Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanneerum Aanandham
Kanneerum Aanandham
Kanneerum Aanandham
Ebook247 pages1 hour

Kanneerum Aanandham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'உன் கண்ணால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்' என்னும் வரிகளுக்கேற்ப தன் நண்பன் சம்பத்திற்காக கண்ணீர் விடுகிறாள் விஜி. ஒரு கட்டத்தில், நண்பன் சம்பத்திற்காக தன் காதலனான கார்த்திக்கையே வெறுக்கிறாள். விஜி கார்த்திக்கை வெறுக்க காரணம் என்ன? சம்பத்துக்கு நிகழ்ந்தது என்ன? மேலும் அப்பாவின் முன் கதை பையனின் வாழ்க்கையையே மாற்றுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு சிறுகதைகளும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளது. வாருங்கள் வாசித்து அறிந்துகொள்வோம் கண்ணீரும் ஆனந்தத்தில்...

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580105707317
Kanneerum Aanandham

Read more from Vidya Subramaniam

Related to Kanneerum Aanandham

Related ebooks

Reviews for Kanneerum Aanandham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanneerum Aanandham - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்ணீரும் ஆனந்தம்

    (சிறுகதைகள்)

    Kanneerum Aanandham

    (Sirukathaigal)

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அப்பாவின் முன் கதை

    அம்மா, அப்பா, நான்...

    அருகம்புல்

    அன்பு தேடும் நெஞ்சங்கள்!

    ஆனந்தம், பரமானந்தம்...

    இங்கிவனை யான் பெறவே...

    இடைவெளி

    இதற்கு மட்டும்...

    இன்னா செய்தவன்...

    கண்ணீரும் ஆனந்தம்

    குளக்கரை

    சலனங்கள்

    சாம்ராஜ்யம்

    சிவகோபம்

    தாலி

    தோழி

    பிரிவு

    புகலிடம்

    மனிதனாய் சற்று நேரம்...

    மோதி மிதித்து விடு...

    விலை

    அப்பாவின் முன் கதை

    டிராஃபிக் ஜாமில் நகர முடியாமல் பஸ் நடுச்சாலையில் நின்றது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த மணிசங்கர் அலுப்போடு வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். இரண்டடி தூரத்தில் நடைபாதையில் இருந்த ஒரு பெட்டிக்கடை வாசலில், சத்தமாய் அரட்டையடித்தபடி நின்றிருந்த இளைஞர்களின் மீது பார்வை சென்றது. அடுத்த வினாடி அவர் முகம் சுருங்கியது. அந்த ஆறு பேரில் அவர் பிள்ளை பாலாஜியும் இருந்தான். அவன் கையிலிருந்த ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு நடிகையின் முக்கால் நிர்வாணப்படம். பாலாஜியின் பார்வை அதை விழுங்கிக் கொண்டிருந்தது.

    டேய் பாலா அதோ பார்ரா நண்பன் ஒருவன் முதுகைத்தட்ட, பாலாஜி திரும்பினான். சற்று தூரத்தில் ஒல்லியாய் உயரமாய் ஜீன்ஸ் அணிந்த பெண் ஒருத்தி வர, பாலாஜி புத்தகத்தை வைத்துவிட்டு தலைமுடியைச் சரிசெய்தபடி அவளைப் பார்த்தான்.

    தபுவாட்டம் இல்லடா...?

    அந்தப் பெண் கிட்டே வந்ததும் ஒருவன் கேட்டான்.

    ம் உயரத்துல தபுதான். மத்த விஷயத்துக்கு மந்த்ரா. பாலாஜி சத்தமாய்ச் சொல்ல, அவர்கள் பக்கென்று சிரிக்க, பொதுமக்கள் சிலரும்கூட அவர்களையும், அந்தப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணின் முகம் அவமானத்தில் சிவந்தது. கோபத்தை அடக்கிக்கொண்டு வேகமாய் அவர்களைக் கடந்து நடந்தாள்.

