Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbulla Appa
Anbulla Appa
Anbulla Appa
Ebook120 pages52 minutes

Anbulla Appa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லாருக்கும் அவங்க அவங்க அப்பா ஒசத்தி தான். ஆனா எனக்கு எல்லாரையும் விட கொஞ்சம் கூடுதலா ஒசத்தி. நான் செல்வம், 33 வயசு பேச்சுலர் பாய். எங்க அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு ரொம்ப கவலை. ஆனா எனக்கு, எங்க வர பொண்ணு என்னை எங்க அப்பா அம்மா கிட்ட இருந்து பிரிச்சு கொண்டு போயிடுவாளோன்னு கவலை. முப்பது மூன்று வயசுக்கு எதுக்கு உனக்கு இந்த கவல? அப்படினு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. ஒரு பன்னிரண்டு வருஷம் முன்னாடி நடந்த கதை.

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580176411068
Anbulla Appa

Related to Anbulla Appa

Related ebooks

Reviews for Anbulla Appa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbulla Appa - Visalam Muralidharan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அன்புள்ள அப்பா

    Anbulla Appa

    Author:

    விசாலம் முரளிதரன்

    Visalam Muralidharan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/visalam-muralidharan

    பொருளடக்கம்

    என்னுரை

    1. அன்புள்ள அப்பா

    2. உதவி

    3. உளைச்சல்

    4. பாடம்

    5. சாரதா

    6. அவனும் அவளும்

    7. கண்ணு படப் போகுது

    8. நண்பன்

    9. திசு

    10. வண்டி

    என்னுரை

    எனது முதல் படைப்பான உற்றத் தோழி புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பு தந்த ஊக்கத்தில் இங்கே, இதோ எனது இரண்டாவது புத்தகம், அன்புள்ள அப்பா, பத்து சிறுகதைகளின் சிறு தொகுப்பு. உற்றத்தோழி சிறுகதைத் தொகுப்பைப் போலவே இதுவும் மனித மனம், மற்றும் இயல்புகளைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைகள். நம்மைச் சுற்றி நம்முடன் வாழ்க்கையில் பயணிக்கும் பலரின் சாயல் இந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் கண்டிப்பாகப் பிரதிபலிக்கும். இந்த சமுகத்தில் நாம் அன்றாடம் காணும் நெருடலான பல விஷயங்களுக்கு, விடை காண வேண்டும் என்ற எனது விழைவே என் கதைகளின் நோக்கம்.

    இந்தப் புத்தகத்தின் தலைப்பிற்கு காரணியாக, என் வழிகாட்டியாக, என் வாழ்வின் வெளிச்சமாக என்றென்றும் என்னுடன் பயணிக்கும் என் அப்பா, மறைத்திரு வெங்கட்ராமனுக்கு என் நன்றியும், வணக்கங்களும்.

    நன்றிகளுடன்

    விசாலம் முரளிதரன்

    1. அன்புள்ள அப்பா

    எல்லாருக்கும் அவங்க அவங்க அப்பா ஒசத்தி தான். ஆனா எனக்கு எல்லாரையும் விட கொஞ்சம் கூடுதலா ஒசத்தி. நான் செல்வம், 33 வயசு பேச்சுலர் பாய். எங்க அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு ரொம்ப கவலை. ஆனா எனக்கு, எங்க வர பொண்ணு என்னை எங்க அப்பா அம்மா கிட்ட இருந்து பிரிச்சு கொண்டு போயிடுவாளோன்னு கவலை. முப்பது மூன்று வயசுக்கு எதுக்கு உனக்கு இந்த கவல? அப்படினு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. ஒரு பன்னிரண்டு வருஷம் முன்னாடி நடந்த கதை.

    ***

    ‘நீ என்னப்பா பண்றே??’

    எங்க அப்பாவோட அத்தை மகன் மும்பையிலிருந்து அப்போது தான் வந்து இறங்கி இருந்தாரு.

    சின்ன வயசுல எப்போவோ பாத்தது. பல வருஷம் கழிச்சு ரிட்டையர்மென்ட் வாங்கின பிறகு எங்க எல்லாரையும் பார்க்கணும்னு ஆசை வந்து கிளம்பி வந்திருந்தாரு. அவர்தான் என்கிட்டே அந்த கேள்விய கேட்டாரு.

