதே இல்லை.

    சக்தி எவ்வளவோ வேலையாட்களை வைத்துக் கொள்ளும்படி கூறியும் அவளுக்கு பாரத்தை கொடுக்காமல் அவரே அனைத்து வேலைகளையும் செய்து பழகினார். சிறுவயது முதலே செல்ல பெண்ணாகவும், செல்வ சீமாட்டியாகவும் வளர்ந்தவர் வசந்தி. சத்தீஷ் தனது அன்னையை பார்த்தவனுக்கு ‘தான் சம்பாதித்து பின் தன் அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்தான். வசந்தி எதேச்சையாக திரும்பியவர் தன் மகன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, என்னப்பா சத்தீஷ் எழுந்துட்டியா? காபி சாப்பிடறியா? கொடுங்க அம்மா நீங்களும் வாங்க சாப்பிடலாம் என்றவன் அவரையும் அழைத்துக்கொண்டு சோபாவில் அமர வைத்தவன் அவரிடம் பேசிக்கொண்டு காபியை அருந்தினான். வசந்தி காபி குடித்துக் கொண்டிருந்தாலும் அவரது பார்வை பூஜையறை பக்கமே இருந்தது. அதை கவனித்தவன், அம்மா என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க...?

    சத்தீஷ் உங்க அக்காவை நினைச்சாலே எனக்கு கஷ்டமா இருக்குப்பா. எவ்வளவு நாளைக்குத்தான் நமக்காக வாழ்ந்துகிட்டிருப்பா. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரனும்பா.

    அம்மா கவலைபடாதீங்க இன்னும் ஒரு வருடம் நான் படிப்பை முடிச்சதும், கிரிஷ் அண்ணா அவர் கம்பெனியிலே வேலை தரதா சொல்லி இருக்காங்க... அப்புறம் பாருங்க அக்காவுக்கு நல்ல மாப்பிள்ளையை பார்த்து அக்கா கல்யாணத்தை நல்ல முறையில் நடத்தலாம் என்றான்.

    வசந்தி, ஒரு கம்பெனிக்கு முதலாளியாக இருந்திருக்க வேண்டியவன்டா நீ. ஆனா உன் தலையெழுத்து வேறு கம்பெனிக்கு வேலைக்கு போற மாதிரி இருக்குடா என்று அழுதார்.

    அம்மா அழாதீங்கமா நம்மோட இந்த நிலைமைக்கு காரணமானவங்களை சும்மா விடக்கூடாதுமா. அப்பாவை பிஸினஸ்லையும் ஏமாத்தி அவரோட சாவுக்கும் காரணமானவங்கள நான் அப்படியே விட்டுடுவேன்னு நினைச்சீங்களா? அவங்களுக்கு பதிலடி கொடுத்தால்தான் அப்பாவோட ஆத்மா சாந்தி அடையும்.

    யாருக்கு பதிலடி கொடுக்கப் போற சத்தீஷ்? என்று குரலைக் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கே கையில் தீபத்தட்டுடன் சக்தியின் உருவமாக சக்தி நின்று கொண்டிருந்தாள். அது வந்து அக்கா! என்றவனை தடுத்தவள், இங்க பாரு சத்தீஷ் உன் ஆதங்கம் எனக்கு புரியுதுடா. ஆனால் அவங்களை பழிவாங்கிட்டா மட்டும் அப்பா ஆத்மா சாந்தி அடையுமா என்ன?

    நம்ப குடும்பத்தை வீழ்த்திட்டோம்னு அவங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க எதிரே நாம் வாழ்ந்து அப்பாவுக்கு பெருமை சேர்த்து தரனும்டா. அப்பதான் அப்பாவோட ஆத்மா சாந்தியடையும். அப்பா எப்போதும் யாரையும் பழிவாங்கணும்னு நினைச்சதில்லை. அவர் மகனான நீயும் அவரைப் போலவே இருக்க பாருடா. பழிவாங்கும் குணம் ஒரு மனிதனை முன்னேற விடாது என்றாள். சத்தீஷ் அமைதியாக அமர்ந்திருக்க, சரிடா நீ போய் கிளம்பு காலேஜுக்கு டைமாச்சு பாரு என்றவள் அவன் நெற்றியில் விபூதியை வைத்தவள் தன் அன்னையிடம், அம்மா அவன் சொல்றத நினைச்சு நீங்க குழம்பாதீங்க. நீங்க போய் குளிச்சுட்டு வாங்க. நான் மீதி வேலையை பார்த்துக்கிறேன்.

