Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alaigal Oivathillai
Alaigal Oivathillai
Alaigal Oivathillai
Ebook302 pages2 hours

Alaigal Oivathillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உங்களுடன்

வெகுநாட்களுக்குப் பிறகு -

எனக்கு முன்னுரை எழுதவே பிடிக்கும். இப்படித்தானே உங்களுடன் நேரிடைப்பாவனையில் உரையாட முடியும்.

இந்தத் தொகுப்புடன் எழுத்துடன், என் அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலான ஈடுபாட்டில் என் நினைவு தெரிந்த வரை, என்னிலிருந்து பிறந்த எல்லாச் சிறுகதைகளும் வெளியாகிவிட்டன. ஓரிரு மாதங்களுக்கு முன் உத்தேச எண்ணிக்கையில் இருநூறு கூடத் தேறவில்லை. ஆனால் ஏமாற்றத்தினின்று உடனே தேறிவிட்டேன். ஏனெனில் ஐம்பத்து ஐந்து, அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதைகள் இன்னும் பேசப்படுகின்றன. குறிப்பிடப்படுகின்றன.

தொகுப்புகளில் சேர்க்கப்படுகின்றன. 'மண்' எழுதி அறுபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் சமீபத்தில் இரண்டாம் முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரபல ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்திருக்கிறது. முதன்முறை லண்டனில் வெளி வந்தது. இப்போது ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனிந்த மார்த் தட்டல்? இது ஒரு தகவல் தெரிவிப்பு என்று கொள்ள வேண்டுமேயன்றி என்னைப் பொறுத்தவரையில் எண்பத்து ஐந்து வயதில் என்னால் வேறு என்ன சொல்ல முடியும். எழுத்தின் வீச்சுக்குக் காலவரையேயில்லை என்று தெரிகிறது.

கதை எழுதி முடிக்கும் வரை எனக்கு சிரத்தை. அதற்குப்பின் எனக்குத் தொடருவதில்லை. ஆனால் வாசகர்கள் கடிதம் எழுதியோ நேரில் வந்தோ அதன் மூலம் அவர்களுக்கு நேர்ந்த பாதிப்பைத் தெரிவிக்கையில் மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. அம்மா சொல்லுவாள் வாயுள்ள குழந்தையானால் பிழைத்துக் கொள்ளட்டும். இதில் எவ்வளவு அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன என்று இப்பத்தானே தெரிகிறது. ஆகவே நீங்கள் தான் என் கலையைப் போஷித்தீர்கள். விருட்சம் ஆக்கினீர்கள்.

இந்தத் தொகுதிக்கான சரக்கை ஒன்று சேர்க்க கண்ணன் ரொம்பவே சிரமப்பட்டு விட்டான். அவன் எனக்குத் தார்க்குச்சிப் போட்டுக் கொண்டேயிராவிட்டால் இந்தத் தொகுதி வெளிச்சம் கண்டிருக்காது.

இதைக் காட்டிலும் என்ன பெருமை நிறைவு வேண்டும்? என் பெற்றோர்கள் என்னை வளர்த்த முறைக்கும் என் மேல் வர்ஷித்த பாசத்திற்கும் சற்றேனும் தகுதியாயிருப்பேன் என்று நினைக்கிறேன் - இது கூடப் பெரிய வார்த்தைதான் - ஆசைப்படுகிறேன்.

கடைசியில் என் வாழ்க்கைக் குறிப்பைக் கட்டுரையாகக் காண்பீர்கள். இதற்குக் காரணம் உண்டு.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அந்தப் புத்தக சம்பந்தப்பட்ட ஒருவர் சுருக்கமாக என் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பைக் கேட்டிருந்தார்கள். அதை வெறும் தகவல் அட்டவணையாகக் கொடுப்பதற்குப் பதிலாக கோர்வையாக ஒரு மினி வரலாறாய் எழுதினேன். ஆனால் உடல் நிலை காரணமாக அந்த விழாவிற்குப் போக முடியவில்லை. அவ்வளவு சிரமப்பட்டு எழுதிய அந்தக் கட்டுரையும் என்னுடன் தங்கிவிட்டது. ஆனால் எந்த எழுத்தும் வீணாகப் போகக் கூடாது. வீண் போகாது. இந்தத் தொகுப்பில் சேர்ப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து விட்டது.

