Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaathumagi Nindrai!
Yaathumagi Nindrai!
Yaathumagi Nindrai!
Ebook234 pages1 hour

Yaathumagi Nindrai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு தாய் தன் பிள்ளைக்காக வாழ்க்கையை தியாகம் செய்யலாம். ஆனால் இக்கதையில், பொறுப்பில்லாத தந்தை மற்றும் தாயை இழந்து தவிக்கும் ஜனனிக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்கிறாள் ஜனனியின் சித்தி. இதில் மனோஜ் என்பவன் ஜனனியின் சித்தியை விரும்புகிறான். மனோஜ் மூலம் சமீர் அறிமுகமாகிறான். சமீர், ஜனனியை விரும்ப... சமீரீன் அன்பை அவமதிக்க ஜனனி என்ன பொய் சொல்வாள்? திடீரென சித்திக்கு ஜனனிமேல் வெறுப்பு ஏற்படக் காரணம் என்ன? சித்தியும் மனோஜும் இணைவார்களா? சமீர் மற்றும் ஜனனியின் அன்பு மலருமா? இக்கதையில் நாமும் இவர்களுடன்...

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580140906973
Yaathumagi Nindrai!

Read more from Lakshmi Sudha

Related to Yaathumagi Nindrai!

Related ebooks

Reviews for Yaathumagi Nindrai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaathumagi Nindrai! - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    யாதுமாகி நின்றாய்!

    Yaathumagi Nindrai!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    முன்னுரை

    வாங்க… பேசலாம்.

    ரொம்ப நாட்கள் கழித்து… ஸாரி மாதங்கள் கழித்து, இணையதளத்தை நான் அலசிக்கொண்டிருந்தேன், வீட்டில்.

    இணையம் அற்புதமான பரிசு. Technology has shrunk the world. இது ரொம்ப உண்மை.

    ஸ்கைப் வழியாக டெல்லியைச் சேர்ந்த ஓர் ஆசிரியை பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு… குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் தென் இந்தியாவைச் சேர்ந்த அரசாங்கப் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கிறாராம்.

    அதே இணையதளம் வழியாக ஒரு ஆண், ஐ.ஏ.எஸ். அதிகாரியைப்போல் பயோடேட்டா பொய்யாகத் தயாரித்து மூன்று பெண்களிடம் திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் சொல்லி ஏமாற்றி… ஏராளமான பணத்தை அவர்களிடம் இருந்து அபேஸ் செய்திருக்கிறான்.

    Every action has an equal and opposite reaction.

    இணையதளம் ஆரம்பிக்கும்பொழுது அது நல்லதற்கு மட்டுமே பயன்படும் என்றுதான் பெரும்பாலோர் நினைத்திருப்பார்கள்.

    ஆனால் Opposite reaction இருக்கிறது, எல்லாக் கண்டுபிடிப்புகளிலும். இணையதளமும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

    என்னுடைய நாவல்களும் அப்படித்தானோ! சில நாவல்கள் சிலருக்குப் பிடிக்கும். அதே நாவல்கள் சில வாசகிகளுக்குப் பிடிக்காது.

    ஆரம்பத்தில் இருந்தே என் நாவல்களை விமர்சிக்கும் வாசகி புஷ்பாவைப்பற்றி நான் இங்கே சொல்லியே ஆகவேண்டும்.

    நான் எந்தெந்த நாவல்களில் எங்கெங்கே ‘சொதப்புகிறேன்’ என்று சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிடுவார்.

    ‘சே! இவ்வளவு ஸில்லியா தப்பு செய்துவிட்டேனே…’ என்று நான் என்னையே திட்டிக்கொள்வேன்.

    Constructive Feedback கொடுப்பதில் புஷ்பா ரொம்பவே வல்லவர்.

    ‘ஒரு நாவல் இப்படி எழுதினால்… இன்னொரு நாவல் இப்படி எழுதுங்க மேடம்! You have exposure. இன்னும் நல்லா எழுதலாம்…’ என்று அழகாக ஊக்கப்படுத்துவார்.

    ‘ஆங்கிலத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். ரீச் நன்றாக இருக்கும். நாவல்களில் தொடர்ந்து North East-ஐயே இடமாக வைத்து எழுதறீங்க. கொஞ்சம் சென்னையை மையமாக வைத்து எழுதுங்க. கிராமத்துப்புறம் ஒரு நாவல் ட்ரை பண்ணுங்க…’ என நிறைய யோசனைகளை அள்ளி வழங்கும் புஷ்பாவிற்கு நன்றி.