    இல்லடா சக்தி நான் முடிச்சிட்டேன் நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு கிளம்புங்க என்றதும் அவளும் சரி என்று தனது அறைக்குச் சென்றாள்.

    சதீஷ், "அம்மா கிரிஷ் அண்ணாவோட சித்தப்பா பையன் ஈரோட்டில் ஏசிபி ஆ இருக்காங்களே அவர் சென்னைக்கு மாத்திட்டு வந்துட்டார்னு அவரின் தம்பி கார்த்திகேயன் நேத்து சொல்லிட்டு இருந்தான். அவருக்கு நம்ம அப்பா மேல எப்பவும் மரியாதை உண்டு.

    அவர் கிட்டே சொன்னா நம்ப அப்பாவோட சாவுக்கு காரணமானவங்ளுக்கு தண்டனை கிடைக்கும்" என்றான்.

    எங்கப்பா ஈஸ்வரன் அண்ணனும், கிரிஷிம் அதுக்குதானே முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. யாருப்பா சொல்ற நீ சிவா தம்பியா?

    ஆமாமா அவர்தான்.

    உங்கப்பாவுக்கு நம்ம சக்தியை அந்த தம்பிக்கு கட்டி கொடுக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா இந்த பொண்ணு அவர்கூட பேசக்கூட மாட்டா. அவளுக்கு இப்ப அவரை அடையாளம் தெரியுதோ என்னவோ அவதான் இப்ப கல்யாணமே வேண்டாம்னு சொல்றாளே?

    அப்படியா அம்மா! என்ற சத்தீஷ் இதைப்பற்றி கிரிஷ் அண்ணாக்கிட்ட பேசனும் என்று நினைத்தவன், அம்மா நான் பாத்துக்கறேன். நீங்க கவலைப்படாதீங்க என்றான்.

    இங்கு சிவா தன்னவளின் நினைவால் தூக்கத்தை தொலைத்தவன், காலை விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தான். அவனின் செல்லத் தங்கையோ ஓயாது கதவை தட்டிக் கொண்டிருக்க, பதில் இல்லாமல் போனதால் கதவின் மேல் கை வைக்க அது திறந்திருந்தது. மதுமிதா உள்ளே சென்றவள், அண்ணா எந்திரிங்க அண்ணா டைம் ஆகுது. இன்னைக்கு நீங்க டியூட்டியில் ஜாயிண்ட் பண்ணனுமே. என்றதும் எழுந்து அமர்ந்தவன்.

    குட்மார்னிங்டா மதுக்குட்டி.

    குட்மார்னிங் அண்ணா. நீங்க வாங்க நான் கீழே போறேன்.

    சரிடா நீ போ நான் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன் என்றான் சிவா.

    மதுமிதா வெளியே வந்தவள் பக்கத்து அறையில் எட்டி பார்க்க அங்கே கும்பகர்ணன் போல் இழுத்துப் போத்திக் கொண்டு படுத்திருந்தான் கார்த்திகேயன். உள்ளே சென்றவள் அங்கிருந்த பேனாவை எடுத்து அவன் முகம் முழுவதும் ஏதோ கிறுக்கி வைத்தவள் ஒன்றும் தெரியாதவள் போல சிரித்துக்கொண்டே வெளியேறினாள். சிவா குளித்து முடித்தவன் காக்கி உடையை அணிந்து கொண்டு கம்பீரமாக கீழே இறங்க காலடி சத்தம் கேட்டு விஸ்வநாதனும், கல்பனாவும் நிமிர்ந்து பார்த்தவர்கள் அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். தனது மகன் காக்கிச்சட்டையில் கம்பீரமாக வருவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க அவர்களிடம் வந்தவன் என்னம்மா, என்னப்பா என்னையே பார்த்துகிட்டு இருக்கிங்க.

