Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaya Oonjal
Maaya Oonjal
Maaya Oonjal
Ebook306 pages1 hour

Maaya Oonjal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பெனும் மாய ஊஞ்சல் அசைந்தாடக் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஏறும் யாருமே அவ்வன்பை அனுபவிக்காமல் போனதில்லை. அது அப்பா மகளாக இருக்கலாம். அம்மா மகளாக இருக்கலாம். காதலன் காதலியாக இருக்கலாம். அக்கா தங்கையாகவும் இருக்கலாம்.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் அன்பு.. பாசம்.. காதல்.. என்ற மென்மையான உணர்வுகள் கோபம்... பொறாமை, போன்ற உணர்ச்சிகளை எப்படி அடக்கி ஆள்கிறது என்பதைக் காண... அன்பெனும் சங்கிலிப் பிணைப்பில் ஆடும் இந்த மாய ஊஞ்சலில் ஆட வருமாறு அனைவரையும் அழைக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580152207976
Maaya Oonjal

Read more from Viji Sampath

Related to Maaya Oonjal

Related ebooks

Reviews for Maaya Oonjal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaya Oonjal - Viji Sampath

    https://www.pustaka.co.in

    மாய ஊஞ்சல்

    Maaya Oonjal

    Author:

    விஜி சம்பத்

    Viji Sampath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-sampath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆட்டம் - 1

    ஆட்டம் - 2

    ஆட்டம் - 3

    ஆட்டம் - 4

    ஆட்டம் - 5

    ஆட்டம் - 6

    ஆட்டம் - 7

    ஆட்டம் - 8

    ஆட்டம் - 9

    ஆட்டம் - 10

    ஆட்டம் - 11

    ஆட்டம் - 12

    ஆட்டம் - 13

    ஆட்டம் - 14

    ஆட்டம் - 15

    ஆட்டம் - 16

    ஆட்டம் - 17

    ஆட்டம் - 18

    ஆட்டம் - 19

    ஆட்டம் - 20

    ஆட்டம் - 21

    ஆட்டம் - 22

    ஆட்டம் - 23

    ஆட்டம் - 24

    ஆட்டம் - 25

    ஆட்டம் - 26

    ஆட்டம் - 27

    ஆட்டம் - 28

    ஆட்டம் - 29

    ஆட்டம் – 30

    ஆட்டம் - 31

    ஆட்டம் - 32

    ஆட்டம் - 33

    மாய ஊஞ்சல் (ரிலேத் தொடர்)
    C:\Users\INTEL\Downloads\WhatsApp Image 2022-01-04 at 11.17.55 AM.jpeg

    செல்லம் ஜரீனா, விஜி சம்பத், மாலா மாதவன், மதுரா, சாய்ரேணு

    (இரண்டிரண்டு அத்தியாயங்களாக வரிசைப்படி எழுதிய நாவல்)

    ஆட்டம் - 1

    புலர்ந்தும் புலராப் பொழுதில் உமா குனிந்து கோலமிட்டுக் கொண்டிருந்தாள். வாசலுக்கு அளவெடுத்தாற்போல் பூக்கோலம் பூத்திருந்தது. திருப்தியுடன் தலையை சாய்த்து ஒருகணம் நின்று ரசித்தவள் உள்ளே போனாள். அம்மா அகிலா அந்த நேரமே குளித்து விட்டிருந்தார். மெல்லிய இன்னிசையாய் எம்எஸ்ஸின் 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ இழைந்து கொண்டிருந்தது அந்த விடியலுக்கு இதம் சேர்த்தபடி. அகிலாவின் கைகள் பரபரவென வேலை பார்த்துக்கொண்டிருந்தது.

    உமா சின்ன பனையோலை கூடையில் பின்னாலிருந்த செம்பருத்திச் செடியிலிருந்து பூக்களை நோகாமல் கொய்தாள்.

    செம்பருத்தியோடும் ரோஜா முல்லையோடும் ஒருபுறம் கறிவேப்பிலைமரம் அரிநெல்லி, சுண்டைக்காய், வாழை, முருங்கை, குட்டை மாமரம் கூட இருந்தது.