    நான் இன்ஜினியரிங் முடிச்சுட்டு இங்க டிசிஎஸ்ல வேலையா இருக்கேன்.

    உடனே ஒரு அதிர்ச்சி லுக் குடுத்தாரு பெரியப்பா.

    ஏன்பா மேல படிக்கலியா? இருபத்தியொரு வயசு தானே ஆகுது? எதுக்கு அதுக்குள்ள வேலை? என் புள்ள அமெரிக்காவுல MS முடிச்சிட்டு இப்போ அங்கயே செட்டில் ஆகிட்டான்.

    என்ன சொல்லணும் இதுக்குன்னு நான் யோசிச்சுகிட்டு இருக்கும் போதே,

    அண்ணே இப்போ தானே வந்திருக்கீங்க, கொஞ்சம் காபி குடிச்சுட்டு பேசலாம். அவசரமாக எங்கம்மா புகுந்துடாங்க.

    பெரியப்பா ஏதோ கெட்டவார்த்தை கேட்ட மாதிரி இன்னும் ஒரு அதிர்ச்சி லுக் விட்டாரு.

    ‘காப்பியா? கபின் உடம்புக்கு கேடுன்னு இப்போ நெறைய வெப்சைட்ஸ்ல வருதே. நீங்க எல்லாம் பாக்கறது இல்லையா? நான் எப்பவும் கிரீன் டீ தான் குடிப்பேன். எனக்கு கொஞ்சம் கிரீன் டி போட்டு குடும்மா."

    இப்போ எங்கம்மா என்ன சொல்லனு தெரியாம முழிச்சாங்க.

    எங்கப்பா என்ன கூப்பிட்டாரு. ‘டேய் பக்கத்து அண்ணாச்சி கடைல போய் பெரியப்பா சொன்னத வாங்கிகிட்டு வந்துடு. ‘ நீங்க போய் குளிச்சிட்டு வாங்க அண்ணே, நீங்க கேட்டது ரெடியா இருக்கும் ‘ னு சொன்ன உடனே, அடுத்த அதிர்ச்சி லுக்.

    ‘என்னது? அண்ணாச்சிக் கடையா? இங்க சூப்பர்மார்கெட் எதுவும் கிடையாதா? இன்னும் பொட்டலம் போடற கடையிலயா பொருள் வாங்கறீங்க?’

    இப்போ எல்லோரும் திரு திருன்னு முழிச்சோம்.

    அதுக்குள்ள எங்க பெரியப்பா அடுத்த கேள்வி ரெடியா வெச்சு இருந்தாரு.

    ‘ஆமா உன் பெரிய மகன் கண்ணன் எங்க?’ அம்மா கொஞ்சம் தயங்கிகிட்டே சொன்னாங்க, ‘அவன் பொண்டாடிக்கு இது பிரசவ டைம். அவன் அவங்க மாமியார் வீட்டுக்குப் போய் இருக்கான். ரெண்டு நாள் பார்த்துட்டு பிரசவம் முடிஞ்சு தான் வருவான்’.

    அன்னிக்கிதான் எனக்கு ஒரு மனுஷனால சாதாரண விஷயத்துக்கு எல்லாம் கூட இவ்வளவு அதிர்ச்சி அடைய முடியும்னு தெரிய வந்துது. அம்மா சொன்னதை கேட்டு எங்க பெரியப்பா திரும்பி அதே அதிர்ச்சி லுக் விட்டாரு.

    ‘இங்கே உங்க கூடவா இருக்கான் கண்ணன்? நாங்க என் பெரிய பையன் கல்யாணம் ஆன உடனே தனிக்குடித்தனம் வெச்சுட்டோம். இது என்ன அந்த காலம் மாதிரி பசங்க கூடவே ஓட்டிகிட்டுத் திரியறது. அவங்கள ப்ரீயா விட வேண்டாமா?

    அப்பா முகம் செத்துப் போச்சு. இதுக்கும் ஒரு முன் கதை சுருக்கம் இருக்கு.

    உலகத்துலேயே ரொம்ப நல்லவர்னு யாரையாவது சொல்லணும்னா ஆறுமுகத்தை சொல்லலாம்.

    ஆறுமுகம் எங்க அப்பா.

    பாசம்னா பாசம் அவ்வளவு பாசம்.