    விஸ்வநாதன், இல்லபா உன்ன காக்கி உடையில் பார்க்க ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்குப்பா எனவும் கல்பனா தன் மகனுக்கு திருஷ்டி கழித்தவர். உட்காருப்பா சாப்பிடலாம் என்றார்.

    அம்மா மது குட்டியும், கார்த்தியும் இன்னும் சாப்பிட வரலையா?

    இல்லப்பா.

    தனது தம்பிக்கு அழைத்தவன், டேய் கார்த்தி சீக்கிரமா கிளம்பி வாடா சாப்பிடலாம் எனவும் தன் அண்ணன் அழைக்கவும் தூக்கம் கலைந்து எழுந்தவன், சரிங்க அண்ணா என்று அழைப்பை துண்டித்தவன்... சோம்பல் முறித்தவாறு எழுந்து கண்ணாடி முன் நின்றவன்,

    தன்னைப் பார்த்து அதிர்ந்தவன், ‘எல்லாம் இந்த குட்டிபிசாசு வேலையாதான் இருக்கும்’ என்று நினைத்தவன், ஏய் மது... என்று கத்திக் கொண்டே கீழிறங்கினான். இங்கே அவளும் ஒன்னும் தெரியாததை போல் தன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தவள் அவன் கத்திக் கொண்டே வர அவனைப் பார்த்தவுடன் விழுந்து விழுந்து சிரித்தாள். கார்த்திகேயன் கத்திக் கொண்டே வரவும் இவளும் சிரிப்பதையும் பார்த்த மூவரும் திரும்பி அவனைப் பார்த்தவர்கள் அவர்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.

    ஏண்டி குட்டி பிசாசு செய்றத எல்லாம் செஞ்சிட்டு சிரிக்கறியா? என்றவன் அவளை அடிக்க வர அவளும் சிவா பின் மறைந்தவள், அண்ணா என்னை காப்பாத்துங்க என்றாள். கார்த்திக் அவளின் காதை பிடித்து திருகியவன், என்னடி இதெல்லாம்? என்றதும் மீண்டும் சிரிக்க கார்த்திகேயன் அவளை அடிக்கப் போக சிவா அவனைத் தடுத்தவன், விடுடா அவ சின்ன புள்ளதானே?

    அண்ணா இவளா சின்ன புள்ள சரியான குட்டிபிசாசு...

    டேய் கார்த்தி வாடி, போடின்னு கூப்பிடாதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.

    சாரிண்ணா! என்றவன், அண்ணா ஏற்கனவே ரொம்ப ஆடுவா! இப்ப நீங்க இங்கேயே வந்துட்டீங்க என்னென்ன பண்ண போறாளோ? என்றதும் சிவா சிரித்தவன்.

    சரி போடா குளிச்சுட்டு வா சாப்பிடலாம்.

    சரிங்கண்ணா என்றவன் தன் அறைக்கு சென்றான்.

    இவளோ தன் அண்ணனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க அவர்களை பார்த்த பெற்றவர்களோ மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

    பகுதி – 3

    சிவா தன் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கியவன் மிகுந்த உற்சாகத்தோடு கிளம்பினான். சென்னையில் sp அலுவலகம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்க சிவா உள்ளே சென்றவன் sp கந்தனிடம் ஜாயினிங் ஆர்டரை கொடுத்தவன் பணியில் சேர்ந்தான்.

    sp கந்தன், வெல்கம் சிவா உங்கக்கிட்ட ஒரு சவாலான கேசை ஒப்படைக்கப் போறேன். கூடிய சீக்கிரம் யார் குற்றவாளின்னு நீங்க கண்டுபிடிப்பீங்கன்னு நம்பறேன்.

    கண்டிப்பா சார் நீங்க என்னை முழுசா நம்பலாம் என்றவன் அவரிடம் விடைபெற்றான்.