    Variety is the spices of Life.

    நட்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    1

    எங்கு

    இருந்து

    நீ

    வந்தாய்?

    என்

    மனதைக்

    கொள்ளை

    கொண்டாய்!

    நான்

    என்னை

    மறந்து விட்டேன்!

    உன்னைப்

    பார்த்த

    நாள்

    முதலாய்

    நான்

    நானாக

    இல்லை!

    சுள்ளென வெயில் ஜன்னல் வழியாக முகத்தில் பட கண் விழித்தாள் ஜனனி. ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன்…’ என்று உடல் கெஞ்சியது. ஆனால் மூளை அதற்குத் தடை சொன்னது.

    சித்தி கட்டில் அருகே உள்ள நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள் ஜனனி.

    குட் மார்னிங் சித்தி!

    குட் மார்னிங்… - சித்தியின் குரலில் உற்சாகம் துளிக்கூட இல்லை.

    இப்பொழுதெல்லாம் பெரும்பாலான நாட்கள் சித்தி இப்படித்தான் இருக்கிறார்கள். இதை மாற்றவே முடியாதா? ஒரு ஆயாசம் அவளுள் தீப்போல் பரவியது.

    கஷ்டப்பட்டுத் தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொண்டு மெதுவாகப் படுக்கையில் இருந்து எழுந்தாள் அவள்.

    சித்தி வெதர் இன்னைக்கு நல்லா இருக்கு, ரெண்டு நாளா மழை பெய்ஞ்சு சென்னையையே ஒரு கலக்கு கலக்கிடுச்சு.

    ம்… ஆமாம்.

    சித்தி! இன்னைக்கு என்ன செய்யப்போறீங்க?

    ம்… பார்க்கலாம். மழை பெய்யாமல் இருந்தால் தோட்டத்தில் கொஞ்சநேரம் வேலை பார்க்கலாம்னு நினைச்சேன். அப்புறம் என்னோட ஸ்கெட்ச் போர்டை வெளியேவைத்து வரையலாமான்னு யோசனையா இருக்கு.

    சித்தியைப் பார்க்கும்பொழுது அவளுக்குப் பாவமாக இருந்தது.

    சித்தி ஒரு புரஃபஷனல் ஆர்டிஸ்ட். ஓவியக் கல்லூரியில் முறையாகப் படித்து பட்டம் பெற்றவர். சித்தியின் போர்ட்ரெய்ட் ஓவியங்கள் பார்க்கப் பார்க்க அழகாகத் தத்ரூபமாக இருக்கும்.

    ஆனால் சித்தி இப்பொழுது எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரிந்த விஷயமே!

    இன்னிக்கு வெதர் இப்படியேதான் இருக்கும். அதனால வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடக்காதீங்க, சித்தி புதுசா ஏதாவது போர்ட்ரெய்ட் ஓவியம் ட்ரை செய்து பாருங்களேன்.

    ம்… பார்க்கலாம். நீ இன்னைக்கு கிளினிக் போறதானே?

    ஆமாம் சித்தி!

    சரி… லேட்டாகப்போகுது. சீக்கிரமா எழுந்திருச்சுக் கிளம்பற வழியைப் பார்.

    சரி சித்தி! என்றபடியே குளியல் அறை நோக்கிச் சென்றாள் ஜனனி.

    அவள் ‘ஸ்மைல் வெல்’ என்ற பல் மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தாள்.

    அவள் வீட்டிலிருந்து சிறிது நேரப் பயணம்தான் ஹாஸ்பிடலுக்கு. அதனாலேயே அவள் அந்த வேலையைவிட்டு வேறு எந்த வேலையையும் தேடாமல் அதிலேயே தொடர்ந்து இருந்து வந்தாள்.

    பி.எஸ்ஸி. படித்த பின்பு, மேலே எம்.எஸ்ஸி படிக்கவேண்டும் என்றுதான் ஜனனி விரும்பினாள். ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாக வீட்டில் சட்டென மாறிவிட்டது.

    அதனால் வேறு வழியின்றி அவள் தன் படிப்பைத் தியாகம் செய்துவிட்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.

    தாத்தா இருந்தவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. காய்ச்சல், ஜுரம் என்று ஒரு நாள்கூட படுக்கையில் படுக்காத தாத்தா… சட்டென ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோனது துரதிர்ஷ்டம்.

    தாத்தா இருந்தவரை அப்பா பிரச்சனை ஏதும் செய்யாமல் அடங்கியிருந்தார். ஆனால் தாத்தா இறந்தபின்பு அவர் கொட்டம் அதிகமாகிவிட்டது.

    வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பெண்களால் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற ஏளனம், இளக்காரம்… அவர் ரத்தத்தில் ஓடுகிறது போல.

    அதனால்தான் அடிக்கடி குடித்துவிட்டுக் கலாட்டா செய்கிறார்.

    பாவம் சித்தி! அம்மா இறந்தபின்பு என்னை எவ்வளவு பாசமாக, ஆசையோடு வளர்த்தார்கள்.

    அம்மா முகம்கூட எனக்கு நினைவுக்கு வரவில்லை. எனக்காகத் திருமணமே செய்துகொள்ளாமல் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்த சித்திக்காக… நான் ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டாள் அவள்.

    அப்பாவைப்பற்றிய ஞாபகம் கசப்பாக அவள் மனத்தை அரித்தது. ஒருவேளை அப்பாவின் சுயரூபம் தெரிந்ததால்தான் அம்மாவைச் சீக்கிரமாக மரணம் ஆட்கொண்டதோ?

    அப்பாவிற்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்ற உண்மையை ஜீரணிக்க முடியாததால்தான் அம்மா மனஅழுத்தம் காரணமாக இறந்துபோனார்களா?

    அப்பாவின் மேல் நம்பிக்கை இல்லாததால்தான் தாத்தா, வீட்டையும் சொத்தையும் டிரஸ்ட் பொறுப்பில் விட்டிருக்கிறார்களா?

    என்னுடைய இருபத்தெட்டாவது வயதில்தான் அதை எடுக்கும் உரிமை உள்ளது என்று தாத்தா தெளிவாகச் சொன்னதற்குக் காரணம் அப்பாவின் ஒழுங்கற்ற தன்மையும், பணத்தாசையும் தானா?

    தாத்தா யோசித்துத்தான் முடிவு எடுத்திருப்பார்கள். ‘தன் மகள் திருமணத்தால் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள்… அவள் வாழ்க்கையே இருள் அடைந்து போய்விட்டதே…’ என்று தாத்தா ரொம்ப மனம் வருந்திப் போய்விட்டதால்தான் இப்படி உயில் எழுதி வைத்தாரோ?

    தன் மகள் பட்ட கஷ்டம்… தன் பேத்தி படக்கூடாது என்ற காரணத்திற்காகத்தான் தாத்தா இப்படிச் செய்தாரோ?

    சித்தி பெயரில் ஏன் உயிலில் எதுவும் இல்லை? அப்பா சித்தியை மிரட்டக்கூடும் என்ற காரணமா?

    இருக்கலாம்… சித்திக்கு இரக்க மனசு. அக்காவின் கணவர்… பாவம் கஷ்டப்படுகிறாரே என்ற எண்ணத்தில் தாத்தாவிற்குத் தெரியாமல்… சித்தி அப்பாவிற்குச் செய்த பண உதவி அவள் மனதில் நிழலாடியது.

    கடைசிக்காலத்தில் தாத்தாவிற்கு உண்மை எல்லாம் தெரிய வந்ததால்… சித்தி பெயரில் எதுவும் உயிலில் எழுதவில்லை போல… எனத் தனக்குத்தானே யோசித்துக்கொண்டாள்.

    தாத்தா வியாபார விஷயமாக வெளியூர் செல்வதை… சரியாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அப்பா சித்தியிடம் வந்து பணம் கேட்டது, அவள் நினைவுக்கு வந்தது.

    சித்தி முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லும் பொழுதெல்லாம் அப்பா சித்தியை மிரட்டி… பின்னர் அழுது புரண்டு பணத்தை வாங்கிக்கொண்ட நாட்கள் துரதிர்ஷ்டவசமாக அவள் மனதில் பதிந்துவிட்டது.

    அதனால்தான் எனக்கு இந்தப் பிரச்சனை ஏற்பட்டதா? இதிலிருந்து என்னால் விடுபடவே முடியாதா?

    இதற்கு நிரந்தரத் தீர்வு எதுவும் இல்லை, மருந்துகள் மூலம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களே?

    இந்த மாதிரி ஒரு நோய் எனக்கு இருப்பது சித்திக்குத் தெரிந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?

    எனக்காகப் பரிதாபப்படுவார்கள். எனக்காகக் கவலைப்படுவார்கள். ஏற்கெனவே அவர்கள் மனதில் நிறைய கவலைகள்… அவர்கள் உடல்நிலை ஏனோ நாளாக நாளாக மோசமாகி வருகிறது.