    தன் பசங்க, மனைவி, நண்பர்கள், பொதுவா எல்லார் மேலயும்.

    தனியா ஒத்த புள்ளையா வளர்ந்த மனுஷன். மனுஷ சகவாசத்துக்கு ஏங்கி கிடப்பாரு. அப்பாவுக்கு ஒரே அத்தை. அவங்க கல்யாணம் ஆகி மும்பைல செட்டில் ஆகிட்டாங்க. சின்ன வயசுல அப்பாவுக்கு அத்தைன்னா உயிரு. அத்தை பசங்க மட்டும் தான் கூட்டாளிங்க. சம்மர் லீவுக்கு வரும் போது எல்லாம் பீச், சினிமான்னு நல்லா சுத்துவாங்க. அவங்க பெரியவங்க ஆகி கல்யாணம் காட்சினு ஆனப்புறம் எந்த போக்குவரத்தும் இல்ல. அவங்க நல்லா படிச்சு பெரிய உத்தியோகத்துல உசந்த இடத்துல இருந்தாங்க. எங்க தாத்தா கொஞ்சம் உடம்பு முடியாம போனதுல அப்பா பியுசி முடிச்ச கையோட ஒரு சின்ன கம்பெனில கிளார்க் வேலைக்கு போய் குடும்ப பொறுப்ப சுமக்க வேண்டியதாப் போச்சு. அதுனால எங்களை நல்லா படிக்க வைக்கணும்னு வைராக்யமா இருந்தாரு.

    எங்கம்மா கோமதி, ஜாடிகேத்த மூடி. எப்போதும் புன்சிரிப்போட எல்லோர் கிட்டேயும் பிரியமா இருப்பாங்க.அவங்க கூட பொறந்தவங்க அஞ்சு பேரு. கூட்டு குடும்பத்துல இருந்து வந்ததால செட்டும் கட்டுமா இருப்பாங்க.

    தங்கத்துக்கும், வைரத்துக்கும் பொறந்தது பித்தளை ஆகுமா?

    நாங்க ரெண்டு புள்ளைங்களும் ரெண்டு ரத்தினங்கள்.

    பெத்தவங்க கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டோம்.

    அப்பா நாங்க எது கேட்டாலும் மாட்டேன்னு சொல்ல மாட்டாரு.

    ‘நமக்குத் தான் சின்ன வயசுல கேட்டதை வாங்கி தர அளவுக்கு நம்ம பெத்தவங்களுக்கு வசதி இல்லை.நம்ம பசங்க எதுக்கும் ஏங்கக் கூடாது’. இப்படி சொல்லுவாரு.

    சாதாரண கம்பெனில கணக்கு வேலை பார்கறவங்களுக்கு என்ன சம்பாத்தியம் இருக்கும்?

    அதை வெச்சு எப்படி பசங்க ஆசைப்பட்டத எல்லாம் வாங்கித் தர முடியும்?

    அங்க தான் அம்மா வராங்க. எங்கப்பா சம்பளம் வாங்கி அவங்க கைல கொடுத்த அப்புறம் அவருக்கு பஸ் காசு தவிர வேற செலவு கிடையாது.

    சின்ன வயசுல எங்கண்ணன் பக்கத்து வீட்டு புள்ள வெச்சு இருக்கிற மாதிரி பொம்மை வேணும்னு கேட்டான்.

    அம்மா சொன்னாங்க ‘ உனக்கு எதாவது புடிச்சு வேணும்னு கேளு. தேவையானா கண்டிப்பா வாங்கித் தரேன். பக்கத்து வீட்டுக்காரன் வச்சுருக்கான்னு சொன்னினா எதுவும் கிடையாது. அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம்.ஆழும் பாழும் பண்ணக் கூடாது."

    இதைக் கேட்டு வளர்ந்த நாங்க அளவுக்கு அதிகமா எதுவும் ஆசைப்பட்டதும் இல்லை கேட்டதும் இல்லை.

    அவங்களே பார்த்துப் பார்த்து எங்களுக்கு அவசியமானத செஞ்சிருவாங்க.

    குறை எதுவும் இல்லை.

    இப்போ பல வருஷம் கழிச்சு சின்ன வயசு கூட்டாளியான அண்ணன் ஊர்லேந்து வந்திருக்காரு.

    Enjoying the preview?
    Page 1 of 1