    சிவாவிடம் இன்ஸ்பெக்டர் ஜெகன் மற்றும் ஜூனியர் எஸ்ஐ கர்ணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அப்பொழுது அங்கு வந்த ஏசிபி சரவணனும், சிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து பின் கட்டிக்கொள்ள இதைப்பார்த்த மற்ற இருவரும் ஒன்றும் புரியாமல் நின்றனர். சரவணன், என்ன அப்படி பாக்குறீங்க சிவா என்னுடைய நெருங்கிய நண்பன். சிவா நேர்மையானவன் மட்டுமல்ல மிகவும் பண்பானவனும் கூட அவன் எடுக்கும் எந்தக் கேசாக இருந்தாலும் குற்றவாளிகள் அவனிடமிருந்து தப்ப முடியாது. உங்களுக்கு எந்தவிதமான சந்தேகம் இருந்தாலும் நீங்கள் அவனிடம் தயங்காமல் கேட்கலாம். பார்க்கத்தான் அமைதியா இருப்பான். ஆனா இவங்கிட்ட அடி வாங்கிய எவனுக்கும் நாம் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்றான்.

    சிவா, டேய் போதும்டா எனவும்,

    இன்ஸ்பெக்டர் ஜெகன், அவர் எதையும் மிகைப்படுத்தி சொல்லல சார். நாங்களும் உங்களைப் பத்தி கேள்விப்பட்டிருக்கோம். உங்களைப்போல் நேர்மையாகவும் அதே நேரம் எல்லாரிடமும் கனிவாக நடக்கும் அதிகாரி எங்களுக்கு கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி சார் என்றார். சிவா ஈஸ்வரனின் கேசை பற்றிய தகவல்களை ஏசிபி சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெகனிடம் இருந்து பெற்றுக் கொண்டான். சக்தி, அத்தை கவலைப்படாதீங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் மாமா கண் முழிச்சிடுவார். என்றவள் உணவை அவருக்கு பரிமாற அவர் வேண்டாம் என்றும் கேட்காமல் அவருக்கு ஊட்டி விட்டவள் தனது பணியை மேற்கொண்டாள். சத்தீஷ் கிரிஷ்க்கு ஃபோன் செய்தவன், அண்ணா எப்படி இருக்கீங்க மாமா எப்படி இருக்காங்க.

    பரவாயில்லடா என்ன நீ காலையிலேயே ஃபோன் பண்ணியிருக்க ஏதாவது முக்கியமான விஷயமா?

    இல்லணா அதுவந்து என்று தயங்கியவனை, டேய் என்கிட்ட உனக்கு என்ன தயக்கம் எதுவா இருந்தாலும் சொல்லுடா.

    முக்கியமான விஷயம் தான் அண்ணா.

    சரிடா சொல்லு என்ன பேசனும்.

    நான் ஹாஸ்பிடலுக்கு மாமாவை பார்க்க வரேன். நீங்களும் அங்கே வந்துடுங்க அண்ணா.

    சரிடா நீ வா. நானும் வரேன் என்று அழைப்பை துண்டித்தான் கிரிஷ்.

    அப்படி என்ன முக்கியமான விஷயம் தெரியலையே! சரி நேர்ல போயிட்டு பேசிக்கலாம் என்று கிளம்பினான்.

    சக்தி தனது அறையில் அமர்ந்திருந்தவள் நினைவில் நேற்று தான் சந்தித்த சிவாவின் முகமே வந்து கொண்டிருக்க தன்னை நினைத்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை எத்தனையோ ஆண்களை தன் வாழ்க்கையில் சந்தித்து பேசியிருந்தாலும் இதுவரை யாரிடமும் சலனப்படாத தன் மனம் அவரிடம் மட்டும் ஏன் என்று யோசிக்க யோசிக்க தலைவலிதான் அதிகமாகியது. பிறகு இதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று நினைத்தவள்,

    வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். சத்தீஷ் மருத்துவமனை வந்தவன் கிரிஷ்க்கு ஃபோன் செய்ய அவனும் தான் இருக்கும் இடத்தை கூற அவன் வந்ததும் இருவரும் ஈஸ்வரன் தங்கியிருந்த அறைக்குச் சென்றனர்.

    சக்தி ஈஸ்வரனை பரிசோதித்துக் கொண்டிருந்தவள் இவர்களை கண்டதும், சத்தீஷ் நீ எங்க இங்க முதலிலேயே சொல்லியிருந்தா இரண்டு பேரும் ஒன்னாவே வந்து இருக்கலாமேடா?

