Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennul Niraintha Maayavaney!
Ennul Niraintha Maayavaney!
Ennul Niraintha Maayavaney!
Ebook204 pages1 hour

Ennul Niraintha Maayavaney!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னுள் பாதியானவளே! கதையின் இரண்டாவது பாகம் என்னுள் நிறைந்த மாயவனே! என்னுள் பாதியானவளே கதையில் வரும் கதாநாயகர்கள், நாயகிகளுடன் அவர்களின் பிள்ளைகளும் வலம் வருவார்கள். குடும்பம், காதல், உறவு சமூகம், நகைச்சுவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் இக்கதை. இக்கதையில் ஏற்கனவே நாம் காவல்துறை அதிகாரிகளையும் மருத்துவர்களையும் சந்தித்திருப்போம். இப்பொழுது கூடவே வழக்கறிஞர்களும் வலம் வருவர் அவர்கள் யாரென்று போகப்போக பார்க்கலாம்.

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580164609725
Ennul Niraintha Maayavaney!

Read more from Kanchana Senthil

Related to Ennul Niraintha Maayavaney!

Related ebooks

Reviews for Ennul Niraintha Maayavaney!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennul Niraintha Maayavaney! - Kanchana Senthil

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    என்னுள் நிறைந்த மாயவனே!

    Ennul Niraintha Maayavaney!

    Author:

    காஞ்சனா செந்தில்

    Kanchana Senthil

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-senthil

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    மாயவன் - 1

    மாயவன் - 2

    மாயவன் - 3

    மாயவன் - 4

    மாயவன் - 5

    மாயவன் - 6

    மாயவன் - 7

    மாயவன் - 8

    மாயவன் - 9

    மாயவன் - 10

    மாயவன் - 11

    மாயவன் - 12

    மாயவன் - 13

    மாயவன் - 14

    மாயவன் - 15

    மாயவன் - 16

    மாயவன் - 17

    மாயவன் - 18

    மாயவன் - 19

    மாயவன் - 20

    மாயவன் - 21

    மாயவன் - 22

    மாயவன் - 23

    மாயவன் - 24

    மாயவன் - 25

    மாயவன் - 26

    முன்னுரை

    ஹலோ சகோஸ்,

    என்னுள் பாதியானவளே! கதையின் இரண்டாவது பாகம் என்னுள் நிறைந்த மாயவனே! என்னுள் பாதியானவளே கதையில் வரும் கதாநாயகர்கள், நாயகிகளுடன் அவர்களின் பிள்ளைகளும் வலம் வருவார்கள். குடும்பம், காதல், உறவு சமூகம், நகைச்சுவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் இக்கதை. இக்கதையில் ஏற்கனவே நாம் காவல்துறை அதிகாரிகளையும், மருத்துவர்களையும் சந்தித்திருப்போம். இப்பொழுது கூடவே வழக்கறிஞர்களும் வலம் வருவர் அவர்கள் யாரென்று போகப்போக பார்க்கலாம்.

    கதை மாந்தர்களின் அறிமுகம்

    சிவா - சக்தி இவர்களின் மகன் சர்வேஸ்வரன், மகள் சைந்தவி.

    கிரிஷ் - கயல் இவர்களின் மகள் கிரிஷிகா, மகன் கௌஷிக்.

    சரவணன் - தர்ஷினி இவர்களின் மகள் சர்வினி, மகன் தர்ஷன்.

    வினோத் - வர்ஷினி இவர்களின் மகன் வர்ஷன், மகள் வினிஷ்கா.

    சத்தீஷ் - மதுமிதா இவர்களின் மகன் ரஞ்சித்.

    கார்த்திகேயன் - சுகன்யா இவர்களின் மகள் நேத்ரா.

    சரத் - வெண்மதி இவர்களின் மகள் நிலா

    ஸ்ருதி - கரண் இவர்களின் மகன் விஷ்வா.

    மாயவன் - 1

    பனிச்சாரலோடு காற்று இதமாய் வீசிக் கொண்டிருக்க சிவா மற்றும் சரவணன் ஜாக்கிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தனர். சிவா வீட்டில் நுழையும்போதே ஊதுவத்தியின் நறுமணம் வீட்டில் இதமாய் வீச, சக்தி பூஜை அறையில் கந்தசஷ்டிகவசம் படித்துக்கொண்டிருந்தாள்.

    சிவா சமையலறைக்கு சென்றவள் தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்கனவே மனைவி காய்ச்சி வைத்திருந்த பாலில் காபி கலந்து கொண்டு வந்தவன் உணவு மேஜையில் அதை வைத்து தன் மனைவிக்காக காத்திருந்தான்.

