Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mounam Un Mozhiya?
Mounam Un Mozhiya?
Mounam Un Mozhiya?
Ebook209 pages2 hours

Mounam Un Mozhiya?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தக் கதையின் நாயகி மிதுலா துடிப்பான பெண். ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் துணை எடிட்டராக வேலை பார்த்து வருகிறாள் அவள். அவள் வாழ்வில் அதிரடியான மாற்றங்கள் சட்டென ஏற்படுகின்றன. அதற்குக் காரணம் அவளின் புதிய முதலாளி சச்சித்.

அந்த மாற்றங்களை அவள் எப்படிச் சமாளிக்கிறாள்? சச்சித்தோடு எப்படி இணைகிறாள் என்பதே இந்தக் கதை.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580140906966
Mounam Un Mozhiya?

Read more from Lakshmi Sudha

Related to Mounam Un Mozhiya?

Related ebooks

Reviews for Mounam Un Mozhiya?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mounam Un Mozhiya? - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    மௌனம் உன் மொழியா?

    Mounam Un Mozhiya?

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    என்னுரை

    அனைவருக்கும் வணக்கம்!

    என்னுடைய இருபதாவது நாவல் ‘மௌனம் உன் மொழியா?’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

    இந்தக் கதையின் நாயகி மிதுலா துடிப்பான பெண். ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் துணை எடிட்டராக வேலை பார்த்து வருகிறாள் அவள்.

    அவள் வாழ்வில் அதிரடியான மாற்றங்கள் சட்டென ஏற்படுகின்றன. அதற்குக் காரணம் அவளின் புதிய முதலாளி சச்சித்.

    அந்த மாற்றங்களை அவள் எப்படிச் சமாளிக்கிறாள்? சச்சித்தோடு எப்படி இணைகிறாள் என்பதே இந்தக் கதை.

    கதையைப் படித்துக் கருத்துகளைத் தெரிவித்து என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டும் அத்தனை வாசகர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி.

    உங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    1

    இந்தப்

    பூமியே

    ஒரு

    அழகான

    மலர்வனம்!

    நீ

    இருக்கிறாய்

    அதனாலே

    பெண்ணே!

    நீ

    நடந்து

    செல்லும்

    பாதை

    எல்லாம்

    தேன்

    சிந்தும்

    பனிக்

    கட்டிகள்!

    முடிவு

    இல்லாத

    பாதையில்

    நீயும்

    நானும்...

    மிதுலா தன் அறையை அலங்கரித்துக் கொண்டிருந்த திரைச்சீலையை விலக்கினாள். அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் பத்தாவது தளத்தில் இருந்து பார்க்கப் பார்க்க இயற்கைக் காட்சிகள் திகட்டாத ஒன்று. எப்பவும் அவளுக்கு.

    தொலைதூரத்தில் பரந்து விரிந்த கடல், புள்ளியாகத் தெரியும் கப்பல்கள், பச்சைக் கம்பளமாகத் தெரியும் மரங்கள், ஆங்காங்கே மரத்தின் மேல் சிதறியிருக்கும் வண்ண நட்சத்திரங்களாகப் பூக்கள், மரங்களுக்கிடையே, உயரமாக எழும்பும் கட்டடங்கள் என எல்லாவற்றையும் அவள் விழிகள் ரசனையோடு படம் எடுத்தன.

    மிதுலா... புது பாஸ் இங்கே இருக்கிறார் இன்றைக்கு, என்ற குரல் கேட்டுத் திரும்பினாள் அவள்.

    அங்கே ஹெலன் நின்று கொண்டிருந்தாள். ‘தி ரியல் ஃபேஸ்’ பெண்களின் பத்திரிகையின் எடிட்டர் மாதவியின் காரியதரிசி, ஹெலன்.

    அவள் முகத்தில் பதற்றம் தெரிந்தது. எப்பவும் அவள் முகத்தை அலங்கரிக்கும் புன்னகை அப்பொழுது காணவில்லை.

    புது பாஸ் வந்தால் என்ன? நம்மைக் கடித்தா முழுங்கிவிடப்போறார்.