    அக்கா எனக்கு மாமாவை பார்க்கனும் போல இருந்துச்சு. அதான் உடனே கிளம்பிட்டேன்.

    சரிடா பார்த்துட்டு கிளம்பு காலேஜ்க்கு நேரமாச்சு. கிரிஷ் மாமாவுக்கு இனி பயமில்லை என்றவள், சரி அத்தை நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்.

    கிரிஷ், சக்தி நீ இல்லனா என்னவாகி இருக்கும் நினைச்சாலே பயமா இருக்குடா.

    சக்தி, ப்ளீஸ் கிரிஷ்! அவர் எனக்கும் அப்பாதான் நன்றி சொல்லி என்னை அந்நியப்படுத்தாதீங்க என்றாள். கிரிஷ் சத்தீஷை அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றவன், சொல்லுடா என்ன பேசனும் மாமா இறந்தப்ப கூட நீ என்கிட்ட எதுவுமே கேட்டதில்லை. எதுவா இருந்தாலும் கேளுடா. உனக்கு நான் கண்டிப்பா செய்வேன் என்றான்.

    அண்ணா அக்கா நான் யார்கிட்டயும் எதையும் கேட்கும்படி என்னை வைக்கலை. ஆனால் நான் இப்போ பேச வந்தது அவளோட வாழ்க்கைக்காக தான்.

    சரி சொல்லுடா.

    அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க என்றவன் அனைத்தையும் கூற கிரிஷ் முதலில் யோசித்தவன் பிறகு, "எனக்கும் சிவா சக்தியை பார்க்கிற பார்வையை பார்க்கும் போது ஒரு சில நேரம் அவன் சக்தியை விரும்புறானோ என்ற சந்தேகம் இருந்துச்சுடா. அந்த மாதிரி நடந்தால் என்னை விட யாரும் சந்தோஷப்பட மாட்டாங்க. அவன மாதிரி ஒரு நல்ல பையன் சக்தி வாழ்க்கையில் வர சக்தி ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும். ஆனால் சக்தி இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னா பரவாயில்ல. அவதான் பிடிவாதமா இருக்காளே!

    சக்தி பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் சிவா தான் மருந்து. ஆனால் அவள் இதை புரிஞ்சிக்கிட்டா போதும்டா. அது மட்டும் இல்லடா எனக்குத் தெரிஞ்து சிவாவும் சக்தியை விரும்பறான்னு என்று நினைக்கிறேன்." என்றான் கிரிஷ்.

    அண்ணா என்ன சொல்றீங்க அப்படி இருந்தா அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க, எனக்கும் சந்தோஷமா இருக்கும் அண்ணா என்றான் சத்தீஷ்.

    சரிடா நம்ப முதல்ல சிவாவிடம் பேசலாம் என்றவன் சிவாவிற்கு அழைத்து, சிவா சாயங்காலம் ஹாஸ்பிடலுக்கு வாடா கொஞ்சம் பேசணும் முக்கியமான விஷயம் என்றான்.

    என்னடா அப்படி முக்கியமான விஷயம்?

    டேய் அவசரக்குடுக்கை நேர்ல வாடா.

    சரிடா வரேன் நானும் பெரியப்பாவை பார்க்கணும் என்றவன் அழைப்பை துண்டித்தான்.

    சத்தீஷ் நீ காலேஜுக்கு போயிட்டு சாயங்காலம் வந்திடுடா. நான் அவன்கிட்ட விசாரிக்கிறேன் என்றதும் இருவரும் கிளம்பினர். சிவா மாலை நேரம் சரியாக அவன் சொல்லிய இடத்திற்கு சென்றான். அவன் சென்ற கொஞ்ச நேரத்திலேயே கிரிஷ் அங்கே வந்தான். உடனே சிறிது நேரத்தில் சத்தீஷ் வந்தவன், அண்ணா சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு என்றவன் பிறகு சிவாவை பார்த்ததும், மாமா எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா??? என்று நலம் விசாரித்தான். சிவாவுக்கு இவனை அடையாளம் தெரியாவிட்டாலும் எல்லோரும் நல்லா இருக்காங்க. நீங்க நல்லா இருக்கீங்களா? என்று விசாரித்தவன் கிரிஷைப் பார்த்தான். கிரிஷ், சிவா இவன் நம்ம சக்தியோட தம்பி சத்தீஷ் உனக்கு ஞாபகம் இல்லையா?