ராமகிருஷ்ண விஜயத்துக்கு எழுதிய கட்டுரையையும் சேர்த்து விட்டேன். ஏன் அதைத் தனியாக விட்டு வைக்க வேண்டும்? ஆகவே சுயசரிதை, கட்டுரை, கதை என ஒரு கலவையாக இந்தத் தொகுப்பு அமைந்துவிட்டது.

இந்தத் தொகுப்பே என் கடைசி வெளியீடாக இருக்குமோ என்கிற எண்ணம் தோன்றாமலில்லை. கற்பனைக்கும் ஊற்று வற்றாதா? உடலுக்கும் அசதி கண்டு விட்டதே. என் பிள்ளைகள் சிரிக்கிறார்கள். பத்து வருடங்களாக இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தொகுதிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கதைகள் எழுதிக் கொண்டுதானிருக்கிறீர்கள். அவர்கள் சொல்வதற்கு ஏற்றாற்போல் 'ராசாத்தி கிணறு' ‘அலைகள் ஓய்வதில்லை' இரண்டு கதைகளும் இந்த வருடம் எழுதியவைதான். ராசாத்தி கிணறு கரு நாற்பது வருடங்களுக்கு முன்னால் தோன்றிவிட்டது. ஆனால் அதை உருவாக்க அப்போது வழி தெரியவில்லை. ஆனால் இப்போது திடீரென பற்றிக் கொண்டு எழுதி முடித்து விட்டேன். அடுத்தாற் போல ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தோன்றிய ஒரு வித்து இப்பொழுது துளிர்விட ஆரம்பித்துவிட்டது. மனத்தினுள் தேள் கொட்டிக் கொண்டே இருக்கிறது. ஆகவே ஒரு எழுத்தின் விதைக்கும் அதன் வளர்ச்சிக்கும் விதமோ வரையோ வகுக்க முடியவில்லை.

- லா. ச. ராமாமிர்தம்

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580112404853
Alaigal Oivathillai

Read more from La. Sa. Ramamirtham

Related authors

Related to Alaigal Oivathillai

Related ebooks

Reviews for Alaigal Oivathillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alaigal Oivathillai - La. Sa. Ramamirtham

    http://www.pustaka.co.in

    அலைகள் ஓய்வதில்லை

    Alaigal Oivathillai

    Author:

    லா. சா. ராமாமிர்தம்

    La. Sa. Ramamirtham

    For more books

    http://www.pustaka.co.in/home/author/la-sa-ramamirtham

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ராசாத்தி கிணறு

    2. உறவு

    3 அலைகள் ஓய்வதில்லை

    4. ஸ்ருதி பேதம்

    5. பாப்பூ

    6. கொலு

    7. கமலி

    8. வேண்டப்படாதவர்கள்

    9. சூரம்சம்ஹாரம்

    10. திலோ

    11. மெத்தென்று ஒரு முத்தம்

    12 மந்த்ரஸ்தாயி

    13. ஆத்மன்

    14. ?

    15. நான்

    உங்களுடன்

    வெகுநாட்களுக்குப் பிறகு -

    எனக்கு முன்னுரை எழுதவே பிடிக்கும். இப்படித்தானே உங்களுடன் நேரிடைப்பாவனையில் உரையாட முடியும்.

    இந்தத் தொகுப்புடன் எழுத்துடன், என் அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலான ஈடுபாட்டில் என் நினைவு தெரிந்த வரை, என்னிலிருந்து பிறந்த எல்லாச் சிறுகதைகளும் வெளியாகிவிட்டன. ஓரிரு மாதங்களுக்கு முன் உத்தேச எண்ணிக்கையில் இருநூறு கூடத் தேறவில்லை. ஆனால் ஏமாற்றத்தினின்று உடனே தேறிவிட்டேன். ஏனெனில் ஐம்பத்து ஐந்து, அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதைகள் இன்னும் பேசப்படுகின்றன. குறிப்பிடப்படுகின்றன. தொகுப்புகளில் சேர்க்கப்படுகின்றன. 'மண்' எழுதி அறுபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் சமீபத்தில் இரண்டாம் முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரபல ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்திருக்கிறது. முதன்முறை லண்டனில் வெளி வந்தது. இப்போது ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனிந்த மார்த் தட்டல்? இது ஒரு தகவல் தெரிவிப்பு என்று கொள்ள வேண்டுமேயன்றி என்னைப் பொறுத்தவரையில் எண்பத்து ஐந்து வயதில் என்னால் வேறு என்ன சொல்ல முடியும். எழுத்தின் வீச்சுக்குக் காலவரையேயில்லை என்று தெரிகிறது.