    பஸ்ஸிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மணிசங்கரின் முகம் வேதனையிலும், அதிர்ச்சியிலும் துவண்டது. பாலாவா இப்படி...? யாரிடமும் அதிகம் பேசாத, முக்கியமாய் அவருக்கு முன் நிமிர்ந்து நிற்கக்கூடத் தயங்கும் பிள்ளையை, இப்படி ஒரு சூழலில் வித்யாசமான முகத்தோடு பார்த்ததும் அவருக்கு உடம்பு நடுங்கியது. தன் பிள்ளைக்குள் இப்படி ஒரு குரூரம் இருக்கும் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. பெண்ணின் நிர்வாணம் பார்த்து ரசிக்கும், பெண்களைக் கிண்டல் செய்து சிரிக்கும் சராசரிக்கும் கீழான பிள்ளைதானா இவன்...? எப்போதிலிருந்து இப்படி...? எதனால் இப்படி...? இவனை தான் சரியாகக் கவனித்து வளர்க்கவில்லையா? அல்லது அவனது வளர்ச்சியை சரியாகக் கவனிக்கவில்லையா? அல்லது தன் பிள்ளை தப்பு செய்யமாட்டான் என்ற நம்பிக்கையா?

    எத்தனையோ இளைஞர்கள் எத்தனையோ பெண்களை கேலி செய்து அவர் பார்த்திருக்கிறார். முகம் சுளித்திருக்கிறார். அதற்குமேல் அந்த விஷயம் அவரைத் தாக்கியதில்லை. ஆனால் இப்போது, தன் பிள்ளையே அந்தக் கேவலமான காரியம் செய்ததைக் கண்டதும் அவர் உடம்பு ஆடிப் போயிற்று.

    ***

    வீடு வந்து சேர்ந்தவர் முதல் காரியமாய் குளித்துவிட்டு பூஜையறைக்குள் நுழைந்தார். மீனாட்சி கும்பகோணம் போயிருந்ததால் காபி கொடுக்கவும் ஆளில்லை. குடிக்கும் மனநிலையில் அவரும் இல்லை. மணி பத்தடித்து பதினைந்து நிமிடம் ஆன பிறகுதான் பாலாஜி வந்தான்.

    சாரிப்பா... குரூப் ஸ்டடிக்கு போயிருந்தேன்... லேட்டாய்டுத்து.

    அப்பா அவனை உற்றுப் பார்த்தார். அவன் உள்ளே போனான்.

    நீங்க சாப்ட்டேளாப்பா...?

    நீ...?

    நா ஃபிரண்டு வீட்லயே சாப்ட்டுட்டேன். நீங்க சாப்டுங்கோ. நா வேணா பரிமாறவா?

    வேண்டாம் இப்டி உட்கார். உன்கூட கொஞ்சம் பேசணும்.

    அவன் அவரை புருவம் சுருக்கிப் பார்த்தான். பேச வேண்டும் என்று அப்பா சொன்னது வியப்பாயிருந்தது அப்பா பேசுவதென்பது அபூர்வம். அம்மாவோ வளவளவென்று பேசிக்கொண்டேயிருப்பாள். அம்மா இல்லாததால் வீடு நிசப்தமாயிருந்தது.

    ஏன்டா பாலா... உன் படிப்பெல்லாம் எப்படியிருக்கு?

    ம்... போயிண்ட்ருக்குப்பா.

    டிகிரி முடிச்சதும் என்ன பண்றதா உத்தேசம்?

    ஐ.ஏ.எஸ் எழுதலாம்னு இருக்கேம்ப்பா.

    அதுக்கு நிறைய ஹார்டு ஒர்க் பண்ணணுமே.

    ம் பின்னே? பண்ணத்தான் வேணும்.