    கொய்தவரை போதுமென்று வேகமாய் வந்தவள் பூஜையறையை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்தாள்.

    சமையலறைக்கு வந்து

    அம்மா நான் பார்த்துக்கிறேன். பூஜை பண்ணிட்டு கிளம்புங்க இன்னிக்கு சீக்கிரம் போகணும்னு சொன்னீங்களே

    ஆமாண்டா... இந்தா காபியைக் குடி. சட்னிக்கு எடுத்து வச்சிருக்கேன் அரைச்சுடு. சாம்பார் இருக்கு அடுப்பிலே. தாத்தா பாட்டிக்கு சத்துமா கஞ்சி ரெடி. இட்லி ஒரு ஈடு எடுத்திட்டேன் அடுத்தது அடுப்புல இருக்கு. பார்த்துக்க... நான் வந்திடுறேன்

    அகிலா… இந்த வீட்டின் மூத்த மகன் குருபரனின் மனைவி வங்கியொன்றில் பொறுப்பான பதவியிலிருப்பவள். வீட்டில் மாமனார் மாமியார் கொழுந்தன்

    சிவராமனோடும் மகள்கள் காவ்யா உமாவோடும் வாழ்பவள்.

    காலையில் சமையலை முடித்து அவரவர்க்குத் தேவையானதை செய்து விட்டு கிளம்பினால் மீண்டும் சமையலறை அவளை உள்ளிழுத்துக் கொள்ளும். இப்போதெல்லாம் உமா பாதி வேலையை பங்கு போட்டுக் கொள்வதால் மூச்சு விட முடிகிறது.

    வாக்கிங் போய்விட்டு வந்த சித்தப்பாவுக்கு க்ரீன் டீயுடன் குட்மார்னிங் சொன்ன உமா தாத்தாவுக்கு வெந்நீரில் தேன்விட்டுக் கலந்த நீரை எடுத்து வந்தாள்.

    குட்மார்னிங் உமா...

    விளக்கேற்றி முடித்து சாமி கும்பிட்ட அகிலா மகளுக்கும் திருநீறு இட்டாள்.

    மீண்டும் சமையல் உள்ளுக்கு வர

    அம்மா நீங்க போய் ரெடியாயிட்டு வாங்க. டிபன் கட்டி வைக்கிறேன்.

    இல்லடாம்மா... காய் ஏதாவது பண்ணணும்.

    நான் பார்த்துக்கிடுறேன். நேற்றே பீன்ஸ் நறுக்கி வச்சிட்டேன் மா... நீங்க வரும் போது ரெடியாயிடும்.

    தேங்க்ஸ் குட்டிமா

    மாடியிலிருந்த தன் அறைக்கு போனாள் அகிலா.

    குருபரனும் காவ்யாவும் வந்து அமர்ந்தனர். காவ்யா இன்னும் குளிக்காமலே இரவு உடையுடனே கீழே வந்திருந்தாள்.

    உமா குளித்து கூந்தலை நீர் வடிய வேண்டி கீழே முடிச்சிட்டு நெற்றியில் நீறும் திலகமும் துலங்க பளிச்சென்று இருந்தாள். சாதாரண லாங் ஸ்கர்ட்டும் டாப்பும் தான் அணிந்திருந்தாள். ஆனாலும் பனியில் நனைந்த ரோஜா போல ஒரு அழகு சுடர் விட்டது.

    குருபரனுக்கு மணக்க மணக்க காபியைக் கொண்டு வந்து தந்தவள்

    ஹார்லிக்ஸ் கலக்கி கொண்டு வரவா?

    என்று காவ்யாவிடம் கேட்க

    நான் என்ன குடிக்கனும்னு நீதான் முடிவு பண்ணுவியா? சுள்ளென்று விழுந்தாள்.