    ம்... கடித்து முழுங்கிவிடமாட்டார். ஆனால் அவர் ‘வேலைப் பிசாசு’ என்று கேள்விப்பட்டேன். இப்பொழுது மேடம் ரூமில் தான் இருக்கிறார்.

    "நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். பிரகாஷ் ஸாரின் மகன். அவர் அப்பா போல் கிடையவே கிடையாது.

    அதோடு இவர் வெளிநாட்டில் படித்தவர் போல, புதிய புதிய முறைகளைப் பத்திரிகைத் துறையில் புகுத்துவது இவரோட தனித்தன்மை என்று, நிறையப்பேர் சொன்னார்கள்.

    அவர் கால் வைக்கும் இடங்களில் எல்லாம் கண்டிப்பாக மாற்றம் இருக்குமாம். ஆள் குறைப்பு செய்வது அவருக்கு ரொம்பப் பிடித்த வேலையாம்.

    பார்க்கலாம் இங்கே என்னென்ன செய்யப்போகிறார் என்று. அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்."

    கவலையாத்தான் இருக்கு மிதுலா. வேற வேலை தேட வேண்டியதுதான் போல...

    நல்லதே நினைப்போம் ஹெலன். இன்றுதானே வந்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஹெலன் குழப்பமான முகத்தோடு வெளியே செல்வதைப் பார்த்தாள் மிதுலா. மனதை மீண்டும் இயற்கைக் காட்சிகளில் பதியவைக்க முயன்றாள் அவள்.

    அவள் டேபிளில் இருந்த தொலைபேசி சிணுங்கியது. திரையில் தெரிந்த நம்பரைப் பார்த்ததும் மாதவி மேடம் அழைக்கிறார் என்று அவளுக்குப் புரிந்தது.

    சொல்லுங்க மேடம். மிதுலா தான் பேசறேன்.

    "என்னோட அறைக்கு வரமுடியுமா? இங்கே நம்ம ஆபீஸின் புது பாஸ் மிஸ்டர் சச்சித் இருக்கிறார்.

    அவருக்கு நாம் எப்படி இந்தப் பத்திரிகையை நிருவகிக்கிறோம் என்று வந்து சொல் மிதுலா," என்றார் மாதவி.

    சரி மேடம். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள் மிதுலா.

    மேடம் எல்லாவற்றையும் தன்னம்பிக்கையோடு திறமையாக நடத்துவார்கள். ஆனால் அவர்கள் குரல் சோர்ந்து இருந்ததுபோல் தோன்றியதே இன்று.

    ஏன் அப்படி? மாதவி மேடமின் முயற்சியால் தானே ‘தி ரியல் ஃபேஸ்’ பத்திரிகை பெண்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இப்பொழுது சமீபத்தில் நடந்த ஆய்வின்படி இந்தப் பத்திரிகை பெண்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது என்று தெளிவாகத் தெரிந்தது.

    இரண்டாவது இடத்தில் உள்ள இந்தப் பத்திரிகைக்காக மாதவி மேடம் எவ்வளவு உழைத்திருப்பார்கள். அவர்களை அப்ஸெட் ஆக்கும் திறன் இந்த புது பாஸிற்கு இருக்கிறதா என யோசித்தபடியே அறையின் கதவைத்தட்டிவிட்டு உள்ளே சென்றாள் அவள்.

    வா மிதுலா. சிட் டவுன், என்றார் மாதவி.

    குட் மார்னிங் மேடம்... குட் மார்னிங் ஸார்...

    என்ன மேடம் துணை எடிட்டர் மிதுலா பள்ளிக்கூட மாணவி மாதிரி குட் மார்னிங் மேடம்... குட் மார்னிங் ஸார். அப்படின்னு சொல்றாங்க! என்றான் கிண்டலாக அவன்.

    அவள் கன்னங்கள் அவமானத்தால் சிவந்தன. "நீங்க வெளிநாட்டில் படிச்சதால உங்களுக்கு இங்க இருக்கற சிஸ்டம் எல்லாம் மறந்திடுச்சுபோல, ஸார்.