    உதடு கருத்திருக்கே. சிகரெட் பிடிக்கறயான்ன? அப்பா கேட்க, பாலாஜி லேசாய் அதிர்ந்தான். பிறகு, தலை குனிந்தபடி சொன்னான்:

    ஒண்ணு ரெண்டுதாம்ப்பா. ஃபிரண்ட்ஸ் பழக்கப்படுத்திட்டா.

    ஃபிரண்ட்ஸ்கிட்டேர்ந்து நல்லது கத்துக்கலாம், தப்பில்ல. இதெல்லாம் கூடவா? பாலாஜி பதில் சொல்லவில்லை.

    டிகிரி முடிச்சதும் உன் ஃபிரண்ட்ஸ்கூட ஐ.ஏ.எஸ் எழுதப் போறாளாமா?

    ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு பிளான்.

    உன் வயசுல நா எப்படியிருந்தேன்னு உனக்குத் தெரியுமோ?

    தெரியாது. நீங்க சொன்னாத்தானே?

    பாலாஜி வியப்போடு அப்பாவைப் பார்த்தான். சேர்ந்தாற்போல் நாலு வார்த்தை பேசாதவருக்கு இன்று என்ன ஆயிற்று? என்ற அதிசயம் தெரிந்தது அவன் கண்களில்.

    உன்னை விட நா அப்பொ புத்திசாலியா இருப்பேன். எல்லாத்துலயும் ஃபஸ்ட் மார்க்தான். படிப்பும், புத்தியும் இருந்த அளவுக்கு திமிரும் இருந்தது. கூடவே கிண்டல் கேலி எல்லாம் இருந்தது. முக்கியமா பெண்களைக் கிண்டல் பண்றதுல சூரப் புலியார்ந்தேன்.

    பாலாஜியின் முகம் ஒரு வினாடி கறுத்தது. அப்பாவை அதிர்ச்சியோடு ஏறிட்டுப் பார்த்தான். அப்பா தொடர்ந்தார்.

    "எங்க தெருவுல அப்பொ ராதாமணின்னு ஒரு பொண்ணு. ரொம்ப அழகார்ப்பா. எலுமிச்சம் பழ நிறம். ஏழ்மையான குடும்பம். அப்பா இல்ல. அம்மாவுக்கு ஒரு வீட்ல சமையல் வேலை. காலம்பற போனா ராத்திரிதான் வருவா. ராதாமணி முக்கால் வாசி நேரம் வீட்ல தனியாதான் இருப்பா. அவ வீட்டுக்கு எதிர் ஸைடுல நானும், என் சிநேகிதனும் நின்னுப்போம். அவ வீட்டைப் பார்த்துண்டே பேசுவோம், சிரிப்போம். அவ கண்ணுல பட்டா போதும் அவளைச் சீண்டறா மாதிரி சினிமாப் பாட்டா பாடித் தள்ளுவோம். அவளைச் சீண்டறதுல தனி குஷியே இருந்தது எனக்கு. டிகிரி முடிச்சதும் ஐ.ஏ.எஸ் எழுதணுங்கறதுதான் அப்பொ எனக்கும் லட்சியமார்ந்தது. என் புத்திசாலித்தனத்து மேல எனக்கு அபார நம்பிக்கை. அதை கர்வம்னுகூடச் சொல்லலாம். என்னை விட்டா வேற யார் ஐ.ஏ.எஸ் ஆய்ட முடியுங்கிற அகம்பாவம். பாதி நேரம் அரட்டை, மீதி நேரம் ராதாமணியைக் கிண்டல் பண்றதுன்னு பொழுது போச்சு. ஒருநாள் என் சிநேகிதன் ஒருத்தன் சீண்டி விட்டான். ‘ராதாமணி கையால ஒரு டம்ளர் காபி குடிச்சுட்டு வர முடியுமாடா உன்னால’ன்னு கேட்டான். எனக்கு வீரம் பொத்துண்டு வந்தது. தினமும் தன் வீட்டுக்கு எதிர்க்க நின்னுண்டு பொறுக்கித்தனம் பண்ற ஒருத்தனுக்கு எந்தப் பெண்ணாவது காபி போட்டுக் கொடுத்து உபசாரம் பண்ணுவாளா? இருந்தாலும், நா அதை சவாலா எடுத்துண்டேன். ராதாமணியோட நாலு வார்த்தையாவது பேசி அவளை சிநேகம் பண்ணிண்டாதானே அவ கையால காபி குடிக்க முடியும்? அவளோட சிநேகமாகிற முயற்சில முழு வெறியோட இறங்கினேன். என் ஐ.ஏ.எஸ் பரிட்சைகூட எனக்கு இரண்டாம் பட்சமாகிப் போற அளவுக்கு எப்பவும் ராதாமணிய எப்படி சிநேகம் பண்ணலாம்ங்கற யோசனைதான்.