    ஓ! அப்படியா... எனக்கு ஞாபகம் இல்லடா. சிறுவயதில் பார்த்தது இல்லையா. சத்தீஷ் எப்படி இருக்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க அம்மா நல்லா இருக்காங்களா?

    நல்லா இருக்காங்க மாமா. நான் உங்களை மாமான்னு கூப்பிடலாம் இல்லையா? என்று தயங்கியபடி கேட்க,

    இது என்னப்பா கேள்வி நீ தாராளமாக கூப்பிடலாம் என்றான் சிவா.

    ரொம்ப தேங்க்ஸ் மாமா என்றவன் மாமா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும் என்றான்.

    சொல்லுப்பா என்ன விஷயம்?

    மாமா அம்மா எங்கிட்ட ஒரு விஷயம் சொன்னாங்க. என் அப்பா உங்களுக்கு சக்தி அக்காவை திருமணம் செய்து கொடுக்கனும் என்று சொல்லி இருந்தாராம். அதைப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

    சத்தீஷ் எனக்கு தெரியும்பா நான்தான் மாமாகிட்ட சக்தியை விரும்பறேன். அவள் படித்து முடிக்கட்டும்... அப்புறம் என் அப்பா, அம்மாவுடன் வந்து அவளைப் பெண் கேட்கிறேன் என்று சொன்னேன். கிரிஷ் இதைக் கேட்டவன் மகிழ்ந்தாலும் டேய் திருட்டுப்பயலே இதையெல்லாம் இத்தனை நாள் எங்கிட்ட சொன்னியா?

    கிரிஷ் என்னடா பேசற நீ, நான் சக்திகிட்ட கூட என் காதலை சொல்லலியேடா... அதுக்குள்ள என்ன என்னமோ நடந்து போச்சு நானும் வெளியூர் போய்ட்டேன். அதனால்தான்டா எதுவும் சொல்லலை... என்றான்.

    சத்தீஸ், மாமா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அக்காவை பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியுமா? என்று கேட்க...

    எனக்கு முழுசா தெரியாது சத்தீஷ் ஆனா அவளுக்கு என்ன நடந்திருந்தாலும் அவள் என்னுடைய காதலி, வருங்கால மனைவி அவளுக்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கேன். அதை மட்டும் நீ மனதில் வெச்சிக்கோ. கிரிஷ் என்ன இரண்டு பேரும் இப்படி பேசறீங்க. அவ என்னோட உயிர் அவள் இல்லாத என் வாழ்க்கை நரகத்திற்கு சமம். சத்தீஷ் இங்க பாருப்பா, இப்ப இது அவளுக்கு தெரிய வேண்டாம். நான் அவளிடம் காதலை சொல்லிய பிறகு நாம் இதைப்பத்தி பேசிக்கலாம் சரியா? என்றான்.

    சரிங்க மாமா நான் அக்காவிடம் சொல்ல மாட்டேன். ஆனா அம்மாகிட்ட மட்டும் சொல்றேன். அவங்க அக்காவை நினைச்சு ரொம்ப கவலையா இருக்காங்க என்றான் சத்தீஷ்.

    சரிப்பா அத்தைகிட்ட சொல்லு நான் வந்து ஒரு நாள் அவங்களைப் பார்க்கிறேன்... அதையும் சொல்லுப்பா என்றான் சிவா.

    பகுதி - 4

    கண்டிப்பா நான் சொல்றேன் மாமா.

    சத்தீஷ் நீ இப்போ என்னப்பா படிக்கிற.

    மாமா நானும் உங்க தம்பி கார்த்தி கூடதான் படிச்சுக்கிட்டு இருக்கேன். நானும் அவனும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.