    கதை எழுதி முடிக்கும் வரை எனக்கு சிரத்தை. அதற்குப்பின் எனக்குத் தொடருவதில்லை. ஆனால் வாசகர்கள் கடிதம் எழுதியோ நேரில் வந்தோ அதன் மூலம் அவர்களுக்கு நேர்ந்த பாதிப்பைத் தெரிவிக்கையில் மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. அம்மா சொல்லுவாள் வாயுள்ள குழந்தையானால் பிழைத்துக் கொள்ளட்டும். இதில் எவ்வளவு அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன என்று இப்பத்தானே தெரிகிறது. ஆகவே நீங்கள் தான் என் கலையைப் போஷித்தீர்கள். விருட்சம் ஆக்கினீர்கள்.

    இந்தத் தொகுதிக்கான சரக்கை ஒன்று சேர்க்க கண்ணன் ரொம்பவே சிரமப்பட்டு விட்டான். அவன் எனக்குத் தார்க்குச்சிப் போட்டுக் கொண்டேயிராவிட்டால் இந்தத் தொகுதி வெளிச்சம் கண்டிருக்காது.

    இதைக் காட்டிலும் என்ன பெருமை நிறைவு வேண்டும்? என் பெற்றோர்கள் என்னை வளர்த்த முறைக்கும் என் மேல் வர்ஷித்த பாசத்திற்கும் சற்றேனும் தகுதியாயிருப்பேன் என்று நினைக்கிறேன் - இது கூடப் பெரிய வார்த்தைதான் - ஆசைப்படுகிறேன்.

    கடைசியில் என் வாழ்க்கைக் குறிப்பைக் கட்டுரையாகக் காண்பீர்கள். இதற்குக் காரணம் உண்டு.

    ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அந்தப் புத்தக சம்பந்தப்பட்ட ஒருவர் சுருக்கமாக என் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பைக் கேட்டிருந்தார்கள். அதை வெறும் தகவல் அட்டவணையாகக் கொடுப்பதற்குப் பதிலாக கோர்வையாக ஒரு மினி வரலாறாய் எழுதினேன். ஆனால் உடல் நிலை காரணமாக அந்த விழாவிற்குப் போக முடியவில்லை. அவ்வளவு சிரமப்பட்டு எழுதிய அந்தக் கட்டுரையும் என்னுடன் தங்கிவிட்டது. ஆனால் எந்த எழுத்தும் வீணாகப் போகக் கூடாது. வீண் போகாது. இந்தத் தொகுப்பில் சேர்ப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து விட்டது.

    ராமகிருஷ்ண விஜயத்துக்கு எழுதிய கட்டுரையையும் சேர்த்து விட்டேன். ஏன் அதைத் தனியாக விட்டு வைக்க வேண்டும்? ஆகவே சுயசரிதை, கட்டுரை, கதை என ஒரு கலவையாக இந்தத் தொகுப்பு அமைந்துவிட்டது.

    இந்தத் தொகுப்பே என் கடைசி வெளியீடாக இருக்குமோ என்கிற எண்ணம் தோன்றாமலில்லை. கற்பனைக்கும் ஊற்று வற்றாதா? உடலுக்கும் அசதி கண்டு விட்டதே. என் பிள்ளைகள் சிரிக்கிறார்கள். பத்து வருடங்களாக இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தொகுதிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கதைகள் எழுதிக் கொண்டுதானிருக்கிறீர்கள். அவர்கள் சொல்வதற்கு ஏற்றாற்போல் 'ராசாத்தி கிணறு' ‘அலைகள் ஓய்வதில்லை' இரண்டு கதைகளும் இந்த வருடம் எழுதியவைதான். ராசாத்தி கிணறு கரு நாற்பது வருடங்களுக்கு முன்னால் தோன்றிவிட்டது. ஆனால் அதை உருவாக்க அப்போது வழி தெரியவில்லை. ஆனால் இப்போது திடீரென பற்றிக் கொண்டு எழுதி முடித்து விட்டேன். அடுத்தாற் போல ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தோன்றிய ஒரு வித்து இப்பொழுது துளிர்விட ஆரம்பித்துவிட்டது. மனத்தினுள் தேள் கொட்டிக் கொண்டே இருக்கிறது. ஆகவே ஒரு எழுத்தின் விதைக்கும் அதன் வளர்ச்சிக்கும் விதமோ வரையோ வகுக்க முடியவில்லை.