    ஒரு நா தைரியமா அவ வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டேன். ராதாமணி என்னைப் பார்த்ததும் நடு நடுங்கிப் போய்ட்டா. ‘சாரி... தலைசுத்தறா மாதிரி இருந்தது. என்ன செய்றதுன்னு தெரியல. எங்கே கீழ விழுந்துடப்போறேனோங்கிற பயத்துல உள்ள வந்துட்டேன். தப்பா நினைச்சுக்க வேண்டாம்’னு சொல்லிண்டே கண் செருக அப்படியே கீழ உட்கார்ந்து இழுத்து இழுத்து மூச்சு விட்டேன். ராதாமணி பயந்து போய்ட்டா... பயமும், கவலையுமா என்னைப் பார்த்தா, ‘ஒ... ஒரு டம்பளர் காபி கிடைக்குமா... காலைலேர்ந்து வெறும் வயத்தோட சுத்திட்டு வரேன். அதானோ என்னமோ’ன்னேன். அவ உள்ள போய் அவசரமா ஒரு காபி போட்டுக்கொண்டு வந்தா. நா பாதி மயங்கின நிலைலயே காப்பியை மெதுவா வாங்கி குடிச்சேன். இல்ல... நடிச்சேன். ‘ரொம்ப தேங்க்ஸ்’னு சொல்லிட்டு மெதுவா எழுந்து வெளியில வந்தேன். என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் என்னை வாயைப் பொளந்துண்டு பார்க்க, நா கட்டை விரலை உயர்த்திக் காட்டி நமுட்டுச் சிரிப்பு சிரிச்சேன். ராதாமணி பேந்தப் பேந்த எங்களைப் பார்த்தா. நா உண்மையைப் போட்டு உடைச்சுட்டேன். என் காபி குடிக்கற சவாலைப்பத்தி அவகிட்ட சொல்லிட்டு ஓடியே வந்துட்டேன். நா அவ வீட்டுக்குள்ளேர்ந்து வந்ததை அக்கம் பக்கத்துல ஒண்ணு ரெண்டு பேர் பார்த்துட்டு அவம்மாகிட்ட சொல்லியிருக்கா. அவம்மா கோவத்துல அவளை செருப்பாலயே அடிச்சு பிச்சு உதறிட்டா. அதுக்கடுத்த நாள் ராதாமணி கிணத்துல விழுந்துட்டதா என் காதுல விழுந்தது. நா ஓடிப்போய் பார்க்கும்போது ராதாமணி விறைச்சு உப்பிப் போயிருந்தா. எல்லாரும் என்னைக் கொலைகாரனைப் பார்க்கிற மாதிரி பார்க்க, அவம்மாவோட அந்த தீனமான அழுகை என்னைத் துரத்தியடிச்சுது. விஷயம் தெரிஞ்சு அப்பா என்னை பெல்ட்டால விளாசினார். கண்ணை மூடினா ராதாமணி, புக்கைத் திறந்தா ராதாமணி... என்னால ஐ.ஏ.எஸ் எழுத முடியல. அவளோட, என் பேச்சு, சிரிப்பு, திமிர், கர்வம் எல்லாம் செத்தொழிஞ்சுது. அந்த அதிர்ச்சியிலிருந்து நா மீண்டு வர மூணு வருஷமாச்சு. என்னால எங்கப்பாவுக்கு ஊர்ல தலை நிமிர்ந்து நடக்க முடியல. ஊரை விட்டு காலி பண்ணிண்டு இங்க வந்தோம். கொஞ்சம் கொஞ்சமா எல்லா துக்கமும் சரியாப்போச்சு. இருந்தாலும் உள்ளுக்குள்ள இன்னும் முள்ளாக் குத்துற விஷயம் என் உத்யோகம்தான். ஐ.ஏ.எஸ் அதிகாரியா இருந்து ஆட்சி பண்ண வேண்டிய ஆபிஸ்ல ஒரு சாதாரண சூப்பிரண்டண்டா இருக்கேன்னா அதுக்கு என்ன காரணம்? நா அன்னிக்குப் பண்ணின ஈவ்டீஸிங்கும், என் திமிரும்தானே?"

