Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavugalukku Kaathiruthal
Kanavugalukku Kaathiruthal
Kanavugalukku Kaathiruthal
Ebook148 pages55 minutes

Kanavugalukku Kaathiruthal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவருகிற என்னுடைய எட்டாவது சிறுகதைத் தொகுதி இது. இப்போதெல்லாம் அரிதாகவே சிறுகதைகளை எழுத நேர்கிறது. சென்ற ஆண்டில் (2016) கொஞ்சம் ‘அதிகமாக’ ஆறு சிறுகதைகளை எழுதினேன்.

இத்தொகுப்பில் உள்ள பதினாறு கதைகளும் வெவ்வேறு வகையான ரசனைகளுக்குரியவை. அறிவியல் அடிப்படையிலான மூன்று கதைகள் இடம்பெறுகின்றன.

அதிகமாக, நூற்றுக்கணக்கில் நான் எழுதி விடவில்லை. இது போதும் என்கிற நிறைவு ஏனோ வருவதில்லை.

வாசகர்கள் இத்தொகுப்பை வரவேற்று மகிழலாம்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580127905037
Kanavugalukku Kaathiruthal

Read more from Subra Balan

Related to Kanavugalukku Kaathiruthal

Related ebooks

Reviews for Kanavugalukku Kaathiruthal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavugalukku Kaathiruthal - Subra Balan

    http://www.pustaka.co.in

    கனவுகளுக்குக் காத்திருத்தல்

    Kanavugalukku Kaathiruthal

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஆலவட்டம்!

    2. பொம்மை விற்கிறவர்கள்!

    3. கிருஷ்ணனுக்காக...!

    4. கடிக்கத் தெரியாத எறும்புகள்!

    5. 'புனர் அபி ஜனனம்!'

    6. வேர் பிடித்தல்...!

    7. கடைசியாய் ஓர் உண்மை!

    8. வெறும் கருவிகள்

    9. சினேகமாய் ஒரு புன்னகை!

    10. பாதுகாப்பு வளையங்கள்!

    11. மொட்டை மாடியும் சில காகங்களும்...!

    12. சூரியக்குளத்து முதலைகள்!

    13. கனவுகளுக்குக் காத்திருத்தல்...!

    14. மஜந்தா நிறப் புடைவை

    15. தரையில் கிடந்தவர்...

    16. செடிகளோடு ஓர் உரையாடல்...

    என்னுரை

    பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவருகிற என்னுடைய எட்டாவது சிறுகதைத் தொகுதி இது. இப்போதெல்லாம் அரிதாகவே சிறுகதைகளை எழுத நேர்கிறது. சென்ற ஆண்டில் (2016) கொஞ்சம் ‘அதிகமாக’ ஆறு சிறுகதைகளை எழுதினேன்.

    இத்தொகுப்பில் உள்ள பதினாறு கதைகளும் வெவ்வேறு வகையான ரசனைகளுக்குரியவை. அறிவியல் அடிப்படையிலான மூன்று கதைகள் இடம்பெறுகின்றன.

    அதிகமாக, நூற்றுக்கணக்கில் நான் எழுதி விடவில்லை. இது போதும் என்கிற நிறைவு ஏனோ வருவதில்லை.

    வாசகர்கள் இத்தொகுப்பை வரவேற்று மகிழலாம்.

    அன்புடன்

    சுப்ர. பாலன்

    ***

    1

    ஆலவட்டம்!

    நான் இதுவரை அப்படி ஒரு இடத்துக்குப் போனதே இல்லை. அப்படித்தான் நினைக்கிறேன். ஆனாலும் அடிக்கடி அந்த இடம் கனவில் வருகிறது. பழகிய மனிதர்கள் மாதிரி தென்படுகிறார்கள். என்னமோ பல காலம் அங்கே நான் இருந்ததாகவும், இவர்களோடு உறவாடியதாகவும் கனவுக் காட்சிகள் விரிந்துகொண்டேயிருக்கின்றன. இந்தக் கனவுகள் தினமும் வருவதில்லை. ஆனால் தொடர் கனவு மாதிரி அடிக்கடி வருகிறது. சில நிகழ்வுகள் சமயங்களில் மனசைச் சங்கடப்படுத்தவும் செய்கின்றன.