    உமா அமைதியாக நிற்க

    போயி பூஸ்ட் எடுத்துவா

    பூஸ்ட்டை ஒரு வாய் குடித்தவள் ச்சீ... இதென்ன கழனித்தண்ணீ மாறியிருக்கு துப்பினாள்.

    போயி இஞ்சி டீ போட்டுக் கொண்டா

    உமா மௌனமாக திரும்பினாள். தினமும் நடப்பது தான்.

    அகிலா கிளம்பித் தயாராகி கீழே வந்தாள்.அவளுக்காக எல்லாமும் தயாராக வைத்திருந்தாள் உமா.

    மெச்சுதலான பார்வையை வீசிய அன்னைக்கு சாப்பிட ஏதுவாக. இட்லிகளை ஹாட்கேசிலிருந்து மாற்றி ப்ளேட்டில் வைத்தாள்.

    என்ன டிபன் இன்னிக்கு? இன்னிக்கும் இட்லியா? எனக்கு வேண்டாம். எனக்கு பூரி மசாலா தான் வேணும்

    காவ்யா ஓங்கிக் குரல் கொடுக்க அகிலாவின் கை இட்லி துண்டுடன் அந்தரத்தில் நின்றது.

    கண்ணை உறுத்தாத நிறத்தில் சின்ன ஜரிகை பார்டர் போட்ட சில்க் காட்டன் ஸாரியும் மேட்சிங் ப்ளவுசும் கழுத்தையொட்டிப் போடப்பட்ட கொண்டையுமாக கம்பீரமாக இருந்தவளின் முகம் சங்கடத்தைப் பூசிக்கொண்டது.

    காவ்யா...! அம்மா கிளம்பிட்டாங்க. நைட்டுக்கு வேணும்னா பூரி செஞ்சு தருவாங்க இன்னிக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க

    சும்மாயிருங்க சித்தப்பா! எனக்கு பூரிதான் வேணும். இல்லைன்னா இன்னிக்கு முழுக்க நான் சாப்பிட மாட்டேன்

    காலை தரையில் உதைத்துக்கொண்டு நின்றாள்.

    அகிலா கைக்கடிகாரத்தைப் பார்க்க

    உமாவுக்குப் புரிந்தது.

    இமை மூடித் திறந்தவள்

    நான் பார்த்துக்கிறேன் மா

    'உனக்கு லேட்டாகுமே’

    பரவாயில்லை என்பது போல் பார்த்தாள்.

    அகிலா ஏதுமே பேசாமல் தன் லஞ்ச் பேக்கை எடுத்துக்கொண்டு நான் வரேன் என்று பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். குருபரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது அதற்கிணையான கோபம் காவ்யா முகத்தில்.

    இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள உமா சமையல் உள்ளுக்குப் போய்விட்டாள்.

    மாத்திரை போட்டுக்கொள்வதால் பாட்டி தாமதமாகவே எழுவார் அவருக்கு சத்துமா கஞ்சியோடு வந்தவளிடம்.

    காவ்யாவிடம் கேட்டுட்டு இட்லி பண்ணியிருக்கலாம் இல்ல... இப்பப் பாரு கோவிச்சுட்டு உட்கார்ந்திருக்கா

    உமா பூரி மசாலா ரெடியாயிட்டுது பாட்டி! என்று பொரித்த பொன்னிற பூரிகளோடு மணக்கும் உருளை மசாலாவையும் டேபிளில் வைத்து விட்டு தன்னறைக்கு ஓடினாள்.

    அவளுக்கும் நேரமாகி விடுமே! அவள் பஸ்ஸை பிடித்தல்லவா போகணும்.

    காவ்யாவும் உமாவும் ஒரே காலேஜ் தான் என்றாலும் காவ்யா ஸ்கூட்டியில் போவாள். உமாவை ஒருநாளும் அதில் ஏற்றிக் கொள்ள மாட்டாள்.

    இன்னும் கேட்டால் அவள் தன் தங்கை என்று கூட சொன்னதில்லை வேறு வேறு துறை என்பதால் உமா பிழைத்தாள் எனலாம்.