    அப்பா நிறுத்த, பாலாஜி இமைக்க மறந்து அவரையே பார்த்தான்.

    இதுவரை உங்கம்மாட்டகூட சொல்லாத விஷயத்தை எதுக்கு உங்கிட்ட சொல்றேன்னு புரியறதாடா பாலா?

    புரியறதுப்பா. ஐ ஆம் அஷேம்டு! இனிமே இப்படி நடக்காதுப்பா.

    இந்த வார்த்தை போதும்டா பாலா. இதுக்குமேல எதுவும் பேச வேண்டாம். எதிர்காலத்தை தீர்மானிச்சு உன்னை நீயே செதுக்கிக்க வேண்டிய வயது இது. இந்த வயசுல நல்ல நண்பர்களைத் தேடிக்கணும். நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கணும். ஒரு சின்ன சறுக்கல் ஏற்பட்டுதுன்னாகூட நேரா அதலபாதாளத்துல கொண்டு சேர்க்கிற வயசு இது. அதனால, ஒவ்வொரு அடியும் ரொம்ப ஜாக்கிரதையா, தெளிவா நீ எடுத்து வைக்கணும்னுதான் என்னோட முன் கதைச் சுருக்கத்தை, நா சறுக்கின கதையைச் சொன்னேன். அவர் பெருமூச்சோடு முடிக்க,

    பாலாஜி அவரை இரக்கத்தோடு பார்த்தான்.

    ரொம்ப நன்றிப்பா, சரியான நேரத்துல என்னைப் பிடிச்சு நிறுத்தி காப்பாத்தினதுக்கு. இதோ இந்த நிமிஷம் உன்மேல சத்தியம் பண்றேன். அடுத்த வருஷம் நிச்சயமா நா ஐ.ஏ.எஸ் பாஸாகிக் காட்டறேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.

    என்ன...?

    நீ மறுபடியும் சிரிக்கணும், எல்லாத்தையும் மறக்கணும். என்னோட நிறைய பேசணும். நீ பேசினா எனக்கு வெளில ஃபிரண்டு தேட வேண்டிய அவசியமே இருக்காதுப்பா. நீ போதும் எனக்கு.

    அப்பா, பிள்ளையை உற்றுப் பார்த்தார். பிறகு அவன் தோளில் கை போட்டு இதமாய் அணைத்துக்கொண்டார்.

    அம்மா, அப்பா, நான்...

    மூன்றாவது முறையாக டெலிபோன் அடித்தது. பயத்தோடு அப்பாவை ஓரக்கண்ணால் பார்த்தேன். அரை நிமிடம் பெல் அடித்த பிறகுதான் ரிஸீவரை எடுத்தார். ஹலோ என்றதுமே அவர் முகம் மாறியது. என்னை முறைத்துப் பார்த்தார். ரிஸீவரை பொத்தென்று கீழே வைத்தார்.