    எழுத்து இரக்கமற்ற எசமானி.

    மீண்டும் சந்திப்போமா?

    சந்திக்கும் வரை

    லா. ச. ராமாமிர்தம்

    *****

    கோட்டி என்கிற

    அருணாசலம்,

    பூஜா என்கிற

    ஹேமா,

    ஸ்ரீகாந்த்

    *****

    1. ராசாத்தி கிணறு

    மலையிலிருந்து இறங்கி வீட்டு வாசற்படி ஏறும் போதே இன்னிக்கு விபரீதம் நிச்சயம்னு தெரிஞ்சு போச்சு. ஆனா மத்தநாள் ஒரு மாதிரியா வவுறு கதிகலங்கும். இன்னிக்கு அப்படியில்லே. ஒரு மாதிரியா சுறுசுறுப்பா உற்சாகமாகவேயிருந்தது. புரியல்லே.

    அவள் புருஷன் சின்னத் திண்ணையில் குந்தியிருந்தான். நெடுநெடுன்னு சாட்டை உருவம். வயது எழுபது. அதுக்கு மேலே எத்தனியாச்சோ யார் கண்டது அவனுக்கே வெளிச்சம் இல்லே. அவனுக்கே வெளிச்சமிருக்காது. கிராமத்திலே அதெல்லாம் அப்பிடி எடைக் கணக்கிலே கண்டுக்க மாட்டாங்க. தெரியாது. ஏதோ குத்துமதிப்பிலிருக்கும். ஐயா போய் சேர்ந்துட்டாரு. எல்லாம் கணக்கிலேதான் போயிருப்பாரு. அவனுக்குத் தெரியாதது நமக்கென்ன? என்று மறைவைக் கண்டுகிட்டு வயதை மறந்து விடுவாங்க. ஆளும் நாளடைவில் அவ்வளவுதான். போன வருடம் ஏர்ப்பிடிக்க ஒரு ஆள் இருந்தது. இன்னிக்கு இல்லே. அதனால் என்ன? பையன்தான் தயாராயிட்டானே இடத்தை நிரப்ப. ஆள் வந்தாச்சு. தட்டுப்படாம வேலை நடக்குதா பாரு. பையா அப்பன் பேரை விளங்கப்பாரு. உன் அப்பன் சித்துளியாட்டம் இருப்பான். ஆனால் மத்தவங்களைக் காட்டிலும் இரண்டங்குலம் ஆழம் கூடத்தான் இருக்குமே ஒழிய குறையாது.

    அவர்கள் வழி உயர்ந்தது. விவேகம் கொண்டது. உழப்பல் இல்லாதது. மேல்காரியத்துக்கு அடுத்தாற்போல் பிள்ளை வீட்டார் பெண் கேட்க வரும்போதுதான் விழித்துக் கொள்வார்கள். 'ஏலே நீ சோலைமலைப் புள்ளேயில்லே? அஞ்சு தலைமுறையா ஒரே மவன்லேதானேயிருக்கே. என் மவளை உங்க வீட்டிலே கொடுத்தால் ஒத்தைக்காச்சியா வச்சுப்புடுவேயேன்னு கவலையாயிருக்குது. ஆனால் உனக்கும் கலியாணம் ஆவணும். தப்புத்தண்ட்டா இல்லாத நிலம், நல்ல பூமி. என்னிக்குமே தோத்ததில்லே. எங்கியோ யார் கண்ணுக்கும் அறியாமே பூமிக்கடியிலே ஊத்து பாயுது.

    நல்லா நிறைய மக்களைப் பெத்துக்கோப்பா. அப்பத்தான் பயிர் பெருகும். நமக்குப் பயிர் பரம்பரைத் தொழிலாப் போச்சு பாரு. இதுக்கு எத்தினி பேரு இருந்தாலும் - விதைக்கு நெல் வீசறப்போ, தண்ணி பாய்ச்சறதுலே, நாத்து நடறதுலே, அறுப்புலே களத்து மேட்டுலே, நெல்லு தூத்தறத்துல எத்தினிபேர் இருந்தாலும் காணாது. பெண்ணை சரியா காப்பாத்துவே இல்லே? சரி, நாள் குறிச்சுடலாம்.

    ‘இந்தா விபூதி குங்குமம் தரிச்சுக்கோ' என்று பூ வெத்திலை பழத்துடன் தட்டை நீட்டியபோது, அவனும் சாதுவாத்தான் இரண்டையும் இட்டுக் கொண்டான்.