    நல்லவேளை இன்று முதல் வகுப்பு இல்லை. இளம் ரோஜா வண்ண சுரிதாரை அணிந்து கொண்டவள் தலையைப் பின்னிக் கொண்டு கீழே வந்து மடமடவென இரண்டு இட்லியை வாயில் அடைத்துக் கொண்டவள் தன் டிபன்பாக்ஸை எடுத்துக்கொண்டாள். பின்னால் போய் பூத்திருந்த ரோஜாவைக் கிள்ளி காதோரமாய் வைத்துக்கொண்டு

    பாட்டி! தாத்தா! சித்தப்பா கிளம்புறேன்! என்று குரல் தரும் முன்னே காவ்யா

    எனக்கு யாரு பரிமாறுவது! மகராணி கிளம்பிட்டாங்க? என்று வெடித்தாள்.

    பாட்டி நீ வாடி செல்லம் நான் எடுத்து வைக்கிறேன் என்றதும்

    தேவையில்லை எனக்கு. அவளை பரிமாறச் சொல்லுங்க. நானே இன்னும் கிளம்பலை இவளும் அதே காலேஜ் தானே? இப்பவே போக வேண்டிய அவசியமென்ன? இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா?

    காவ்யா...நீ டூவீலர்ல போற! உமா பஸ்லே போகனும். அதான் பாட்டி பரிமாறுகிறேன்னு சொல்றாங்களே... அப்புறமென்ன? உமா நீ வா! பஸ் ஸ்டாண்டுல கொண்டு வந்து விடுறேன். வரவர இதென்ன வீடா இல்லை ஏதாவதா ச்சேச்சே சிவராமன் பேப்பரை கீழே வைத்துவிட்டு தன் டூவீலரை எடுத்தார்.

    போகிறவர்களை முகம் சிவக்கப் பார்த்தவள் டேபிள் மீதிருந்த உணவை ஆவேசமாய் கீழே தள்ளினாள்.

    உமா வியர்க்க விறுவிறுக்க செய்த உணவு தரையில் விழுந்து வீணானது.

    அந்தச்சிறு பெண்ணின் உழைப்பும் நேரமும் பண்டமும் சிந்திச் சிதறிக் கிடந்ததை... பார்த்தும் யாருமே வாய் திறக்கவேயில்லை... காவ்யா அப்படியே நின்றாள். குருபரனும் மகளை ஒரு வார்த்தைக் கடிந்து கொள்ளவில்லை.

    காவ்யா... நீ கிளம்புடாம்மா. அப்பா உன்னை ஹோட்டலுக்கு அழைச்சுட்டு போறேன்.

    வரவர சித்தப்பாவுக்கு ரொம்ப இடம் தர்றீங்கப்பா! அவரென்னவோ அவளைத் தலையிலே வச்சுத் தாங்குறார். இதெல்லாம் சரியில்லைப்பா! அவரைக் கண்டிச்சு வையுங்க. அவளை பஸ் ஸ்டாப்புல கொண்டு விட இவர் போகணுமா? ஏன் மகாரா...ணீ நடக்க மாட்டாளோ...? பொரிந்து தள்ளியபடி தன் அறைக்குப் போனாள் காவ்யா.

    தாத்தா பெருமூச்சுடன் பாட்டியை முறைத்தார். பாட்டி முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

    சின்னவன் வருவதுக்குள்ளே இதைக் க்ளீன் பண்ணச் சொல்லு. அவன் கண்ணுல பட்டா அவன் வேற சலங்கை கட்டி ஆடுவான்

    பாட்டியின் முகம் பரபரத்து வெளிறியது. வாசலில் வண்டி சத்தம் கேட்டது.

    ஆட்டம் - 2

    வானம் லேசான குளிர்ச்சியோடு மந்தாரத்துடன் இருந்தது. வழக்கமாய் சுட்டுப் பொசுக்கும் சூரியன் இன்று சோம்பலுடன் முகம் காட்டினான்.