    இந்த நிலையில் என்னோட கவலையை வேறு அவர்கள் மனதில் நான் வைக்க விரும்பவில்லை. அதோடு நான் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கும் பொழுதுதான் என்னை அறியாமல் இரவில் அப்படி நடந்துகொள்கிறேன்.

    அதனால் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும் என்று தீர்மானித்தாள் அவள்.

    ஜனனி! சாப்பிட வரலையா? லேட்டாச்சு! என்ற சித்தியின் குரல் அவள் யோசனையைக் கலைத்தது.

    இதோ வர்றேன் சித்தி! என்று குரல் கொடுத்தவள் என்ன உடை அணிவது என்று யோசித்தாள்.

    பாசி பச்சை நிறத்தில் இருந்த ஒரு சல்வாரை நோக்கி அவள் கைகள் நீண்டன. அதை அணிந்துகொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.

    ‘எந்தச் செயற்கை மேக்கப் இல்லாமல் நீ ரொம்ப இயற்கையாக அழகாக இருக்கிறாய் ஜனனி’ என்று உடன் பணியாற்றும் லிசா சொன்னது அவள் நினைவுக்கு வந்தது.

    அவள் தனக்குத்தானே சிரித்தபடியே கண்ணாடியைவிட்டு அகன்றாள்.

    சித்தி! எனக்கு இன்னிக்கு என்ன டிபன்?

    ம்… இடியாப்பம்?

    நீங்க சாப்பிடலை.

    ம்… எனக்கு ராகி கஞ்சி போதும்.

    சித்தி உங்க வயசுக்கு ஷுகர் ஈஸியா கண்ட்ரோல் செய்யலாம். நீங்க வீட்டிலேயே சும்மா அடைஞ்சுக் கிடக்காதீங்க. இன்னிக்கு வாக் போங்க.

    அப்புறம் இன்னிக்கு மழை கண்டிப்பா வராது அதனால நீங்க பெயிண்ட்கூடச் செய்யலாம்.

    ம்… ட்ரை பண்றேன் ஜனனி.

    நான் மத்தியானம் ஃபோன் செய்யறேன் சித்தி! நீங்க வீட்டுல இருந்தால்… அவ்வளவுதான். எனக்குக் கெட்ட கோபம் வரும்! என்றாள் சிரித்தபடியே ஜனனி.

    சுந்தரியின் இதழ்களிலும் மெல்லிய புன்னகை பரவியது.

    சித்தி… நீங்க ஸ்மைல் செய்யும் பொழுது ரொம்ப அழகா இருக்கீங்க. குழி விழும் உங்க கன்னம்… ரொம்ப க்யூட்! என்று கன்னத்தைக் கிள்ளினாள் ஜனனி.

    ஏய் போதும் ஐஸ்… கிளம்பு!

    ஐஸ் இல்லை சித்தி! லிசாகூட அன்னிக்கு உங்களைப்பற்றி கமெண்ட் அடிச்சா. நான்தான் சொல்லலை! என்றாள் இடியாப்பத்தைச் சுவைத்தபடியே.

    ஏய்… என்ன கமெண்ட்? சொல்லு!

    ம்… நீங்க என்னோட அக்காவாட்டம் இருக்கீங்களாம். சித்திங்கறதை அவளால நம்பவே முடியலையாம்! என்று குறும்பாகக் கண் அடித்தாள் அவள்.

    நீ ஆச்சு… உன் ஃப்ரெண்ட் லிசா ஆச்சு. என்னை விடுங்க சாமி! என்றபடியே சமையல் அறை நோக்கி நடந்தாள் சுந்தரி.

    தனக்குள்ளே சிரித்தபடியே வேகமாகச் சாப்பிட்டு முடித்தாள் ஜனனி.

    சித்தி! கிளம்பறேன்…

    சரி… ஜனனி.

    ஸ்கூட்டியில் போகும் ஜனனியையே புள்ளியாக மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள் சுந்தரி.

    2

    எங்கு

    இருந்து

    வந்தாய்

    நீ?

    என்னை

    எனக்கே

    அறிமுகம்

    செய்து

    வைத்தாய்

    நீ!

    கண்ணாடி

    முன் நின்று

    பார்த்தேன்!

    உன்

    முகம்

    தெரிந்தது

    அங்கே!

    எப்படி பெண்ணே?

    ஹாய் ஜனனி… குட் மார்னிங்! என்றான் ரஞ்சித், அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடியே.

    ஹலோ… டாக்டர்! ஸாரி இன்னிக்கு ஃபைவ் மினிட்ஸ் லேட்.

    "இட்ஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1