    இன்னும் குகையில், அந்த ஆளோட ஜல்ஸா பண்ணிட்டுத்தானே வரே? இன்னிக்கு என்ன படையல்?

    வாயிலே வந்தபடி பேசாதே. நாக்கு அழுகிப் போயிடும் -

    அடசட் வாயை மூடு பிள்ளே. எத்தினிவாட்டி சொல்லியிருக்கிறேன். அந்த ஆளோடு சகவாசம் வெச்சுக்காதே. என் மானம் போவுது. கோவணம் கூட கட்டாதே. பிறந்த மேனியோடு திரியறானே!

    அவர் குகையைவிட்டு வெளியிலே வரதில்லியே!

    வராட்டி என்ன? ஒருநாள் வெளியிலே நிக்கறதைப் பார்த்தேனே. பத்தாதா? அந்தக் கோலத்தைப் பார்க்க ஆயிரம் கண் வேணுமா? ஊர்லே நாலு ஆளைக்கூட்டி ஊரைவிட்டே விரட்டி அடிக்கணும்னு நெனச்சிட்டிருக்கேன். இன்னும் வேளை கூடல்லே. நிச்சயம் ஒருநாள் நடக்கத் தான் போவுது. ஆனால் நிச்சயம் நீ அவன்கிட்டக் கூடப் போவக் கூடாது. எத்தினி வாட்டி சொல்றேனோ எனக்குக் கணக்கு மறந்து போச்சு. ஆனால் அதுதான் உனக்கு ஆவத்து. தெரிஞ்சுக்க! இன்னிக்கு ஆளுக்கு என்ன படையல்?

    மிளகுப் பொங்கல் கொஞ்சம் ஆக்கிக் கொண்டு போனேன். பாத்தா பாவமாயிருக்குது.

    இருக்கும்! இருக்கும்!

    ஒண்ணுமே துண்ணமாட்டேன்றாரே. தானாவும் கேக்க மாட்டாரு. கொடுத்தாலும் இரை எடுக்க மாட்டேன்னாரு. அப்புறம் நொம்ப கஸ்டப்பட்டு ஏதோ நம் கஸ்டத்துக்காகக் கொஞ்சம் லேசா சிரிச்சுகிட்டே காத்தையே உண்டுகிட்டு சிலபேர் தவங்கிடப்பாங்களாம்.

    நீ சொல்றே! ஆள் குகை இருட்டிலே எந்தக் கோழியை ரக்கையைக்கூடப் பியக்காமே உள்ளே தள்ளறானோ?

    அவளுக்குக் கண்கள் பெருகின. உன் பேச்சை இத்தினி கேட்டதனாலேயே எந்தப் பாவத்துலே போறேனோ?

    நிறுத்தும்மே! சீறினான். நானும் பாத்துட்டேன். எங்கே நாலு பொட்டச்சி சேர்ந்துட்டாங்களோ இந்த சாமி யார் பாடுங்க கொண்டாட்டந்தான். அதுவும் சடையும் முடியும் தொப்புள் வரை தாடியுமாச்சுன்னா இன்னும் மஜாக்கு தான். ஏதோ இந்தக் கிராமம் சின்னதா மலையடிவாரத்துல யார் வம்பும் தும்புமில்லாமே தன் பயிர் தன் மக்களுண்டுன்னு இருந்தோம்னா - ஆனால் மலை வழியா எப்படித்தான் காலரா வாந்தி பேதி பெரியம்மை மாதிரி வந்து சேர்ந்தாங்களே தெரியவில்லையே. ஊர் நிம்மதியே கெட்டுப் போச்சே!

    அவன் விழிகள் ஏற்கனவே மேடு. கோவைப் பழமாகச் சிவந்துவிட்டன. கோபம் தானே முறுக்கேறிக் கொண்டு விட்டது.

    உனக்கு நல்லவங்களுக்கும் மத்தவங்களுக்கும் வித்யாசம் தெரியாது. நீ இப்படித்தான் புலம்பிட்டிருப்பே.

    சத்தே வழிவிடறயா. மருமக அடுப்பண்டே ஒண்டியாத் திண்டாடிக்கிட்டிருப்பா. இன்னிக்கு அஞ்சு மரக்காப் புழுக்கியாவணும்.

