Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bindi Sabji
Bindi Sabji
Bindi Sabji
Ebook73 pages26 minutes

Bindi Sabji

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தப்புத்கத்தில் சங்கப்பலகையில் திரு. ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் செல்வி. ஜி.ஏ. பிரபா அக்காவும் இணைந்து நடத்திய மன்றில் சிறுகதைப்பட்டறையில் நான் எழுதிய பல கதைகளின் தொகுப்புடன் மற்ற சில போட்டிகளுக்கு நான் எழுதிய கதைகளும் இடம்பெற்றுள்ளது.

இந்த மன்றில் சிறுகதைப்பட்டறையில் நாங்கள் அனைவரும் எழுதும் கலையில் நன்றாக பட்டை தீட்டப்பட்டோம். விதவிதமாக சவால்களை உருவாக்கி எங்களை பட்டை தீட்டிய திரு. ஸ்ரீனிவாசராகவன் சாருக்கு நன்றிகள் பல. எழுதுவதற்கு எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்த இந்தக்கதைகளை படிப்பது உங்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580142209173
Bindi Sabji

Read more from Lalitha Shankar

Related to Bindi Sabji

Related ebooks

Reviews for Bindi Sabji

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bindi Sabji - Lalitha Shankar

    http://www.pustaka.co.in

    பிண்டி சப்ஜி

    சிறுகதைகள்

    Bindi Sabji

    Sirukathaigal

    Author:

    லலிதா சங்கர்

    Lalitha Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் குறிப்பு

    நீலம் பிரிந்த வானம்

    பேரன்பு

    பிண்டி சப்ஜி

    நிமிராத ஒன்று

    குற்றம்! நடந்தது என்ன?

    கடிதல் திருத்துக

    அடக்க மறு

    பொட்டப்புள்ள

    பிச்சை புகினும்

    என்னது பேயா?

    அ மு பை மு க

    உஷை

    இப்படியும் அப்படியும்

    ஆசிரியர் குறிப்பு

    பிண்டி சப்ஜி என்ற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் லலிதா சங்கர். இது பேச்சிடெர்ம் டேல்ஸ் வெளியிடும் இவரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. அம்புட்டு ஆசை, மேரி என்ற மாரி இவரின் முதல் இரண்டு கதைத்தொகுப்புகள். இவரின் கதைகள் அனைத்தும் பொதுவாக எளிய நடுத்தர மனிதர்களின் வாழ்வியலைப் பேசும். அவர்களின் உணர்வுகளை அலசும். நுண்ணிய உணர்வுகளை அழகாக எடுத்துச்சொல்லுவது இவரது சிறப்புத்தன்மை. இவர் அடிப்படையில்மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்க்ஷன் வேலை செய்கிறார்.

    நீலம் பிரிந்த வானம்

    அன்று ஈமைச்சடங்கு முடிந்த பதின்மூன்றாம் நாள் மாலை,

    வா! சந்திரா! இங்க பாரு பவித்ரா! உன் வீட்டுக்காரர் வந்துட்டார். இப்போ காபி கலக்கட்டுமா?

    ம்ம்ம்! சரிக்கா.

    மாமி! காரியமெல்லாம் நல்லபடியா ஆச்சா மாமி? மொட்டைமாடி கூரையைப்பிரிச்சிடலங்களா?

    தாராளமா! சந்திரா! ஏதோ உங்க ரெண்டுபேரோட ஒத்தாசைல எல்லாம் நல்லா நடந்தது. உன் பொண்டாட்டியைச் சும்மா சொல்லக்கூடாது. என்னோட இன்னொரு கை மாதிரி கூடவே இருந்தா.

    என்னமோ மாமி! நீங்கதான் சொல்றீங்க. இவ என்னைப்பண்ற டார்ச்சர் தாங்க முடியில மாமி!

    ஏன்? அப்படி என்ன நடந்தது?

    இல்ல மாமி! எப்பப்பாரு எங்க அக்கா அப்பறம் அம்மாவோட ஏதாவது வம்பு இழுத்துகிட்டு வந்துடுது. எங்க அக்கா, அம்மா கதை இதுக்கு எதுக்கு?

    அக்கா! எப்பப்பாரு இவர் ரொம்ப பேசறார்க்கா!

    இல்ல மாமி! இது கூட என்னால சமாளிக்க முடியலை. எங்க அம்மா இருக்கறதுனால பார்க்க வேண்டி இருக்கு. இல்லேன்னா நான் என்னிக்கோ போயிருப்பேன்.

    அதுவரை அவன் பேசப்பேச நடுநடுவே சிரித்துக்கொண்டே வாய் கொடுத்தபடி இருந்த பவித்ரா அதன்பின் கப்சிப்பென்றாகி விட்டாள்.

    மறுநாள்!

    என்னடி? காபி குடிக்கறயா?

    ம்ம்ம்! இங்க பாருங்கக்கா! நான் சொல்லிட்டேன். எனக்கு அந்த ஆளு தேவை இல்லை. எப்படி சொல்றாரு பாருங்கக்கா? அம்மா இருக்கறவருக்கும்தான் என் கூட இருப்பாராமே! ஏன்? இப்போவே போக வேண்டியதுதானே! என் உடம்புல தெம்பு இருக்கு. என் குழந்தைகளை நான் பார்த்துக்கிடுவேன்.

    சரி விடு! ஒரு நாலுநாள் போகட்டும்.

    நாலு நாள் பொறுத்தா மட்டும்? நான் மாற மாட்டேன் ஆமாம். அந்தாளுக்கு நான் தேவை இல்லேன்னா எனக்கு மட்டும் அவர் எதுக்கு?

    சரி சரி விடு. உன் கோவதைக்கொஞ்சம் ஆறப்போடு. வேலையைப்பாரு.

    அடுத்த வாரம்.

    வா சந்திரா! அந்த சுவிட்ச் ரிப்பேர் ஆயிடுச்சு. அதுதான் அதை மாத்தணும்.

    சரி மாமி. பண்ணிடலாம்.

    காபி குடிக்கறயா?

    வேண்டாம் மாமி.

    இப்போதான் பால் காச்சினேன். கொஞ்சம்போலத்தரட்டுமா?

    இல்ல மாமி! வீட்டுல அது போட்டு வெச்சுருக்கும். நான் போனா எல்லாரும் ஒட்டுக்கா உட்கார்ந்து பேசிக்கிட்டே குடிப்போம். தீனி வேற வாங்கி வண்டில வெச்சுருக்கேன். எனக்காக அது

    Enjoying the preview?
    Page 1 of 1