    கிரிதரன் தன் பல்ஸரோடு சிக்னலுக்காகக் காத்திருந்தான். மனசு சந்தோஷத்தில் ததும்பிக் கிடந்தது.

    வெள்ளை நிறப் பேண்ட்டும் இளநீல நிற முழுக்கை ஃபார்மல் ஷர்ட்டும் அவனுக்கு அழகாகப் பொருந்தியிருந்தது. அலையலையான கேசம் ஹெல்மெட்டுக்குள் அடங்கிக் கிடந்தது.

    இன்றைக்கு முதன்முதலாக நகரின் பிரபலமான அந்தக் கல்லூரிக்குப் பேராசிரியராக பதவியேற்கப் போகிறான். மேற்படிப்பு முடித்தபின்பு வேறொரு கல்லூரியில் ட்யூட்டராக லீவ் வேகன்சியில் இருந்து வந்தவனுக்கு இன்று படிப்புக்கேற்ற பதவியாய் பேராசிரியராக நுழையப் போகிறான்.

    பேராசிரியர் பணி என்பது அவன் விரும்பி ஏற்ற பணி. காத்திருந்து கிடைத்த வேலையில் மனம் ரெக்கைக் கட்டி பறந்தது. இன்னும் சிக்னல் விழ வில்லை. மனம் உல்லாசத்திலிருந்தால் சுற்றுப்புறம் மொத்தமுமே அழகாகத் தெரிவது இயற்கை தானே...?

    அப்போதுதான் அந்தக்காட்சி கண்ணில் விழுந்தது.

    அந்த கிராமத்துப் பெண்மணி கைக்கொன்றாக கனமான பைகளுடன் முன்னே இரண்டடி வைப்பதும் பின்னே வருவதுமாக தடுமாறிக் கொண்டிருந்தார். அது பேருந்து நிறுத்தம். அங்கே காத்திருந்தவர்களுக்கு அவரவர் கவலை....

    அதில் இவர் அவதியை யார் கண்டு கொள்வது...?

    அந்தப் பெண் கல்லூரி மாணவி போல் தோற்றமளித்தவள் சட்டென்று தன்னிடமிருந்த பையை அவள் தோழி போலும்.. அவளிடம் தந்து விட்டு இந்தப் பெண்மணியின் கையிலிருந்த பைகளை வாங்கிக்கொண்டு ஏதோ சொல்ல அவர் தலையாட்ட... அவர் தயக்கத்தோடு இவளின் கையைப் பற்றிக்கொள்ள வேகமாய் இருவரும் வீதியின் அடுத்த பக்கம் வந்தனர். அந்தப்பெண் அவரிடம் பைகளை தந்துவிட்டு விடைபெறுவது போல தலையாட்ட அவரும் ஏதோ சொல்லி கன்னம் வழித்தார்.

    அவள் மகிழ்ச்சியோடு தலையாட்டிய படியே விறுவிறுவென கிராஸ் பண்ண... சரியாக இவனைக் கடக்கும் நேரம் சிக்னல் விழ எல்லா வாகனங்களும் உயிர்பெற்றன.

    கிரிதரன் அசையாமலிருந்தான். அவள் கடந்தபின்பே வண்டியை முடுக்கினான். அவளை அவள் தோழி ஏதோ கடிந்து தலையில் அடித்துக்கொள்ள இவள் மென்மையாய் புன்னகைத்து சமாதானம் செய்வதும் கண்ணாடியில் தெரிந்தது.

    இளம் ரோஜா வண்ணச்சுரிதார்.. ஒற்றைப் பின்னல், காதோர ரோஜா, சின்னதாய் ஜிமிக்கி, விபூதிக்கீற்றும் அரக்கு வண்ண ஸ்டிக்கரும்....

    பச்சக் கென்று மனசுக்குள் அந்த வட்டமுகம் உட்கார்ந்து கொண்டது.