    அவனுக்கு கோபம் தலைக்கேறி மண்டை ‘கிர்ர்’ரிட்டது. அப்புறம் நேர்ந்தவை ஏதோ கனாவில் அழிந்த கோடுகள் போலத் தெரிந்துமில்லை, தெரியாதுமில்லை. அவள் அவனைத் தாண்டுகையில் அவள் இடுப்பில் தன் முழங்கையால் தன் முழு பலத்துடன் ஒரு இடி இடித்தான்.

    அம்மாடி! அந்தக் குரல் கேட்டு அத்தேன்னு எதிர் குரல் கொடுத்துக் கொண்டு உள்ளிருந்து மருமகள் ஓடி வந்தாள். அத்தை குமுங்கிய பஸ்பமாய் உட்கார்ந்து காலை நீட்டி, அடுத்து உடம்பையும் நீட்டியவள்தான். பிறகு அசையவே இல்லை. உஸ் என்று ஒரு மூச்சு அவளிடமிருந்து கழன்றது. எத்தனை நாள் காத்திருந்த மூச்சோ! அத்துடன் சரி.

    என்ன மாமா! என்னத்தைச் செய்துட்டிங்க! அலறிக் கொண்டே அத்தையண்டை உட்கார்ந்தாள். இன்னிக்கு இத்தோடு நிக்கல்லே மவளே. இன்னும் ஒண்ணு பாக்கி நிக்குதே! கூரையிலிருந்து அரிவாளைப் பிடுங்கிக் கொண்டு மலையை நோக்கி நடந்தான். அவனைத் தடுப்பார் யாருமில்லை. தைரியம் யாருக்குமில்லை. கும்பலும் கூச்சலும் வாசலைச் சுற்றிக் கூடிவிட்டன. இன்னமும் கூடிக் கொண்டிருந்தன.

    குகை வாசலினின்று கூவினான்.

    டேய் ஒன் சாதிக்குப் பிறக்காதவனே. வாடா வெளியே. காட்டிக்கிட்டு திரியறயே. இன்னிக்கு உன் குஞ்சை மிளகாய்த் தூளில் தோய்ச்சு உன் தலையைச் சீவ வந்திருக்கேன்.

    ஒரு பாவமும் அறியாத ஒரு பெண் பிள்ளையைக் கொலை வாங்கிட்டே!

    யாராலேடா, வாடா வெளியே.

    தாராளமா வரேன். ஆனால் நீ என்னை ஒண்ணும் செய்ய முடியாது. உன் கையை எனக்கெதிரே தூக்கிப் பார். தூக்காது.

    அந்த ஆள் சொன்னபடியே வெளிப்பட்டான். கிழவன் திகைப்பாகி விட்டான். கையைத் தூக்க முடியவில்லை. அரிவாள் கை நழுவி விழுந்து பாறாங்கல்லில் தடுக்கி இரண்டு மூன்று தடவை குதித்து அடிவாரத்தை அடைந்து அங்கு பரிதாபமாய் கிடந்தது. காலை வெய்யலில் கூர் பளபளத்தது.

    என் பெண்சாதி சாவ யாருடா காரணம்?

    நானும் இருக்கலாம். இல்லைன்னு சொல்ல, எல்லாந் தெரிஞ்சவனாலும் சொல்ல முடியாது. ஒருத்தருக்கொருத்தர் முகாந்தரமானாலே நல்லது பொல்லாதது ரெண்டுத்துக்குமே சம்பந்தப்பட்டவங்க எல்லாருமே காரணம்தான்.

    உன் பாசையைப் போட்டுக் குழப்பாதே. அது ஒண்ணு தான் பாக்கி. ஆனால் அந்த சாமர்த்தியமெல்லாம் என்னண்டை செல்லாது. தெரிஞ்சுக்க. அரிவாள் போச்சுன்னா நீ தப்பிச்சுட மாட்டே. இந்த ரெண்டு கை இருக்குதே பார்த்தியா? ஏர் பிடிச்ச கை. மாட்டுக் கொம்பை கொம்போடு புடுங்கின கை. தெரிஞ்சுக்க ஆமா. இது சும்மா சவால் இல்லே. என்னைப் பாத்தவங்க சாட்சி இருக்காங்க. உனக்கென்னடா நானு சாட்சி சம்மன் வெக்கறது. ஏண்டா சோமாரி. மொதல்லே ஏண்டா இங்கே வந்தே? எங்க நிம்மதியை சாவடிக்க. இன்னும் பொந்துக்குள்ளே வெளவ்வாலாட்டம் எத்தினிபேர் குகைக்குள்ளே ஒளிஞ்சிட்டிருக்கீங்க? வெளவ்வால் கடி பெரிய விசக்கடியாச்சே. ஊரே கூட்டியாந்து இன்னிக்குள்ளே உன்னை வெரட்டியாகணும். எத்தினி பேருடா இருக்கீங்க?