    சக்தி பூஜையறையில் பூஜை முடித்து வெளியே வந்தவள் அங்கே உணவு மேஜையில் தன் உயிரானவன் கையில் காபியுடன் அமர்ந்திருப்பதை கண்டவள். சிவா உங்களுக்கு நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன். ஏன் நான் வந்து காபி போட மாட்டேனா? என்றவளை ரசனையாய் பார்த்தவன்.

    சக்திமா இதெல்லாம் ஒரு வேலையாடா. இந்த சின்ன வேலையை நான் செய்தால் உனக்கு கொஞ்சம் வேலை குறையும் இல்லையா? சரி வாடா காபி ஆறிடப் போகுது குடிச்சிட்டு கிளம்பலாம். என்றவன் தன் மனைவியின் கையைப் பிடித்து அமர வைத்தான்.

    ஆமாம் சிவா நீங்க இதையே சொல்லுங்க. சரி குடுங்க நேரமாகுது அத்தை, மாமா எழுந்துடுவாங்க. என்றவள் அவசர அவசரமாக அந்த காபியை அருந்த... சக்தி என்னடா இது மெதுவா குடி. இதுக்காகத்தான் வேலைக்கு ஒரு ஆள் வெச்சிக்கலாம் சொன்னா நீ கேட்கறியா?

    சிவா எத்தனை பேர் வந்து செய்தாலும் நாம் வீட்டு வேலையை நாம் செய்யும் படி இருக்காது. நமக்கு பிடித்தவர்களுக்கு நாம் பார்த்து பார்த்து செய்யற மாதிரி வராது சிவா...

    சிவா சக்தி சொல்றது சரிதான்பா நம்ம வீட்டு வேலையை நாமதான் செய்யணும். நீங்க கிளம்புங்க மீதி வேலையை நான் பார்த்துக்கிறேன். என்று அங்கே வந்தார் கல்பனா சிவாவின் தாய்.

    அத்தை பெருசா ஒன்னும் வேலை இல்லை அத்தை. இதோ போய் சமைச்சா வேலை முடிஞ்சுடும். நீங்க உட்காருங்க நான் காபி எடுத்துட்டு வரேன். என்றவள் சமையலறைக்குள் செல்ல அதேநேரம் விஸ்வநாதனும் எழுந்து வந்தவர் தன் மருமகள் மற்றும் மகனுக்கு காலை வணக்கம் சொல்லியவர் பேப்பரை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார்.

    சக்தி இருவருக்கும் காபி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தவள் மீண்டும் சமையலறை செல்ல சக்தி எவ்வளவு சொல்லியும், தடுத்தும் கல்பனாவும் சக்திக்கு உதவ இருவரும் சேர்ந்து சமையலை முடித்தவர்கள் சக்தி தன் மகளை எழுப்ப அவள் அறைக்குச் சென்றாள்.

    என்ன சிவா இன்னைக்கும் நம்ப குட்டிமா எழுந்து வரலை போலவே! அவன் வந்தா உன் செல்ல மகள் என்ன ஆவாளோ தெரியாது. நீயும் போடா போய் அவளை எழுப்பி அழைச்சிட்டு வா. என்றார் விஸ்வநாதன்.

    ஆமாம்பா அதுவும் சரிதான். என்றவன் வேக வேகமாக மாடி ஏறி தனது மகளின் அறைக்குச் சென்றான் சிவா.

    சரவணன் தனது வீட்டிற்குச் செல்ல வீடு அமைதியாக இருக்க இவன் தன்னை சுத்தம் செய்துகொண்டு சமையலறை சென்றவன் தனது மனைவிக்கும், மகள், மகனுக்கும் காபி கலந்து எடுத்து அவர்களது அறைக்குச் சென்றவன் மகள் மற்றும் மகனுக்கு கொடுத்தவன் பிறகு தன் மனைவியை தேடி தனது அறைக்கு செல்ல அங்கே பெண்ணவளோ சுகமாய் துயில் கொள்ள அவளைப் பார்த்தவன்‌. ‘இன்னும் நீ மாறவே இல்லடி என் செல்ல குட்டி.’ என்று அவளை கொஞ்சியவன் அவளை எழுப்பி அவளுக்கும் காபி கொடுத்தவன் குளிப்பதற்காக குளியலறை புகுந்தான்.

    கிரிஷின் வீட்டில் கிரிஷ் மற்றும் அவர்களது பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருக்க கயல் எழுந்தவள் அனைவருக்கும் தன் மாமியாரின் துணையுடன் சமைத்தாள்.

