Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adai Mazhai
Adai Mazhai
Adai Mazhai
Ebook55 pages17 minutes

Adai Mazhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழுத்தமான உணர்வுப்பூர்வமான காதல் கதை. புறக்கணிக்கப்பட்ட இரு இதயங்களுக்கிடையில் இயல்பாக ஏற்படும் உணர்வும் அவர்களுக்கு சமூகம் கொடுக்கும் பரிசு என்னவென்பதும் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அடைமழையின் தாக்கம் படிப்பவருக்கு பல நாள் நீடிக்கும் என்பது உறுதி.

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580145507442
Adai Mazhai

Read more from Gavudham Karunanidhi

Related to Adai Mazhai

Related ebooks

Reviews for Adai Mazhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adai Mazhai - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    அடைமழை

    Adai Mazhai

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    எல்லாரும் நல்லா இருக்கீங்களா? இப்போதான் இந்தக் கேள்வியை நான் உங்ககிட்ட கேட்க முடியும். நாளைக்கு இதே நேரத்தில் கேட்க முடியாது.

    ஏன் முடியாதுன்னு யோசிக்கறீங்களா? என்ன நல்லாப் பாருங்க. நான் எங்கே இருக்கிறேன்னு தெரியுதா? இருட்டுல உங்களுக்கு சரியாத் தெரியல. ஜெயில்ல இருக்கேன்.

    இப்போ மணி பத்து. இன்னும் அஞ்சு மணி நேரம் இருக்கு எனக்கு. விடியற்காலை மூணு மணிக்கு எந்திரிச்சு குளிக்கச் சொல்லியிருக்காங்க. எதுக்குன்னு கேக்கறீங்களா?

    எனக்கு காலையில தூக்குங்க.

    என்ன சட்டுன்னு நிமிர்ந்து உட்காந்துட்டிங்க?

    என்னோட கதை என்னன்னு கேட்கறீங்களா? சரி வாங்க காலையில என்னைத் தூக்கில போடப்போறத நினைச்சா எனக்கும் தூக்கம் வரமாட்டேங்குது. என் கதையை நான் உங்களுக்கு சொல்றேன்.

    1

    இருட்டிவிட்டது. வஉசி பூங்காவில் இருந்து வெளியே வந்தேன். மின்னல் வெட்டியது. மழை வரும் போல் தோன்ற, அதை சட்டை செய்யாது நடந்தேன்.

    மரப்பாலம் முதலியார் மெஸ் இடதுபுறமும், ஜூனியர் குப்பண்ணா வலதுபுறமும் இருந்தும் என்னால் எங்கும் செல்ல முடியாது. என் பாக்கெட்டில் அதிகபட்சம் பத்து ரூபாய் இருந்தால் அதுவே அதிகம்.

    பஸ்ஸ்டாண்டிற்கு சென்று பஸ் பிடித்து வீட்டிற்கு போவதற்கு மட்டுமே காசு இருக்கிறது. வீட்டிற்கு சென்று சாப்பிடலாமே என்று கேட்காதீர்கள். நான் வீட்டில் சாப்பிடுவதில்லை. எப்பொழுதுமே திட்டு வாங்கிக்கொண்டு எப்படி சாப்பிட முடியும்?

    நான் ரமேஷ். கல்லூரி படிப்பை முடித்து மூன்று வருடங்களாக பலவித வேலைக்கு முயற்சி செய்துகொண்டு ஒன்றிலும் வெற்றி பெறாமல் அனைவரின் ஏளனப் பார்வையைத் தாங்கி நடப்பவன்.

    எவராவது ஒருவர் வீட்டில் ஆதரவாக இருப்பாரா என்று எண்ணாத நாட்கள் இல்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1