    வந்து பேசு. உனக்குத்தான்... உன் காதலன்.

    நான் உதட்டை கடித்துக்கொண்டேன். கண்ணீரை மறைத்துக்கொள்ள பெரும் முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. ஒரு கோடாக அது கன்னத்தில் வழிந்தது. நான் அப்படியே அமர்ந்திருந்தேன். என் நிலை பார்த்து அம்மா உதவிக்கு வந்தாள். வேகமாகப் போய் ரிஸீவரை எடுத்து கத்தினாள்.

    எந்த வேலையத்த நாய்டா இப்டி போன் பண்ணி கழுத்தறுக்கறீங்க வைடா போனை!

    அப்பா அம்மாவை முறைத்தார். கத்திட்டா ஆச்சா...? உன் பொண்ணு குழந்தை பாரு! ஒண்ணுமே தெரியாது! எல்லாம் நடிப்பு...! அவளுக்கு நீ வக்காலத்து வேற வாங்கற. அப்பா ப்ளீஸ்... நான் குறுக்கிட்டேன். நா என்னப்பா தப்பு பண்ணினேன்...? என்னை ஏன் நம்பமாட்டேன்றீங்க?

    இந்த மாதிரி அனாமதேய கால். இப்பெல்லாம் ரொம்ப சகஜம்ப்பா. என் ஃபிரண்ட்ஸ்கூட இப்டி அவதிப்படறாங்க.

    இதை நா நம்பணுமா...? அதெப்டி உன் நம்பர் கிடைச்சுது அவனுக்கு.

    கம்ப்யூட்டர்ல விலாசம் கொடுத்தாலே போதும் நம்பர் தெரிஞ்சுடும்ப்பா. அதை வெச்சுக்கிட்டு இப்டி பொண்ணுங்களை டெலிபோன்ல தொந்தரவு பண்றது ஒரு சில பொறுக்கி பசங்களின் பொழுதுபோக்கு. இதைப்போய் பெரிசு பண்ணி, என்னை சந்தேகப்பட்டா எப்டிப்பா? என்னால நிம்மதியா படிக்க முடியலப்பா. அவன் போன் பண்றதை விட நீங்க சந்தேகப்படறதுதான் ரொம்ப கஷ்டமார்க்கு.

    அப்டின்னா இவன் யாருன்னே உனக்கு தெரியாதுன்ற!

    சத்தியமா தெரியாதுப்பா.

    அப்பறம் எப்படி நம்ம அட்ரஸ் அவனுக்கு தெரிஞ்சுது? அதை வெச்சுதானே டெலிபோன் நம்பர் கண்டுபிடிச்சிருக்கான்!

    இந்த ஏரியா பொறுக்கியார்ப்பான், இதென்ன கேள்வி! நம்ம பொண்ணை நாம்பளே நம்பலன்னா எப்டி...? அம்மா குறுக்கிட்டு கத்த அப்பா பதிலுக்கு கத்தினார். நம்ம பொண்ணுன்னு சொல்லாதடி. மூத்தது ரெண்டையும் பார். அதுங்கதான் என் பொண்ணு ஒரு தப்பு தண்ட பண்ணுவாங்களா இவ்ளோ கால்ஸ் வருதே. எல்லாம் இவளுக்குதானே வருது. ஏன் அதுங்களும் இவளை மாதிரி வயசு பொண்ணுங்கதானே. எவனாவது அதுங்களை கூப்ட சொல்றானா? பண்றவன் எல்லாம் இவ பேரைதான் சொல்லி கேக்கறான்கள்! இவ பெரிய ரதி பாரு! த பார் நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கே இவ போக்கு சரியில்ல சொல்லிட்டேன். அடக்கி வை உம்பொண்ணை!

    அப்பா சுட்டுவிரல் காட்டி உறுமிவிட்டு படுக்கப் போய்விட்டார். அக்காக்கள் இருவரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1