    ஈஸ்வரன் எழுந்து வந்தவர், என்ன கயல் இன்னும் உன் புருஷனும் பிள்ளைகளும் எந்திரிக்கலையா?

    என்றதும், ஆமாம் மாமா! என்று மாடி அறைக்குச் சென்றவள் அனைவரையும் எழுப்பி கிளப்பியவள் தானும் கிளம்பியவள் சக்திக்கு அழைக்க இருவரும் ஒன்றாக மருத்துவமனை சென்றனர்.

    வினோத் வீட்டில் வினோத் மற்றும் பிள்ளைகள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க வர்ஷினி எழுந்து தன் வேலையை முடித்தவள் வினோத்தை ‘தினமும் எழுந்து எனக்கு உதவி செய்றேன் சொல்வார் ஆனால் செய்யமாட்டார்...’ என அவனை மனதில் வறுத்தெடுத்தவள் தனது மாமியார் மற்றும் மாமனாருக்கு காபி எடுத்துக்கொண்டு செல்ல அங்கே வினோத்தின் அம்மா அமுதா தன் கணவருக்கு வெந்நீர் வைத்து உடம்பை துடைத்துக்கொண்டு இருக்க, மாமா இப்போ பரவாயில்லையா? எப்படி இருக்கீங்க தைரியமா இருங்க மாமா எல்லாம் சரியாயிடும். என்றவள் சமையல் அறைக்கு சென்றாள்.

    கிருஷ்ணகுமார் அவருக்கு சிறிது காலத்தில் விடுதலை கிடைக்க அவரின் கை கால் செயலிழக்க ஒரு காலத்தில் மிகவும் ஆணவமாக மனிதர்களை மனிதர்களாகவே மதிக்காதவர். எண்ணற்ற குற்றங்களை செய்தவர் இன்று ஒரே இடத்தில் படுத்துக் கிடந்தார்.

    பிறகு வினோத் எழுந்து வந்தவன் பின்னிருந்து தனது மனைவியை அனைத்தவன் அவளின் கழுத்தில் முகம் புதைக்க, நீங்க என்ன பண்றீங்க தள்ளிப் போங்க மாமா பிள்ளைங்க வந்துருவாங்க. என்றவள் அவனை தன் பிள்ளைகளை எழுப்பச் சொல்லி அனுப்பி வைத்தாள்.

    சிவா மற்றும் சரவணன் இருவரும் ஒன்றாக பொறுப்பான காவல்துறை அதிகாரியாக தனது பணியை தொடர கிளம்ப அதேநேரம் சக்தி மற்றும் கயல் மருத்துவமனைக்கு காரில் சென்றனர். சக்தியும், கயலும் ஒரே காரில் சென்று விட்டு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    வினோத் தன் அலுவலகம் கிளம்ப தர்ஷினி மற்றும் வர்ஷினி அவரவர்கள் அவரவர்களின் அலுவலகத்திற்கு கிளம்பினர்.

    பிள்ளைகளும் அனைவரும் எழுந்தவர்கள் அவரவர்கள் தனது பணிக்கும், கல்லூரிக்கும் சென்றனர்.

    சக்தி தனது மகளுடன் போராடிக்கொண்டிருக்க சிவா வேகமாக மாடி ஏறியவன் சக்தி அங்கே தன் மகளுடன் போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்தவன் சக்தி நீ போ நான் அவளை அழைச்சிட்டு வரேன். எனவும், என்னவோ செய்யுங்க சிவா இவள் தினமும் இப்படிதான் பண்றா. அவன் வந்தானா இவளின் நிலைமையை யோசிச்சு பாருங்க. என்று சக்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என்ன இங்க இவ்வளவு சத்தம் நீங்க இரண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க இவள் இன்னும் எந்திரிக்கலையா? ஏய் எருமை மாடு முதல்ல எந்திரி. என்று சத்தம் போட,

    சிவா மற்றும் சக்தி மட்டுமல்லாமல் இவ்வளவு நேரம் தன் அப்பா அம்மாவிற்கு போக்குக் காட்டியவளும் அவனின் சத்தத்தில் அதிர்ந்தவளாக ஒன்றும் தெரியாத பிள்ளை போல் எழுந்தவள் வேகமாக ஓடிச்சென்று குளியலறையில் புகுந்தாள் சிவா மற்றும் சக்தியின் செல்ல மகள் சைந்தவி.