    இப்போது ஒரு பழக்கத்தை இப்போது ஏற்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிறேன். தலையணை அருகில் சின்னதான குறிப்பேடும், பேனாவும் வைத்திருக்கிறேன். கனவுத் தொடர்பு அறுந்து விழிப்பு வந்தவுடன் ‘காட்சிகள்’ பெரும்பாலும் கலைந்துபோய் விடுகின்றன. கூடியவரை இழை இழையாய் நூல் பிடித்து, அந்தக் கனவுக் காட்சிகளை நினைவு படுத்திக் குறித்து வைக்க முயல்கிறேன்.

    காலையில் நிதானமாக அவற்றை எடுத்துப் படித்துப் பார்த்தால் வேடிக்கையாகவும், சமயங்களில் பயமாகவும் கூட இருக்கிறது.

    இன்றைக்கு வந்த கனவு நிறையவே அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. விழிப்பு வந்தவுடன் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. கைகள் எழுத நடுங்கின. அவசரமாகக் குளிர் பேழையைத் திறந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்துப் பருகிய பிறகுதான் நடுக்கம் நின்றது. இன்றைய கனவை அவ்வளவு இலேசில் மறந்துவிட முடியாது. கண்முன்னால் அந்தக்காட்சி அப்படியே ஒளிப்படப் பதிவாய் உறைந்து காட்சி தருகிறது.

    உங்களுடைய மரணத்தை நீங்களே பார்த்து அனுபவிக்க முடியுமா? அப்படியே முடியுமானாலும் நினைவுபடுத்திச் சொல்ல முடியுமா? செத்த பிறகு எப்படிச் சொல்ல முடியும்?

    ஆனால் இது எப்படிப்பட்ட மரணம்! நினைத்தால் குலை நடுங்குகிறது. துப்பாக்கிச் சூடா அல்லது ஏதாவது கூரான ஆயுதம் நெஞ்சில் பாய்ந்ததா? அதுமட்டும் நினைவுக்கு வரவில்லை. எப்படியோ மரணம் நேர்ந்து கொண்டிருக்கிறது... அல்லது நேரப் போகிறது. ஆனால் அதே இடம்... வழக்கமாக நான் போய் விளையாடுகிற, நண்பர்களோடு பேசி மகிழ்கிற, ஆத்திரத்தில் யாரையேனும் முரட்டுத்தனமாய்த் தாக்குகிற அதே ஆலவட்டச் சூழல் தான்.

    இப்போது என்னருகே தெரிந்தவர்கள் யாரையுமே காண முடியவில்லை. எல்லோரும் புதியவர்களாகவே தெரிகிறார்கள். துப்பாக்கிக் குண்டோ, ஆயுதமோ நெஞ்சில் பாய்ந்தால் வலி வேதனை தெரியவேண்டுமே? இரத்தம் பெருக்கெடுக்க வேண்டுமே? அதுமட்டும் தெரியவில்லை. உடனடியாக மரணம் என்றால் இந்த உணர்வுகள் அற்றுப் போய்விடுமோ?

    குழப்பமான காட்சிகளை நிதானமாகக் குறிப்பேட்டில் பதிவு செய்கிறேன். என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

    கலியாணமாகாத கட்டை. செத்தால் கண்ணீர் விட்டுக் கதறியழ யாருமில்லை என்று சொல்ல முடியாது. ஒருத்தி இருக்கிறாள். புஷ்பா! இருவரும் உரிமை கோர முடியாத ஒரு பந்தத்தில்... எப்போதாவது அவளைத் தேடி நானும், என்னைத் தேடி அவளும் வருவதுண்டு.

    நேற்றுத்தான் வந்து போனாள். அடுத்து எப்போது வருவாளோ? அவளுடைய பார்வையில் என்னுடைய படுக்கைக் குறிப்பேடு பட்டிருக்க வேண்டும். விடைபெற்றுச் செல்லும்போது அவள் சொன்னதிலிருந்து ஊகிக்க முடிகிறது. பாலன்! உன்னை உடனடியாக ஒரு மனநல மருத்துவரிடம் கொண்டு போய்க் காட்ட வேண்டும். சிரித்துக் கொண்டே தான் சொன்னாள் என்பதால் நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குறிப்பேட்டைப் பார்த்திருக்கக் கூடும் என்பது அவள் போன பிறகுதான் உறைத்தது.