    இத்தனை பேரும் காட்டாத அந்த அக்கறை இவள் காட்டியதில் வித்தியாசமாய்த் தெரிந்தாள். உதவுகிற மனப்பான்மை இயல்பாகவே அவளிடம் இருக்கிறது. நல்ல பெண். பார்த்தாலே தெரிகிறது. படிக்கிறாளோ....எங்கே படிக்கிறாள்? என்னவொரு சாந்தமான முகம்.! கர்ப்பக்கிருஹத்தில் அமர்ந்திருக்கும் மரகதவல்லியைப் போல...

    கிரிதரன் 'சட்'டென திகைத்துத் தடுமாறினான். தன் சிந்தனை போகிற லட்சணத்தை பார்த்து.

    ச்சேச்சே நானா இப்படி? யாரோ ஒரு பெண்ணைப்பற்றி இப்படியெல்லாம் யோசிக்கிறேன்.

    அதுவும் பார்த்த சில கணங்களிலேயே! என்று தன்னையே கடிந்தபடி வண்டியை முடுக்கக் கல்லூரியும் வந்துவிட்டது. உள்ளே நுழைந்தான்.

    டூவீலர் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றியவன் கேசத்தை அழுந்த கோதிவிட்டுக் கொண்டான்.

    நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல். சிவப்புக்கு குறைவான நிறம் அடர்ந்த புருவங்களுக்குக் கீழே சுடர்விடும் விழிகள் கிரேக்கச்சிற்பம் போல கூர்நாசி. க்ளின் ஷேவ்வில் லேசாய் பச்சைநரம்போடிய. மோவாய் மொத்தத்தில் ஆணழகன் தான்.

    எதிர்ப்பட்டவனின் அலுவலக அறை கேட்டறிந்தவன் நடக்க ஆரம்பித்தான்.

    யாருடீ இது

    புது புரொபஸர் டீ

    இவரே ஸ்டூடண்ட் மாதிரிதானிருக்கார். இவரா புரொபஸர்.

    சூப்பர் ஹாண்ட்சம் கைய்

    காவ்யா! அவர் நமக்கு புரொபஸர்டீ

    ஸோ வ்வாட்!

    காவ்யாவின் விழிகளில் திமிர்த்தனமும் அலட்சியமும் விளையாடின.

    ப்ச் அப்படியில்லேடீ

    இங்க பாருடீ! இந்த காவ்யா மனசுலே ஒன்னை நினைச்சுட்டா அதை செய்தே தீருவா.... ஆமாம் இவர் பேரென்ன?

    கிரிதர் டீ!

    காவ்யா கிரிதர் எப்படி பெயர் பொருத்தம்? .இந்த செகண்ட் முதல் அவர் இனிமே ஹி ஈஸ் மை மேன். அண்டர் ஸ்டாண்ட்?" அனைவரும் அமைதி காத்தார்கள்.

    பின்னே பேசமுடியுமா ...கிழித்து தோரணம் கட்டிட மாட்டாளா.

    சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தவள் தோழிகளுடன் வேகமாய் நடந்தாள்.

    அலுவலக அறையில் புரொசீஜர்களை முடித்துக்கொண்டு கூலர்ஸை கண்களில் மாட்டியபடி அந்த காரிடாரில் நடந்தான்.

    திடீரென வேகமாக பக்கவாட்டிலிருந்த அறையிலிருந்து ஓடிவந்த பெண்ணொருத்தி அவன் மீது மோதினாள்.

    மோதிய வேகத்தில் ஜெர்க் ஆனாலும் கால்களை ஊன்றி நின்று சமாளித்தவன் அவளைப் பிடித்து நிறுத்தினான்.

    ஸாரி! ஸாரி

    அவள் படபடவென இமைகளை கொட்டியபடி வெட்கம் கசிய சிரித்தாள்.

    ப்ரெண்ட்ஸ் விரட்டிட்டு வந்தாங்களா? ஸாரி... நீங்க... வந்து... உங்க மேல நான். ஸாரி என்று விழிகளை விரித்து தடுமாறி பேச அவனோ தன் சட்டையை தூசி தட்டுவது போலத் தட்டி நீவி விட்டுக் கொண்டவன்.