    இந்த பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும் இவர்கள் ஒன்றாகவே சுற்றிவருவார்கள். அவர்களை பற்றி சுவாரசியமான மற்றும் அதிர்ச்சியான தகவல்களை அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

    இவர்கள் வாழ்க்கையில் இத்தனை வருடத்தில் பல மாறுதல்கள் பல இன்பம், துன்பங்களை கடந்துவிட்டனர். இவர்கள் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் அவர்கள் வாழ்க்கை எப்படி அமையப்போகிறது அவர்களுக்காக வாழ்க்கை அவர்களுக்கு என்ன செய்யக் காத்துக்கொண்டிருக்கிறது என்று நாம் அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

    மாயவன் - 2

    சிவா வீட்டில் சிவாவும், சக்தியும் தன் செல்ல மகளை எழுப்ப எவ்வளவோ முயன்றும் எந்திரியாமல் அவர்களுக்கு ஆட்டம் காட்டியவள் அவன் வந்து சத்தம் போட்டதும் எழுந்து குளியலறை ஓடினாள்.

    அம்மா, அப்பா எத்தனை தடவை சொன்னாலும் நீங்க கேட்க மாட்டீங்க இல்லையா? அவளுக்கு செல்லம் கொடுப்பதை நிறுத்துங்க இல்லைனா ரொம்ப கஷ்டம். என்று தன் தோள்களைக் குலுக்கியவாறு கூறினான் சர்வேஸ்வரன் சிவா மற்றும் சக்தியின் அருமை புதல்வன். நம் கதையின் நாயகன்.

    சர்வேஸ்வரன் IPS அதிகாரி தன் தந்தையைப் போலவே நேர்மையான காவல்துறை அதிகாரி. ஆனால் இவன் சிவாவைப் போல அமைதியானவன் கிடையாது. தனது பதவிக்கு ஏற்றபடி எப்பொழுதும் கம்பீரமாக வலம் வருபவன். மிகவும் கடினமானவன். எதிரில் நிற்பது தன் தாய், தந்தையே ஆனாலும் தவறு என்று தெரிந்தால் அதைச் சுட்டிக் காட்டுபவன் தவறு செய்தவர்கள் தன் சொந்தபந்தமே ஆனாலும் அவர்களை சட்டப்படி தண்டிப்பவன்.

    சிவா தன் பிள்ளை கூறியதைக் கேட்டவன் பக்கத்தில் வந்தவன், சர்வேஷ் நீ ஒன்றும் கவலைப்படாதே! அவள் சின்ன பொண்ணுதானே போக போக சரி ஆகிடும். உன் அத்தை மதுவும் அப்படித்தான் இருந்தாள். ஆனால் இப்போ பாக்கறதானை அவள் எப்படி மாறி இருக்கா. சரி வா நாம கிளம்பலாம். என்றான்.

    சரிங்க அப்பா ஒரு நிமிஷம் இருங்க. என்றவன் தன் தாயிடம் சென்று சக்தியை கட்டிக் கொண்டவன். என் செல்ல அம்மாவுக்கு என்ன ஆச்சு? என் மேல கோபமா சொல்லுங்க... என்றவனைப் பார்த்து முறைத்த சக்தி. ஆமாண்டா கோபம்தான். போ போயிட்டு உன் வேலையை பாரு... என்றாள்.

    அச்சோ! அம்மா நான் அவள் நல்லதுக்குதானே சொல்றேன். சரி வாங்க எனக்கு ரொம்ப பசிக்குது... என்றதும் தாயாய் சக்தியின் உள்ளம் துடிக்க...

    சரி வாடா கண்ணா சாப்பிடலாம் என்றவள் ஏங்க நீங்களும் வாங்க... என்று கீழே இறங்கினாள்.

    சிவா தன் மகனின் காதைப்பிடித்தவர், நீ சரியான ஆளுடா யாரை எப்படி உன் வழிக்கு கொண்டு வரணுமோ கொண்டு வந்துடுவ. என்றதும், அச்சோ அப்பா வலிக்குதுப்பா விடுங்க. என்றதும், சரி வா! சாப்பிடலாம். என்று இருவரும் கீழே செல்ல அதே நேரம் சர்வேஸ்வரனுக்கு போனில் நோட்டிபிகேஷன் சிணுங்கல் வர, அதை எடுத்துப் பார்த்தவன் முகம் மலர்ந்தது.

    My dear angel என்ற தன் போனில் பதிந்து இருந்த பெயரை தடவி பார்த்தவன் மனதுக்குள் சாரல் மழை அடித்தது.

    சிவா அவனின் முகத்தை வைத்தே அவனின் மன நிலைமையை புரிந்து கொண்டவர் சிரித்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1