    ஓ! அப்படியா அது எனக்கு தெரியாதுபா. ரொம்ப சந்தோஷம் நீ நல்லா படிக்கணும் சரியா அம்மாவை நல்லபடியா பார்த்துக்கோ என்றான் சிவா.

    சரிங்க மாமா நான் என் அக்காவுக்காக கண்டிப்பா படிப்பேன். என் அக்கா நிறைய கஷ்டத்தை பார்த்துட்டா. இனியாவது அவ சந்தோசமா இருக்கணும் மாமா.

    கண்டிப்பா சத்தீஷ் அவளோட சந்தோஷமான வாழ்க்கைக்கு இனி நான் பொறுப்பு.

    கிரிஷ், ரொம்ப சந்தோஷமா இருக்கு சிவா. நீ அவளை விரும்பறியோன்னு எனக்கு சந்தேகம் இருந்துச்சு. ஆனால் இப்போ அது உண்மைன்னு தெரிஞ்சதும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அப்பாவும் ரொம்ப சந்தோஷப்படுவார்டா.

    சிவா, சரிடா நேரமாயிடுச்சு கிளம்பலாமா? என்றவன், சத்தீஷ் நான் சொல்றத எல்லாம் ஞாபகம் வச்சுக்கோ சரியா. நல்லா படி எந்த உதவி வேண்டுமானாலும் என்னை கேளுப்பா.

    சரிங்க மாமா! என்றதும் கிளம்பினர்.

    சத்தீஷ், அம்மா ரொம்ப சந்தோஷமான விஷயம் உங்களுக்கு சொல்லப்போறேன். இதை கேட்டு நீங்க எப்படி ரியாக்ட் செய்வீங்கன்னு நினைச்சுப் பாத்தாலே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றான்.

    சத்தீஷ் என்னப்பா சொல்ற இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்க? சொல்லுப்பா என்ன விஷயம். உங்க அக்காவைப் பத்தி ஏதாவது சொல்லப் போறியா அவள் திருமணத்திற்கு சம்மதிச்சிட்டாளா? என்று கேட்டார்.

    அம்மா உங்களுக்கு இது கொஞ்சம் ஓவரா இல்லையா? அவளாவது திருமணத்திற்கு சம்மதிப்பதாவது நான் இன்னைக்கு சிவா மாமாவை சந்தித்து பேசினேன் என்றான்.

    என்னப்பா சொல்ற சிவா உங்கிட்ட என்ன பேசினார்.

    சத்தீஷ் அவன் அம்மாவிடம் சிவாவுடன் பேசிய அனைத்தையும் கூறினான்.

    வசந்தி, சிவா நம்ப சக்தியை விரும்பறாராடா. அப்பாவும் அதுக்கு ஒத்துக்கிட்டாரா? எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா. ஆனால் உன் அப்பா எங்கிட்ட எதுவுமே சொல்லல என்றார்.

    அம்மா மாமா சொல்றத பார்த்தா அந்த நேரத்தில்தான் அப்பாவுக்கு பிசினஸில் பிரச்சினை வந்தது. அதான் அப்பா சொல்லாமல் விட்டிருப்பார் என்றான்.

    ஆமாம்பா அப்படியும் இருக்கலாம்.

    அப்பாவுக்கு மாமாவை பிடிக்கும் அவருக்கு அக்காவை கட்டிக் கொடுக்க ஆசைப்பட்டார்னு அக்காவுக்கு தெரிஞ்சா அவ கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வாய்ப்பு இருக்குமா.

    அவ சம்மதம் சொன்னா சந்தோஷம்தான்டா. சிவா அப்பாகிட்ட பேசினதாலதான் அப்பா அக்காவை அவருக்கு கட்டித்தர ஆசைப்பட்டு இருக்கார். ஏதோ காரணமாகத்தான் எங்கிட்ட சொல்லாம இருந்திருக்கார் என்றார் வசந்தி.

    சிவா, கார்த்தி உனக்கு கலைச்செல்வன் மாமா மகன் சத்தீஷை தெரியுமாடா?

    தெரியும் அண்ணா என் கூட தான் படிக்கிறான். அவங்க அக்கா சக்தி ரொம்ப நல்லவங்க நம்ம மதுவுக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்.