    இட்ஸ் ஓகே! கவனமா போங்க!

    என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பி விட்டு நகர்ந்தான்.

    போகிறவனின் முதுகைப்பார்த்து ஒரு ப்ளையிங் கிஸ் கொடுத்து கண்சிமிட்டி புன்னகைத்தாள் அந்தப் பெண்...

    அவள் காவ்யா....!

    ஆட்டம் - 3

    கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பின்னும் உமாவுக்குக் காலையில் நடந்த நிகழ்ச்சிகள் மனதை விட்டு அகலவே இல்லை...! பூரியையும், கிழங்கு மசாலாவையும் டைனிங் ஹால் முழுக்க வீசியடித்து அட்டகாசம் செய்த காவ்யா... தன்னுடைய அறைக்குள் போய் விட்டாள் என்று நினைத்த உமா,

    வாசலை நோக்கி...சித்தப்பா அஞ்சே நிமிஷம்.. வந்துர்றேன்! தாத்தா, பாட்டி நீங்க ரெண்டு பேரும் காலைக் கீழ வெக்காம அப்பிடியே உக்காந்திருங்க! வழுக்கிடப் போகுது… நான் க்ளீன் பண்ணிட்டுக் காலேஜுக்குக் கிளம்பறேன் இன்னிக்கு வேலைக்கு வர லேட்டாகும்னு நர்மதாம்மா நேத்தே சொன்னாங்க.

    அறைக்குப் போன காவ்யா காதில் உமா சொன்னது காதில் விழ.. ராட்சசி போலத் திரும்பி வந்தாள்.

    அடடா என்ன கரிசனம்.. என்ன கரிசனம்…..? நீ இங்க க்ளீன் பண்றது சித்தப்பாக்குத் தெரியணும்.. தாத்தா, பாட்டி மேல நீ ரொம்ப அக்கறை எடுத்துக்கறேன்னு அவங்களுக்குப் புரியணும்.. எம்மேல கெட்ட அபிப்ராயம் எல்லோருக்கும் ஏற்படணும்ன்னு தானே இப்படி எல்லாம் பண்றே? எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாக் கூட இப்படிப் பேசவோ அப்பாவி மாதிரி மூஞ்சிய வெச்சுக்கவோ வராதுப்பா.…! மனசு நெனக்கறதத்தான் வாய் பேசும்.. உன்ன மாதிரி வார்த்தைகள சக்கரப் பாகுல தோச்ச மாதிரி பேச இனிமேதான் கத்துக்கணும்…என்ன பண்றது..? நான் அப்பா மாதிரி வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறவ….! நீதான் தாயைப் போலப் பிள்ளையாச்சே..னு பொடி வைத்துப் பேச.. உமாவின் நீள் விழிகளிலிருந்து இதோ கொட்டப் போகிறேன் என்கிற மாதிரி கண்ணீர் குளம் கட்டியது.

    பாட்டிக்கும் காவ்யா செல்லம். ஏதோ சொல்ல வந்த தாத்தாவையும் பாட்டி அடக்கி உட்கார வைத்து விடத்.. தனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க அங்கு யாரும் இல்லையே என்று உமாவின் மனம் ஏங்கித் தவிக்க..

    இன்னாம்மா… உமாக்கண்ணு.. நீ இன்னும் காலேசுக்குக் கெளம்பலையா.? உன் சித்தப்பு வாசல்ல வண்டில உக்காந்துகினு உமா.. உமான்னு கூவிகினு கீறாரே!னு குரல் கொடுத்துக் கொண்டே அங்கு பிரசன்னமான நர்மதாவைப் பார்த்ததும் தெய்வத்தையே பார்த்தது போலப் பரவசமடைந்தாள் உமா.

    இந்தா.. கண்ணு நீ அப்பிடியே காலேசுக்குக் கெளம்பு.. மத்த வேலைய நான் பாத்துக்கிறேன்னு நர்மதா சொல்ல… பட்டாம்பூச்சி போல இமைகளைப்

    Enjoying the preview?
    Page 1 of 1