    இனிமேல் அதை மற்றவர் கண்களில் படுகிற மாதிரி வைக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டேன். என்னுடைய அறைக்குள் ‘மற்றவர்கள்’ என்று யாரும் வருகிற வாய்ப்பே இல்லை. ஏன், வீட்டுக்கு வருகிறவர்களே ஓரிருவர்தான். நண்பர்கள் என்றெல்லாம் நான் யாரையும் அங்கீகரித்ததில்லை. அம்மா உயிரோடு இருந்தபோது அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். இப்படித் தனி ஆளாச் சுத்திண்டிருக்காதே பாலா. நாலு பேரோடெ பழகினாத்தான் நல்லது கெட்டது தெரியும்.

    பள்ளிக்கூட நாட்களிலும் சரி, படித்து வேலையில் சேர்ந்த பிறகும் சரி, எனக்கு அந்த ‘நாலு பேர்’அமையவே இல்லை. அலுவலகத்திலும் எனக்கு யாருடனும் பழகப் பிடிப்பதில்லை. ‘மெஷீன்’என்றே எனக்குப் பெயரிட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புஷ்பாதான் ஒருநாள் சொன்னாள்.

    எப்படியோ இவளுடன் மட்டும் பழக்கம் ஏற்பட்டது. அது எப்படி நேர்ந்தது என்பது தெரியவில்லை. அலுவலகத்தில் என்னோடு இரண்டு மாதம்தான் வேலை பார்த்தாள். அப்புறம் ஆள் குறைப்பு என்று இவளை வெளியே அனுப்பினார்கள். அதன்பிறகு என்ன ஆனாள், எங்கே வேலை செய்கிறாள் - ஒரு விவரமும் தெரியாது. நானும் கேட்டதில்லை, அவளாகவும் சொன்னதில்லை. ஆனால் அவளுடைய புன்னகை மட்டும் மாறியதே இல்லை.

    அப்பா ஒரு மாதிரி. அரசியல் அது இது என்று பொறுப்பில்லாமல் சுற்றியவர் என்று அம்மா சொல்லித் தெரியும். அவர் சாகும்போது எனக்கு ஆறு வயசாம். அதற்கு மேல் எதுவும் சொன்னதில்லை. ஆனால், அம்மா சாகிறவரை வேறொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒருத்தி உனக்குன்னு இன்னும் பிறக்காமலா இருப்பா? என்னிக்காவது நீயே அவளைத் தேடிக் கண்டுபிடிப்பே. என்று சொல்லித் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டிருந்தாள். அந்த நம்பிக்கையுடனேயே அம்மாவும் போய்ச் சேர்ந்து ஆறு வருஷம் ஓடிவிட்டது.

    அதற்கு அப்புறம்தான் புஷ்பா கண்ணில்பட்டாள். அம்மா இருந்திருந்தால் இவள் தான் ‘அவள்’ என்று கூட நினைத்து சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால் இவளை அந்த மாதிரி உறவில் வைத்துப் பார்க்க இன்றைக்குக் காலை வரை நான் எண்ணிப் பார்த்ததில்லை. இந்த மரணக் கனவு வந்த பிறகுதான் அந்த நினைப்பே வருகிறது.

    அவளிடம் இந்தக் கனவைப்பற்றி நானே சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது. அவள் இனிமேல் என்றைக்கு வரப்போகிறாள்? ‘தீப்பெட்டித் தொலைபேசி’கூட என்னிடம் கிடையாது. யாராவது தொடர்பு எண் வேண்டும் என்று கேட்கும்போது ‘என்னிடம் மொபைல் கிடையாது’என்று சொல்ல நான் வெட்கப்படுவதில்லை. தொடர்புக்கு ஆட்களே இல்லாதபோது எதற்குத் தொடர்பு எண்?

    அவளிடம் கைபேசி இருக்கிறது. ஆனால் தொடர்பு கொள்ள என்னால் இயலாது. அவளாகத் தேடி வந்தால்தான் உண்டு. அந்தக் கருவியைப் பழகிக் கொள்ளாததும் மனசில் இன்றைக்குத்தான் உறுத்துகிறது.

    இயந்திர கதியில் கடமைகளை முடித்துவிட்டு அலுவலகம் புறப்படத் தயாரானபோது அவளே வந்தாள். ஆச்சரியமாக இருந்தது.

    "என்ன பாலன்! அப்படிப் பார்க்கறே? இன்னிக்கு லீவு சொல்லிடு... ரெண்டுபேரும் எங்கேயாச்சும் போய்ச் சுத்திட்டு வரணும் போல இருக்கு. ஸாரி! உன்னைக் கேட்காமெ அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் படிச்சுட்டேன். அதுலேருந்து மனசே சரியில்லே.

    Enjoying the preview?
    Page 1 of 1