    மதுவுக்கு எப்படிடா சக்தியை தெரியும்?

    மது எங்கூட அவங்க வீட்டுக்கு வந்து இருக்கா அண்ணா. சக்தி அக்கா அவளுக்கு டிரஸ் எல்லாம் எடுத்து கொடுத்து இருக்காங்க. நம்ப மது ஆன்ட்டிகிட்ட செல்லம் கொஞ்சிகிட்டேயிருப்பா. ஆனால் சத்தீஷ்கிட்ட வம்பு இழுத்துக்கிட்டே இருப்பா. இவளால சக்தி அக்கா சத்தீஷை திட்டுவாங்க என்றான்.

    சரிடா நீ போ. என்ற சிவா தன்னவளின் நினைவுகளில் மூழ்கினான்.

    சிவா அலுவலகம் சென்றவன் ஈஸ்வரனின் கொலை முயற்சி வழக்கை கையில் எடுத்தவன் Acp சரவணன் உதவியுடன் அனைத்து விவரங்களையும் சேகரித்தான். சிவா, சரவணா உனக்கு இந்த கேசில் யார் சம்மதம் பட்டிருக்காங்கன்னு ஏதாவது ஐடியா இருக்காடா?

    கரெக்டா யாருன்னு சொல்ல முடியாதுடா. ஈஸ்வர் சார் ரொம்ப நல்லவர் நிறைய பேருக்கு பண உதவியும், பிள்ளைகளுக்கு படிக்கவும் உதவி பண்ணிருக்கார். ஆனால் அவரின் தொழில் வட்டாரத்தில் தான் யாராவது செய்திருக்கனும்.

    டேய் நானும் அதான்டா கேட்கிறேன். வியாபார வட்டத்தில் யாரா இருக்கும் பெரியப்பா வியாபாரத்தில் முடிசூடா சக்கரவத்தியாச்சே சரவணனுக்கு ஒருத்தர் மீது சந்தேகம் இருந்தது. அவர்தான் சக்தியோட அப்பாவின் மரணத்திற்கும் காரணம் என்று தெரிந்தும் அவரை எதுவும் செய்ய முடியாமல் போனதையும் நினைத்து நொந்துப் போயிருக்கிறான்.

    எனக்கு யாரென்று தெரியும் என்றான் சரவணன்.

    சொல்லுடா யார் அவங்க?

    சக்தியின் அப்பாவை பிசினஸில் ஏமாத்தி அவர் சாவுக்கு காரணமான தொழிலதிபர் கிருஷ்ணகுமார், அவரின் மகன் வினோத்குமார் அவங்கதான் ஈஸ்வர் சாரை கொல்ல முயற்சித்து இருக்கனும்னு எங்களுக்கு சந்தேகம் இருக்குடா.

    ஓ! அப்படியா கிரிஷ் எங்கிட்ட மாமாவின் மரணத்திற்கு அவங்க இரண்டு பேரும்தான் காரணம் சொல்லியிருக்கான். அதனால்தான் நான் சக்தியை பாதுகாக்க ஆள் ஏற்பாடு பண்ணி இருந்தேன். சக்தி விஷயத்துக்கே நான் அப்பாவுக்கும், மகனுக்கும் பதிலடி கொடுக்கனும்னு இருந்தேன். ஆனால் எனக்கு முழு விபரமும் தெரியல. இப்ப பெரியப்பாவின் இந்த நிலைமைக்கும் அவங்கதான் காரணம் என்று கண்டிப்பா தெரிந்தால் அவங்களை எங்கிட்ட இருந்து யாராலும் காப்பாத்த முடியாதுடா.

    சரவணன், சிவா நீ சக்தியை விரும்பறியா என்ன?

    ஆமாண்டா அவதாண்டா என் உயிர் அவள் என்னுள் பாதியானவள்டா அவ இல்லைனா நானும் இல்லடா என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தான் சரவணன். சிவா, சரவணன் இருவரும் கல்லூரியில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள்... சிவா சென்னைக்கு விருப்பமாற்றலில் வர முடிவு எடுத்த

    Enjoying the preview?
    Page 1 of 1