    ‘குட் மார்னிங்’ எல்லோராலேயும் உபயோகப்படுத்தப்படற ஒண்ணா இருக்கே. வாட்ச்மேன் முதல் கம்பெனியின் எம்.டி. வரை..." என்று படபடத்தாள் மிதுலா.

    "எனக்குத் தெரியாத விஷயங்களை, மறந்துபோன சமாச்சாரங்களை இனி உன்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    நைஸ் டு ஸீ யூ மிதுலா. ஐ யாம் சச்சித்!" என்று கை குலுக்க கை நீட்டினான் அவன்.

    பதிலுக்கு எழுந்து கை நீட்டிய மிதுலா அவனை அண்ணாந்து பார்த்தாள். ஆறு அடி உயரம் இருப்பான் போல. முகத்தில் தெரிந்த தீவிரம், கண்களில் தெரிந்த துடிப்பு இவை எல்லாமே அவன் நினைப்பதை நடத்தி முடிப்பவன் என்று சொல்லாமல் சொல்லியது.

    அதேநேரம் அவன் கண்கள் நிதானமாகத் தன்மேல் தலை முதல் கால் வரை படிவதை அவளால் உணர முடிந்தது. ஏனோ அந்தப்பார்வை அவளை உலுக்கியது.

    அடுத்த ஒரு மணிநேரம் அவன் கேட்ட கேள்விகள், பத்திரிகை பற்றி அக்கு வேறு ஆணிவேறாக அவன் கேட்ட விவரங்கள், பத்திரிகைக்குத் தேர்வாகும் கதை, கட்டுரை பற்றி, தேர்வு செய்ய உள்ள விதிமுறைகள் பற்றி, பத்திரிகையின் டிஸைன் பற்றி, பத்திரிகைக்கான விளம்பரங்கள் பற்றி, படிக்கும் வாசகர்கள் பற்றி எல்லாமே பிரமிப்பாக இருந்தது மிதுலாவிற்கு.

    அவன் எல்லா விஷயங்களிலும் ஆழமாக, நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரிக்கும் திறன் படைத்தவன் என்று அவளுக்குப் புரிந்தது.

    பத்திரிகைக்கு ஆகும் செலவு, வேலை பார்ப்பவர்களின் சம்பளம், பத்திரிகையின் விற்பனை போன்ற பணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் எல்லாம் அவன் ஏற்கனவே துல்லியமாகத் தெரிந்துவைத்திருந்தது அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

    "பத்திரிகை விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி இருக்கிறது?

    எவ்வளவு சதவீதம் விற்பனை கூடுதலாக இருக்கிறது?"

    நமக்கு முன்னே ‘இட் இஸ் யூ’ பத்திரிகை முன்னணியில் இருக்கிறது. பெண்கள் பத்திரிகையில் அது முதல் இடம். நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். என்றாள் மிதுலா.

    "யெஸ். அவர்களுக்கும் நமக்கும் விற்பனையில் பத்து சதவீதம் வித்தியாசம் உள்ளது.

    பத்து என்பது பெரிய நம்பர். நம் பத்திரிகை முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும்.

    அதற்கு ஏன், மாதவி மேடம்! நீங்கள் முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை?"

    மிதுலாவிற்குக் கோபம் வந்தது. ஏதோ மேடம் ஒன்றுமே செய்யாததுபோல் அல்லவா பேசுகிறான். மேடமின் அனுபவம் இவன் வயசாக இருக்கும்.

    ஆனால் என்ன ஒரு திமிர். எப்படி இந்தமாதிரி இவனால் கேள்வி கேட்க முடிகிறது என்று எரிச்சலோடு இருந்தாள் அவள்.

    "வாசகர்களின் விமர்சனம் எப்படி இருக்கிறது? எந்தக் கட்டுரை அதிக வரவேற்பைப் பெறுகிறது? ஏன் ஒரே ஒருவரே ‘வீடு’ செக்க்ஷனைப் பற்றி எழுதுகிறார்?