    நானே இங்கே வரவேண்டியவன் இல்லே தம்பி. என்னவோ வழி தப்பி இந்தப் பாறையில் ஒரு சந்துலேருந்து மீள வெளிச்சம் தெரியாமே இங்கேயே சுத்திகிட்டு கிடக்கேன்.

    ஏன் உன் பில்லி சூனியம் எல்லாம் வேவலியா?

    இது நீ நெனைக்கற மாதிரியில்லே தம்பி.

    நீ முறை போட்டு அழைக்க வேணாம்! கிழவன் சீறினான்.

    நமக்குத் தெரிஞ்சாலும் தெரியாட்டியும் எல்லாரும் முறைதான் - சரி உனக்கு வேணாம்னா விடு. அது உன்கிட்டே நான் பேசவல்லே. நான் இங்கே மாட்டிக்கிட்டு இருக்கறது என் விதி. வேளை வந்தால் விதி தானே பிரிஞ்சுடும். நான் போயிடுவேன்.

    இப்போ என் பெண்சாதி அநியாயமா செத்துப் போனதுக்கு என்ன பதில் சொல்றே?

    நீ கொன்னுட்டு என்னை பதில் கேட்டா நான் என்ன சொல்ல முடியும்? ஆனால் ஒண்ணு சொல்லலாம்.

    அப்படின்னா விளங்கச் சொல்லுடா. பட்டி மவனே.

    ஒரு காரியம் என்னை நிறுத்தி வெச்சிருக்குன்னு சொன்னேனே. அதுக்கு அவளும் காரணமாயிருக்கலாம். ஒரு காரியம் கூடணும்னு அது ஒருத்தராலே மட்டுமில்லே. முன்னது பின்னது நமக்குத் தெரியாதது எல்லாமே சம்பந்தப்பட்டுத்தான் உரு ஆவுது.

    என்னடா சொல்றே தா --ழி. மண்டை கொதிக்குது.

    வேளை வந்துட்டுது. நீயே என்னிடம் வருவே. அப்போ சொல்றேன் உள்ளே போய் இருளோடு கரைந்து போய் விட்டான்.

    கிழவனுக்கு வாயில் நுரை கக்கிற்று. நெற்றியைத் தட்டிக் கொண்டு கீழே போனான்.

    அதற்குள் வாசல் பெருந்திண்ணையில் அவன் பெண் சாதியை வளர்த்தாச்சு. குளிப்பாட்டி புதுசு உடுத்தி, நெத்தியில் பலாகாயாட்டம் குங்குமமிட்டு முவத்திலும் வாயிலும் அப்படி மஞ்சள் பத்தி முந்தானையிலே மஞ்சளும் தேங்காயும் முடிச்சு சுத்தி குந்திக்கிட்டு பாட்டு வெச்சு அழுவாளுங்க. வாசல்லே ஜேஜேன்னு பொம்பளைங்களும் ஆம்பளைங்களும். துண்டை உதறிப் போட்டுக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்தான்.

    அவனைக் கண்டதும் அழுபவர் பொட்டென அடங்கிப் போயினர். கையிலே கத்தியைக் காணோம். இன்னும் என்ன பண்ணிகிட்டு வந்திருக்கானோ தெரியல்லையே! பார்த்தாலே பயம்மாயிருக்கே. ஒவ்வொருத்தராய் நழுவத் தொடங்கினர். கடைசியில் சில்லறையாக ஒரு சிலரே தங்கினர்.

    அந்த முகத்தில் இடிப்பட்ட நோவு தெரியவில்லை. அமைதியே தெரிந்தது. எதையோ கண்டுவிட்ட அமைதி. ஏ புள்ளே இதுவரை எத்தினி வாட்டி ஒன்னை மொத்தியிருப்பேன். அப்போல்லாம் ஒண்ணுமில்லே. இப்போ இடுப்பிலே மொத்தினதா உனக்கு யமனா வாய்ச்சுட்டுது! எனக்கு விளங்கவேயில்லையே!

    கண்கள் மிளகாய்ப் பழமாக எரிந்தன. ஆனா ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வல்லே. வர மறுத்துவிட்டது. அத்தினியும் வரண்டு போச்சு. உடம்பு திகுதிகுவென எரிந்தது. ம்ஹும் கண்ணீரைக் காணோம். உடல் பூரா எரிச்சல் தாங்க முடியவில்லை.

    அவளைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். அவனும் மகனும் மருமகளும் கூடப் போனார்கள். அதிகமாக அழுகை கூட இல்லே. அழுவதற்கு ஆளில்லை. அவனால் அங்கு சூழ்ந்து கொண்ட பயம். கழனிக் காட்டின் நடுவே பொரியும் மண்ணில் சிதை எரிவதைப் பார்க்கக்கூட ஆட்கள் நிற்கவில்லை. நழுவி விட்டார்கள்.

    அவனும் மகளும் மருமகளும் மாத்ரம். அவள் பஸ்பமாவதைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

    அங்கெல்லாம் இம்மாதிரி விஷயங்களைப் பெரிசுபடுத்தமாட்டார்கள். முதலில் மலையடிவாரத்தில் குக்கிராமம். இப்படி நேர்வதெல்லாம் அபூர்வம். போலிஸ் விசாரணை இம்மாதிரி வந்து அடிக்கடி துன்புறுத்தலுக்குப் பழக்கப்படாதவர்கள். பயம். பொதுவாகவே கிழவன் மேல் யாருக்குமே ஆத்திரம், குரோதம் கிடையாது. அவன் சுபாவத்துலே நல்லவன்தான். முன்கோபம் கொஞ்சம் ஜாஸ்தி ஒப்புக்க வேண்டியது. ஆனால் இதுவரை பெரிய தப்புத்தண்டா நடந்ததில்லை. இப்படி நடந்தது அவனுடைய போறாத வேளைன்னுதான் சொல்லணும். அதுக்கு அவனே அனுபவிக்கப் போறான். நாம் ஏன் வம்பு சேர்க்கணும். மகன் தங்கமான பையன். மருமகள் அதுக்கு மேலே நல்லவள். ரெண்டு பேருமே நல்லாப் பாத்துக்குவாங்க. இருந்தாலும் சாயந்திரம் உழுதுட்டுக் கழனிக்கட்டுலேருந்து வந்ததும் வெந்நீரை எதவா விளாவி முதுகைச் சுரண்டித் தேய்க்கப் பெண்சாதி மாதிரி ஆவுமா? அவனே கண்டுக்கப் போறான். ஆனால் மொத்தத்தில் இந்த சந்நியாசிங்க வந்து ஊரே கெட்டுப் போச்சு. கிழவனையும் முழுக்கக் குத்தம் சொல்லறதுக்கில்லே.

    இப்படி அவர்களே சமாதானம் சொல்லிக் கொண்டு விஷயத்தை ஆரவாரமில்லாமல் அமுக்கி விடுவதே அவர்களுக்குச் சுளுவாயிருந்தது பாந்தமாயிருந்தது. அதில் எல்லோருடைய ஒத்துழைப்புமிருந்தது. ஏதோ நியாயம் கூட இருந்தது.

    கிழவன் நீளத்திண்ணையில் படுத்துப்புரண்டு கொண்டிருந்தவன் என்ன தோன்றிற்றோ, எழுந்து, மலையேறி குகைக்கெதிரே நின்றான்.

    அண்ணாத்தே!

    உள் அடர்ந்த கருமையிலிருந்து நிர்வாணப்பரதேசி உருவானான்.

    தூக்கமில்லாட்டாப் போவுது. இமை மூட மாட்டேன்குது. நீதான் வழி சொல்லணும். இப்பவே பைத்தியம் பிடிக்கிறமாதிரிதான் இருக்குது. இன்னும் காலத்துக்கும் என்ன செய்யப் போறேனோ தெரியல்லியே! பரதேசி குகை வாசலில் அமர்ந்து கிழவனையும் பக்கத்தில் குந்தச் சொன்னான். இருவரும் மௌனத்திலிருந்தனர். சூழ்ந்த பாறைகள் அவர்களுடன் ஏதோ பேச முயன்றன. ஆனால் கிழவனுக்கு அவைகளின் பேச்சு கேட்கவில்லை."

    'கண்ணீர் வறண்டு போச்சி. இன்னும் எத்தினி நாளைக்கு இப்படியிருக்கும்?'

    "அந்தப் பெண் பிள்ளை ஒரு தப்பும் செய்யாமலே நல்ல மாதிரியிலேயே மாண்டுட்டா. உன் செய்கையினாலே அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1