Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovey! Poovey! Penn Poovey!
Poovey! Poovey! Penn Poovey!
Poovey! Poovey! Penn Poovey!
Ebook56 pages33 minutes

Poovey! Poovey! Penn Poovey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் எழுத்துப் பாதையில் கவிதையும், கதையுமாய் இணைந்து எழுதும் புதுமுகப் படைப்பாளர். கவிதையும், கவிதையோடு இழைந்த கதையும் இவரது பாணி.

கணினித் துறையில் உயர்படிப்பு படித்தவர் கதைக்களத்தோடும் கைகுலுக்குகிறார். இவரது முதல் கதை விருட்ச விதைகள். பெயரைப் போலவே விதைகள் வளர்ந்து விருட்சமாகக் காத்து நிற்கின்றன. இவரது இத்தனை பெருமைக்கும் காரணமாய் தன் குடும்பத்தையும், உறவுகளையும், நட்புகளையும் முன்னிறுத்துகிறார்.

Languageதமிழ்
Release dateDec 23, 2023
ISBN6580142810584
Poovey! Poovey! Penn Poovey!

Read more from Mala Madhavan

Related to Poovey! Poovey! Penn Poovey!

Related ebooks

Reviews for Poovey! Poovey! Penn Poovey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovey! Poovey! Penn Poovey! - Mala Madhavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூவே! பூவே! பெண் பூவே!

    Poovey! Poovey! Penn Poovey!

    Author:

    மாலா மாதவன்

    Mala Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mala-madhavan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1 - அரும்பு

    அத்தியாயம் 2 - மொட்டு

    அத்தியாயம் 3 - முகை

    அத்தியாயம் 4 - மலர்

    அத்தியாயம் 5 - அலர்

    அத்தியாயம் 6 - வீ

    அத்தியாயம் 7 - செம்மல்

    அத்தியாயம் 1 - அரும்பு

    ஒரு செடி பூக்கும் பருவத்தில் முதலில் தோன்றுவது அரும்பு. இது பார்க்க மிகவும் சிறியதாக இருக்கும்.

    வங்காள விரிகுடாவின் விரிபரப்பின் நீலத்தைப் பார்த்த கயலின் கண்கள் அப்படியே அதைத் தழுவாது தழுவி நிற்கும் வானையும் தொட்டு மீண்டது.

    நீலத்தை யார் யாருக்குக் கொடுத்தது? வானம் கடலுக்குத் தந்ததா? இல்லை கடல் வானத்துக்குத் தன் நிறத்தைக் கடத்தி விட்டதா? கொண்டார் யார்? கொடுத்தார் யார்?

    யோசனைகள் கேள்வியாய் மாறி நிற்க...

    கயல்! கயல்விழி! எங்கடாம்மா இருக்க? வீடு தான் கடல் மாதிரி பரந்து கிடக்கே. அத விட்டுட்டு நீ என்னன்னா மாடியேறி இந்தக் கடலப் பார்த்துட்டிருக்க! அம்மா இல்லாத ஒத்தப் பொண்ணைக் கல்யாண வயசுல நிக்க வச்சு இப்படி கடலப் பார்க்க விடுறாரே உன் டாடி! அவரைச் சொல்லணும்.

    ‘ம்ச்ச்! அப்பத்தா! டாடியை ஒண்ணும் சொல்லாதீங்க. எந்த பிஸினஸ் மீட்டிங்ல மாட்டிக்கிட்டு இருக்காரோ? எந்த நாட்டு பிரஜை டாடியோட கலந்து பேசிட்டிருக்காரோ?"

    ம்க்கும்! அத்தனை சம்பாத்தியமும் யாருக்காம்? இந்த ஒத்த ரோசா கயலுக்குத் தானே! ரோசாப்பூவ தனியா காத்தாட விட்டு கம்பெனிக்குப் போறாராக்கும் உன் டாடி...

    எங்க டாடியப் பத்திப் பேசினா எனக்குக் கோபம் வரும் அப்பத்தா! சொன்ன கயல் பொய்க்கோபம் காட்டி கண்ணை உருட்டினாள்.

    அப்பத்தா அவளின் அப்பாவைப் பெற்ற தாயில்லை. உறவில்லாமல் உறவானவள். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்தவளாதலால் அவ்வப்போது பேச்சில் பழமொழியும் கிராமத்து வாடையும் அடிக்கும். அதைக் காட்டிக் கொள்ளாது தானே சட்டென்று நகர வழக்குக்கு மாற்றிக் கொண்டு விடுவாள். பின்னே கயல்விழியின் அப்பா கைலாசம் அவளை வீட்டில் அனுமதிக்கும் பொழுது முதலில் மூட்டை கட்டச் சொன்னதே அவளது கிராமத்து வழக்கைத் தானே.

    வேலை ஏதாவது போட்டுக் கொடுப்பா என அந்த வீட்டில் வந்து நிற்கும் போது கயல்விழியின் அம்மா நோயில் படுத்த நேரம். சட்டென்று கயலுக்கு அப்பத்தாவானாள் அவள்.

    ஏன்ம்மா வீட்டு ஒத்தாசைக்கு வந்தவங்களப் போயி... அப்பத்தா அது இதுன்னு... கைலாசம் கயலைக் கேட்ட பொழுது...

    ஆயா, பாட்டின்னா அது ஜெனரலா இருக்குப்பா. அப்பத்தான்னா என்னமோ எனக்குன்னு ஒரு உறவு கிடைச்சாப்ல! உங்களோட அம்மாவ அப்பத்தான்னு தானேப்பா கூப்படணும். இவங்களே உங்களுக்கு அம்மாவாகவும் இருக்கட்டுமே. அப்படித் தானே கூப்புடுறீங்க நீங்களும். வழக்கடித்த கயல்விழி அப்பத்தா என உரிமை கொண்டாடியது அப்போது தான்.

    அப்பாவும், மகளுமான வாழ்க்கை என்றாகிப் போனபோது அப்பத்தாவின் பேத்தியாய் மாறிப் போயிருந்தாள் கயல்.

    Enjoying the preview?
    Page 1 of 1