    புதிய எழுத்தாளர்களையும், ஓவியர்களையும் நம் பத்திரிகையில் எப்படி ஊக்கப்படுத்துகிறோம்?" என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தான் அவன்.

    பேசிப் பேசி நாக்கு உலர்ந்து போனதுபோல் இருந்தது மிதுலாவிற்கு. ஆனால் அவன் தொடங்கும்பொழுது இருந்த அதே உற்சாகத்துடனும், தெம்போடும் இருப்பதைக் கவனித்தாள் அவள்.

    நீங்கள் எப்பொழுதிலிருந்து இந்தப் பத்திரிகைக்கு எடிட்டராக இருக்கிறீர்கள் மேடம்? என்றான் கூலாக சச்சித் - மாதவியைப் பார்த்து.

    நீ குட்டிச் சட்டை, குட்டி பேண்ட் போட்டுக்கொண்டு ரோடில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த காலம் முதல்! என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள் மிதுலா.

    மேடமின் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு ஏனோ கஷ்டமாக இருந்தது. எவ்வளவு உழைத்து இந்தப் பத்திரிகையை நல்ல நிலைக்குக் கொண்டுவந்து இருக்காங்க.

    பாவம் மேடம் என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் அவள். சச்சித் மேல் கோபம் அதிகரித்தது.

    முப்பது வருடங்களாக இருக்கிறேன்! என்றார் மாதவி.

    ஓ... தட் இஸ் நைஸ்... என்று புன்னகைத்தான் சச்சித்.

    இவனுக்குச் சிரிக்கக்கூடத் தெரியுமா என மனதினுள் நினைத்துக்கொண்டாள் அவள். அவன் சிரிப்பது ஏனோ புலியின் முகத்தை அவளுக்கு நினைவுபடுத்தியது.

    மே ஐ கம் இன்? என்று ஒரு தட்டு நிறைய பிஸ்கெட்ஸ் தேநீர்க் கோப்பைகளுடன் உள்ளே நுழைந்தாள் ஹெலன்.

    அங்கிருந்த மூவருக்கும் அவள் தேநீரையும், பிஸ்கெட் தட்டையும் நீட்டினாள்.

    தேங்க்ஸ் என்று பிஸ்கெட்டைச் சுவைத்தபடியே மேலும் விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினான் அவன்.

    பின்பு ஆஃபீஸில் இருந்த எல்லாரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினார் மாதவி. அடுத்த ஒரு மணிநேரம் அவன் அங்கே இருந்தவர்களிடம் சகஜமாகப் பேசுவதில் கழிந்தது.

    மேடம்! இப்ப உங்களுக்கு ஒரு அப்பாயின்ட்மெண்ட் இருக்கு! என்றாள் ஹெலன் மாதவியிடம்.

    "ஓ... நல்லகாலம். ஞாபகப்படுத்தினாய். சச்சித், ஸாரி. எனக்கு ஒரு முக்கியமான அப்பாயின்ட்மெண்ட் இருக்கிறது.

    மிதுலா உங்களைக் கவனித்துக்கொள்வாள்!" என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றாள் மாதவி.

    உன் அறைக்கு போய்ப் பேசலாமா? என்றான் உத்தரவு போடும் தொனியில் சச்சித்.

    போகலாமே...

    வாவ்... இதுதான் உன் அறையா? இங்கிருந்து வியூ ரொம்ப அழகாக இருக்கிறது.

    உங்களுக்கு வேறு ஏதாவது பத்திரிகை பற்றி தெரியவேண்டுமா ஸார்...?

    யெஸ்... ஆனால் அதற்கு முன்னால் உன்னை ஒன்று கேட்கவேண்டும்.

    என்ன ஸார்...

    "எல்லாரிடமும் இப்படித்தான் பதிலுக்குப் பதில் பேசுவாயா... இல்லை... என்னிடம் மட்டுமா...?

    அப்புறம் நீ பேசும்பொழுது மரியாதை மனதில் இருந்தால் போதும்.

    Enjoying the preview?
    Page 1 of 1